Thursday, December 4, 2008

சந்தில் சிந்து...!!! பகுதி 1 of 2...!!!


சந்தில் சிந்து பாடறியா? - நீங்க மத்தவங்களையோ / மத்தவங்க உங்களையோ வாழ்க்கையில் ஒரு தடவையாவது சொல்ல கேட்டிருப்பீங்க.

ஒரு நாள் மல்லாக்க படுத்து விட்டத்தைப் பாத்துக்கிட்டு இருந்தபோது, நான் சைக்கிள் கத்துக்கிட்ட நாள்லேந்து கார் ஓட்டற இந்த நாள் வரைக்கும் எப்பல்லாம்/எப்படியெல்லாம் சந்துலே சிந்து பாடியிருக்கேன்னு யோசிச்சேன். அதன் விளைவுதான் இந்த தொடர் பதிவு. ரெண்டு பகுதிகளா இன்னிக்கும் நாளைக்கும் வருது.

தவறாம படிச்சி உங்க பொன்னான வாக்குகளை / பின்னூட்டங்களை அள்ளி வீசுங்க.

ச்சின்ன சைக்கிள்:

ச்சின்ன வயசுலே ச்சின்ன சைக்கிள் விட கத்துக்கிட்டப்போ, சந்தே தேவையில்லை. பெரிய தெருவில் போகும்போதுகூட வளைச்சி வளைச்சி
ஓட்டி யார் மேலேயாவது இடித்துவிடுவேன். அட, கத்துக்கும்போது இதெல்லாம் சகஜம்தானே...


ஒரு நாள் எங்க பெரியப்பா வெள்ளையும் சொள்ளையுமா அலுவலகத்துக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் கிட்ட்ட்ட்டே போய் சைக்கிள் ஓட்டி காட்டறேன் பேர்வழின்னு அவர் மேலேயே இடிச்சி, வேட்டியில் டயர் டிசைன் போட்டுவிட்டேன். எதுவுமே திட்டாமே சிரிச்சிக்கிட்டே அவர் திரும்ப வீட்டுக்குப் போய் வேட்டி மாத்திகிட்டாலும் - இப்போ நினைச்சிப் பாத்தா கண்டிப்பா அன்னிக்கு மனசிலே ஏதாவது திட்டியிருப்பார்னு தோணுது.


பெரிய சைக்கிள்:




சென்னையிலிருந்த தண்ணீர் கஷ்டத்தினால் வாரம் இருமுறை பீச்சுக்கு சென்று அங்கிருக்கும் கிணற்றிலிருந்து குடிநீர் எடுத்து வருவோம். சைக்கிள் கேரியரின் இருபக்கத்திலும் ப்ளாஸ்டிக் குடமும், மேலே ஒரு எவர்சில்வர் குடமும் கட்டிக்கொண்டு போவோம்.


அப்படி ஒரு தடவை தண்ணீர் நிரப்பிக்கொண்டு மூன்று குடத்துடன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். வீட்டுக்கருகில் ஒரு கன்றுக்குட்டி நின்றுக் கொண்டிருந்தது. அதற்கும் வீட்டு ப்ளாட்பாரத்துக்கும் சிறிய இடைவெளியே இருந்தது. நம்ம சைக்கிளுக்கு அந்த சின்ன கேப் போதும்னு நினைச்சி அதில் போக - நம்மை தாக்க வருகிறான் என்றெண்ணி அந்த கன்றுக்குட்டி டக்கென்று திரும்பியது.

சரி மொத்தமாக சைக்கிளோடு நான் கீழே விழுந்திருப்பேன்னு நினைச்சீங்களா. அதுதான் இல்லே. நான் ஸ்டெடியா நின்றிருக்க, பின்னாலிருந்த எவர்சில்வர் குடம் தண்ணீரோடு 'டம்'. எங்க அம்மாவுக்கு அந்த குடம் சப்பையானதுகூட பரவாயில்லை - ஆனா அவ்ளோ தண்ணியும்
வீணாப் போச்சேன்னுதான் கவலை...:-((

டிவிஎஸ் சாம்ப்:




ஓட்டிப்பார்றான்னு நண்பன் கொடுத்தபோது சிலபல பேரை அன்னிக்கு தட்டப்போறேன்னு நினைக்கவில்லை. புது வண்டி. சீப்பா கிடைக்குதேன்னு ரெண்டு பக்கமும் 'பின் பக்கம் பார்க்கும்' கண்ணாடியை வாங்கி மாட்டியிருந்தான் அவன். நிறைய வருஷம் சைக்கிள் ஓட்டிய
முன்னனுபவம் இருந்ததால், நீ பின்னாடி உக்காரு நான் ஓட்டறேன்னு சொல்லிட்டு ஓட்ட ஆரம்பித்துவிட்டேன்.


