Tuesday, December 30, 2008

நொறுக்ஸ் - செவ்வாய் - 12/30/08


பிறந்த அன்னிக்கே கடகடன்னு பேசின ஒரு அதிசய குழந்தையை உங்களுக்குத் தெரியுமா? விவரம் பதிவில்.

--------

சென்ற வாரம் நண்பர் குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் மனைவி கேட்டார் - "இரவுக்கு என்ன சமையல்?". என் தங்கமணி சொன்னார் - "தோசை". நண்பர் - "என்ன இந்த ஊருக்கு வந்துட்டு இன்னும் இட்லி தோசைன்னுட்டு. பீட்சா, பர்கர்னு ஏதாவது சாப்பிட வேண்டியதுதானே. எங்கே
போறோமோ அந்த இடத்துக்கு தகுந்தா மாதிரி நம்மை மாத்திக்கணும்" அப்படி இப்படின்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டிருந்தார்.


என் தங்கமணி "நான் அந்த மாதிரியெல்லாம் இல்லை. ஆனா இவரு அப்படித்தான். எந்த இடத்துக்கு போறாரோ அப்படியே தன்னை மாத்திக்குவார்"
அப்படின்னாங்க. நண்பரும் ஆச்சரியத்துடன் "பலே பலே" என, தங்கமணி தொடர்ந்து சொன்னார் - "ஆமாம். போன வருஷம் இங்கே மிருகக்காட்சி
சாலைக்குப் போனோம். அப்பத்திலேந்து இவர் அப்படியேயிருக்கார்".

-------

தானியங்கி கார் கழுவும் இடத்தில் வண்டியை விடப் போயிருந்தோம். வண்டி தண்டவாளத்தில் வரவர வெவ்வேறு கருவிகள் வந்து சுத்தம் செய்வதால், பத்து நிமிடத்தில் வண்டி பளபளாவென்று வெளியே வந்துவிடுகிறது.
வீட்டுக்கு வரும்போது தங்கமணியிடம் என்னுடைய புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி சொன்னேன்.

அதாவது இதே மாதிரி மனிதர்களை குளிப்பாட்டும் கருவி ஒன்று கண்டுபிடிக்க வேண்டும். ஆசாமி ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டால், முதலில் ஒரு கருவி வந்து உடம்பில் எண்ணைய் தேய்த்துவிட வேண்டும். பிறகு அந்த நாற்காலி மெதுவாக நகர்ந்து தடத்தில் வரும்போது, இன்னொரு கருவி தலையில் சீயக்காய் தேய்த்தும், பிறகு வென்னீரால் குளிப்பாட்டிய பிறகு அடுத்த கருவி சோப் / ஷாம்பூ தடவி, மறுபடி தண்ணீரால் கழுவி, மின்விசிறியால் ஈரத்தை காயவைத்து வெளியே வரும்போது அந்த
ஆளுக்கு சாம்பிராணி / நாத்த மருந்து ஏதாவது அடித்து பத்து நிமிடத்தில் அவனை ஒரு புது மனிதனாக மாற்ற வேண்டும்.


இந்த மாதிரி ஒரு கருவியை நான் கண்டிப்பாக கண்டு பிடிப்பேன் என்று சொன்னதால் அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே திட்டு விழுந்தது.
----------------

நேத்து வால்மார்ட் போய் ஒரு உடற்பயிற்சிக்காக ஒரு ச்சின்ன கருவி வாங்கிட்டு வந்தோம். நாற்காலியில் உட்கார்ந்து மிதிவண்டி ஓட்டறது போல் பயிற்சி செய்வதற்காக வாங்கியது. வாங்கும்போதே தங்ஸ் சொன்னாங்க - “ஒரு நாள் ரெண்டு நாள் ஓட்டுவீங்க, அதுக்கெதுக்கு இதெல்லாம்?” - அதையெல்லாம் மீறி இதை வாங்கியாச்சு. என்ன ஆகுதுன்னுதான் பாக்கணும்.


---------

போன வாரம் வருடாந்திர செக்கப்புக்காக மருத்துவமனை போயிருந்தபோது, பிறந்த தேதி எழுத வேண்டிய இடத்தில் போன வாரத்துத் தேதியே
எழுதிவிட்டேன். அதைப் பார்த்த அந்த நர்ஸுக்கு வாயெல்லாம் சிரிப்பு. இன்னிக்குதான் பிறந்தீங்களான்னு கேள்வி வேறே. அப்படியே கொஞ்ச நேரம் சிரிச்சி பேசிக்கிட்டிருந்தோம்.

ஒரே ஒரு கூடுதல் தகவலை சொல்லி இந்த நொறுக்ஸை முடிக்கறேன். அந்த நர்ஸ் கண்டிப்பா எங்க பாட்டியை விட ஓரிரு வயசு கம்மியாத்தான் இருப்பாங்க...

18 comments:

வால்பையன் December 30, 2008 at 5:28 AM  

//போன வருஷம் இங்கே மிருகக்காட்சி
சாலைக்குப் போனோம். அப்பத்திலேந்து இவர் அப்படியேயிருக்கார்".//

இன்னும் மாறலையா?

வால்பையன் December 30, 2008 at 5:28 AM  

அட நாந்தான் பர்ஸ்டா!

வால்பையன் December 30, 2008 at 5:29 AM  

//மனிதர்களை குளிப்பாட்டும் கருவி ஒன்று கண்டுபிடிக்க வேண்டும்.//

எனக்கு கண்டிப்பாக உபயோகப்படும்

வால்பையன் December 30, 2008 at 5:30 AM  

//ஒரு நாள் ரெண்டு நாள் ஓட்டுவீங்க, அதுக்கெதுக்கு இதெல்லாம்?//

உண்மையை தானே சொல்லியிருக்காங்க!

வால்பையன் December 30, 2008 at 5:32 AM  

//அதைப் பார்த்த அந்த நர்ஸுக்கு வாயெல்லாம் சிரிப்பு.//

பக்கதுல தங்ஸ் இல்லையா!

வால்பையன் December 30, 2008 at 5:32 AM  

//அந்த நர்ஸ் கண்டிப்பா எங்க பாட்டியை விட ஓரிரு வயசு கம்மியாத்தான் இருப்பாங்க... //


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆளவந்தான் December 30, 2008 at 7:24 AM  

//
ம். நாற்காலியில் உட்கார்ந்து மிதிவண்டி ஓட்டறது போல் பயிற்சி செய்வதற்காக வாங்கியது.
//
என்னே ஒரு சுறுசுறுப்பான உடற்பயிற்சி


தங்கமணி சொல்ற வேலையெல்லாம் செஞ்சா இதுக்கு தேவையே இருக்காதே..(பின்னூட்டங்களை தங்கமணி படிப்பாங்க தானே_

Thamira December 30, 2008 at 7:27 AM  

ரசித்தேன்.!

Anonymous,  December 30, 2008 at 7:33 AM  

Hi Dr.Chinna,

Neenda Idaivelikkupin Ungal Aastana Vasakan....

Mmmm Vitta Idatha Nirappura Mathiri, Neraiya Eluthirupeengannu Nenachen, Mmm Konjam Thaan Pathivu Eluthirukeenga...

Advance New Year Wishes for U, Ur Family Members and our bloggers..

2/0/0/9. 2-0-0-9. 2+0+0+9. 2*0*0*9. 2 0 0 9. 2009

Ennathunnu Paarkkatheenga Ellam Astralogy Thathuvam.

Raja - Bgl

சின்னப் பையன் December 30, 2008 at 8:51 AM  

வாங்க வால் -> அவ்வ். 'வாயெல்லாம் பல்லு'ன்னு நான் சொல்லவேயில்லையே... அப்பவே கவனிச்சிருக்க வேணாமா??????? :-))))

வாங்க ஆளவந்தான் -> அண்ணே... அது மிதிவண்டிண்ணே.. காலுக்கு பயிற்சி... அப்போ உக்காந்துதானே செய்ய முடியும்??????? :-)))

வாங்க தாமிரா -> நன்றி...

வாங்க ராஜா -> ரொம்ப நாளா ஆளக்காணோம். உங்களுக்கும் / எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Mahesh December 30, 2008 at 9:44 AM  

என்னது மனுசங்க குளிக்கறதுக்கு கருவியா? அப்ப எனக்கு உபயோகப்படாதே :(

(நான் எதாவது உளறும்போது வீட்ல "நீங்க தெய்வங்க"ன்னு சொல்றதுண்டு :)

நசரேயன் December 30, 2008 at 10:26 AM  

சீக்கிரமா மனுஷன் குளிக்க இயந்திரத்தை கண்டு பிடிங்க.
நல்லா நொறுக்கு தீனி போட்டீங்க

VIKNESHWARAN ADAKKALAM December 30, 2008 at 10:36 AM  

குழந்தை சௌக்கியமா? ஹா ஹா ஹா...

Anonymous,  December 30, 2008 at 2:00 PM  

//அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே திட்டு விழுந்தது.//

தினமும் விழுவதுதான். ஆனா அப்பப்ப இப்படிச் சமாதானம் சொல்லிக்க வேண்டியதுதான்.

பிரேம்ஜி December 30, 2008 at 7:38 PM  

//ஆமாம். போன வருஷம் இங்கே மிருகக்காட்சி
சாலைக்குப் போனோம். அப்பத்திலேந்து இவர் அப்படியேயிருக்கார்".
//

:-)))))))))))))))

சின்னப் பையன் December 30, 2008 at 8:32 PM  

வாங்க மகேஷ் -> ஹிஹி... நானும் அந்த கருவி கண்டுபிடிச்சப்புறம்தான் குளிக்கணும்னு இருக்கேன்... :-))

வாங்க நசரேயன் -> கூடிய விரைவில்.....:-))

வாங்க விக்னேஸ்வரன் -> நலம்தான்... நன்றி.

வாங்க வேலன் ஐயா -> ஆமா. என்ன பண்றது சொல்லுங்க. வேறே வழியேயில்லே... அவ்வ்..

வாங்க பிரேம்ஜி -> நன்றி..

சரவணகுமரன் December 31, 2008 at 2:57 AM  

ச்சின்னப்பையன், நீங்க கண்டுபிடிக்க வேண்டாம். உங்க வீட்ல வாஷிங் மெஷின் இருக்கில்ல... அதுல ஒரு நாள் எறங்கி பாருங்க... :-)

புதுகை.அப்துல்லா December 31, 2008 at 8:55 AM  

புத்தாண்டு வாழ்த்துகள் து.தலைவரே
:))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP