Monday, December 8, 2008

நொறுக்ஸ் - திங்கள் - 12/08/08


நேற்று தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சேனலில் extreme sportsல் - மேடு பள்ளம் பாறை சகதி இவற்றுக்கு நடுவில் விழுந்து வாரி பைக் ஓட்டியதைப் பார்த்து எங்களுக்கும் அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவல் பிறந்துவிட்டது. அதற்கான தயார் முயற்சியில் சஹானா. படம் கீழே.


----


ஒரு வாரமாக எங்கள் வீட்டில் எல்லோரும் புதுசா கல்யாணம் ஆன பொண்ணைப் போல் இருக்கோம். விவரம் கடைசியில்.


----


இங்கே அமெரிக்க மேனேஜர்கள் தினமும் வீட்லே 6 மணிக்கெல்லாம் எழுந்து 1.5 மணி நேரம் வண்டி ஓட்டிக்கிட்டு 8 மணிக்கு அலுவலகத்துக்கு வந்துடுவாங்க. நமக்கு இவ்ளோ சீக்கிரமெல்லாம் போய் பழக்கமேயில்லை. நான் ஆர அமர 9 மணிக்கு சஹானாவை பள்ளியில் விட்டுவிட்டு 9.30 மணிக்குத்தான் போவேன்.


இதுவே சாயங்கலாம் அவங்க 4.30 மணிக்கு வாக்குலே கிளம்பும்போது, சரியா 15 நிமிஷம் கழிச்சி நானும் கிளம்புவேன். அது எதுக்கு 15 நிமிஷம் கழிச்சுன்றீங்களா.. அதுலே ஒரு சின்ன கணக்கு இருக்கு... பை எடுத்துக்கிட்டு மேனேஜர் வெளியே போனார்னா, ஓய்வறையில் ஒரு 5 நிமிஷம், கார் நிறுத்துமிடத்துக்கு நடந்து போக ஒரு 5 நிமிஷம், காரை எடுத்துக்கிட்டு மலை மேலேயிருந்து கீழிறங்கி போக ஒரு 5 நிமிஷம் - ஆக மொத்தம் 15 நிமிஷம். (எங்க ஆபீஸ் ஒரு குட்டி மலைமேலே இருக்கு!!!).


ரொம்ப நாளா இந்த கேல்குலேஷன் சரியா போயிட்டிருந்தது. போன வாரம் என்ன ஆச்சுன்னா, மேனேஜர் கிளம்பி போய் 15 நிமிஷம் கழிச்சி (மணி 4.40) நான் வெளியே வரும்போது - எதையோ மறந்து வெச்சிட்ட மேனேஜர் திரும்பி வந்துக்கிட்டிருந்தாரு. என்னைப் பாத்து - "என்ன, நான் கிளம்பிப் போயிட்டேன்னு நினைச்சியா? ஹாஹாஹா"ன்னாரு. நான் "அதில்லே ஸ்டீவ், 5 மணிக்குத்தான் எப்பவும் கிளம்புவேன் (!!). இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் போறேன். அவ்வளவுதான்" அப்படின்னேன்.


"சரி சரி.. சும்மாத்தான் கேட்டேன். என் மேனேஜர் கிளம்பிப் போய் ஒரு மணி நேரமாயிடுச்சு. நான் இன்னும் இங்கே என்ன பண்றேன்னு எனக்கே தெரியலே"ன்னார். அவ்வ்.. எல்லோருமே இப்படித்தானாடான்னு நினைச்சிக்கிட்டு "பை" சொல்லிட்டு ஜூட் விட்டுட்டேன்...


-------------


மக்கள்ஸ், இன்னியிலேந்து ஒரு வாரத்துக்கு வலைச்சரத்துலே எழுதறேன்... அங்கே வந்து பாத்துடுங்க... நன்றி... தவிர கொஞ்சம் பிஸியாக இருப்பதால் பூச்சாண்டியில் அடுத்த பதிவு அடுத்த வாரம்தான் இருக்கும்.


-----


எல்லோருக்கும் தொண்டையில் கிச்கிச். அதனால் புதுசா கல்யாணம் ஆன பொண் - புருஷனை கூப்பிடறாப்போல் அடிக்கடி 'ம்கூம். ம்கூம்' அப்படின்னு கனைச்சிக்கிட்டிருக்கோம். இப்பல்லாம் எந்த பொண்ணும் அப்படி யாரும் கூப்பிடறதில்லைன்னு சொன்னீங்கன்னா, நான் விடு ஜூட்.
-----
16 comments:

Mahesh December 8, 2008 at 5:10 AM  

இஃகி இஃகி இஃகி

வூட்டுக்குக் கெளம்பறதுல எல்லாப் பக்கமும் இப்பிடித்தான் போல...

Anonymous,  December 8, 2008 at 7:52 AM  

//ஒரு வாரமாக எங்கள் வீட்டில் எல்லோரும் புதுசா கல்யாணம் ஆன பொண்ணைப் போல் இருக்கோம்.//

அது என்ன புதுசாக் கல்யாணம் ஆன பொண்ணு. அப்ப பழசாக் கல்யாணம் ஆன பொண்ணுன்னு ஏதாவது இருக்கா?

பரிசல்காரன் December 8, 2008 at 8:25 AM  

இஃகி... இஃகி.. இஃகி....


வேலண்ணாச்சி.. ஏன் இப்படி ஆய்ட்டீங்க?

ச்சின்னப் பையன் December 8, 2008 at 9:48 AM  

வாங்க மகேஷ் அண்ணே -> ஆமா ஆமா... :-))

வாங்க வேலன் ஐயா -> அவ்வ்வ்... ஏன் இந்த கொல வெறி!!!!!!!!!!

வாங்க பரிசல் -> அதேதான் நானும் அவரைக் கேக்கறேன்!!!!!!!!!!

வால்பையன் December 8, 2008 at 10:28 AM  

உங்க குழந்தையும் உங்கள மாதிரியே போல

பார்த்து வளர்ந்த பிறகும் இந்த மாதிரி விஷ் பரிச்சையெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க

தாரணி பிரியா December 8, 2008 at 12:47 PM  

வீட்டுக்கு போறதுக்கு எல்லாம் இத்தனை கணக்கா டைம் கால்குலேசனா?

//. இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் போறேன். அவ்வளவுதான்" அப்படின்னேன்.//

நம்பிட்டங்களா :) அப்ப சரி.இதை கன்டினியூ செய்யிங்க.

அப்புறம் கடைசி பத்திக்கு நீங்க ஜீட்தான் விடணும். இப்ப எல்லாம் டைரக்டா பேர் சொல்லிதான் கூப்பிடறதே. :)

ச்சின்னப் பையன் December 8, 2008 at 5:47 PM  

மக்களே -> உதவி தேவை -> பூச்சாண்டி பதிவுகள் ப்ளாகர்லே பப்ளிஷ் ஆனபிறகு - முழுசா ஒரு நாள் ஆனபிறகுதான் தமிழ்மணத்துலே வருது.

அதுவரைக்கும் 'புது பதிவுகள் இல்லை'ன்னே வருது...

ஏன்னே தெரியல!!!!... :-((

ச்சின்னப் பையன் December 8, 2008 at 5:48 PM  

வாங்க வால் -> பெரியவளானப்புறம் என்னை மாதிரியே அவளும் திருந்திடுவான்னு நினைக்கிறேன்... ஹிஹி...

வாங்க தாரணி பிரியா -> நன்றி...

நசரேயன் December 9, 2008 at 12:32 PM  

/*இப்பல்லாம் எந்த பொண்ணும் அப்படி யாரும் கூப்பிடறதில்லைன்னு சொன்னீங்கன்னா*/
ஹும்.. என்ன சொல்ல, அதுக்கு எல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்

ச்சின்னப் பையன் December 9, 2008 at 6:32 PM  

வாங்க விஜய் -> எப்பவும் போல சிரிச்சதுக்கு நன்றி..

வாங்க நசரேயன் -> கண்டிப்பாங்க.. அதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... என்ன நான் சொல்றது... :-))

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா, தமிழ் பிரியன் -> நன்றி..

RAMYA December 16, 2008 at 1:55 PM  

//வாங்க வால் -> பெரியவளானப்புறம் என்னை மாதிரியே அவளும் திருந்திடுவான்னு நினைக்கிறேன்... ஹிஹி...
//

அப்படித்தான் முகத்துலே ஒரு தேஜஸ் தெரயுது
மிகவும் அருமையா இருக்காங்க

ஆளவந்தான் December 29, 2008 at 4:47 PM  

//நான் ஆர அமர 9 மணிக்கு சஹானாவை பள்ளியில் விட்டுவிட்டு 9.30 மணிக்குத்தான் போவேன்.//
அவ்ளோ சீக்கிரம் போய் என்ன ப்ண்ணுவீங்க..

ஆளவந்தான் December 29, 2008 at 4:49 PM  

//
ரொம்ப நாளா இந்த கேல்குலேஷன் சரியா போயிட்டிருந்தது. போன வாரம் என்ன ஆச்சுன்னா, மேனேஜர் கிளம்பி போய் 15 நிமிஷம் கழிச்சி (மணி 4.40) நான் வெளியே வரும்போது - எதையோ மறந்து வெச்சிட்ட மேனேஜர் திரும்பி வந்துக்கிட்டிருந்தாரு. என்னைப் பாத்து - "என்ன, நான் கிளம்பிப் போயிட்டேன்னு நினைச்சியா? ஹாஹாஹா"ன்னாரு. நான் "அதில்லே ஸ்டீவ், 5 மணிக்குத்தான் எப்பவும் கிளம்புவேன் (!!). இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் போறேன். அவ்வளவுதான்" அப்படின்னேன்.//

இதுக்கு தான் ஒரு வெள்ளோட்டம் மாதிரி, 15 நிமிசம் கழிச்சு BAG இல்லாம, rest room போற மாதிரி ஒரு வாக் போடனும், அப்போ தெரிஞ்சுடும் நிலவரம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP