Monday, May 11, 2009

ஜெயலலிதா மென்பொருள் நிபுணரானால்...!!!

மேனேஜர்: இந்த ப்ராஜெக்டை நாம ஜாவாலே பண்ணப் போறோம்.

ஜெ: ஜமாய்ச்சிபுடலாம். பிரச்சினையே இல்லை.

மே: கொஞ்ச நாள் முன்னாடி இதையே சொன்னதுக்கு - எனக்கு ஜாவா தெரியாது, அதனால் இதை செய்ய முடியாதுன்னீங்களே?

ஜெ: அது போன மாசம்.

மே: இப்போ எப்படி தெரிஞ்சது உங்களுக்கு ஜாவா?

ஜெ: நேத்து என் நண்பர் ரவி ஜாவா சிடி கொண்டு வந்து காட்டினாரு. அதை ஒரு அரை மணி நேரம் பாத்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன். இவ்ளோ நாளா ஜாவா தெரிஞ்சிக்காமே இருந்தது தப்புதான். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க.

மே: சரி. எல்லா வேலையையும் சீக்கிரமா முடிச்சி தர்றேன்னு க்ளையண்டுக்கு ஏன் மின்னஞ்சல் அனுப்பினீங்க.

ஜெ: அந்த மின்னஞ்சலை நான் அனுப்பலை. என் கணிணியிலேந்து வேறே யாரோ அனுப்பிட்டாங்க.

மே: நேத்திக்கு கேட்டபோது, நாந்தான் அனுப்பினேன்னு சொன்னீங்களே?

ஜெ: நான் அப்படி சொல்லவே இல்லை. உங்களுக்கு 'செலக்டிவ் அம்னீஷியா' இருக்கும்னு நினைக்கறேன்.

மே: சரி விடுங்க. இந்த வேலையை சரியா செஞ்சி முடிப்பீங்களா? ராத்திரியெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

ஜெ: எனக்கு குடும்பம் ஒண்ணும் இல்லை. அதனால் அலுவலகமே கதின்னு கிடப்பேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்க.

மே: உங்க குழுவிலே இருக்கறவங்க கிட்டேயும் நிறைய வேலை வாங்க வேண்டியிருக்கும்.

ஜெ: அது என் பிரச்சினை. பெண்டு நிமித்தி வேலை வாங்கறேன்.

மே: அவங்க வேலை செய்யலேன்னா...

ஜெ: ராவோட ராவா எல்லாரையும் வேலையை விட்டு துரத்திடறேன்.

மே: சரி. உங்களையே இந்த ப்ராஜெக்ட் மேனேஜரா போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். நாளைக்கே வேலையை ஆரம்பிக்கறோம்.

ஜெ: ப்ராஜெக்ட் என் கைக்கு வந்துடுச்சு இல்லே. இனிமே நான் சொல்றதுதான் இங்கே சட்டம். நீங்க கொஞ்சம் அப்படி சைட்லே உக்காருங்க.

மே: அப்படின்னா...

ஜெ: நாளையிலேந்து நான் மூணு மாசம் லீவ்லே போறேன். திரும்ப வந்தப்பிறகுதான் வேலை ஆரம்பிக்கறோம்.

மே: எதுக்கு இப்ப திடீர்னு லீவ்?

ஜெ: நான் ப்ராஜெக்ட் மேனேஜர் ஆயிட்டேன்னா தமிழ்நாடு, கேரளா இங்கேயிருக்கற கோயில்கள்லே வந்து தரிசனம் பண்றதா வேண்டிக்கிட்டிருந்தேன். அதுக்கு ஒரு மாசம். அப்புறம் ஆந்திராலே போய் ஓய்வு எடுத்துக்கறதுக்கு ரெண்டு மாசம். மொத்தம் மூணு மாசம்... வர்ட்டா... பை......

22 comments:

Mahesh May 11, 2009 at 9:06 PM  

எட்றா வண்டிய.... டுர்....டுர்.... டுர்...


பாட்சா படம் மாதிரி ஊர்ல இருக்கற ஆட்டோ பூரா உங்க வீட்டுக்குதான் வந்துக்கிட்டுருக்கு... முதுகு ஜாக்ரதை..
::)))))))))))))

முரளிகண்ணன் May 11, 2009 at 9:46 PM  

செமை கிண்டல் சாரே.

Thamiz Priyan May 11, 2009 at 9:54 PM  

நீங்களும் ஜோதியில் ஐக்கியமாயாச்சா... நல்லா கிண்டல் பண்றீங்க .. ;-)

எம்.எம்.அப்துல்லா May 12, 2009 at 12:20 AM  

//எட்றா வண்டிய.... டுர்....டுர்.... டுர்...


பாட்சா படம் மாதிரி ஊர்ல இருக்கற ஆட்டோ பூரா உங்க வீட்டுக்குதான் வந்துக்கிட்டுருக்கு... முதுகு ஜாக்ரதை..

//


கபாலி : டேய் மாரி பொருள்லாம் எடுத்து வண்டில போட்டுகினு கெள்ம்பு

மாரி : எங்க அண்ணாத்த

கபாலி : ச்சின்னப்பையன் ஊட்டாண்ட போவ சொல்லி தல சொல்லிருக்கு

மாரி : அய்யோ!!! அங்கயா?? அந்தாள் நம்பள நக்கலடிச்சே கொன்னுருவான்...எனக்கு பயமாகீது..நீயே போ அண்ணாத்த!

Anonymous,  May 12, 2009 at 1:46 AM  

பதிவும் நல்லா இருக்கு. அப்துல்லாவோட கமெண்டும் நல்லா இருக்கு.

வால்பையன் May 12, 2009 at 2:56 AM  

உங்கெளுகெல்லாம் ஆட்டோ இல்லை ராக்கெட்டே அனுப்பனும்!

Prabhu May 12, 2009 at 7:53 AM  

அன்னையர் தினம் முடிஞ்சு அஞ்சு நாள் கூட ஆகல. அம்மாவத் திட்டறேளே!

சின்னப் பையன் May 12, 2009 at 9:27 AM  

வாங்க மகேஷ் அண்ணே -> அவ்வ்.. ராத்திரி 3 மணிக்கு எழுந்து எனக்கு கமெண்ட் போடுறீங்களே... உங்களுக்குதான் ஆட்டோ வரணும்... அட வாழ்த்தறதுக்குதான்.... :-))

வாங்க மு-க அண்ணா, தமிழ், சரவணகுமரன் -> நன்றி...

வாங்க கார்த்திகைப் பாண்டியன், சகோதரி ஸ்ரீமதி -> மிக்க நன்றி...

வாங்க அப்துல்லா அண்ணே, வேலன் ஐயா -> ஹாஹா... சூப்பர் கமெண்ட்.

சின்னப் பையன் May 12, 2009 at 9:29 AM  

வாங்க வால் -> அவ்வ்வ்.. அதே ராக்கெட்லே போய் நிலாவுலே அம்மாவோட கொடியை பட்டொளி வீச பறக்க வைப்போம்... சீக்கிரம் அனுப்புங்க...

வாங்க நெல்லைத்தமிழ் -> ஆஹா... கெளம்பிட்டான்யா... கெளம்பிட்டான்யா....

வாங்க பப்பு, இஸ்மாயில் -> நன்றி...

Anonymous,  May 12, 2009 at 10:41 AM  

hahaha :) :)

JJ's coding standard -

You have to write "Purachi thalaivi vaazhga" in the source code file headers.

நசரேயன் May 12, 2009 at 10:56 AM  

நல்ல வேளை அம்மா டீம்ல நீங்க இல்லை

Anonymous,  May 12, 2009 at 11:05 AM  

ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

ராஜ நடராஜன் May 12, 2009 at 11:44 AM  

கிணத்துல அள்ள அள்ள குறையாது போல இருக்குதே:)

மறுபடியும் ஒரு ரவுண்டு வந்துக்குறேன்:))))

ராஜ நடராஜன் May 12, 2009 at 11:46 AM  

புதுப்பாடகர் அப்துல்லா கமெண்டுறத இப்பத்தான் பார்த்தேன்:)

சின்னப் பையன் May 12, 2009 at 2:43 PM  

வாங்க அனானி -> ஹாஹா... கோடிங் ஸ்டாண்டர்ட் அப்படித்தான் இருக்கணும்... :-))

வாங்க நசரேயன் -> நல்ல வேளை!!!

வாங்க அனானி, ராஜ நடராஜன் -> நன்றி...

விஜயசாரதி May 13, 2009 at 12:13 AM  

அண்ணன கொஞ்ச நாளா பீச் பக்கம் ஆளக்காணோம்? கடைய தொறந்தத பத்தியும் ஒண்ணும் சொல்லல?

பதிவு நல்லா இருந்துச்சு. ஓய்வு ஆந்திராவில அல்லது கொடநாட்டுலயா எசமான்?

Thamira May 13, 2009 at 12:58 PM  

ஹிஹ்ஹிஹி.. டாப்பு..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP