Sunday, May 10, 2009

கடையோட மாப்பிள்ளை - பகுதி 5!!!

சரணம் நல்லா பாடினீங்க. ஆனா பல்லவியில் கோட்டை விட்டுட்டீங்க. இன்னொரு சான்ஸ் கிடைக்கும்போது நல்லா பாடுங்க. கோலங்கள். கோலங்கள். அழகான கோலங்கள். மன்மத ராசா மன்மத ராசா. கன்னி மனசை கொல்லாதே. முக்கியச் செய்திகள் முடிவடைந்தது. விரிவான செய்திகள் இரவு 8 மணிக்கு. அந்த வாழைப்பழம்தாண்ணே இது.

மாதுவோட அப்பா: மாது.. மாது. எழுந்திருடா..

மாது: அடச்சே... வீட்லேதான் டிவி சானல் மாத்தவே விடமாட்டேன்றே. கனவிலேயாவது கடகடன்னு சானல் மாத்தி பாத்துக்கிட்டிருக்கலாம்னா, அதையும் கெடுத்துட்டே. எதுக்கு என்னை அவசரமா எழுப்பறே இப்போ. ஜானகி வந்துட்டாளா?

மா.அப்பா: அது சரி. அவளைத்தான் வேணாம்னு சொல்லிட்டியே. அவ எதுக்கு இங்கே வர்றா?

மாது: பின்னே வேறே என்ன விஷயம்?

மா.அப்பா: டேய். உங்கம்மாவை ரொம்ப நேரமா காணலைடா.. எங்கே போனான்னே தெரியல..

மாது: இவ்ளோதானா? இதுக்கு ஏன் இப்படி டென்சனாகுறே? நேத்திக்கு ராத்திரி சீரியல் பாக்கும்போது கரண்ட் கட்டாயிடுச்சு இல்லையா. அதனால கதை கேக்கறதுக்கு பக்கத்து வீட்டுக்குப் போயிருப்பா. கொஞ்ச நேரத்துலே வந்துடுவா. போய் படு. நானும் கனவை கண்டின்யூ பண்ணனும்.

மா.அப்பா: இல்லேடா. என்கிட்டே சொல்லாமே எங்கேயும் போகமாட்டா. எழுந்திரு எங்கேயாவது போய் தேடலாம்.

மாது: அட. அவன் அவன் பொண்டாட்டி ஊருக்கு போகமாட்டாளா, காணாமே போகமாட்டாளான்னு காசு செலவழிச்சி ஜோசியம் பாக்கறான். நீ என்னடான்னா என்னை கொஞ்ச நேரம்கூட தூங்கவிடாமே தொந்தரவு பண்ணிட்டிருக்கே.

ட்ரிங் ட்ரிங்..

மாது: ஹலோ..

ஜா.அப்பா: ஹலோ நாந்தான் ஜானகி அப்பா பேசறேன். வருத்தமான செய்தி இப்பத்தான் தெரிஞ்சுது.

மாது: காணாமே போன விஷயம் அதுக்குள்ளே உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா.

ஜா.அப்பா: ஆமா. ஃபோனுக்கு கீழே லெட்டர் எழுதிவெச்சிட்டுதானே காணாமே போனா.

மாது: என்ன? ஃபோனுக்குக் கீழேயா? இருங்க. ஒரு நிமிஷம் பாக்குறேன். அட ஆமா, இங்கே ஒரு லெட்டர் இருக்கே...

(மாது லெட்டரை படிக்கிறார்).

மாது: மாது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னதாலே...

ஜா.அப்பா: மாது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னதாலே...

மாது: நான் வீட்டை விட்டுப் போறேன்.

ஜா.அப்பா: நான் வீட்டை விட்டுப் போறேன்.

மாது: என்னை யாரும் தேட வேண்டாம்.

ஜா.அப்பா: என்னை யாரும் தேட வேண்டாம்.

மாது: நான் என்ன தமிழ்ப் பாடமா நடத்தறேன்? ஏன் நான் சொல்றதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க?

ஜா.அப்பா: நான் என்கிட்டே இருக்கற லெட்டரைத்தானே படிச்சேன்?

மாது: என்ன? எங்கம்மா வீட்டை விட்டு போறேன்னு எழுதிவெச்சிட்டுப் போன லெட்டர் உங்களுக்கும் ஒரு காப்பி அனுப்பியிருக்காளா? இது என்ன மாலை முரசா? எல்லார் வீட்டுக்கும் ஒரு காப்பி அனுப்ப? இன்னும் யாரெல்லாம் ஃபோன் பண்ணி விசாரிக்கப் போறாங்களோ?

ஜா.அப்பா: என்ன? உங்கம்மா வீட்டை விட்டுப் போயிட்டாங்களா? நான் படிச்சது ஜானகியோட லெட்டர். அவளும் வீட்டை விட்டு ஓடிட்டா.

மாது: அதெப்படி ரெண்டு பேரும் ஒரே சமயத்துலே ஓடிப்போயிருக்காங்க. ஐபில், தேர்தல் மாதிரி இதுவும் வீட்டை விட்டு ஓடற சீசனா? அதுவும் லெட்டர்கூட ஒரே மாதிரி இருக்கு. நான் என்ன நினைக்கிறேன்னா, லெட்டர் டெம்ப்ளேட்டை ரெண்டு பேரும் ஒரே இடத்துலேந்துதான் சுட்டிருப்பாங்க.

ஜா.அப்பா: இப்போ அதுவா முக்கியம்? இவங்க சேர்ந்து ஓடிப்போயிருக்காங்களா? தனித்தனியா போயிருக்காங்களான்னு தெரியலயே? நான் போலீஸ்ல போய் புகார் பண்ணப்போறேன்.

மாது: சரி சரி. போங்க. நாங்களும் எங்கேயாவது போய் தேடுறோம்.

மா.அப்பா: மாது. அந்த லெட்டரைக் குடு. உங்கம்மா ஏதாவது க்ளூ குடுத்துட்டுப் போயிருக்காளான்னு பாப்போம்.

மாது: ஏன்? ஏதாவது க்ளூ இருந்தா அதை அழிச்சிடலாம்னு பாக்கிறியா? நல்ல ஐடியாதான். அதுக்கு பேசாமே இந்த லெட்டரை அப்படியே கிழிச்சி போட்டுட்டு, ரெண்டு பேரும் நிம்மதியா உக்காந்து டிவி பாக்கலாமே? என்ன சொல்றே. ஓகேவா?

மா.அப்பா: இங்கே பாத்தியா. லெட்டர் கடைசியிலே ‘கோவிந்தா கோவிந்தா'ன்னு எழுதியிருக்கா.

மாது: ஓடிப்போகும்போதுகூட எவ்ளோ நக்கல் பாத்தியா? என் கல்யாணம் அவ்ளோதான் - கோவிந்தான்னு எழுதிட்டுப் போயிருக்கா.

மா.அப்பா: அதில்லேடா. இது என்னவோ க்ளூ மாதிரி தெரியுது எனக்கு. கோவிந்தான்னு யாராவது தெரியுமா உனக்கு?

மாது: நம்ம வீட்டுக்குத் தினமும் பேப்பர் போடறானே.. அவன் பேரு கோவிந்தாதான். ஒரு வேளை அம்மா அவன் வீட்டுக்கு ஓடி போயிருப்பாங்களோ?

மா.அப்பா: ச்சீ. அவ எதுக்கு அவன் வீட்டுக்குப் போகணும். நான் என்ன நினைக்கிறேன்னா, அம்மா பெருமாள் கோவிலுக்குதான் போயிருக்கணும். நானும் கோயிலுக்குப் போய் அவளை தேடப்போறேன். நீயும் வா போகலாம்.

மாது: சரி. ஆனா எனக்கு இன்னும் சந்தேகம் தீரலை. நான் பேப்பர்காரன் கோவிந்தன் வீட்டுக்குப் போய் அம்மா அங்கே இருக்காங்களான்னு பாக்கறேன்.

மா.அப்பா: ஒரு வேளை உங்கம்மா அங்கே இல்லேன்னா?

மாது: எதையாவது சொல்லி சமாளிக்கணும் அவ்ளோதானே? உன்கூட கோவிலுக்கு வர்றதா வேண்டிக்கிட்டிருக்கேன்னு சொல்லி கோவிந்தனையும் கூட்டிட்டு கோயிலுக்கு வந்துடறேன். நீ முன்னாடி போயிட்டுரு.

(அடுத்த பகுதி.. கடைசி பகுதி... இன்னும் சில நாட்களில்...)

14 comments:

ஆயில்யன் May 10, 2009 at 10:52 PM  

//உங்களுக்கும் ஒரு காப்பி அனுப்பியிருக்காளா? இது என்ன மாலை முரசா? எல்லார் வீட்டுக்கும் ஒரு காப்பி அனுப்ப? //


:)))

ஏனோ பார்ட் 5 கொஞ்சமாகத்தான் ரசிக்க வைச்சுது பாஸ் !

Unknown May 11, 2009 at 1:24 AM  

அண்ணா நல்லா இருக்கு இந்த பகுதி.. :)) ஆனா, சீக்கிரமா முடிஞ்சிட்ட மாதிரி இருக்கு.. :))

மங்களூர் சிவா May 11, 2009 at 1:29 AM  

/
மாது: அட. அவன் அவன் பொண்டாட்டி ஊருக்கு போகமாட்டாளா, காணாமே போகமாட்டாளான்னு காசு செலவழிச்சி ஜோசியம் பாக்கறான். நீ என்னடான்னா என்னை கொஞ்ச நேரம்கூட தூங்கவிடாமே தொந்தரவு பண்ணிட்டிருக்கே.
/
:))

முத்துலெட்சுமி/muthuletchumi May 11, 2009 at 1:30 AM  

விளம்பரங்களுக்கு அதிகம் காசு வாங்கிட்டீங்களா..நாடகம் சட்டுன்னு முடிஞ்சுடுச்சே.. :))
கனவுல கடகடன்னு சானல் மாத்தறது நல்ல கற்பனை :)

அது என்ன மாதுவீட்டுக்கு தனிகனெக்ஷன் அவங்க பக்கத்துவீட்டுக்கு தனி கனெக்‌ஷனா.. சரி சரி கடுப்பாகாதீங்க...:)

அறிவிலி May 11, 2009 at 4:57 AM  

//(அடுத்த பகுதி.. கடைசி பகுதி... இன்னும் சில நாட்களில்...) //

அடுத்த நாடகம் ஆரம்பிக்கறதா இருந்தாதான் ஒத்துக்குவோம். இல்லாட்டி உலகளாவிய மனித சங்கிலி போராட்டம் நடக்கும்.

சூப்பரா போயிட்டிருக்கு. முடிஞ்சா க்ரேசிக்கு லிங்க் குடுங்களேன். நிச்சயம் ரசிப்பார்னுதான் நினைக்கிறேன்.

Prabhu May 11, 2009 at 9:34 AM  

மாது: என்ன? எங்கம்மா வீட்டை விட்டு போறேன்னு எழுதிவெச்சிட்டுப் போன லெட்டர் உங்களுக்கும் ஒரு காப்பி அனுப்பியிருக்காளா? இது என்ன மாலை முரசா? எல்லார் வீட்டுக்கும் ஒரு காப்பி அனுப்ப? இன்னும் யாரெல்லாம் ஃபோன் பண்ணி விசாரிக்கப் போறாங்களோ?////////
ஹா...ஹா...

//////////அதெப்படி ரெண்டு பேரும் ஒரே சமயத்துலே ஓடிப்போயிருக்காங்க. ஐபில், தேர்தல் மாதிரி இதுவும் வீட்டை விட்டு ஓடற சீசனா? அதுவும் லெட்டர்கூட ஒரே மாதிரி இருக்கு. நான் என்ன நினைக்கிறேன்னா, லெட்டர் டெம்ப்ளேட்டை ரெண்டு பேரும் ஒரே இடத்துலேந்துதான் சுட்டிருப்பாங்க./////////
ரெண்டு பேரும் ஐ.டி. ஃபீல்டா?

சின்னப் பையன் May 11, 2009 at 10:29 AM  

வாங்க ஆயில்ஸ் -> ஓகே பாஸ். அடுத்த (கடைசி) பகுதியில் அதிகமா சிரிக்க வெக்க முடியுதான்னு பாக்குறேன்... நன்றி...

வாங்க பிரேம்ஜி, சிவா -> நன்றி...

வாங்க சகோதரி ஸ்ரீமதி -> இன்னும் பல பகுதிகளை இழுத்துக்கிட்டே போயிருக்கலாம். (டேய், உனக்கே இது டூ மச்சா தெரியல?!). அடுத்த நாடகத்தையும் எழுதணுமே. அதனால் இதை முடிச்சிட்டேன்... :-))

வாங்க மு-க அக்கா -> அவ்வ்வ். விளம்பரதாரர்களே கிடைக்கலீங்க. அதனால்தான் நாடகம் சட்டுன்னு முடிஞ்சிடுச்சு....:-))

Unknown May 11, 2009 at 11:06 AM  

good
so good
soo good
sooo good
soooo good
sooooo good
soooooo good
sooooooo good
soooooooo good
sooooooooo good
soooooooooo good

Thamira May 11, 2009 at 1:17 PM  

அட்டகாசம். கிரேஸியின் ஜெராக்ஸ்.! (அதுவே மைனஸும்தான் இல்லையா?)

சின்னப் பையன் May 11, 2009 at 2:53 PM  

வாங்க அறிவிலி -> ஊக்கப்படுத்தியதற்கு நன்றிங்க...

வாங்க பப்பு, முக்கோணம், ராஜ்குமார் -> நன்றி...

வாங்க ஆதி -> நன்றி... மைனஸ்னு எதை சொல்றீங்கன்னு புரியல தல. சீரியஸா எதையும் எழுதமுடியலன்னு சொல்ல வர்றீங்களா????

Mahesh May 11, 2009 at 5:44 PM  

நெஜமாவே "கிரேசி"மாது பேசறா மாதிரி கற்பனை பண்ணிப் படிச்சா... சிரிப்பு அதிகமா வருது.....

வருங்கால பிரதமர் "கிரேசி" சத்யா.... வாழ்க !! (எப்பிடி துண்டு போட்டேன் பாத்தின்ங்களா :)))))

நசரேயன் May 11, 2009 at 6:25 PM  

சர வெடி சிரிப்பு.. சீக்கிரம் அடுத்த பாகம்

dondu(#11168674346665545885) May 13, 2009 at 11:14 PM  

சாதாரணமா மாதுவின் அப்பா பெயர் ராமானுஜம், அம்மாவின் பெயர் மைதிலி என கிரேசி நாடகங்களில் இருக்கும்.

ஜானகியின் அப்பாவின் டீஃபால்ட் பெயர் மறந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP