Tuesday, May 19, 2009

நொறுக்ஸ் - செவ்வாய் - 05/19/2009

முதல் செய்தியாக - நாடாளுமன்றத்துக்குப் போகவிருக்கும் நம் தானைத்தலைவர், தங்கத்தின் தங்கம், அகிலாண்ட பிரமாண்ட நாயகன் அண்ணன் ஜே.கே.ஆருக்கு வாழ்த்துகளை சொல்லிக்கறேன்.

அவரு எம்.பி ஆனதைக் கேட்ட தமிழ்த் திரையுலகம் மட்டற்ற மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருக்குன்னு கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்த மகிழ்ச்சியானது - இனிமே அவர் தமிழ்ப் படத்தில் நடிக்கமாட்டாருன்னு சொன்னதாலே வந்த மகிழ்ச்சின்னு கண்டுபிடிச்சபிறகு கோபம் கோபமா வருது.

பின்னே என்ன, அவர் இனிமே நடிக்க மாட்டாருன்னு சொன்னா, மக்கள்தானே சந்தோஷப்படணும்?

*****

ஒரு வேளை இலங்கை விடுதலை அடையும்போதே தமிழர்களுக்கு தனி நாடு பிரிக்கப்பட்டிருந்தால்...

தன் தாயைப் போல ராஜீவும் இந்த பிரச்சினையை ஒழுங்காகக் கையாண்டிருந்தால்...

சென்ற முறை ஐ. நா தலைவராக இந்தியர் சசி தரூர் தேர்வாகியிருந்தால்...

இந்தியாவின் பாதுகாப்பு தூதராக ஒரு தமிழர் இருந்திருந்தால்...

ஐ.நாவிலிருந்து இலங்கையில் பார்வையிடப் போயிருந்தவர் ஒரு தமிழராக இருந்திருந்தால்...

இதே மாதிரி ஏகப்பட்ட பதிலற்ற கேள்விகள் இருந்தாலும், ஏதாவது ஒன்றிற்காவது பாஸிட்டிவ் பதில் கிடைத்திருந்தால்.. நம் மக்கள் இப்படி உலக நாடுகள் அனைத்தும் கைவிடப்பட்ட அனாதைகளாய் அலைந்து அல்லல்பட்டு இறந்து போயிருக்க மாட்டார்கள்.

*****

கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க, தன் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தலைவன் கண்டிப்பாக இப்படி சாகக்கூடாது. இலங்கை அரசால் வெளியிடப்பட்ட பிரபாகரன் உடல் நிஜமாக அவராக இருக்கக்கூடாதென்றே வேண்டுகிறேன்.

*****

சில நாட்களுக்கு முன் போட்டிருந்த முத்தையா இடுகையின் உரலை அந்த இடுகையின் நண்பர் சுரேஷுக்கு அனுப்பியிருந்தேன்.

தொலைபேசி, வீடு, நாடு, மின்னஞ்சல் என எல்லாவற்றையும் மாற்றிவிட்ட அந்த நண்பர் - நெடுநாள் கழித்து தன் பழைய மின்னஞ்சலைப் பார்க்க - அதில் என் மின்னஞ்சலைப் பார்க்க - கொசுவத்தி சுத்திக்கொண்டே - என்னைத் தொடர்பு கொண்டுவிட்டார்.

வாழ்க இணையம்!!! வளர்க முத்தையா தொடர்!!!

*****

புது டெம்ப்ளேட் எப்படியிருக்குன்னும் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க மக்கள்ஸ்...

*****

தங்ஸ்: காங்கிரஸ்தான் இப்போ தனிப்பெரும்பான்மை அடைஞ்சிடுச்சே. அப்படியும் சோனியா ஏன் பிரதமராகாமே மன்மோகன் சிங்கை பிரதமராக்கியிருக்காங்க?

நான்: அவங்க கட்சியும் நம் வீட்டைப் போலதாம்மா. அதனால்தான்.

தங்ஸ்: புரியலியே.

நான்: நம்ம வீட்டு ரேஷன் கார்டுலே கு.த.ன்னு யார் பேர் போட்டிருக்கு. என் பேர்தானே? ஆனா, நிஜமான கு.த யாரு? .. அதே மாதிரிதான் அவங்க கட்சியிலேயும்.

டம். டமார். டுமீல். டப்.

*****

21 comments:

Anonymous,  May 19, 2009 at 11:09 AM  

" கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க, தன் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தலைவன் கண்டிப்பாக இப்படி சாகக்கூடாது. இலங்கை அரசால் வெளியிடப்பட்ட பிரபாகரன் உடல் நிஜமாக அவராக இருக்கக்கூடாதென்றே வேண்டுகிறேன் "

Ungalai Pola ellam valla eraivanai vaendikondirukkum pala kodi Thamilargalil naanum oruvan

( Nile Raja )

எம்.எம்.அப்துல்லா May 19, 2009 at 11:22 AM  

//" கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க, தன் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தலைவன் கண்டிப்பாக இப்படி சாகக்கூடாது. இலங்கை அரசால் வெளியிடப்பட்ட பிரபாகரன் உடல் நிஜமாக அவராக இருக்கக்கூடாதென்றே வேண்டுகிறேன் "

//

சோறுதண்ணி எறங்கல
:((

வால்பையன் May 19, 2009 at 12:30 PM  

டெப்ம்ளெட் நல்லாயிருக்கு தலைவா!

Anonymous,  May 19, 2009 at 12:56 PM  

//ஒரு லட்சம் ஹிட்களையும், நூறு ஃபாலோயர்களையும் வாங்க தட்டுத்தடுமாறி திக்கித்திணறிக் கொண்டிருக்கும் ஒரு தனி நபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.//

இந்த லொள்ளுக்காகவே உம்ம மத்த கோமாளித்தனங்களச் சகிச்சுக்கிடலாம்.


டெம்ப்ளேட் சூப்பர்.

அது சரி ரேசன் கார்டுலயாவது கு தலைவர்னு இருக்கீங்களே. அதுக்குச் சந்தோஷப் படுங்க.

Mahesh May 19, 2009 at 5:31 PM  

////ஒரு லட்சம் ஹிட்களையும், நூறு ஃபாலோயர்களையும் வாங்க தட்டுத்தடுமாறி திக்கித்திணறிக் கொண்டிருக்கும் ஒரு தனி நபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.//

அப்பன்னா நான் என்ன சொல்றதுன்னு யோசிச்சுக்கிட்டுருக்கேன் :(

டெம்ப்ளேட் உங்க attitude-ஐ reflect பண்ணலயே (அப்பாடா... சொறிஞ்சு விட்டாச்சு :)

சின்னப் பையன் May 19, 2009 at 9:57 PM  

வாங்க அனானி, அப்துல்லா அண்ணே -> :-(((

வாங்க வால், அண்ணாச்சி, நசரேயன் -> நன்றி

வாங்க இளா -> அப்ப சரியா கலரடிக்கலேண்ணே... அடுத்த தடவை வந்தீங்கன்னா பாருங்க...

வாங்க மகேஷ்ஜி -> அவ்வ்.. ச்சின்னப்புள்ளதனமா இல்லேன்றீங்களா.... சரி சரி...

Anonymous,  May 19, 2009 at 10:43 PM  

l liked the old template...this page is v.bright and the font colour is not bright enough- kannu valikudhu...pls change either the page colour or font colour. :-(

பிரேம்ஜி May 19, 2009 at 11:35 PM  

//ஒரு லட்சம் ஹிட்களையும், நூறு ஃபாலோயர்களையும் வாங்க தட்டுத்தடுமாறி திக்கித்திணறிக் கொண்டிருக்கும் ஒரு தனி நபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.//

ஹிட்ஸ்க்கு கூட கல்லு வெச்சிரலாம். ஆனா ஃபாலோயர்ஸ் .. ரொம்ப கஷ்டம்.

// liked the old template...this page is v.bright and the font colour is not bright enough- kannu valikudhu...pls change either the page colour or font colour. :-(//

இது நான் இல்லை. :-))

Anonymous,  May 20, 2009 at 1:49 AM  

Prabhakaran pattri neengal therivitha unarvugalai naanum vali moligiren...Krish

Faaique,  May 20, 2009 at 2:30 AM  

கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க

Praba also did same
click here http://www.vidivu.lk/tm.asp?fname=20090511_02

தமிழீம் பெற்றுத்தருவதாக மக்களை எமாற்றி கோடிக்கணக்கான பணங்களை மக்களிடமிருந்து கப்பமாக பெற்ற புலிகளின் தலைவன் தன் குடும்பத்துடன் உல்லாசமாக வாழ்ந்த காட்சிகள் அம்பலமாகத் தொடங்கி விட்டன.

Prabhu May 20, 2009 at 7:56 AM  

புது டெம்ப்ளேட் வேஸ்ட். எங்க தானைய தலைவர் ஜே.கே.ஆர் டேஸ்டுக்கு இல்ல. எனவே உடனே சிங்குசான் கலரில் மாற்றவும்

Thamira May 20, 2009 at 8:09 AM  

//ஒரு லட்சம் ஹிட்களையும், நூறு ஃபாலோயர்களையும் வாங்க தட்டுத்தடுமாறி திக்கித்திணறிக் கொண்டிருக்கும் ஒரு தனி நபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.//

அன்னிக்கே பாராட்டுணும்னு நினைச்சேன்.. செம.. பின்ன இங்க மட்டும் என்ன வாழுதாம்.?

மங்களூர் சிவா May 20, 2009 at 10:14 AM  

/
டம். டமார். டுமீல். டப்.
/

ஜவுண்டு ரொம்ப கம்மியா இருக்கே!?!?

:)))))))))

சின்னப் பையன் May 20, 2009 at 11:24 AM  

வாங்க அனானி -> மாத்திடறேங்க.

வாங்க பிரேம்ஜி, பப்பு -> அவ்வ்வ்...

வாங்க க்ரிஷ், பட்டாம்பூச்சி, ஆதி -> நன்றி..

வாங்க ஃபாயிக் -> :-((

வாங்க சிவா -> அவ்வ்.. வீட்லேயே சைலன்ஸர் வெச்சிருக்கோம்ல... அதான்....

பழமைபேசி May 20, 2009 at 12:40 PM  

படிவம் நல்லா இருக்குங்க!

ஸ்வர்ணரேக்கா May 20, 2009 at 12:58 PM  

புது டெம்ப்ளேட்டா.. சொல்லவே இல்ல... வேற யார் பதிவுக்கோ வந்துட்டேன்னு நெனச்சு... திரும்பிப் போய்.. verify பண்ணிட்டு வந்தேன்.... நல்லா கலர் கலரா போடுங்கன்ணே....

Saravanan Natarajan May 29, 2009 at 4:16 PM  

மாங்கு மாங்குன்னு வேலை பாக்காம... சிரிக்ககணும் ன்னு தோனும்போது பல கடைக்கு அப்போ அப்போ வந்து போறது உண்டு. அப்படி வறதுல முதல் கடை உங்க கடை.

இன்னைக்கு வந்து சில பல கடைகளில் என்ன புதுசா இருக்குன்னு பாத்துட்டு , நான் பாட்டுக்கு வேலைய பாக்க போய்டேன். ( சரி..சரி...வலக்கம் போல வேலைய பாக்குறமத்ிரி நடிக்க போய்டேன் )

ஆனாலும் ஏதோ முக்கியமான கடைக்கு போகலையே ன்னு ஒரே பீளிங்ஸ்.....

என்னடா இதுன்னு... மேனேஜரு அசந்த நேரம்மா பாத்து திரும்பவும் எல்லா கடைக்கும் ஏறி ஏறங்கின பிறகும்.. ஒரே பீளிங்ஸ்.......

என்னடா இதுன்னு... மேனேஜரு அசந்த நேரம்மா பாத்து திரும்பவும் எல்லா கடைக்கும் ஏறி பாத்தா .... உங்க கடைக்கு கலர் மாறி இருக்கு.....


என்ன கொடுமை இது சரவணன்.....

//புது டெம்ப்ளேட் எப்படியிருக்குன்னும் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க மக்கள்ஸ்...//

கிரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டர் மாதிரி இருக்குற உங்க படத்துக்கு , டிராப்பிக் கான்ஸ்டேபல் ட்ரெஸ் போட்ட மாதிரி இருக்கு உங்க புது கலர்.

By the way. I just started to follow all these tamil blogs couple of months back. However, I have never left a comment on any of the blog. This is my first comment. I really appreciate all your efforts in making others to laugh. Keep it up.

Anonymous,  January 10, 2011 at 11:38 AM  

Wow this is a great resource.. I’m enjoying it.. good article

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP