Tuesday, December 2, 2008

வட அமெரிக்க பதிவர் சந்திப்பு - பகுதி 2 of 2





ட்விட்டர்: நம்ம ஊருலே குட் மார்னிங், குட் நைட்ன்னு எஸ்.எம்.எஸ் பண்ணிக்கிட்டேயிருப்பாங்க. அதே மாதிரி இங்கே 'பெருந்தலைகள்' எல்லாரும் ட்விட்டர்லேயே இருக்காங்க. ப்ளாக்கிங்க ஒரு நாள் போட்டின்னா - ட்விட்டரை 20 - 20 மேட்ச் மாதிரி நினைக்கறாங்க. இளா எல்லா பதிவர்களையும் ட்விட்டருக்கு வாங்கன்னு அழைப்பு விடுச்சாரு. நமக்கு அலுவலக நெட்வர்க்லே ட்விட்டர் வேலை செய்யலே. அதனால் அங்கே எதையும் படிக்க முடியறதில்லே. கு.ப வீட்லேயிருக்கும் போதாவது ஏதாவது பாக்கணும்.


குழுப்பதிவுகள்: வலைப்பதிவுகளில் குழுப்பதிவுகள் ஏன் தோல்வி அடைகின்றன - என்று அலசப்பட்டது. பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டினர். accountability இல்லாதது, கமெண்ட் மாடரேஷன் மற்றும் குழுவில் எழுதறதுக்கு நம்ம சொந்த பதிவுலேயே எழுதிடலாம்ன்ற மனப்பான்மைதான் குழுப்பதிவுகள் தோல்வியடையறதுக்கு காரணங்கள் என்று கூறப்பட்டது.


சமூகசேவை: வலைப்பதிவுகளில் புதிதாக வருபவர்களுக்கு - இங்கு என்ன சமூகசேவை நடக்கிறது, எதில் பங்கு கொள்ளலாமென்ற தகவலே தெரியவில்லை - இதற்கு தமிழ்மணத்தில் தனியாக இடம் ஒதுக்கலாமா? என்றெல்லாம் மொக்கைச்சாமி கேட்டார். இதற்கு பதிலளித்த கேயாரெஸ்/இளா - பல உதவிகள் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினர். அதை தனிப்பட்ட முறையில் யாராவது எடுத்து செய்கிறார்களே ஒழிய, ஒரு குழுவாக எடுத்து செய்யமுடியவில்லை என்று கூறினர்.


மோகன் கந்தசாமி -> புதிதாக வருபவர்களின் பதிவுகளை, பெருந்தலைகள் விமர்சித்து எழுதி அவர்களை ஊக்கப்படுத்தலாமே என்று கேட்டார். செய்யலாம் என்று பதில் வந்தது. மோகன் -> 'ச்சும்மா டமாஷ்'னு இல்லாமே, இதை எப்படி செய்யலாம்னு பாருங்க... காத்து வாங்கிட்டிருக்கற பல புதிய நல்ல கடைகளை விமர்சனம் செய்ய வைங்க.. நல்லா இருக்கும்....:-)


நசரேயன் -> இவரு பயங்கரமான ஆளா இருக்காரு (பாக்கறதுக்கு இல்லே!!!). திருநெல்வேயில் இருந்தபோது - இரண்டரை மணி நேரமுள்ள நாடகத்துக்கெல்லாம் காமெடி ட்ராக் எழுதியிருக்காரு. அந்த மாதிரி இங்கே பதிவுலேயும் நிறைய எழுதுங்கன்னு அவர்கிட்டே வேண்டுகோள் வைக்கப்பட்டது.


சத்யராஜ்குமார்: ஏகப்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதிய எழுத்தாளர். இவரை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அவரது கதைகளில் பெரும்பாலும் அமெரிக்க வாழ்க்கையை எதிர்மறையாகவே சொல்வதன் காரணம் என்ன என்று கேட்டபோது - இந்தியாவில் இருப்பவர்கள் அமெரிக்க வாழ்க்கை என்றால் சொர்க்கம் என்றே நினைக்கின்றனர். ஊடகங்களும் இங்கே இருக்கும் பிரச்சினைகளை சொல்வதில்லை. அதை என் கதைகளின் மூலம் சொல்கிறேனென்று சொன்னார். இதை நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாலேயே ஏன் சொல்லவில்லை என்று நினைத்தேன். சொல்லவில்லை.... :-)


தமிழோவியம் கணேஷ் மற்றும் ஜெய்: இவங்க ரெண்டு பேரும் நிறைய படிக்கறாங்க. எல்லாவற்றையும் படிக்கறாங்க... மொக்கைப் பதிவுகளைத் தவிர்த்து... அதனாலே என்னோட பதிவுகளையும் படித்ததில்லைன்னு நினைக்கிறேன்... ச்சின்னப் பையனின் இருக்கும் அந்த 'ச்' போட்டு எழுதுவது நீங்கதானா? அப்படின்னு கொலவெறியோட பாத்தாங்க.... அவ்வ்வ்...


மேலே படத்துலே இடது பக்கத்திலிருந்து இருப்பவர்கள்தான் முறையே கணேஷ் சந்திரா மற்றும் ஜெய்.


மருத நாயகம்: பல நல்ல பதிவுகள் எழுதவேண்டுமென்று வந்த இவர் கடை பயங்கரமாக காத்து வாங்கியதால், இவர் மொக்கை போடும் நிலமைக்கு வந்துவிட்டார் - இதை அவரே சொன்னார். (எஸ்.வி.சேகர் நாடகத்துலே வருமே - இவர் பேரு ஏகலைவன். பெரிய எழுத்தாளராம். அவரே சொன்னார் - அப்படி படிங்க!!!). அப்படி எழுதிய மொக்கையொன்று உடனே 'சூடாகி' விட்டதையும் சொல்லி 'சந்தோஷப்பட்டார்'. ஹிஹி..


கொத்ஸ் குறுக்கெழுத்து: விடைகள் தெரிந்தபிறகே கேள்விகள் புரிவதாக இளா குறிப்பிட்டார். அதனால் அந்த பக்கமே போகவில்லை என்றும் தெரிவித்தார். குறுக்கெழுத்துக்கு '+' குத்தாவிட்டாலும் பரவாயில்லை யாரோ '-' குத்திவிட்டனர் என்று கொத்ஸ் சொன்னதற்கு, இளா பாய்ந்து சொன்னார் ' அது நானில்லை.. அது நானில்லை'. எல்லோரும் நம்பிவிட்டனர். இனிமேல் 'க்ளூ'வை சுலபமாக வைப்பதாகவும், இந்த சந்திப்புக்கு வந்தவர்களுக்கு மட்டும் விடைகளை முன்கூட்டியே அனுப்பி வைப்பதாகவும் (!!!) கொத்ஸ் சொன்னார்.


இன்னும் இதே மாதிரி பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.


என்னைத் தவிர எல்லோரும் லோக்கல் ஆளுங்க என்பதால் (லோக்கல் = உள்ளூர். தப்பர்த்தம் பண்ணிக்காதீங்க!!!) - நாந்தான் 'மீ த பஷ்ட் எஸ்கேப்' என்று கிளம்பியபோது மணி 9.00. போக்குவரத்தில் சிக்கி வீட்டுக்கு வந்தபோது மணி சரியாக நள்ளிரவு 12.


இதைத்தவிர சுவாரசியமாக நம்ம மோகன் ஏற்கனவே பதிவு போட்டுட்டார். அங்கேயும் போய் படிச்சிடுங்க.

23 comments:

வெண்பூ December 2, 2008 at 4:59 AM  

என்னாங்க பதிவர் சந்திப்புல இவ்ளோ முக்கியமான விசயங்கள் பேச முடியுமா என்னா? நாங்கல்லாம் பதிவர் சந்திப்புன்னாலே பாத்தமா, டீ குட்சமா, மொக்க போட்டமான்னு முடிச்சிடுவோம்.. :)))

Anonymous,  December 2, 2008 at 5:27 AM  

//இதை நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாலேயே ஏன் சொல்லவில்லை என்று நினைத்தேன். சொல்லவில்லை.... :-)//

இதுதான் ச்சின்னப்பையன் டச்.

rapp December 2, 2008 at 6:39 AM  

லேட் கம்மரானத்துக்கு மன்னிக்கவும்:):):)

Karthik December 2, 2008 at 7:06 AM  

ivargaloda linkugala potha anga poi visit panra bhaagyam kidaikume!!!!

Karthik December 2, 2008 at 7:15 AM  

nambha thalaivar JK Ritheesh poto thaan ingada iluthuchu.. Konja thabaala padichen... rombha nalla irukkunga!!!

சின்னப் பையன் December 2, 2008 at 9:30 AM  

வாங்க தாரணி பிரியா -> என்ன பஷ்டு வந்துட்டு ஒண்ணுமே சொல்லாமே போயிட்டீங்க?????? அவ்வ்வ்.. சொல்லிக்கறா மாதிரி ஒண்ணுமே இல்லெயா!!!!!

வாங்க வெண்பூ -> பின்னே இதெல்லாம் மண்டபத்துலே யாராவது எழுதிக் கொடுத்து நான் இங்கே பதிவா போட்டிருக்கேன்னு நினைச்சீங்களா???? அங்கே பேசினதுதாங்க இவ்ளோவும்.....

வாங்க வேலன் ஐயா -> நன்றி...

பரிசல்காரன் December 2, 2008 at 9:44 AM  

எல்லாருமே அழகா, நர்சிம்முக்கு போட்டியா இருக்கீங்கப்பா.......

நசரேயன் December 2, 2008 at 11:08 AM  

/*
இவரு பயங்கரமான ஆளா இருக்காரு (பாக்கறதுக்கு இல்லே!!!). திருநெல்வேயில் இருந்தபோது - இரண்டரை மணி நேரமுள்ள நாடகத்துக்கெல்லாம் காமெடி ட்ராக் எழுதியிருக்காரு. அந்த மாதிரி இங்கே பதிவுலேயும் நிறைய எழுதுங்கன்னு அவர்கிட்டே வேண்டுகோள் வைக்கப்பட்டது.
*/
ஒரு சுய விளம்பரத்துக்கா சொன்னேன் நாம்பிடீங்களா?

Sundar Padmanaban December 2, 2008 at 2:27 PM  

பதிவுக்கு நன்றி.

“தவிர்க்க இயலாத காரணங்களால் வர இயலவில்லை”ன்னு புறா கால்ல கட்டி அனுப்பின செய்தி வந்துதான்னு தெரிலை! நெஜமாவே தவிர்க்க இயலாத காரணங்களால வர முடியாம போச்சு மன்னிக்க!

அடுத்த சந்திப்புக்கு ஆஜராயிடுவேன் (எங்க வீட்லயே நடந்தாலும்)!

Kannabiran, Ravi Shankar (KRS) December 2, 2008 at 4:15 PM  

பகுதி 2 of 2-வை டிவிட்டரில் போடாததற்கு ச்ச்ச்ச்ச்ச்ச்சின்னப் பையனுக்குக் கடும் கண்டனங்கள்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) December 2, 2008 at 4:18 PM  

//நசரேயன் -> இவரு பயங்கரமான ஆளா இருக்காரு (பாக்கறதுக்கு இல்லே!!!). திருநெல்வேயில் இருந்தபோது//

எலே! புளியங்குடி! ஊரு பேரை மறைக்குதியா?
ச்சத்தமாச் சொல்லுலே! :)

//இரண்டரை மணி நேரமுள்ள நாடகத்துக்கெல்லாம் காமெடி ட்ராக் எழுதியிருக்காரு//

நசரேயன்
உங்க கிட்ட இருந்து நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம்! :)

சின்னப் பையன் December 2, 2008 at 4:44 PM  

வாங்க பரிசல் -> ஹிஹி... நான் அன்னிக்கு 'டக்-இன்' பண்ணிக்கவேயில்லே... (அய்யய்யோ... இப்படியெல்லாம் என்னெ சொல்ல வெச்சு என்னை அவர்கிட்டே மாட்டி விட்றாதீங்க!!!!).

வாங்க சுந்தர்ஜி -> அங்கே சில அசைவ ஐட்டங்கள் வெச்சிருந்தாங்க. அதுலே உங்க புறாவும் இருந்துச்சான்னு எனக்குத் தெரியல... ஏன்னா நான் சைவம். (சைவம், வைணவம் - அந்த சைவம் இல்லீங்கோ.!!!).

சின்னப் பையன் December 2, 2008 at 4:45 PM  

வாங்க கேயாரெஸ் -> மக்களே பாத்துக்கங்க... ட்விட்டர்லே வரி விளம்பரம் மாதிரி வந்தாத்தான் 'மூத்தவங்க'ல்லாம் ப்ளாக்குக்கே வர்றாங்க.. நமக்கு இன்னும் அந்த பழக்கம் வரவேயில்லீங்கண்ணா... :-((

ராஜ நடராஜன் December 3, 2008 at 7:15 AM  

என்னங்க!அமெரிக்க பதிவர் சந்திப்புங்கிறீங்க!மேசையில் வெத்து தண்ணி கிளாஸ்!!!

முத்துலெட்சுமி/muthuletchumi December 3, 2008 at 7:48 AM  

:) சுவாரசியமா இருந்தது...நகைச்சுவை தூவி தந்திருக்கீங்க..

சின்னப் பையன் December 3, 2008 at 9:32 AM  

வாங்க ராஜ நடராஜன் -> அவ்வ்வ்... போட்டோ பிடிக்கும்போது 'அதை'யெல்லாம் எடுத்து ஒளிச்சி வெச்சிட்டாங்க... :-))

வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி -> நன்றிங்க....

மோகன் கந்தசாமி December 3, 2008 at 11:16 PM  

///மோகன் -> 'ச்சும்மா டமாஷ்'னு இல்லாமே, இதை எப்படி செய்யலாம்னு பாருங்க... காத்து வாங்கிட்டிருக்கற பல புதிய நல்ல கடைகளை விமர்சனம் செய்ய வைங்க.. நல்லா இருக்கும்....:-)///

நீங்கதான் நேரடியா பார்த்தீங்களே! எவ்ளோ பிகு பண்ணாங்கன்னு, இதுக்கு மேலையும் இவங்ககிட்ட இன்னொருமுறை எப்படி கேட்கறது? இனி நாமலே அனானியா விமர்சனம் பண்ணாதான் உண்டு. :-)))

மோகன் கந்தசாமி December 3, 2008 at 11:22 PM  

////ஒரு சுய விளம்பரத்துக்கா சொன்னேன் நாம்பிடீங்களா?//

இப்படியெல்லாம் சொன்னா நாங்க விட்டுருவமாக்கும், அடுத்த வாட்டி சந்திப்புல ஒரு ஓரங்க நாடகத்தை நடத்தியாகணும் ல! ஓகே?

மோகன் கந்தசாமி December 3, 2008 at 11:24 PM  

///லேட் கம்மரானத்துக்கு மன்னிக்கவும்:):):)///

லேட்டா கம்முனதொட சரியா? அதுக்கப்பறம் ஒன்னும் கமெண்டே காணோம்!!!

RAMYA December 4, 2008 at 1:33 AM  

லேட் கம்மர்தான், ஆனாலும் நாங்களும் இதில் இல்லையே என்ற ஒரு ஏக்கம் தான் காது வழியா ஒரே புகை மூட்டம் தான்.

ஊர்சுற்றி December 21, 2008 at 6:07 AM  

ஆனாலும் இவளோ சின்ன அறையிலயா?

உங்களெயெல்லாம் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த மாதிரி சந்திப்புகளை அடிக்கடி நடத்துங்கோ. வாழ்த்துக்கள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP