Tuesday, December 23, 2008

குளிர் காலத்தின் நன்மை தீமைகள்:

இங்கே பயங்கரமா குளிர் வாட்டி எடுக்குது. எங்களுக்கு இது மூன்றாவது குளிர் சீசனாகும். குளிரை பல பேர் வெறுத்தாலும் எனக்கு மிகவும் பிடித்த இந்த காலத்தின் நன்மை தீமைகளை இங்கே பட்டியலிடுகிறேன். இந்த பட்டியலில் உள்ளதைத் தவிர உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லவும்.


நன்மைகள்:


1. தினமும் சட்டையை அயர்ன் செய்ய வேண்டாம். அப்படியே போட்டுட்டு ஆபீசுக்குப் போயிடலாம். ஏன்னா, அதுக்கு மேல்தான் ஒரு குளிராடை
(ஸ்வெட்டர்) போடப்போறோமே.


2. அங்கங்கே சற்றே கிழிந்திருந்த சட்டைகளுக்கெல்லாம் நல்ல மவுசு வர்ற காலம் இது. ஸ்வெட்டர்தான் அதையெல்லாம் மறைச்சிடுமே.


3. மேலே குறிப்பிட்ட அதே காரணங்களுக்காக தொள தொள சட்டை மற்றும் ச்சின்னதாகிப் போன சட்டைகளையும் வெளியே எடுத்திடலாம்.


4. தனுஷ் மாதிரி ஒல்லியாக இருக்கற நானெல்லாம் மூன்று/ நான்கு அடுக்கு ஆடை அணிந்து கொண்டால்தான் கொஞ்சமாவது பார்க்கும்படி இருக்கும்.


5. தினமும் குளிக்கத் தேவையில்லை. இவ்ளோ அடுக்கைத் தாண்டியா வாசனை (கப்புன்னும் சொல்வாங்க!!!) வரப்போகுது?


6. குளிர் போட்டுத் தாக்கறதாலே குடும்பத்தோட வெளியே போறது குறைஞ்சிடும். அதனால் செலவும் கம்மியாயிடும்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?


7. வெளியே போகத் தேவையில்லாததாலே, நாம கணிணியே கதின்னு கிடக்கலாம். கண்டதையும் (காணாததையும்) படிக்கலாம்.


தீமைகள்:


மேலே சொன்ன ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும், குளிர் காலத்துலே சிற்சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யுது. அது என்னன்னா:


1. body sprayக்காக செலவழிக்கும் காசு ஜாஸ்தியாகும்.


2. தினமும் ஒரே அறையில் தங்கமணியோட அடைஞ்சி கிடப்பதால், ஏற்படும் போரும் (சண்டைன்னும் சொல்வாங்க!!!) அதனால் ஏற்படும் விழுப்புண்களும்
ஜாஸ்தியாகற காலமிது.


3. வீட்லே எவ்ளோ நாள்தான் சும்மா கணிணி முன் உக்காந்திருக்க விடுவாங்க. அப்பப்போ வீட்டு வேலைகளும் செய்ய வேண்டியிருக்கும்.


4. பத்து நிமிஷ தூரத்திலிருக்கிற ஆபீஸுக்குக் கிளம்பறதுக்கு அரை மணி நேரமாவது ஆகும். வீட்டுக்குத் திரும்ப வந்தபிறகும், ஆடையை மாத்தறதுக்கு
ரொம்ப நேரமாகும். (அந்த நேரத்துலே ஒரு பதிவாவது ஏற்பாடு செய்யலாம்!!!).


-----


மேலே சொன்னதெல்லாம் கற்பனைதான் என்னோட சொந்த கதையில்லேன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொல்லிட்டு, இந்த பதிவை முடிச்சுக்கறேன்.. நன்றி.. வணக்கம்.

39 comments:

Katz December 23, 2008 at 5:26 AM  

me the first ன்னு போடுறதெல்லாம் எனக்கு பிடிக்காது

Katz December 23, 2008 at 5:32 AM  

//மேலே சொன்னதெல்லாம் கற்பனைதான் என்னோட சொந்த கதையில்லேன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொல்லிட்டு, இந்த பதிவை முடிச்சுக்கறேன்..//

மூணு தடவைக்கு நாலு தடவை யோசிச்சு பாத்தும் நம்ப முடியல

சின்னப் பையன் December 23, 2008 at 9:38 AM  

வாங்க கதிர் -> எதுக்கும் அஞ்சாமே ஆறு தடவை பாத்தா நம்புவீங்களா?????

வாங்க மருதநாயகம் -> புரியுது புரியுது... சேம் ப்ளட்?????

நசரேயன் December 23, 2008 at 10:38 AM  

என்னது தனுஷ் மாதிரியா?

RAMYA December 23, 2008 at 11:52 AM  

//
2. அங்கங்கே சற்றே கிழிந்திருந்த சட்டைகளுக்கெல்லாம் நல்ல மவுசு வர்ற காலம் இது. ஸ்வெட்டர்தான் அதையெல்லாம் மறைச்சிடுமே.
//

இதெல்லாம் வேறேயா
அப்போ குளிர் காலத்துக்குன்னே
கிளிஞ்சிபோனது எல்லாம்
சேத்து (வைப்பீங்கன்னு (ஒ அதுதான் நீங்க இல்லையே)
சொல்லுங்க ) வைப்பாங்கன்னு சொல்லுங்க

RAMYA December 23, 2008 at 11:56 AM  

//
5. தினமும் குளிக்கத் தேவையில்லை. இவ்ளோ அடுக்கைத் தாண்டியா வாசனை (கப்புன்னும் சொல்வாங்க!!!) வரப்போகுது?
//

சோப்பு செலவு
மிச்சம்னு சொல்லுங்க
பரவா இல்லேப்பா

RAMYA December 23, 2008 at 11:58 AM  

//
நசரேயன் said...
என்னது தனுஷ் மாதிரியா?
//

நசரேயன் ஒரே
அதிர்ச்சியா கேக்கறாரு
அப்போ தனுஷ்
மாதிரி இல்லையா ??

RAMYA December 23, 2008 at 11:59 AM  

//
மேலே சொன்னதெல்லாம் கற்பனைதான் என்னோட சொந்த கதையில்லேன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொல்லிட்டு, இந்த பதிவை முடிச்சுக்கறேன்
//

நம்பிட்டோம் இல்லே...

Mahesh December 23, 2008 at 12:04 PM  

தனுஷ்?? நீங்க??? நம்புறோம்... மத்ததையும் நம்புறோம்....

சின்னப் பையன் December 23, 2008 at 12:09 PM  

வாங்க நசரேயன் -> அட.. என்ன இப்படி ஒரு சந்தேகத்த கேட்டுப்புட்டீங்க? நீங்க கேட்டதாலே இங்கே நிறைய பேருக்கு சந்தேகம் வந்துடுச்சு பாருங்க.... அவ்வ்வ்...

வாங்க ரம்யா -> சோப்பு, ஷாம்பூ எல்லாமே மிச்சம்தான்... ஹிஹி...
அப்புறம் நசரேயன் சொல்றதையெல்லாம் நம்பாதீங்க...!!!!

வாங்க மகேஷ் -> நம்பினதுக்கு நன்றி.... :-)))

வால்பையன் December 23, 2008 at 12:16 PM  

//இங்கே பயங்கரமா குளிர் வாட்டி எடுக்குது.//

இங்கேயும் வறுத்து எடுக்குது

வால்பையன் December 23, 2008 at 12:18 PM  

//தினமும் சட்டையை அயர்ன் செய்ய வேண்டாம். அப்படியே போட்டுட்டு ஆபீசுக்குப் போயிடலாம். ஏன்னா, அதுக்கு மேல்தான் ஒரு குளிராடை
(ஸ்வெட்டர்) போடப்போறோமே.//

இங்கே கரண்ட் அநியாயத்துக்கு நிறைய கிடைக்கிறதால நாங்க பனியன், ஜட்டிய கூட அயர்ன் பண்ணுவோமாக்கும்

வால்பையன் December 23, 2008 at 12:18 PM  

//அங்கங்கே சற்றே கிழிந்திருந்த சட்டைகளுக்கெல்லாம் நல்ல மவுசு வர்ற காலம் இது. ஸ்வெட்டர்தான் அதையெல்லாம் மறைச்சிடுமே.//

இங்கே கிழிச்சிகிட்டு திரியரது தான் பேஷனே!

வால்பையன் December 23, 2008 at 12:19 PM  

//தனுஷ் மாதிரி ஒல்லியாக இருக்கற நானெல்லாம் மூன்று/ நான்கு அடுக்கு ஆடை அணிந்து கொண்டால்தான் கொஞ்சமாவது பார்க்கும்படி இருக்கும்.//

இத நாங்க நம்பி தான் ஆகனுமா?

வால்பையன் December 23, 2008 at 12:21 PM  

//தினமும் குளிக்கத் தேவையில்லை. இவ்ளோ அடுக்கைத் தாண்டியா வாசனை (கப்புன்னும் சொல்வாங்க!!!) வரப்போகுது?//

குளிரில் வேர்க்காது!
அதுவும் ஒரு காரணம்!

எனக்கு பயங்கர வசதி இதுதான்

வால்பையன் December 23, 2008 at 12:21 PM  

//குளிர் போட்டுத் தாக்கறதாலே குடும்பத்தோட வெளியே போறது குறைஞ்சிடும். அதனால் செலவும் கம்மியாயிடும்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?//

இங்கே அப்படியில்லை!
அப்படியே சம்மர்ல ஊட்டி, கொடைக்கானல்ன்னு டபுள் செலவு இருக்கும்

வால்பையன் December 23, 2008 at 12:27 PM  

//வெளியே போகத் தேவையில்லாததாலே, நாம கணிணியே கதின்னு கிடக்கலாம். கண்டதையும் (காணாததையும்) படிக்கலாம்.//

உங்க வீட்ல பூரிக்கட்டை இல்லையா?

வால்பையன் December 23, 2008 at 12:29 PM  

//body sprayக்காக செலவழிக்கும் காசு ஜாஸ்தியாகும்.//

எனக்கு எக்ஸ்ட்ரா ஒரு குவாட்டர் ஆகும்!

வால்பையன் December 23, 2008 at 12:33 PM  

//தினமும் ஒரே அறையில் தங்கமணியோட அடைஞ்சி கிடப்பதால், ஏற்படும் போரும் (சண்டைன்னும் சொல்வாங்க!!!) அதனால் ஏற்படும் விழுப்புண்களும்
ஜாஸ்தியாகற காலமிது.//

நான் பூரிகட்டை தான் கேட்டேன், அங்கே கர்லா கட்டையே இருக்கும் போலிருக்கே!

வால்பையன் December 23, 2008 at 12:36 PM  

//வீட்லே எவ்ளோ நாள்தான் சும்மா கணிணி முன் உக்காந்திருக்க விடுவாங்க. அப்பப்போ வீட்டு வேலைகளும் செய்ய வேண்டியிருக்கும்.//

அப்போ இந்த குளிர் காலத்துல உங்ககிட்ட இருந்து நல்ல சமையல் குறிப்பு எதிர்பார்க்கலாம்

வால்பையன் December 23, 2008 at 12:37 PM  

//வீட்டுக்குத் திரும்ப வந்தபிறகும், ஆடையை மாத்தறதுக்கு
ரொம்ப நேரமாகும். (அந்த நேரத்துலே ஒரு பதிவாவது ஏற்பாடு செய்யலாம்!!!).//

அப்போ தினமும் ஒரு பதிவு உறுதின்னு சொல்லுங்க!

வால்பையன் December 23, 2008 at 12:38 PM  

//மேலே சொன்னதெல்லாம் கற்பனைதான் என்னோட சொந்த கதையில்லேன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொல்லிட்டு, இந்த பதிவை முடிச்சுக்கறேன்..//

நம்புறமாதிரி பொய் சொல்ல உங்களுக்கு இன்னும் தெரியல!

வால்பையன் December 23, 2008 at 12:39 PM  

குவாட்டர் கோவிந்தன் நான் தான்
அதாவது 25

சின்னப் பையன் December 23, 2008 at 4:27 PM  

வாங்க வால் -> எதிர்ப்பதிவ தனியாத்தான் போடுவாங்க. நீங்க வரிக்குவரி இங்கேயே பின்னூட்டமா போட்டுட்டீங்க.... யப்பா... என்னாலே தனித்தனியா பதில் சொல்லமுடியலேப்பா.... :-))

இராம்/Raam December 23, 2008 at 9:17 PM  

///தனுஷ் மாதிரி ஒல்லியாக இருக்கற நானெல்லாம் மூன்று/ நான்கு அடுக்கு ஆடை அணிந்து கொண்டால்தான் கொஞ்சமாவது பார்க்கும்படி இருக்கும்.//

ஏன் சார், கொஞ்சநாளைக்கு முன்னாடி ஒரு போட்டோ'லே முழுசும் இருந்தீங்களே.... அது Before diet'லே எடுத்ததுதா?? :))

தாரணி பிரியா December 23, 2008 at 11:12 PM  

இப்படி வரிக்கு வரி உண்மையை சொல்லியிருக்கிங்களே நீங்க ரொம்ப நல்லவர் சார்.

தாரணி பிரியா December 23, 2008 at 11:15 PM  

//. தினமும் குளிக்கத் தேவையில்லை. இவ்ளோ அடுக்கைத் தாண்டியா வாசனை (கப்புன்னும் சொல்வாங்க!!!) வரப்போகுது?
//

இதுல உங்க கூட வேலை பார்க்கறவங்களுக்கு ஏற்படற தீமையை பத்தி அவங்க யாராவது தனி பதிவு போடுவாங்களா

தாரணி பிரியா December 23, 2008 at 11:16 PM  

இராம்/Raam said...
///தனுஷ் மாதிரி ஒல்லியாக இருக்கற நானெல்லாம் மூன்று/ நான்கு அடுக்கு ஆடை அணிந்து கொண்டால்தான் கொஞ்சமாவது பார்க்கும்படி இருக்கும்.//

ஏன் சார், கொஞ்சநாளைக்கு முன்னாடி ஒரு போட்டோ'லே முழுசும் இருந்தீங்களே.... அது Before diet'லே எடுத்ததுதா?? :))

December 23, 2008 9:17 PM



இந்த கேள்விக்கு என்ன பதில்

பட்டாம்பூச்சி December 24, 2008 at 12:23 AM  

//
மேலே சொன்னதெல்லாம் கற்பனைதான் என்னோட சொந்த கதையில்லேன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொல்லிட்டு, இந்த பதிவை முடிச்சுக்கறேன்
//
சரி சரி....நம்பிட்டோமப்பா...
ஹே,வாட் யா?ஒய் கிரயிங்?நோ நோ நோ..கண்ட்ரோல்.கண்ட்ரோல்.. :-)

சின்னப் பையன் December 24, 2008 at 10:07 AM  

வாங்க பிரேம்ஜி -> ரொம்ப நாள் கழிச்சி ரீ-எண்ட் ரி கொடுத்திருக்கீங்க... நன்றி...

வாங்க இராம்ஜி -> ஹாஹா... அதுலேகூட நிறைய லேயர்கள் இருந்துச்சுன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க????? :-)))

வாங்க தாரணி பிரியா -> அவ்வ்வ். நல்லவன்ன்னு சொல்லிட்டீங்களே.... இராமோட கேள்விக்கு பதில் சொல்லியிருக்கேன் பாருங்க... :-))))

வாங்க கண்மணி, பட்டாம்பூச்சி -> நன்றி...

குடுகுடுப்பை December 24, 2008 at 11:40 AM  

சட்டை அயன் பண்றதா அதெல்லாம் சென்னையோட விட்டாச்சு.

குடுகுடுப்பை December 24, 2008 at 11:40 AM  

4. தனுஷ் மாதிரி ஒல்லியாக இருக்கற நானெல்லாம் மூன்று/ நான்கு அடுக்கு ஆடை அணிந்து கொண்டால்தான் கொஞ்சமாவது பார்க்கும்படி இருக்கும்.//

நீங்க.....

Tech Shankar December 25, 2008 at 7:44 AM  

அடேங்கப்பா.. எப்படி சார்.

இப்படி உக்காந்து / எழுந்திருச்சு / நடந்து / படுத்துக்கிட்டே யோசிச்சு இருக்கீங்க.

கலக்கிட்டீங்க தல

சின்னப் பையன் December 25, 2008 at 11:06 AM  

வாங்க குடுகுடுப்பை -> என்ன, நீங்கன்னு நிறுத்திட்டீங்க... 'ரொம்ப நல்ல்ல்லவன்ன்'னு சொல்ல வந்தீங்களா!!!!!

வாங்க ஷேர்பாயிண்ட் -> மல்லாக்க பாத்து படுத்துன்னு சொல்லுங்க... ஹிஹி..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP