Wednesday, May 6, 2009

புதிய / புத்தம் புதிய மனைவியின் சமையல்...


முகு : இதை படிக்கும் அன்புச் சகோதரிகளே, இது வெறும் தமாசுக்காகதான். சீரியஸா எடுத்துக்காதீங்க.

*****

புத்தம் புதிய:
வாரத்துக்கு ஒரு நாள் நாம வெளியே போய் சாப்பிட்டு வரலாம். சமைக்கறதுலேந்து நீ ரெஸ்ட் எடுத்துக்கோ.

புதிய:
வாரத்துக்கு ரெண்டு நாள் நான் வெளியே சாப்பிட்டுக்கறேன். அப்போதான் உன் சமையல்லேந்து விடுதலை கிடைக்கும் எனக்கு.

*****

புத்தம் புதிய:
தினமும் டிவி பாத்து நீ புதுசு புதுசா சமைக்கறது நல்லா இருக்கு.

புதிய:
முதல்லே வழக்கமா சமைக்கறதை ஒழுங்கா சமைக்க கத்துக்கோ. புது ஐட்டங்கள்லாம் வேண்டாம்.

*****

புத்தம் புதிய:
ஒரே ஐட்டத்தை எப்படி வெவ்வேறே சுவைகள்லே செய்யறே நீ? அதிசயம்தான்.

புதிய:
ங்கொய்யாலே. அதெப்படி நீ எந்த ஐட்டம் செய்தாலும், எல்லாம் ஒரே மாதிரியே இருக்கு?

*****

புத்தம் புதிய:
ஃபேனைப் போடு. ஆற அமர உக்காந்து சாப்பிட்டாதான் உன் சாப்பாடு அருமையா இருக்கும்.

புதிய:
ஃபேனைப் போடாதே. சூட்டோட சூடா சாப்பிட்டாதான் சுவையும் தெரியாது. சாப்பாடும் கடகடன்னு உள்ளே இறங்கும்.

*****

புத்தம் புதிய:
நீ எந்த ஐட்டம் செஞ்சாலும், அதிலே 'அன்பு'ன்ற ஒரு பொருளை சேர்த்து பரிமாறும்போது, அந்த ஐட்டத்தின் மதிப்பு எங்கேயோ போயிடுது.

புதிய:
நீ எந்த ஐட்டம் செஞ்சாலும், அதிலே 'அன்பு'ன்ற ஒரு பொருளை சேர்த்து பரிமாறும்போது, அதில் அன்பு மட்டும்தான் இருக்கு. வேறெந்த சுவையும் இல்லை.

*****

புத்தம் புதிய:
என் கண்ணை மூடிக்கொண்டு நீ செய்த புது ஐட்டத்தை சுவைக்கச் சொல்வாய். நானும் அது என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுவேன்.

புதிய:
என் கண்ணை 'பே'ன்னு திறந்து கொண்டே நீ செய்த புது ஐட்டத்தை சுவைத்தாலும், அது என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறேன்.

*****

பிகு: முன்னாடி முகு போடலேன்னா, பின்னாடி வீட்டுலே (எனக்கு) சாப்பாடு கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்தானே?

*****

28 comments:

Prabhu May 6, 2009 at 9:21 PM  

உங்க புதிய மனைவியின் ஐடிய குடுங்க. பத்த வச்சிருவோம்.

ஆளவந்தான் May 6, 2009 at 9:38 PM  

//
புத்தம் புதிய:
ஒரே ஐட்டத்தை எப்படி வெவ்வேறே சுவைகள்லே செய்யறே நீ? அதிசயம்தான்.

புதிய:
ங்கொய்யாலே. அதெப்படி நீ எந்த ஐட்டம் செய்தாலும், எல்லாம் ஒரே மாதிரியே இருக்கு?
//

இது டாப்பு :)

VIKNESHWARAN ADAKKALAM May 6, 2009 at 9:43 PM  

//ங்கொய்யாலே. அதெப்படி நீ எந்த ஐட்டம் செய்தாலும், எல்லாம் ஒரே மாதிரியே இருக்கு?//

ஆஹா ஓஹோ... முடியல... :)))

முரளிகண்ணன் May 6, 2009 at 10:14 PM  

பழைய, மிகப் பழைய மனைவியின் சமையல் எப்போ?

அளவில்லா ஆவலுடன்

முத்துலெட்சுமி/muthuletchumi May 7, 2009 at 12:42 AM  

புதிய என்று இருக்கற எதையுமே நீங்க சீரியஸா சொல்லவே முடியாது வீட்டுல ... அது வெறும் கனவுல வர காட்சின்னு எனக்குத்தெரியுமே...

கார்க்கிபவா May 7, 2009 at 1:21 AM  

ஹிஹி..அப்ப பழைய மனைவியின் சாப்பாடு???

Anonymous,  May 7, 2009 at 1:56 AM  

இதில் நீர் எந்த வகையைச் சார்ந்தவர்?

Balaji,  May 7, 2009 at 2:59 AM  

நீ சமைச்சதில எனக்கு ரொம்ப பிடிச்சது தயிர் தான்.

கார்த்திகைப் பாண்டியன் May 7, 2009 at 3:05 AM  

அனுபவக் கதைகள் நல்லாத்தானே இருக்கும்.. ஆனா நீங்க பழைய.. மிகப்பழையன்னுல எழுதணும்..

பட்டாம்பூச்சி May 7, 2009 at 6:15 AM  

எப்படித்தான் இப்படி யோசிக்கிறீங்களோ?
சூப்பரா இருக்குங்கோவ்.

சின்னப் பையன் May 7, 2009 at 6:51 AM  

வாங்க பப்பு -> அவ்வ்வ்... ஏன் இந்த கொல வெறி உங்களுக்கு....!!!

வாங்க ஆளவந்தான், விக்னேஸ்வரன் -> பேச்சிலர்ஸுக்கு இந்த பாயிண்ட் மட்டும் ஏன் பிடிக்குது????

வாங்க தமிழ் -> நன்றி...

வாங்க முரளி அண்ணா -> ஆஹா.... கிளம்பிட்டாருய்யா.... பழையன்னு சொன்னோம்னா... அப்புறம் பழைய சோறுதான்.... ஓகேவா...

வாங்க பிரேம்ஜி, ஆயில்ஸ், சகோதரி வித்யா > நன்றி...

சின்னப் பையன் May 7, 2009 at 7:17 AM  

வாங்க மு-க அக்கா -> ஹாஹா... சரி சரி. இந்த மாதிரி பொதுவுலே போட்டு உடைக்கலாமோ???

வாப்பா கார்க்கி -> புத்தம் புதிய = பழைய; புதிய = கொஞ்சம் பழைய. ஏதாவது புரியுதா??? எல்லாமே ரிலேட்டிவ் வார்த்தைகள்தானே?????

வாங்க வேலன் ஐயா -> ஹிஹி... இப்போ என்னாலே எதையுமே சொல்ல முடியாது...

வாங்க பாலாஜி -> அவ்வ்வ்.... அவ்ளோ மோசமா?????

வாங்க கார்த்திகைப் பாண்டியன் -> அவ்வ்வ்.. நானும் அவரைப் போலவே யூத்துதாங்க... பழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழசு கிடையாது...

வாங்க பட்டாம்பூச்சி -> உங்களை சிரிக்க வெக்கத்தாங்க யோசிக்க வேண்டியிருக்கு... நன்றி...

ராஜ நடராஜன் May 7, 2009 at 7:26 AM  

//புதிய:
என் கண்ணை 'பே'ன்னு திறந்து கொண்டே நீ செய்த புது ஐட்டத்தை சுவைத்தாலும், அது என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறேன்.//

நல்லவேளை பாஸ் சோறு துன்னப்போயிட்டாரு.சிரிச்சு சிரிச்சு அனுப்பு பட்டனைக் கூடத் தட்டமுடியல:)

வால்பையன் May 7, 2009 at 9:54 AM  

என்னாங்க சொல்றிங்க!
அப்ப வீட்ல நீங்க சமைக்குறதில்லையா?

Thamira May 7, 2009 at 10:09 AM  

கார்க்கியின் பதிலில் உங்க சால்ஜாப்பை ஏற்க முடியாது குரு. 'பழைய' என்ற கேட்டகிரி விட்டுப்போனது மன்னிக்கமுடியாதது. நான் வேணா தட்டிவிடவா?

நசரேயன் May 7, 2009 at 11:02 AM  

//ங்கொய்யாலே. அதெப்படி நீ எந்த ஐட்டம் செய்தாலும், எல்லாம் ஒரே மாதிரியே இருக்கு?//

கலக்கல்.. சிரிப்பை நிப்பாட்ட முடியலை

மங்களூர் சிவா May 7, 2009 at 12:27 PM  

சிரிச்சி சிரிச்சி வயித்த வலியே வந்திடிச்சி.

:)))))

மணிகண்டன் May 7, 2009 at 12:57 PM  

***
இது வெறும் தமாசுக்காகதான். சீரியஸா எடுத்துக்காதீங்க.
***

அப்புறம் ஏன் லேபில்ல டமாஸ் மாதிரின்னு போட்டீங்க ?

சின்னப் பையன் May 7, 2009 at 4:08 PM  

வாங்க ராஜ நடராஜன் -> சிரிங்க சிரிங்க.... சிரிச்சிக்கிட்டே இருங்க...

வாங்க வால் -> அவ்வ்.. நான் சமைச்சிக்கிட்டே இருந்தா உங்க பதிவுலே பின்னூட்டம் யாருங்க போடறது?

வாங்க ஆதி -> சரி சரி கூல் அண்ணே... இப்போ என்ன 'பழைய' ஒண்ணு போடணுமா??? நீங்களே போடுங்களேன்...

வாங்க நசரேயன், சிவா -> :-)))

வாங்க மணி -> அவ்வ். அப்போ டமாஸ்தான்னு நீங்க ஒத்துக்கறீங்களா???? மிக்க நன்றி... :-))

பல நாளுக்கப்புறம் என்னை மனந்திறந்து சிரிக்க வச்சிருக்க. நல்லா இரு கண்ணு.உலகம்சுற்று வாலிபி{பாட்டி},  May 7, 2009 at 8:21 PM  

பல நாளுக்கப்புறம் என்னை மனந்திறந்து சிரிக்க வச்சிருக்க. நல்லா இரு கண்ணு.உலகம்சுற்று வாலிபி{பாட்டி}

ஆளவந்தான் May 7, 2009 at 8:28 PM  

//
பல நாளுக்கப்புறம் என்னை மனந்திறந்து சிரிக்க வச்சிருக்க. நல்லா இரு கண்ணு.உலகம்சுற்று வாலிபி{பாட்டி} said...

பல நாளுக்கப்புறம் என்னை மனந்திறந்து சிரிக்க வச்சிருக்க. நல்லா இரு கண்ணு.உலகம்சுற்று வாலிபி{பாட்டி}
//
கேப்பு ரொம்ப அதிகம் போல.. பாவம் பாட்டியை அடிக்கடி சிரிக்கவைங்க ச்சினைப்பையன் (இது எழுத்துபிழை தான்’னு சொன்னா நீங்க நம்பனும்)

உலகம்சுற்று வாலிபி{பாட்டி,  May 7, 2009 at 9:05 PM  

''என்னை ''எழுத்து பிழை இல்லை கண்ணு.ன+ஐ=னை,என்னை.

RAMYA May 8, 2009 at 1:49 PM  

//
முகு : இதை படிக்கும் அன்புச் சகோதரிகளே, இது வெறும் தமாசுக்காகதான். சீரியஸா எடுத்துக்காதீங்க.
//

அதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டோம் இல்லே!!

RAMYA May 8, 2009 at 1:50 PM  

//
புத்தம் புதிய:
ஒரே ஐட்டத்தை எப்படி வெவ்வேறே சுவைகள்லே செய்யறே நீ? அதிசயம்தான்.

புதிய:
ங்கொய்யாலே. அதெப்படி நீ எந்த ஐட்டம் செய்தாலும், எல்லாம் ஒரே மாதிரியே இருக்கு?
//

படிச்சு ஒரே சிரிப்புதான் போங்க அண்ணா !!

RAMYA May 8, 2009 at 1:51 PM  

// முரளிகண்ணன் said...
பழைய, மிகப் பழைய மனைவியின் சமையல் எப்போ?

அளவில்லா ஆவலுடன்
//

அளவில்லா குசும்புடன் ரம்யா!!

RAMYA May 8, 2009 at 1:53 PM  

//
உலகம்சுற்று வாலிபி{பாட்டி said...
''என்னை ''எழுத்து பிழை இல்லை கண்ணு.ன+ஐ=னை,என்னை.

//


சூப்பர் விளக்கம் :))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP