தங்கமணியிடம் எப்போல்லாம் பேசலாம்?
1. கணிணி restart ஆகும் அந்த ஐந்து நிமிடம் சும்மாத்தானே இருப்போம். அப்போ பேசலாம்.
2. தொலைக்காட்சியில் ஏதாவது பார்க்கும்போது, விளம்பர இடைவேளையில் போரடிக்கும். அப்போ பேசலாம்.
3. வண்டி போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது, செய்வதற்கு எந்த வேலையும் இல்லை. அப்போ பேசலாம்.
4. மின் தூக்கியில் ஏறும்போதோ இறங்கும்போதோ ஓரிரு நிமிடங்கள் தப்பித்து ஓடமுடியாது. அப்போது கொஞ்சம் பேசலாம்.
5. கோவிலிலோ வேறெங்காவதோ வரிசையில் நிற்கும்போது பேசியே ஆகவேண்டும்.
6. சுடச்சுட சாதம் தட்டில் இருக்கும்போது சாப்பிட முடியாது. அது ஆறும் வரைக்கும் ஏதாவது பேசலாம்.
7. வேறு யாரிடமாவது தொலைபேசியில் கடலை போடும்போது, அவர்கள் நம்மை holdல் போட்டுவிட்டால், அந்த ஒரு நிமிடம் வேறே என்ன
செய்ய முடியும் சொல்லுங்க? அப்போ தங்கமணியிடம் பேசலாம்.
8. ஏதாவது ஒரு உணவகத்துக்குப் போய் போண்டா ஆர்டர் செய்து - அது வர நேரமானா, அந்த இரண்டு நிமிடம் பேசலாம்.
9. அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.
10. ஆற்காட்டார் தயவு செய்தார்னா, அந்த சமயமா பாத்து வேறே எதுவும் புத்தகம் கைவசம் இல்லேன்னா, அந்த சிறிது நேரம் தங்ஸிடம் பேசலாம். என்ன? ஆற்காட்டார் என்னிக்கு 'சிறிது' நேரமா தயவு பண்ணியிருக்காருன்றீங்களா? நான் வரலே இந்த விளையாட்டுக்கு.
யாராவது மேலே சொன்ன இந்த சமயங்களைத் தவிர வேறே எப்பவாவது 'வளவள'ன்னு பேசுவீங்களா என்ன?
34 comments:
ஆஹா இன்னிக்கும் நாந்தான் பஷ்டு
இன்னிக்கு உங்க தங்கமணி உங்ககிட்ட நிறைய பேச போறாங்க. வாயில மட்டுமே பேசணுமின்னு வேண்டிங்கோங்க.
தொலைக்காட்சியில பார்க்கறது சீரியலா இருந்தா மட்டும் விளம்பர இடைவேளையில பேசாதீங்க. சீரியலை விட விளம்பரம்தான் அதிகமா இருக்கும்.
அய்யோ... தங்கமணி கூட இவ்வளவு நேரம் பேசுறீங்களா? தைரியமான ஆளுதான்..
வாங்க தாரணி பிரியா -> அவ்வ்வ். இந்த பதிவை மட்டும் வீட்லே காட்டாமே மறச்சிட வேண்டியதுதான்....:-((
வாங்க மகேஷ் அண்ணே -> ஆஆஆ.. இதுவே அதிகம்ன்றீங்களா...ஆஹா...
ஹாஹாஹா!!!
எல்லாம் கேக்கறதுக்கு நல்லாதான் இருக்கு....ஹம்ம்...
ஆற்காட்டார் தயவு செய்தார்னா, அந்த சமயமா பாத்து வேறே எதுவும் புத்தகம் கைவசம் இல்லேன்னா, அந்த சிறிது நேரம் தங்ஸிடம் பேசலாம். என்ன? ஆற்காட்டார் என்னிக்கு 'சிறிது' நேரமா தயவு பண்ணியிருக்காருன்றீங்களா?
//
ஆர்காட்டார் சீசன் ஓவர்ணே... இப்ப பவர் கட் இல்ல :)
Mahesh said...
அய்யோ... தங்கமணி கூட இவ்வளவு நேரம் பேசுறீங்களா? தைரியமான ஆளுதான்
//
அல்டிமேட் கோயமுத்தூர் குசும்பு :))))
ஹிஹிஹிஹி எனக்கு பேசவெல்லாம் நேரமிருக்காது. தங்கமணி பேசறதைக் கேட்கவே நேரம் போதுமா இருக்குல..;))
பதிவு சில வினாடிகளில் திறக்கின்றது, நன்றிங்கோவ்!
////வேறு யாரிடமாவது தொலைபேசியில் கடலை போடும்போது///
என்னது கடலையா?!!??! இதெல்லாம் வேற பண்றீங்களா?
உங்க வலைப்பூ திறப்பதற்காக வெயிட் பண்ணும் நேரத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம், ஆனால் இப்போது முடியாது போல! மொசில்லா பிரச்சினை தீர்த்திட்டீன்களே!
நீங்க மட்டும்தான் இந்த நேரத்துல பேசுவீங்க, பதில் எதுவும் வராதுல்ல:):):) என்னைக்கு நாங்கெல்லாம் ரங்கமணிகள் பேசும்போது பேசிருக்கோம். எங்களுக்கு தேவைன்னா மட்டும்தானே பேசுவோம்:):):)
பிராமதம்ங்க..
9. அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.// அல்டிமேட்.!
/
அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.
/
தெய்வமே!!!!!!!!!!!
:))))))))))))))))
எதுக்கு வேண்டாத வேலை?
//6. சுடச்சுட சாதம் தட்டில் இருக்கும்போது //
அப்படின்னா என்னா?
ஏன் ஷட்டவுன் செய்றீங்க.. ரீ ஸ்டார்ட் ஆக நேரமாகுதுல்ல.. ஹைபர்னேட் செய்யுங்க. அப்ப சட்டுன்னு கணினி ஒளிரும். உங்களுக்கும் பேசவேண்டாம் யாருடனும்... :))
மறுபடியும் ஆரம்பிச்சீட்டீங்களா:)சமீபத்துல(!) நேற்றுத்தான் ஒரு கிசு கிசு கேட்டேன்.பதிவுலதான் இந்தப் போடு போடுறீங்களாம்!நேர்ல இந்தப் பூனையும் பால் குடிக்குமாக்கும்:)
வாங்க விஜய் -> :-))) ஆனா செயல்முறைலே வரமுடியாதுன்றீங்களா.... முயற்சி செய்துட்டு எனக்கு சொல்லுங்க... ( நானும் செய்யணும்லே!!!)
வாங்க அப்துல்லாஜி -> அவ்வ். அப்படியா... தினமும் 1.5 மணி நேரம் இல்லேன்றாங்களே எங்க வீட்லே ( நங்க நல்லூர்லே).
வாங்க தமிழ் பிரியன் -> ஹாஹா... நடு நடுவிலே 'ம்' அப்படின்னு சொன்னா போறுமா??????? சூப்பரா இருக்கே... :-))
வாங்க மோகன் -> ஹிஹி.. கடலை போடலேன்னா உயிர் வாழ முடியுமா சொல்லுங்க... :-)))
//9. அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.//
இது நல்ல யோசனையாக இருக்கிறதே...நல்ல காமெடி.......
வாங்க ராப் -> அதுதான் தெரியுமே.. நல்லா தூங்கியிருப்போம். நீங்க என்ன பண்ணுவீங்க - தூங்கறவன எழுப்பி - என்னங்க, நாளைக்கு என்ன சமைக்கட்டும்?ம்பீங்க... ... அவ்வ்வ்...
வாங்க தாமிராஜி -> தங்கமணின்னு தலைப்பை பாத்தவுடன் டக்குன்னு வந்துட்டீங்க போல... ஹிஹி....
வாங்க சிவா -> புரியுது புரியுது... ஒரு ஆம்பளையோட கஷ்டம் இன்னொரு ஆம்பளைக்குத்தானே தெரியும்.... :-)))
வாங்க ஆட்காட்டி -> எதுங்க? அப்போ பேசவே வேணாம்ன்றீங்களா? அப்பவும் பிரச்சினை வருமே? எப்படி சமாளிக்கிறீங்க....:-)))
அதுக்கர்த்தம் அப்டி இல்லை. நீங்க பேசறதை காது கொடுத்து கேக்குற அளவுக்கு ரங்கமணிகளுக்கு வீட்ல மதிப்பிருக்கா என்ன:):):)
//அதுதான் தெரியுமே.. நல்லா தூங்கியிருப்போம். நீங்க என்ன பண்ணுவீங்க - தூங்கறவன எழுப்பி - என்னங்க, நாளைக்கு என்ன சமைக்கட்டும்//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்டில்லாம் சொன்னீங்கன்னா, உங்க வீட்ல உங்க இஷ்டப்படிதான் சமையல் நடக்குதுன்னு நம்பிடுவோமா:):):)
எப்போல்லாம் பேசக்கூடாதுன்னு
தெரியுமா, சரியா யோசிச்சு சொல்லுங்க.
நீங்க எப்பப்ப பேசணும் நினைக்கறீங்களோ..அப்போ முடியாது.அவங்களும் தயாரா எப்பப்ப பேசலாம்னு ஒரு லிஸ்ட் வைச்சிருப்பாங்க.
தங்க்ஸ் துணுக்ஸ் நல்லா இருக்கு
என்னத்தைச் சொல்றது பாவம் தங்கமணிகள்...
அன்புடன் அருணா
வாங்க வாங்க குசும்பன் ஜி -> அவ்வ்வ்... பழையதுதான் உடம்புக்கு நல்லதா?????:-))))
வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி -> ஹாஹா... நல்ல ஐடியா... இனிமே இதைத்தான் முயற்சி பண்ணணும்.... நன்றிங்கோவ்....
வாங்க ராஜ நடராஜன் -> அட.. அது யாரு இந்த மாதிரி தப்புத்தப்பா உங்களுக்கு தகவல் கொடுத்தது.... அவ்வ்வ்...
வாங்க தீரன் -> நன்றி...
//அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.//
இது தான் மாஸ்டர் பீஸ்
//யாராவது மேலே சொன்ன இந்த சமயங்களைத் தவிர வேறே எப்பவாவது 'வளவள'ன்னு பேசுவீங்களா என்ன?//
வளவளன்னு அவங்க பேசுவாங்க
நாம கொழகொழனு கேக்க வேண்டியது தான்
30
//அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.//
ஹா ஹா. கலக்கல்.
வாங்க வால், வேலன் ஐயா -> நன்றி..
//ஏதாவது ஒரு உணவகத்துக்குப் போய் போண்டா ஆர்டர் செய்து - அது வர நேரமானா, அந்த இரண்டு நிமிடம் பேசலாம்.
//
எது?? Waitress?
//
தாரணி பிரியா said...
தொலைக்காட்சியில பார்க்கறது சீரியலா இருந்தா மட்டும் விளம்பர இடைவேளையில பேசாதீங்க. சீரியலை விட விளம்பரம்தான் அதிகமா இருக்கும்.
//
ஹேய்.. நோட் ப்ண்ணுங்கடே.. ப்ண்ணுங்கடே
Post a Comment