சந்தில் சிந்து...!!! பகுதி 2 of 2...!!!
கைனடிக் சேலஞ்சர்:
ஒரு கைப்பேசி ஓசியில் கிடைக்குதுன்றதுக்காக என் பழைய கம்பெனியில் இந்த வண்டியை எனக்கு வாங்கிக் கொடுத்தாங்க. சென்னையில் மிகச்சிலரே வைத்திருக்கும் அபூர்வ மாடல் வண்டி இது. நிற்க. வழக்கமான வழக்கப்படி வண்டி வாங்கி பூஜை போட்டவுடன் செய்த முதல் காரியம் அந்த ரெண்டு கண்ணாடியையும் கழற்றியதுதான்.
ஒரு முறை தங்கமணி பின்னாலிருக்க, அவரை அலுவலகத்திற்கு விடப்போய்க்கொண்டிருந்தேன். கத்திப்பாரா - போரூர் ரோடில் கிண்டி அருகிலேயே ஒரு சந்தில் க்ராஸ் செய்ய வேண்டும். சரியான ட்ராஃபிக். பல்வேறு வண்டிகளுக்கிடையே புகுந்து புறப்பட்டு ரோட்டை க்ராஸ் செய்தபோது சடாரென்று ஒரு ஆட்டோ வந்துவிட்டது. சிந்து பாட முயற்சித்தபோது சாலையோரத்தில் இருந்த மணல் வழுக்கி சர்ர்ர்ர்ரென்று போய் விழுந்தோம்.
சமாளித்து எழுந்து நின்று, ஆடைகளில் மட்டுமல்ல, மீசையிலும்கூட மண் ஒட்டவில்லையென்று சொல்லிக்கொண்டு போனோம்.
கார் (இந்தியாவில்):
நங்கநல்லூர் ஆஞ்சனேயா பள்ளியில் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது முதலில் நம்மிடம் சுத்தமாக இல்லாத ஒன்றைத்தான். அது காரோட்டும்போது பொறுமையா இருக்கணும்றது.
ஒரு முறை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தபோது எனக்கு முன்னால் ஒரு ஆட்டோ மிகவும் மெதுவாக போய்க்கொண்டிருந்தது. எதிர்ப்பக்கத்திலிருந்து ஒரு பேருந்து வந்துகொண்டிருந்தது. இப்போ பதிவோட தலைப்பை மறுபடி பாத்துக்குங்க... அப்படி செய்றேன்னு சொல்லி சர்ருன்னு ஒரு க்ளோஸ் ப்ராக்கெட் (")") போட்டா மாதிரி வண்டி ஓட்டி, ஆட்டோவுக்கும் பேருந்துக்கும் நடுவில் போய் அந்தப் பக்கம் நின்னேன்.
வண்டியில் அமர்ந்திருந்த சக கற்றுக்கொள்பவர்கள் படபடவென்று கைதட்ட, கூட இருந்த ஆசிரியரோ வழக்கம்போல் #$@#$ இது உங்கப்பன் வீட்டு வண்டியா, நீ கார் ஓட்டறியா இல்லே ப்ளேன் ஓட்டறியா அப்படி இப்படின்னு திட்டி தீர்த்துட்டார்.
இந்த ஆட்டோ-பேருந்து போல் பல காம்பினேஷன்களுக்கு 'நடுவில்' வண்டி ஓட்டி (மாடு-மாடு, மாடு-சைக்கிள், பேருந்து-சுவர்) கொஞ்சம்போல கற்றுக் கொண்டு அமெரிக்கா வந்து சேர்ந்தேன்.
கார் (அமெரிக்காவில்):
இங்கே சந்துலே சிந்தெல்லாம் பாட முடியாது. ஒருத்தர் பின்னாலே ஒருத்தர்தான் போகணும். அதெல்லாம் நாம விட்டுடுவோமா.. மேலே படிங்க.
ஒரு வாரயிறுதியில் ஊர் சுற்றிப்பார்க்கப் போன இடத்தில் வண்டியை நிறுத்த முற்பட்டபோது... ஏற்கனவே அங்கு நின்றிருந்த காருக்கும், சுவருக்கும் நடுவே இருந்த இடைவெளியில் புகுந்து போயிடலாம்னு நினைச்சி... அந்த கார் மேலே இடிக்கக்கூடாதுன்னு கவனமா இருந்து... வலது பக்கம் சுவற்றில் 'சர்ர்ர்ர்'ன்னு என் காரை தேச்சிட்டேன்.
மிகச்சிறிய டேமேஜே ஆயிருந்தாலும், எனக்கு மேரேஜ் ஆகியிருந்த காரணத்தால், அன்னிக்கு திட்டு அதிகமா விழுந்தது...:-((
அன்னியிலேர்ந்து வழியில் மிகப் பெரிய இடைவெளி இருந்தாலும், நின்னு நிதானமா போறதால் - சந்தில் சிந்து பாடறேன்னு யாரும் என்னை சொல்ல முடியாது.
ரெயில்:
பதிவுக்காக இவ்ளோ விஷயத்தையும் எழுதியபிறகு - தங்ஸிடம் எல்லாத்தையும் சொன்னேன். அதுக்கு அவங்க - "நல்ல வேளை. நீங்க இன்னும் ரெயில் ஓட்டலே. அப்படியே ரெயில் ஓட்ட உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சாலும், இப்படித்தான் குறுக்கும் நெடுக்குமா போய் ஏதாவது பிரச்சினை பண்ணிக்கிட்டே இருப்பீங்க" - அப்படின்னு நல்லபடியா வாழ்த்துனாங்க...!!!
13 comments:
me the first
இனி பதிவ படிச்சிட்டு பின்னூட்டங்கள்
//சென்னையில் மிகச்சிலரே வைத்திருக்கும் அபூர்வ மாடல் வண்டி//
அபூர்வ மனிதருக்கு அபூர்வ மாடல் வண்டி என கொள்ளுக்களேன்
//அந்த ரெண்டு கண்ணாடியையும் கழற்றியதுதான்.//
அப்போ சரியா கண்ணு தெரியாதே, என பண்ணுவிங்க.
ஓ நீங்க வண்டியில இருந்த ரியர்வியூ கண்ணாடிய சொன்னிங்களா!
//அதெல்லாம் நாம விட்டுடுவோமா.. மேலே படிங்க.//
திரும்பவும் முதல்ல இருந்தா
//மிகச்சிறிய டேமேஜே ஆயிருந்தாலும், எனக்கு மேரேஜ் ஆகியிருந்த காரணத்தால், அன்னிக்கு திட்டு அதிகமா விழுந்தது.//
சிலேடை புலவரே!
கலக்குரிங்க
ரொம்ப நாள் கழிச்சி கும்மி குத்துறன
தனியா குத்த பயமா இருக்கு!
கடை திறந்த பிறகு சொல்லி அனுப்புங்க, வர்றேன்
விமானம் பத்தி ஒண்ணும் எழுதலியே...
ஹி..ஹி.. கடைசியா உங்க தங்கமணி சொன்னத சத்தமா ஏதும் சொல்லிடப் போறாங்க.. தீவிரவாதிங்க ப்ளைட் ஓட்ட ஆள் தேடிட்டு இருக்காங்களாம். இந்த மாதிரி ஒரு ஆள விடுவாங்களா? :)))
அப்புறம், உங்க தங்கமணியை அடிக்கடி வண்டியில கூட்டிட்டு போய் கீழ தள்ளி பழி தீத்துக்குவிங்க போல.. ஏற்கனவே ஒருதடவை சொல்லியிருக்கீங்க. இப்ப ஒருதடவை.. ம்ம்ம்ம்.. நடத்துங்க, நடத்துங்க.. :))))
ரோடு ரோலர் ஒன்னுதான் உங்ககிட்டத் தப்பிச்சிருச்சு போல. இல்ல அத மறந்துட்டீங்களா?
வாங்க வால் -> நான் கடையை திறக்கும்போது சாயங்காலம் மணி 7. நீங்க இப்போ தூங்கிக்கிட்டிருப்பீங்க.. :-))
வாங்க விமானம் -> அவ்வ்வ்... விமானத்தையும் ஓட்டியிருக்கேன். அதுலே உக்காந்து இல்லே... கையிலே ரிமோட்டை வெச்சிண்டு... :-))
வாங்க வெண்பூ -> சரியா புடிச்சிட்டீங்க... இதுவரைக்கும் 3 தடவை விழுந்திருக்கோம்னு நினைக்கிறேன்... அதுலே ரெண்டு ஏற்கனவே சொல்லிட்டேன்... :-))
வாங்க வேலன் ஐயா -> அவ்வ்... பைக்லே உக்காந்தாலே நான் வண்டியை ஓட்றேனா, இல்லே காத்துலே வண்டி அடிச்சிக்கிட்டு போகுதான்னு கேலி பண்ணுவாங்க... இதிலே ரோட் ரோலர் வேறேயா????? ஆஆஆ????
ஆகா ஆகா - டேமேஜ் சின்னதா இருந்தாலும் மேரேஜ் ஆயிடுச்சுன்னா பிரச்னை தான்
தங்க்ஸின் வாழ்த்துகள் அவங்க உள்ளத்திலேந்ந்து வருது - உதட்டிலேந்ந்து இல்ல - சரியா நான் சொல்றது
அம்மாடி... காரோட நிப்பாட்டிட்டீங்க.
இன்னும் லாரி, பஸ்னு போயிருந்தா, சந்துல சிந்து பாட நினைக்கறவங்களுக்கெல்லாம் ஒப்பாரி பாட வேண்டி வந்துருக்கும். சென்னை தப்பிச்சுது...
Post a Comment