எல்லாம் நல்லாத்தான் போயிட்டுயிருந்தது. 'திடீர்னு' நடுவில் ஒரு காய்கறி மார்க்கெட் வந்துவிட்டது. நம்ம ஊர்லே மார்க்கெட்லே கும்பலுக்கு
கேக்கணுமா.. எங்க வண்டி கண்ணாடி, வண்டியை விட கொஞ்சம் வெளியே நீட்டி இருந்ததால், ஒரு நாலஞ்சு பேரை தட்டி விட்டுக்கிட்டே
போயிட்டிருந்தேன். அதுலே சில பேர் நல்லாவும், பல பேர் நல்ல்ல்லாவும் திட்ட, திட்டத்தெரியாத ஒரு மாடு அதன் கொம்பின் உதவியால்,
எங்கள் வண்டியை முட்டி நிறுத்தியது.


கண்ணாடி இருந்தா இனிமே உன் வண்டியே ஓட்டமாட்டேன்னு சத்தம் போட்டு முதல்லே அவன் வண்டியிலிருந்து அந்த ரெண்டு
கண்ணாடியையும் கழட்ட வெச்ச பெருமை என்னைத்தான் சேரும்.

-------

பைக்கிலிருந்து பெரிய வண்டிகளில் சந்தில் சிந்து - நாளைய பதிவில்!!!

14 comments:

rapp December 4, 2008 at 5:37 AM  

//கண்ணாடி இருந்தா இனிமே உன் வண்டியே ஓட்டமாட்டேன்னு சத்தம் போட்டு முதல்லே அவன் வண்டியிலிருந்து அந்த ரெண்டு
கண்ணாடியையும் கழட்ட வெச்ச பெருமை என்னைத்தான் சேரும்.

//

இதென்ன கூத்து, அவரோட வண்டிய நீங்க ஓட்டனும்னு அவருக்கு என்னமோ வேண்டுதல்போல பில்டப் கொடுக்கறீங்க:):):)

//பின்னாலிருந்த எவர்சில்வர் குடம் தண்ணீரோடு 'டம்'. எங்க அம்மாவுக்கு அந்த குடம் சப்பையானதுகூட பரவாயில்லை - ஆனா அவ்ளோ தண்ணியும்
வீணாப் போச்சேன்னுதான் கவலை...:-((//

இதுக்கு மட்டும் என்னால ஜாலியா பேச முடியாது, ஏன்னா உங்க அளவுக்கெல்லாம் இல்லைன்னாலும், நானும் இத தண்ணி கஷ்டத்தால பெரும்பாடு பட்டிருக்கேன். உங்க அம்மாவோட பீலிங்க்ஸ் எனக்கு தெரியுது:(:(:(

//ஒரு நாள் எங்க பெரியப்பா வெள்ளையும் சொள்ளையுமா அலுவலகத்துக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் கிட்ட்ட்ட்டே போய் சைக்கிள் ஓட்டி காட்டறேன் பேர்வழின்னு அவர் மேலேயே இடிச்சி, வேட்டியில் டயர் டிசைன் போட்டுவிட்டேன். எதுவுமே திட்டாமே சிரிச்சிக்கிட்டே அவர் திரும்ப வீட்டுக்குப் போய் வேட்டி மாத்திகிட்டாலும் - இப்போ நினைச்சிப் பாத்தா கண்டிப்பா அன்னிக்கு மனசிலே ஏதாவது திட்டியிருப்பார்னு தோணுது.

//

இதென்ன உங்களோட டைமிங் டயலாக் எதுவுமே இல்லாம சாதாரணமா இருக்கு:(:(:(

நாளைக்கு உங்க ஜாலி பன்ச்களோட பதிவு போடுங்க:):):)

பரிசல்காரன் December 4, 2008 at 9:07 PM  

தலைப்பைப் பார்த்து வேற எதிர்பார்த்தேன்... கிடைச்ச கேப்ல நீங்க சமாளிச்ச விஷயம் எதுனா சொல்லுவீங்கன்னு..

ம்ம்ம்.. வித்தியாசமாத்தான் யோசிக்கறீங்க..

ஆமா.. இப்போ பத்து பத்து மேட்டர் சீஸன் போய் பார்ட் 1/2, 2/2 சீஸனா?

Mahesh December 5, 2008 at 12:10 AM  

நானுமுங் கோட எதுனாச்சும் நெம்ப வித்தியாசமா ஓசிச்சு ஒரு கவுதை இருக்கும்னு நெனச்சேன்....

இதுவுமுங் கோட நல்லாத்தேன் இருக்குது... நாங்கள்லாம் கொரங்குப்பெடல் போட்டு ஊர்ல ஒரு சந்து உடாம போய் சிந்து பாடி காவுடி தூக்குனதெல்லாம் ஒரு பொஸ்தோமாவே போடலாமாக்கு...

முரளிகண்ணன் December 5, 2008 at 2:06 AM  

என்னது லேபிள் புனைவுன்னு இருக்கு?

வால்பையன் December 5, 2008 at 3:00 AM  

நான் தான் ஆறாவது

வால்பையன் December 5, 2008 at 3:01 AM  

//சந்தில் சிந்து பாடறியா? //

பாடினா சிந்து பைரவி கோவிச்சுகுவாங்களா?

பழமைபேசி December 5, 2008 at 10:24 AM  

//Mahesh said...
நானுமுங் கோட எதுனாச்சும் நெம்ப வித்தியாசமா ஓசிச்சு ஒரு கவுதை இருக்கும்னு நெனச்சேன்....

இதுவுமுங் கோட நல்லாத்தேன் இருக்குது... நாங்கள்லாம் கொரங்குப்பெடல் போட்டு ஊர்ல ஒரு சந்து உடாம போய் சிந்து பாடி காவுடி தூக்குனதெல்லாம் ஒரு பொஸ்தோமாவே போடலாமாக்கு...
//

அண்ணா, இப்பத்தான் நீலகிரி இரயிலு வண்டியுட்டு வந்தா மாதரயே இருக்குங்ன்னா, உங்க பழம. வரும்போது திருமூர்த்தி மலைத்தண்ணி கொண்ட்டு வந்தீங்ளாண்ணா? இருந்தா, ஒரு வாட்லு குடுங்கோ!

நசரேயன் December 5, 2008 at 11:01 AM  

ச்சின்னப்பையன் --> ச்சின்ன சைக்கிள்
ச்சின்னப்பையன் --> பெரிய சைக்கிள்
ச்சின்னப்பையன் --> இரு சக்கர வாகனம்
ச்சின்னப்பையன் --> நான்கு சக்கர வாகனம்

புரியுதா?

புதுகை.அப்துல்லா December 5, 2008 at 11:04 AM  

நம்ப மன்றத்தின் முக்கிய அறிவிப்பு பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தேன். ஆளே காணோம் உங்கள??? உங்க து.த பதவிய ராஜினாமா பண்ணிட்டீங்களா???

சின்னப் பையன் December 5, 2008 at 7:09 PM  

எல்லோருக்கும் -> ரெண்டு நாள் கழிச்சி பதில் சொல்றதுக்கு மன்னிச்சிக்குங்க..

வாங்க ராப் -> அவ்வ்... முடிஞ்ச வரைக்கும் நகைச்சுவையா சொல்றது முயற்சி பண்றேங்க... சில சமயம் சொதப்பலாயிடுது... :-(((

வாங்க பரிசல் -> நன்றி..

வாங்க மகேஷ்ஜி -> அடடே... ஒரு நல்ல பதிப்பாளரை தேட வேண்டியதுதான் அப்போ.. வாழ்த்துக்கள் சொல்லிக்குறேங்கோவ்.... :-))

சின்னப் பையன் December 5, 2008 at 7:11 PM  

வாங்க முரளிகண்ணன் -> அவ்வ். இது சொந்தக்கதைதாங்க... மாத்தி போட்டுட்டேன்னு நினைக்கறேன்... :-))

வாங்க வால் -> அதை பைரவிக்கிட்டேதாங்க கேக்கணும். எனக்குத் தெரியல... அவ்வ்வ்..

வாங்க பழமைபேசி -> என்னங்கடா இது... கமலோட சதி லீலாவதி பாத்த எஃபெக்ட் கிடைக்குதே... :-))

வாங்க நசரேயன் -> ஆஆஆ.. இன்னும் நான் வளரவே இல்லேன்னு சொல்றீங்களா!!!!!

சின்னப் பையன் December 5, 2008 at 7:14 PM  

வாங்க அப்துல்லா அண்ணே -> நான் எண்ட் ரி கொடுக்கலாம்னு பாத்த நேரத்துலே 300+லே இருந்ததுங்க... அதனாலே பின்னூட்டம் போடாமே வந்துட்டேன்... இன்னும் அண்ணன் கட்சியிலேதாங்க இருக்கேன்... நான் என்ன அரசியல்வாதியா அப்பப்போ கட்சி, கூட்டணி மாத்தறதுக்கு... :-))

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> நன்றி..

cheena (சீனா) December 5, 2008 at 10:24 PM  

இதுதான் சந்துலே சிந்து பாடறதா

நான் வேறென்னவோ நினைச்சேன்

ம்ம்ம்ம்ம்ம்ம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP