எனது வாழ்க்கையில் Morse Code
முன்னுரை:
நேற்றைய பதிவில் மொக்கை கொஞ்சம் ஓவராவே இருந்துச்சுன்னு நினைக்கிறேன் - அதை சரிப்படுத்துவதற்காக இன்றைய பதிவு கொஞ்சம்
டாகுமெண்டரி டைப்பில் எழுதியிருக்கேன்.
--------
ச்சின்ன வயசில் சாரணர் இயக்கத்தில் இருந்தபோது சொல்லிக் கொடுத்த ஒரு மேட்டர் - மோர்ஸ் கோட்.
சாமுவேல் மோர்ஸ் என்பவர் கண்டுபிடுத்த இந்த முறையைக் கொண்டு பழைய காலத்தில் தந்தி தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். எல்லா ஆங்கில எழுத்துகளையும் மற்றும் 0 முதல் 9 வரை உள்ள எண்களையும் குறியீடுகள் மூலம் மொழிபெயர்த்து அதை குறிப்பிட்ட அலைவரிசையில் அனுப்பி இத்தகைய தகவல் பரிமாற்றங்கள் நடந்து வந்தன. தற்போதும் ஹாம் எனப்படும் அமெச்சூர் ரேடியோ பயன்படுத்துபவர்கள் இந்த மோர்ஸ் கோட் மூலம் பேசுகிறார்கள்.
ஹாம் எப்படி இருக்கும்னா - பழைய திரைப்படங்களில் வில்லன் அலமாரியின் கதவைத் திறந்து - ஹெட்செட்டை எடுத்து மாட்டிக்கொண்டு - ஹலோ ஹலோ 305 ஹியர் - அப்படின்னுவாரே, அதே மாதிரிதான் இருக்கும். விக்ரம் படத்தில் கமல் கூட அந்த மாடி வீட்டில் இப்படி ஒரு கருவியை கண்டுபிடிப்பார்.
எல்லா ஆங்கில எழுத்துக்களையும் - டிட் (புள்ளி), டா (கோடு) - இந்த இரண்டு குறியீடுகளின் மூலம் வகைப்படுத்தி உள்ளனர். உதாரணத்திற்கு, A என்பதை
ஒரு டிட், ஒரு டா (சொல்லும்போது : டிட் டா) எனவும் B என்பதை ஒரு டா, மூன்று டிட் (சொல்லும்போது: டா டிட் டிட் டிட்) எனவும் சொல்ல வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்.
இந்த மோர்ஸ் கோட் - மேலே சொன்ன மாதிரி அமெச்சூர் ரேடியோ பயன்படுத்தும் ஆட்களுக்கோ அல்லது ராணுவத்தில் தந்தி தகவல் பரிமாற்றத்தில் இருப்பவர்களோதான் பயன்படும் - எங்களுக்கு எதுக்கு இதை சொல்லித் தருகிறீர்கள்னு கேட்டதற்கு - "ஏதாவது ஒரு காட்டுலே இரவிலே வழிதெரியாமே மாட்டிக்கிட்டாலோ, ஆபத்து காலத்திலோ இது உங்களுக்கு உதவும்" அப்படின்னு சொன்னாங்க.
நம்ம வடிவேலு ஜோக் அப்பவே வந்திருந்ததுன்னா நான் கேட்டிருப்பேன் - "நான் ஏண்டா நடுராத்திரியிலே (சுடு)காட்டுக்குப் போகணும்? அவ்வ்வ்".
இருந்தாலும் அப்ப நல்ல பிள்ளையா இருந்ததால் அப்படியெல்லாம் கேக்காமே ஒழுங்கா அவங்க சொன்னதை கேட்டுக்கிட்டேன்.
அதன்பிறகு பள்ளியில் 9வது படிக்கும்போது நடைபெற்ற ஒரு அறிவியல் கண்காட்சியில் இதை பயன்படுத்தப் போறேன்னு ஆசிரியரிடம் சொன்னேன். ஒரு switch boardல் இரண்டு பல்ப் மாட்டினோம். அதன் மேல் வெவ்வேறு நிற காகிதங்களை ஒட்டினோம். ஒரு பல்பை டிட் (புள்ளி) ஆகவும், மற்றொரு பல்பை டா (கோடு) ஆகவும் பயன்படுத்தி செய்தியை அனுப்ப முயற்சி செய்தோம். என் நண்பன் அதை இயக்கி மோர்ஸ் கோட் மூலம் செய்தியை அனுப்ப, நான் சற்று தூரத்திலிருந்து அந்த செய்தியை கண்டுபிடித்து சொல்வேன். அந்த கண்காட்சிக்காக ஒரு வாரம் பயிற்சி எடுத்திருந்தாலும், கடைசியில் சிறப்பு விருந்தினர் கொடுத்த செய்தியை நான் சரியாக கண்டறியாமல் வழிந்தது தனி கதை...
அதன் பிறகு வேறெங்கும் உதவாத அந்த மோர்ஸ் கோட் எனக்கு திருமணமான பிறகுதான் மிகவும் பயன்பட்டது. அது எப்படின்னு கேக்கறவங்களுக்காக - மோர்ஸ் கோட் பயன்படுத்தி நான் இன்னிக்கு அனுப்பின செய்தியை கொடுக்கிறேன்.
"டிட்டிட்டிட் இன்னிக்கு டிட்டா காபியிலே டிட்டிட் சர்க்கரை டாடா கொஞ்சம் டிட்டிட் கம்மியாயிருக்கே டாடாடா????"
பின்குறிப்பு:
என்னாச்சு, இன்னிக்கு இந்த மாதிரி ஒரு சீரியஸ் பதிவுன்னு கேக்கறவங்களுக்கு - நான் பதிவு எழுத ஆரம்பிச்சி இன்னியிலேந்து ரெண்டாவது வருஷம் ஆரம்பிச்சிடுச்சு... அதுக்குதான் இப்படி...
20 comments:
வாழ்த்துகள் தல.. ஒங்க பாடம் சில எடங்கள்ல யூஸ் ஆவும்னுதான் நினைக்கிறேன்.
ஹை.. மீ த பர்ஸ்ட்.!
வாழ்த்துக்கள். புத்தாண்டு வாழ்த்துக்களுடன், பதிவுலகப் புத்தாண்டு உங்களுக்குப் பிறப்பதைக் குறித்து மகிழ்வடைகிறேன்
What is 'I Love You' in Morse Code?
..//.-../---/...-/.//-.--/---/..-/
ஆதாரம்:
இங்கே
Vaazthukkal
-ILA
நிறைய எழுத வாழ்த்துக்கள்!!!
தேவா...
வாங்க தாமிரா -> ஹிஹி.. யூஸ் பண்ணிட்டு சொல்லுங்க... :-))
வாங்க ஷேர்பாண்ட் -> நன்றிங்க... அதேதான் சரியா சொன்னீங்க.... நன்றி...
வாங்க இளா, தேவன்மயம் -> நன்றிஸ்...
முதல்ல ரெண்டாம் வருட துவக்கத்துக்கு வாழ்த்துக்கள்
ஹீம் என்ன என்னமோ சொல்லறீங்க எல்லாம் விளங்கின மாதிரியும் இருக்கும் விளங்காத மாதிரியும் இருக்கு.
ஆனாலும் ஒரு விசயம் கண்டு பிடிச்சுட்டேன். கடைசியா நீங்க ஒரு தப்பு செஞ்சு இருக்கிங்க. நீங்க வீட்டுக்கு அனுப்பின செய்தி இப்படித்தான் வரணும்.
"டிட்டிட்டிட் இன்னிக்கு டிட்டா காபியிலே டிட்டிட் சர்க்கரை டாடா கொஞ்சம் டிட்டிட் கம்மியாயிருக்கா டாடாடா????
//
"டிட்டிட்டிட் இன்னிக்கு டிட்டா காபியிலே டிட்டிட் சர்க்கரை டாடா கொஞ்சம் டிட்டிட் கம்மியாயிருக்கே டாடாடா????"
//
ஹூம்...தலையை காப்பாத்திக்கிறதுக்கு எப்பிடி எல்லாம் கஷ்டப்பட வேண்டியதிருக்கு!
வாழ்த்துக்கள் ச்சின்ன பையன்
//டிட்டிட்டிட் இன்னிக்கு டிட்டா காபியிலே டிட்டிட் சர்க்கரை டாடா கொஞ்சம் டிட்டிட் கம்மியாயிருக்கே டாடாடா????"//
பள்ளியில் தெரிஞ்சிகிட்ட அறிவியலை அற்புதமா வீட்ல உபயோகப்படுத்துறீங்க...
:-))))))
வாங்க தாரணி பிரியா -> ஹாஹா... கோட் வேர்ட்லே இருந்தாலும் நீங்க சரியா கண்டுபிடிச்சிடறீங்க.... ரோஜா அரவிந்த்சாமி மாதிரி வேலை பாக்கறீங்களா?????
வாங்க அது சரி -> பாருங்க. 'நம்ம' கஷ்டத்தை... :-))
வாங்க நசரேயன், பிரேம்ஜி -> நன்றி...
//
"டிட்டிட்டிட் இன்னிக்கு டிட்டா காபியிலே டிட்டிட் சர்க்கரை டாடா கொஞ்சம் டிட்டிட் கம்மியாயிருக்கே டாடாடா????"
//
இதுக்கு தான் சொல்றது.. மோர்ஸ் கோடு படிக்கிறதுக்கு பதிலா.. காப்பி போட்டு பழகியிருக்கலாம்..
வாழ்த்துக்கள்..
நிறைய எழுதுங்கள்..
அட இரண்டு வருஷம் ஆச்சா??? இன்னும் 100 வருஷம் உங்கள சகிச்சுக்கனும் நினைக்கையிலதான் கடியா இருக்கு :))))))))
நம்ப தல பத்தின ஒரு மேட்டரு....வலைஉலகத்திற்கே ஆச்சரியமூட்டக் கூடிய அந்த செய்தியை சீக்கிரம் மெயில் அனுப்புறேன் :)
டிட் டிட் டட்டட் - பயத்துல நடுங்கித்தானே?
அதுக்கு ஏன் இப்படி சோர்ஸ் கோடு, சூடோ கோடுன்னு பீலா?
-.-.---.-.-.-...--.-.-.-.-...-
ஒண்ணுமில்ல... வாழ்த்துக்கள் !!
இன்னும் பல வருஷங்கள் எழுதணும்...
வாங்க ஆளவந்தான் -> ம்கூம். இப்போ சொல்லி என்ன பண்றது.. கண் கெட்ட பின்னே சந்திரயான்ற மாதிரி தான் இருக்கு நீங்க சொல்றது...
வாங்க வண்ணத்துபூச்சியார் -> நன்றி...
வாங்க அப்துல்லா -> அவ்வ். ரெண்டாவது வருஷம் இப்பத்தான் துவக்கம்ணே... அதுக்குள்ளேயா????
'தல'ப்புச் செய்திக்காக வெயிட்டிங்.....
வாங்க வேலன் ஐயா -> ஹாஹா... குளிர் காலத்துலே இப்படி நடுங்கறது சுலபம். குளிர்னாலேன்னு சொல்லிடலாம்.... :-)))
வாங்க மகேஷ்ஜி -> மிக்க நன்றி...
உங்க வூட்டுகார அம்மணிகிட்ட பயந்துகிட்டே இன்னும் பல ஆண்டுகள் எழுத வாழ்த்துக்கள் ....!
(என்னா ஒரு வில்லத்தனம்?!!)
மறுபடி வந்துட்டோம்ல...!
ஹி.. ஹி...!
Post a Comment