வேண்டாம் வேண்டாம் எதுவுமே வேண்டாம்...!!!
போன வாரம் ஒரு நாள் தூங்கும்போது அமர்க்களம் படத்தில் எஸ்.பி.பி பாடும் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டை கேட்டுக்கிட்டே படுத்தேன்.
படுத்தா தூக்கத்திலேயும் அதே பாட்டு சுத்தி சுத்தி அடிக்குது. சரி நல்ல பாட்டுதானேன்னு கனவிலே கேட்டுக்கிட்டு இருந்தா, திடீர்னு அந்த பாட்டோட உல்டா கேக்குது - அதுவும் என்னோட குரல்லே. வேறே வழியில்லே
- அதையும்தான் கேப்போம்னு கேட்டுட்டு உங்களுக்காக இந்த பதிவுலே போடறேன். நீங்களும் பாத்து படிச்சி சந்தோஷப்படுங்க.
இனிப்பா இருக்கற காபி வேண்டாம்
இனிப்பே இல்லாத சர்க்கரை வேண்டாம்
எழுத முடியாத பேனா வேண்டாம்
ஏற முடியாத ஏணி வேண்டாம்
காலை கடிக்கிற செருப்பும் வேண்டாம்
பல்லை உடைக்கிற லட்டு வேண்டாம்
சுட முடியாத தோசை வேண்டாம்
சூடாகாத பதிவும் வேண்டாம்
பத்த முடியாத தீப்பெட்டி வேண்டாம்
பாக்கெட் இல்லாத சட்டை வேண்டாம்
முடி இல்லாத தலையும் வேண்டாம்
முடிவே இல்லாத பாதை வேண்டாம்
திறக்க முடியாத ஃப்ரிட்ஜும் வேண்டாம்
மூட முடியாத குழாயும் வேண்டாம்
லொள்ளு பண்ணற நண்பர்கள் வேண்டாம்
லொள்ளு பண்ணாத நாயும் வேண்டாம்
ரௌண்டா இல்லாத பாலும் (ball) வேண்டாம்
ரௌண்டா இருக்கற அமௌண்டும் வேண்டாம்
இப்படி நான் பாடிக்கிட்டே வரும்போது ஒரிஜினல் பாட்டு மாதிரியே இந்த பாட்டுலேயும் டெம்போ மேலே மேலே போயிட்டே இருக்கு. நானும் விடாமே உச்சஸ்தாயியில் சஞ்சாரம் செய்து பாடிக்கொண்டே வரும்போது - குறட்டை சத்தம் ஜாஸ்தியாயிட்டே போகுதுன்னு அம்மாவும் பொண்ணும் சேந்து என்னை அடிச்சி எழுப்பிட்டாங்க. நான் அருமையா பாடினது இவங்களுக்கு குறட்டையா கேட்டிருக்கு. என்ன பண்றது. அவங்க கொடுத்து வெச்சது அவ்ளோதான்.
பாட்டு நடுவிலே என்னை எழுப்பிட்டதாலே, அந்த பாட்டை என்னால் கம்ப்ளீட் செய்ய முடியலே. அதனாலே இந்த பதிவுலே அதை போட முடியல. என்னை
தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க. அடுத்த தடவை முழு பாட்டையும் போடறேன்.
பிகு: கனவுலே என்னாலே சரியா கம்போஸ் பண்ணமுடியாததாலே அங்கங்கே தளை தட்டும். கண்டுக்காதீங்க..ஓகேவா..
40 comments:
//போன வாரம் ஒரு நாள் தூங்கும்போது அமர்க்களம் படத்தில் எஸ்.பி.பி பாடும் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டை கேட்டுக்கிட்டே படுத்தேன்.//
தூங்க போகும் முன்பா, தூங்கும் போதா?
அட நீண்ட நாள் கழித்து நான் தான் பர்ஸ்டா?
//படுத்தா தூக்கத்திலேயும் அதே பாட்டு சுத்தி சுத்தி அடிக்குது.//
அப்போ மொத்தம் ரெண்டு சுத்தி சரியா!
//திடீர்னு அந்த பாட்டோட உல்டா கேக்குது//
எதிர் பதிவு மாதிரி எதிர் பாட்டா?
//அதுவும் என்னோட குரல்லே.//
தூக்கம் கலைஞ்சிருக்குமே!
//நீங்களும் பாத்து படிச்சி சந்தோஷப்படுங்க.//
பின் விளைவுகளுக்கு நீங்க பொறுப்பேத்துகிறிங்களா?
//முடி இல்லாத தலையும் வேண்டாம்//
அப்ப சஞ்சய் அங்கிள் என்ன முண்டமாகவா திரிவாரு?
//லொள்ளு பண்ணற நண்பர்கள் வேண்டாம்//
அப்போ எங்கூட டூவா?
//ரௌண்டா இருக்கற அமௌண்டும் வேண்டாம்//
பணம் வேண்டாம் சொல்ற ம்தல் ஆசாமி நீங்க தான்
அப்போ எனக்கு ரவுண்டா ஒரு லட்சம் டாலர் அனுப்பிருங்க
//நான் அருமையா பாடினது இவங்களுக்கு குறட்டையா கேட்டிருக்கு.//
இது தான் உண்மையை உறக்க சொல்வதா?
:)
//கனவுலே என்னாலே சரியா கம்போஸ் பண்ணமுடியாததாலே அங்கங்கே தளை தட்டும்.//
எங்க தலையை தட்டாம இருந்தா சரி
அய்யய்யோ அய்யய்யோ பதிவும் வேண்டாம்...
அம்மம்மா அம்மம்மா பின்னூட்டமும் வேண்டாம்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... உங்களுக்குள்ள 1 டஜன் வைரமுத்து, 1/2 டஜன் கண்ணதாசன், 2 ஸ்பூன் நா முத்துக்குமார், முக்காலே அரைக்கால் வாலி எல்லாரும் இருக்கறது இப்பத்தானே தெரியுது...
எங்கியோ போய்ட்டீங்க சத்யா !!!
ungkalukkulla ippadi oru sakthiya? கோடம்பாக்கம் ஒரு நல்ல பாடலாசிரியரை மிஸ் பண்ணிருச்சு
வாங்க வால் -> வழக்கம்போல் புகுந்து விளையாடிட்டீங்க....
அ. சஞ்சய் என்ன பாவங்க பண்ணாரு. அவர ஏன் வம்புக்கு இழுக்கறீங்க.
ஆ. ரௌண்டா இல்லேன்னாலும் பரவாயில்லை. அப்படியே கொடுங்கன்னு சொல்ல வந்தேன்... ஹாஹா..
வாங்க மகேஷ்ஜி மற்றும் இளா -> இப்படி என்ன புகழாதீங்க. எனக்கு வெக்க வெக்கமா வருது... :-)))
நீங்க தான் பாடல் ஆசிரியார், ஆனா படம் இன்னும் முடிவாகலை
//
ungkalukkulla ippadi oru sakthiya? கோடம்பாக்கம் ஒரு நல்ல பாடலாசிரியரை மிஸ் பண்ணிருச்சு
//
என்னது சகதியா?.. ஓ சக்தியா..
//
ஏற முடியாத ஏணி வேண்டாம்
//
புடுங்கமுடியாத ஆணி வேண்டாம்
/வால்பையன் said...
//முடி இல்லாத தலையும் வேண்டாம்//
அப்ப சஞ்சய் அங்கிள் என்ன முண்டமாகவா திரிவாரு?/
:))
//
இனிப்பா இருக்கற காபி வேண்டாம்
இனிப்பே இல்லாத சர்க்கரை வேண்டாம்
//
இருங்க காலையிலே காப்பி
கிடைக்குதான்னு பாக்கலாம்
போட்ட காபிக்கும் சக்கரை இல்லையாம்
இனிமே அப்படிதான் கொடுப்பாங்களாம்
இப்ப பாட்டை உங்கள் கனவுப்பாட்டை
தொடருங்கள் பாக்கலாம்
//
எழுத முடியாத பேனா வேண்டாம்
ஏற முடியாத ஏணி வேண்டாம்
//
சரி பேனாவை உடைச்சிடலாம்
ஏணி ஏன்னா செய்யலாம்
கோணிகுள்ளே போட்டு மூடிடலாமா?
ஏதோ பாத்து ஒரு முடிவை சொல்லுங்க
//
காலை கடிக்கிற செருப்பும் வேண்டாம்
பல்லை உடைக்கிற லட்டு வேண்டாம்
//
திருப்பதி லட்டு சொன்னா சொன்னதுதான்
இப்ப எல்லாம் பல்லை உடைக்குதாம்
//
சுட முடியாத தோசை வேண்டாம்
சூடாகாத பதிவும் வேண்டாம்
//
இரண்டுமே சரி நண்பா - ஆனாலும்
சுட முடியலைன்னா என்னா
இட்லி ஊத்திடலாம்
//
பத்த முடியாத தீப்பெட்டி வேண்டாம்
பாக்கெட் இல்லாத சட்டை வேண்டாம்
//
இதுவும் நல்ல ஐடியா தான்
சிகரெட்டும் பிடிக்க முடியாது
வேறே ஏதாவது வாங்க காசும் இருக்காது
அதுக்கு தான் கோவம் போல
//
முடி இல்லாத தலையும் வேண்டாம்
முடிவே இல்லாத பாதை வேண்டாம்
//
இது கூட நல்லாத்தான் இருக்கு
ஆனா ஒன்னு பாருஙக முதல் பாயிண்ட்
இதை யாரவது கடைபிடிச்சா
தெருவேலே எவ்வளவு ??????????????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
திறக்க முடியாத ஃப்ரிட்ஜும் வேண்டாம்
மூட முடியாத குழாயும் வேண்டாம்
//
நீங்க சொல்லறது சரிதாங்க
தண்ணி கஷ்டத்திலே
இதெல்லாம் எதுக்குங்க
சொன்னது சொன்னீங்க
நாட்டுக்கு ஒரு நல்லதை
சொன்னீங்க வாழ்த்துக்கள்
//
லொள்ளு பண்ணற நண்பர்கள் வேண்டாம்
//
சேச்சே அப்படி எல்லாம் சொல்லக்கூடாது
லொள்ளு பண்ணினாதான் பொழுது நல்லா போகும்
இதை மட்டும் கொஞ்சம் மறு பரிசீலனை பண்ணுங்கப்பா
நண்பர்களுக்கு மட்டும் தான் இது,. எனக்கு நாய்ன்ன பயம்
ரௌண்டா கொடுத்து நீங்க வேண்டாம்னு சொல்ல
வீட்டுக்கு வந்து....
ஏன் ஏன் இந்த விஷப்பரிச்சை எல்லாம்
மதிப்பிற்குரிய கவிஞர் வைரமுத்து அவர்களே சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு அருமையான கவிஞர் சிக்கி இருக்காரு
அவரை கசக்கி பிழிஞ்சு நிறைய பாட்டு வாங்கிடறோம்
வாங்க நசரேயன் -> நீங்கதான் ஹீரோவா????? ஆஆஆ...
வாங்க ஆளவந்தான் -> ஆஹா... 'புடுங்கமுடியாத ஆணி வேண்டாம்' இது நச்சுன்னு இருக்கே....
வாங்க நிஜமா நல்லவன் -> :-)))
வாங்க ரம்யா -> அவ்வ்வ். நீங்க ஸ்கூல்லே பரிட்சை பேப்பர் திருத்தற வேலையில் இருக்கீங்களா??? இப்படி வரிக்கு வரி உங்க கமெண்ட் எழுதியிருக்கீங்களே!!!!!!
ச்சீ.. என்னை வைரமுத்து சாரோட கம்பேர் பண்ணாதீங்க... அவர் எங்கே. நான் எங்கே.... (அப்பாடா.. தன்னடக்கத்தை நிலைநாட்டியாச்சு!!!)
இது..............
இது................
//
வாங்க ஆளவந்தான் -> ஆஹா... 'புடுங்கமுடியாத ஆணி வேண்டாம்' இது நச்சுன்னு இருக்கே....
//
போங்க சார், எனக்கு புகழ்ச்சி எல்லாம் அவ்வளவா பிடிக்காது தெரியும்ல :)
//சுட முடியாத தோசை வேண்டாம்
சூடாகாத பதிவும் வேண்டாம்//
:-)))))))))
//சூடாகாத பதிவும் வேண்டாம்
இன்னும் என்னால் சிரிப்பை அடக்க இயலவில்லை.
பின்னிப் பெடல் எடுப்பதென்பது இப்படித்தானோ?
ஒடிருடா அப்துல்லா :)
வாங்க SUREஷ் -> கடைசி வரைக்கும் எதுன்னே சொல்லலியே நீங்க... அவ்வ்..
வாங்க ஆளவந்தான் -> அடேடே.. என்னை மாதிரியே இருக்கீங்களே!!!
வாங்க பிரேம்ஜி, ஷேர்பாயிண்ட் -> நன்றி...
வாங்க அப்துல்லாஜி -> ஹாஹா.... ஓடிட்டீங்களா....
//வாங்க ஆளவந்தான் -> அடேடே.. என்னை மாதிரியே இருக்கீங்களே!!!
//
:)
உங்களோட வலைக்கு வரும்போதெல்லாம்.. உங்களை பற்றி படிக்க மறப்பதேயில்லை.
எப்படி தினமும் ஒரு ப்க்க்ட்டா?
நெனச்சு..நெனச்சு சிரிச்சுப்பேன்.. அருமை..
ஆளவந்தான் -ஜி -> மேட்டர் சரியா கிடைச்சாத்தாங்க தினமும் பதிவு. இல்லேன்னா அப்பப்போ லீவ் விட்டுடுவேன்....
ரொம்ப நன்றி..
மொத்தத்தில் உங்கள் குறட்டையில் நிறைய வெரைட்டி இருக்கும் என்று தெரிகிறது.
உங்கள் பொண்ணு பயந்து நடு ராத்திரியில் கத்துவதெல்லாம் இல்லையே :))
வாங்க சுல்தான் -> ஹிஹி.. திடீர்னு நடுவிலே சத்தம் நின்னுபோயிட்டாதான் டக்குன்னு எழுந்து பாக்கறாங்க.. :-))
Post a Comment