ஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன்!!!
இதுவரைக்கும் நான் இரண்டு தடவை சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குக் கிளம்பி வந்திருக்கிறேன். அந்த இரண்டு தடவையும் நான் பட்ட பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதைத்தான் இங்கே சொல்லவிருக்கிறேன். மெதுவா படிங்க...
முதல் தடவை தனியாக பயணம்:
மூன்று மாதத்துக்கு மட்டுமே இந்த பயணமாகையால் குடும்பமில்லாமல் தனியாக (ஜாலியாக!!!) பயணம். விடிகாலை 2 மணிக்கு சென்னையில் விமானம். முதல் நாள் இரவு 10 மணிக்கு விமான நிலையத்திற்கு புறப்படணும். பெட்டியெல்லாம் கட்டியாகிவிட்டது.
அன்றைக்கு அலுவலகத்தில் வழியனுப்பு விழா நடத்திவிட்டார்கள். நண்பர்களுக்கு "நன்னீர்" பார்ட்டி முடிந்துவிட்டது. மாமனார் குடும்பத்திலிருந்து அனைவரும் ஆஜர். எல்லா ஊரிலிருந்தும் உறவினர்கள் / நண்பர்கள் தொலைபேசி வாழ்த்திவிட்டனர். நம் குடும்பத்தில் (பரம்பரையில்!!!) முதல்முதலாக வெளிநாடு போற பையன் அப்படின்னு எல்லாருக்கும் பெருமிதம். அக்கம் பக்கத்து வீட்டிலும் விஷயம் சொல்லியாகிவிட்டது.
இரவு 9 மணிக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி. என் மேனேஜர்தான். கூப்பிட்டு - இன்னும் எவ்வளவு நேரத்தில் விமான நிலையத்துக்குக் கிளம்பணும் - என்றார். சொன்னேன் "ஒரு மணி நேரம்". சொன்னார் " நான் மறுபடி தொலைபேசறேன். அது வரை கிளம்பாதே!!!".
வீட்டில் ஒரு பத்து பேர் கூடிய சிறு கும்பல் என்னை வழியனுப்பத் தயாராக இருந்தது. நான் யாரிடமும் தொலைபேசி வந்ததை சொல்லவில்லை. என்னதான் ஆகிறதென்று பார்ப்போமென்று விட்டுவிட்டேன்.
மறுபடி 9.30 மணிக்கு வந்த தொலைபேசியில் - அமெரிக்கா, நோய்டா, சென்னை - இந்த இடங்களிலிருந்து தலா 2 பேர் இருந்தார்கள். ஒரு பத்து நிமிடம் காரேபூரேவென்று பேசியபின் அனைவரும் முடிவு செய்தது - "சத்யா இன்னிக்கு கிளம்ப முடியாது. க்ளையண்ட் தகராறு பண்றார்".
முடிஞ்சது அமெரிக்கக் கனவு!!!
வீட்டில் எல்லோரும் என் கம்பெனியை திட்டித் தீர்த்தனர். உறவினர்களுக்கு தொலைபேசி இந்த விஷயம் சொல்லப்பட்டது. அடுத்த நாள் அலுவலகத்தில் மக்கள் முகத்தில் நான் எப்படி முழிப்பேன் என்று தெரியவில்லை என்று வீட்டில் சொன்னால் - என் அம்மாவோ - "அதை விடு. நான் அக்கம் பக்கத்து வீட்டில் என்ன சொல்வேன். எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்ப்பார்களே?" என்று கூறினார். எல்லோருக்கும் அவரவர் கவலை!!!.
பத்து நாள் கழித்து பிரச்சினைகள் தீர்ந்து மறுபடி நான் கிளம்பி அமெரிக்கா வந்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி...
இரண்டாவது தடவை குடும்பத்துடன் பயணம்:
முதல் தடவை பயணம் தடைபட்டதுபோல் ஆகிவிடக்கூடாது என்று எல்லோரும் எல்லாக் கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்திருந்தனர். நாங்கள் விமான நிலையத்துக்கு புறப்பட்டு வரும்வரை எங்கிருந்தும் எந்த தொலைபேசியும் வரவில்லை.
மறுபடி ஒரு 15 பேர் கொண்ட கும்பல் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். சிறிது நேரம் கழித்து நாங்கள் 3 பேர் மட்டும் உள்ளே போக, அனைவரும் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டனர்.
விமான நிலையத்தில் செக்-இன் செய்வதற்காக நின்றிருந்தோம். நின்றிருந்தோம். ரொம்ப நேரம் நின்றிருந்தோம். பிறகுதான் தெரிந்தது - விமானம் நிரம்பிவிட்டது. எங்கள் மாதிரியே ஒரு 25 பேருக்கு அதில் இடமில்லையென்று. அங்கேயே எல்லோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் எந்த பிரயோஜனமில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறெந்த விமானத்திலும் இடமில்லையென்று சொல்லிவிட்டனர்.
வேறு வழியில்லாமல் அங்கிருந்து வீட்டுக்குத் தொலைபேசி - நாங்கள் அமெரிக்கா போகவில்லை, வீட்டுக்குத் திரும்ப வருகிறோம் என்று சொல்லி - வீட்டுக்கு வந்து - அடுத்த இரண்டு நாள் யாருக்கும் தலைகாட்ட முடியாமல் வீட்டிலேயே கிடந்து - மறுபடி புறப்பட்டு வந்தோம்.
--------
இப்படியாக நாங்க கிளம்பி கிளம்பி திரும்ப வர்ற விளையாட்டு இரண்டு தடவை நடந்துடுச்சு...
அப்பவே சொல்லிட்டாங்க மக்கள் - "இன்னொரு தடவை ஊருக்குக் கிளம்பறேன்னா, முதல் தடவை நான் விமான நிலையத்துக்கு வரமாட்டேன். அடுத்த தடவை வர்றேன்"... அவ்வ்வ்....
47 comments:
me the first..
:-)))))))))))
எனக்கும் நடந்திருக்கு இதே அனுபவம்
வாங்க ராகி ஐயா -> ஆமா நீங்கதான் பஷ்ட்.... :-))
வாங்க நசரேயன் -> சூப்பர். அதை உங்க பாணியில் ஒரு பதிவா போடுங்களேன்...
ஹய்யோ ஹய்யோ... இப்பிடியும் நடக்குமா? :))))))))))))
எனக்கு இதே போல முத தடவ நிறைய விஷயங்கள் நடக்காம இரண்டாவது தடவ நடந்திருக்கு..
interesting :))))
வாங்க மகேஷ் -> அது சரி... நம்பமுடியலேல்லே.... அவ்வ்வ்...
வாங்க சங்கர் -> அந்த சம்பவங்களை அழகாக்கி பதிவாக்கிடுங்க.... நன்றி...
வாங்க சதங்கா -> நன்றி...
//
இரவு 9 மணிக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி. என் மேனேஜர்தான். கூப்பிட்டு - இன்னும் எவ்வளவு நேரத்தில் விமான நிலையத்துக்குக் கிளம்பணும் - என்றார். சொன்னேன் "ஒரு மணி நேரம்". சொன்னார் " நான் மறுபடி தொலைபேசறேன். அது வரை கிளம்பாதே!!!".
//
ஏன் போனை எடுத்தீங்க..உங்க மேல தான் தப்பு
இந்த ஏர்லைன்ஸ்ங்க ஏன் இப்படி ஓவர் புக்கிங் செய்றாங்க?
கன்ஃபர்ம் டிக்கெட்டுக்கு வேற அர்த்தம் இருக்கா?
எப்படியோ ஒளிஞ்சுருந்து ஊருக்குப் போய் இருக்கீங்க:-))))
உங்களுக்கு எப்படியோ,எங்களுக்கு படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது
Unresearved ல போய் இடம் கிடைக்காம திரும்பி வர்ற நிலைமை ஆகிடுச்சு :(
ரொம்ப சுவாரசியமா இருந்தது. எனக்கும் சில விசயங்களில் இந்த மாதிரி நடந்திருக்கு.
//மறுபடி 9.30 மணிக்கு வந்த தொலைபேசியில் - அமெரிக்கா, நோய்டா, சென்னை - இந்த இடங்களிலிருந்து தலா 2 பேர் இருந்தார்கள். ஒரு பத்து நிமிடம் காரேபூரேவென்று பேசியபின் அனைவரும் முடிவு செய்தது - "சத்யா இன்னிக்கு கிளம்ப முடியாது. //
புரியலையே தல....
இப்படித்தான் நான் ஒரு முறை செங்கல்பட்டுக்குப் போ... சரி வேண்டாம்.
:-))
//
இப்படித்தான் நான் ஒரு முறை செங்கல்பட்டுக்குப் போ... சரி வேண்டாம்.//
வெக்கப்படாதீங்க சார்..
//மறுபடி 9.30 மணிக்கு வந்த தொலைபேசியில் - அமெரிக்கா, நோய்டா, சென்னை - இந்த இடங்களிலிருந்து தலா 2 பேர் இருந்தார்கள். ஒரு பத்து நிமிடம் காரேபூரேவென்று பேசியபின் அனைவரும் முடிவு செய்தது - "சத்யா இன்னிக்கு கிளம்ப முடியாது. //
புரியலையே தல....
------------------
அது டெலி கான்பரன்ஸ் என்று நினைக்கிறேன்...அப்படியா ச்சின்னப் பையன் சார்?
//
//
இரவு 9 மணிக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி. என் மேனேஜர்தான். கூப்பிட்டு - இன்னும் எவ்வளவு நேரத்தில் விமான நிலையத்துக்குக் கிளம்பணும் - என்றார். சொன்னேன் "ஒரு மணி நேரம்". சொன்னார் " நான் மறுபடி தொலைபேசறேன். அது வரை கிளம்பாதே!!!".
//
படித்த போது மிகவும் கஷ்டமா இருந்தது
இது போல் ஒரு சூழ்நிலை
இனி ஒருவருக்கும் வரக்கூடாது
அந்த மனநிலை விவரிக்க
முடியாத ஒன்று
//
விமான நிலையத்தில் செக்-இன் செய்வதற்காக நின்றிருந்தோம். நின்றிருந்தோம். ரொம்ப நேரம் நின்றிருந்தோம். பிறகுதான் தெரிந்தது - விமானம் நிரம்பிவிட்டது. எங்கள் மாதிரியே ஒரு 25 பேருக்கு அதில் இடமில்லையென்று. அங்கேயே எல்லோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் எந்த பிரயோஜனமில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறெந்த விமானத்திலும் இடமில்லையென்று சொல்லிவிட்டனர்.
//
இரண்டாவது முறை
போங்க சின்னபையன்
சாமி வரம் கொடுத்தாலும்
பூசாரி வரம் கொடுக்காத
கொடுமையா போச்சு போங்க
எப்படியோ போராடி இப்போ
அமெரிக்காவுலே இருக்கீங்க
அமெரிக்காவுலே இறங்கின
உடனே அப்பாடா என்று
முச்சு விட்டுருப்பிங்க!!
இப்ப சிரிப்பா இருந்தாலும் அந்த நிமிசம் மனசு என்ன கஷ்டபட்டு இருக்கும். எதிர் பார்த்து ஏமாந்து போறதுதான் ரொம்ப கொடுமையான விஷயமுங்க.
//இதுவரைக்கும் நான் இரண்டு தடவை சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குக் கிளம்பி வந்திருக்கிறேன். //
அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த கதை தனியாக வருமா?
//அந்த இரண்டு தடவையும் நான் பட்ட பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல//
உங்களால் அந்த ப்ளைட் பட்ட பிரச்சனைகள்??????
//அதைத்தான் இங்கே சொல்லவிருக்கிறேன். மெதுவா படிங்க...//
ஏன் மெதுவா?
அதாவது அஜால் குஜால் மேட்டரா
//இப்படியாக நாங்க கிளம்பி கிளம்பி திரும்ப வர்ற விளையாட்டு இரண்டு தடவை நடந்துடுச்சு...
அப்பவே சொல்லிட்டாங்க மக்கள் - "இன்னொரு தடவை ஊருக்குக் கிளம்பறேன்னா, முதல் தடவை நான் விமான நிலையத்துக்கு வரமாட்டேன். அடுத்த தடவை வர்றேன்"... அவ்வ்வ்....//
ஹா ஹா ஹா
சரி சரி ரெண்டாவது தடவை கிளம்பும் போதே சொல்லுங்க!
ஏர்போர்ட்டுக்கு வருகிறோம்
// ரமேஷ் வைத்யா said...
இப்படித்தான் நான் ஒரு முறை செங்கல்பட்டுக்குப் போ... சரி வேண்டாம்.
//என்ன கொடும இது சார்....
தாரணி சொன்னமாதிரி ... இன்னைக்கு செமவேடிக்கையா இருக்கும் இந்த விசயமெல்லாம் அன்னைக்கு பெரும்பாடா இருந்திருக்கும்... :(
//விமான நிலையத்தில் செக்-இன் செய்வதற்காக நின்றிருந்தோம். நின்றிருந்தோம். ரொம்ப நேரம் நின்றிருந்தோம். பிறகுதான் தெரிந்தது - விமானம் நிரம்பிவிட்டது. எங்கள் மாதிரியே ஒரு 25 பேருக்கு அதில் இடமில்லையென்று. அங்கேயே எல்லோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் எந்த பிரயோஜனமில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறெந்த விமானத்திலும் இடமில்லையென்று சொல்லிவிட்டனர்//
Do they over book in plane too?. I thought only in Omni buses they will do that. In Omni buses they will ask us to sit behind the driver. Will they do the same in plane?
Missed to write in my previous comment. As usual enjoyed your post. :)
வாங்க ஆளவந்தான் -> ஆமாங்க. அந்த தொலைபேசியை எடுத்தது என் தப்புதான்..(!!!). இரண்டாவது முறை மக்கள் தொலைபேசியை off பண்ணி வெச்சிடுன்னு சொன்னாங்க.
வாங்க துளசி மேடம் -> ஆமாங்க. அப்பதான் நான் கேள்விப்பட்டது என்னன்னா, எல்லா விமானத்துலேயும் 10-15% ஓவர் புக்கிங் செய்திருப்பாங்கன்னு... :-)
வாங்க தமிழ் பிரியன் -> சிரிங்க சிரிங்க..
வாங்க பாபு -> நீங்க சுவாரசியமா படிக்கணும்னுதானே போட்டது.... நன்றி....:-))
வாங்க சின்ன அம்மிணி -> ஆமாங்க... ஆமா... நன்றி..
வாங்க அனானி -> நிறைய பேருக்கு நடந்திருக்கும் போல... நன்றி...
வாங்க ரமேஷ் வைத்யாஜி -> தல... அது 'டெலிகான்ஃபரென்ஸ்'. அதனால் பல ஊர்கள்லேர்ந்து பல பேர் சேர்ந்து பேசிட்டிருந்தாங்க...
அவ்வ்.... செங்கல்பட்டை அமெரிக்காவா நினைக்கும் உங்க கனவு கண்டிப்பா பலிக்கும்.... :-)))
வாங்க அமுதா -> நன்றி...
வாங்க ஆளவந்தான் -> நன்றி..
வாங்க மதிபாலா -> ஆமாங்க. அதேதான்... நன்றி...
எங்கள் குடும்பத்திலும் இப்படி நடந்தது.
என் மனைவியிடம் படித்துக்காட்டினேன்.
மிகவும் சுவைத்ததோடு, எங்களுக்கு இதைப் போ்லவே எற்பட்ட ஏமாற்றத்தையும் பிறகு விளம்பரமின்றி எங்கள் மகன் பிரான்சுக்குச் சென்றதையும் எண்ண அசை போட்டு மகிழ்ந்தார்கள்.
நன்றி சின்னப்பையனாரே!
மும்பையில் 30 க்கும் 31ம் தேதிக்கும் வித்தியாசம் தெரியாம கடைசி நேரத்துல அரக்கப் பறக்க விமானநிலையத்துக்கு ஓடினால் விமானக் கதவை சாத்தி விட்டார்கள்.உங்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்கிறோம் என்று இரவு உட்கார வைத்து விட்டார்கள்.விடிந்தால் ஏர் இந்தியா பைலட் வேலை நிறுத்தம்.அடுத்த நாள் இரவு 8 மணிக்கு குவைத் ஏர்வேஸில் எல்லோரையும் பெட்டி கட்டி அனுப்பினாங்க:(
எனக்கு இப்படி நடக்கவேயில்லை. ஏனென்றால் நான் அமெரிக்கா போனதில்லை.
:))))
வாங்க ரம்யா -> ஆமாங்க... இதிலே தமாஷ் என்னன்னு கேட்டீங்கன்னா - எங்களை பிரியணுமேன்னு நினைச்ச பெற்றோரெல்லாம் - நாங்க போனா போதும்னு நினைக்கற மாதிரி ஆயிடுச்சு... :-)))
வாங்க தாரணி பிரியா -> ஆமாமா... பாக்கறவன்லாம் ஹேஹே ஊருக்குப் போகலியான்னு கேட்டே வாழ்க்கையை வெறுக்க வெச்சிடுவாங்க.... :-(((
வாங்க வால் -> சரிங்க.. இனிமே ரெண்டாவது தடவை போகும்போது கூப்பிடறேன்... :-)))
வாங்க கார்த்தி -> ஹாஹா....
வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி -> பெரும்பாடு இல்லேங்க... பெரும்பெரும்பாடு.... அவ்வ்..
வாங்க தியாகராஜன் -> நெடுந்தூர விமானங்களில் கண்டிப்பா 10% ஓவர் புக்கிங் இருக்கும்னு எனக்கு அன்னிக்குதான் தெரிஞ்சுது... நன்றி...
வாங்க சிக்கிமுக்கி -> வந்ததற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா...
வாங்க ராஜ நடராஜன் -> உங்கள விமானத்துலே ஏத்தக்கூடாதுன்னு ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களா??? ஹையா... ஜாலி.... :-)))
நான் வரும்போது இதே கூத்துதான், தனிப்பதிவா போடுறேன்
எனக்கும் இது மாதிரி ஒரு தடவை நடந்து இருக்கு.....
//விமான நிலையத்தில் செக்-இன் செய்வதற்காக நின்றிருந்தோம். நின்றிருந்தோம். ரொம்ப நேரம் நின்றிருந்தோம். பிறகுதான் தெரிந்தது - விமானம் நிரம்பிவிட்டது. //
சீட் இல்லை ன்னா கூட பரவாயில்லை ஆபிசர்.... நான் standing la வர்ரேன் ஆபிசர் ன்னு நீங்க கேட்டு இருக்கலாம்....
:))
வாங்க ஆ!இதழ்கள் -> நல்லவேளை நீங்களும் செங்கல்பட்டு போகும் போது ... அப்படின்னு சொல்லாமே இருந்தீங்களே!!!!!.... :-))
வாங்க குடுகுடுப்பை -> சூப்பர். பதிவ போடுங்க...
வாங்க கதிர் -> நான் என் சொந்தக்கால்லே நிக்கறேன்னுதான் சொன்னேன். அத அவர் நம்பவே இல்லே... முடியாது வீட்டுக்குப் போயிடுன்னுட்டார்.... ஹாஹா...
//
விமான நிலையத்தில் செக்-இன் செய்வதற்காக நின்றிருந்தோம். நின்றிருந்தோம். ரொம்ப நேரம் நின்றிருந்தோம். பிறகுதான் தெரிந்தது - விமானம் நிரம்பிவிட்டது. எங்கள் மாதிரியே ஒரு 25 பேருக்கு அதில் இடமில்லையென்று. அங்கேயே எல்லோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் எந்த பிரயோஜனமில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறெந்த விமானத்திலும் இடமில்லையென்று சொல்லிவிட்டனர்.
//
சில தவிர்க்க முடியாத காரணங்களால் (வானிலை, டெக்னிகல் பிராப்ளம் மாதிரி) விமானம் ரத்தாகும்...ஆனா அது எப்படி டிக்கட் குடுத்துட்டு சீட் இல்லன்னு சொல்ல முடியும்??
அது எந்த ஏர்லைன்ஸ்? சொன்னீங்கன்னா அதை அவாய்ட் பண்ண உபயோகமா இருக்கும்!
வாங்க அதுசரி -> அன்னிக்கு போக முடியாம நின்ன அத்தனை பேர்கிட்டேயும் கன்ஃபர்ம்ண்ட் டிக்கெட்தாங்க இருந்தது... :-((
விமானத்தின் பேரு டெல்டா.. சென்னை டு பாரீஸ்...
//
ச்சின்னப் பையன் said...
.....
அப்பதான் நான் கேள்விப்பட்டது என்னன்னா, எல்லா விமானத்துலேயும் 10-15% ஓவர் புக்கிங் செய்திருப்பாங்கன்னு... :-)
//
உண்மை தான்.
அதனால், முடிந்த வரை சீக்கிரம் (சென்னை நிலையத்தில் விமானம் புறப்பட மூன்று மணி நேரம் முன்பே) செக் இன் செய்ய வேண்டும்.
அதே போல், நடுவில் வேறு ஊரில் விமானம் மாற்றும் போதும், முடிந்த வரை விரைவாக செக் இன் செய்வது நலம். இல்லையேல், அப்போதும் கூட ஓவெர் புக் என்று இடம் கிடைக்காது.
சிரித்து சிரித்து .... யப்பா... முடியலப்பா...
சூப்ப்ப்ப்ப்பரப்பு....
//
ச்சின்னப் பையன் said...
வாங்க அதுசரி -> அன்னிக்கு போக முடியாம நின்ன அத்தனை பேர்கிட்டேயும் கன்ஃபர்ம்ண்ட் டிக்கெட்தாங்க இருந்தது... :-((
விமானத்தின் பேரு டெல்டா.. சென்னை டு பாரீஸ்...
//
தகவலுக்கு நன்றி சி.பை :0)
10 15% ஒவர் புக்கிங் செய்வது எல்லா ஏர்லைன்ஸும் செய்வதாக தெரியவில்லை...பல முறை என் விமான பயணங்கள் தடை பட்டிருக்கிறது...ஆனால் காரணங்கள் வானிலை, தீவிரவாத மிரட்டல் போன்றவை...கன்ஃபர்ம்ட் டிக்கட்ட்டுடன் இருக்கும் போது சீட்டு மறுக்கப்பட்டதில்லை...சிலர் கடைசி நேரத்தில் கேன்சல் செய்வதால் சில இருக்கைகள் காலியாக இருந்ததுண்டு...
நீங்கள் யூரோப் வழியாக செல்வதாக இருந்தால்....பிரிட்டிஷ் ஏர்வேஸை ட்ரை பண்ணிப் பாருங்களேன்..இது வரை எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை..தவிர எங்கள் நாட்டு கம்பெனிக்கு ஒரு விளம்பரம்...:0)))
வாழ்க வளமுடன்.
வாங்க ஒரு காசு -> ஆமாங்க. நீங்க சொன்னது சரிதான். நன்றி...
வாங்க கடைக்குட்டி -> சரி சரி... சிரிங்க சிரிங்க.... :-))
வாங்க அது சரி -> சிபாரிசுக்கு நன்றி...
வாங்க ஷேர்பாயிண்ட் -> நன்றி..
Post a Comment