நொறுக்ஸ் - வெள்ளி - 11/27/08
கார்லே போகும்போது என்னல்லாம் செய்யலாம் அப்படின்னு கொஞ்ச நாள் முன்னாலே பார்த்தோம். மக்களும் நிறைய ஐடியா சொன்னாங்க. ஆனா எதுவுமே செய்யாமே வெறும் சிந்தனை மட்டும் செஞ்சிண்டே போனா என்ன ஆகும்னு பாத்ததிலே, தனியா சிரிச்சிண்டு போனதுதான் மிச்சம். சரி, அப்படி என்னதான் சிரிக்கமாதிரி சிந்தனை பண்ணேன்னு கேக்கறீங்களா? கீழே படிங்க..
என் தம்பி ஆதர்ஷோட (தெரியாதவங்களுக்கு: குட்டி வெண்பூ) ஸ்கூலுக்கு போகணும். அந்த நடிகையை பாக்கறதுக்கு இல்லே.. ஸ்கூல் எப்படி நடத்தறாங்கன்னு பாக்கறதுக்காகத்தான்.
ஏதாவது பெரிய நடிகர் படம் வெளியாகுற அன்னிக்கு அடிச்சிபிடிச்சு கூட்டத்தில் போய் முதல் ஆளா டிக்கெட் வாங்க முயற்சி பண்ணனும். அப்படி போய், கவுண்டர் திறந்துவுடனே அவர்கிட்டே நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கான்னோ அடையாறுக்கு எந்த பஸ்லே போகணும் அப்படின்னு கேக்கணும்.
சென்னையில் ஏதாவது ஒரு ட்ராபிக் போலீஸ்காரரிடம் போய் - "சார், நீங்க செய்ற சேவை மிக மகத்தானது. உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கணும்" அப்படின்னு சொல்லிட்டு நண்பன் "சே, சீஸ்ஸ்ஸ்ஸ்" அப்படின்னு சொல்லும்போது, திடீர்னு ஒரு 50 ரூபாய் எடுத்து அந்த போலீஸ்கிட்டே "சார், இத பிடிங்க" அப்படின்னு குடுக்கணும்.
என் மாமனாரை ஒரு திரைப்படம் எடுக்கச் சொல்லணும். அந்தப் படத்துக்காக பாட்டு எடுக்கற சாக்குலே ஒரு 25 நாடுகளுக்கு போயிட்டு வந்துடணும்.
------------
எங்கேயோ கேட்ட ஜோக் ஒன்று:
மாட்டுச் சந்தையில் ஒருவர் மாடு வாங்க வருகிறார்.
ஏங்க, இந்த மாடு எவ்வளவு?
எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?
வெள்ளை மாடே சொல்லுங்க.
அது 5000ரூ.
அப்ப பழுப்பு?
அதுவும் 5000ரு தான்.
இந்த மாடுங்க எவ்ளோ பால் கறக்கும்?
எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?
வெள்ளை மாடே சொல்லுங்க.
அது நாளைக்கு ஒரு பத்து லிட்டர் கறக்கும்.
அப்ப பழுப்பு?
அதுவும் நாளைக்கு ஒரு பத்து லிட்டர் கறக்கும்.
இந்த மாடுங்களுக்கு எவ்ளோ வயசாச்சு?
எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?
வெள்ளை மாடே சொல்லுங்க.
அதுக்கு ஆச்சு அஞ்சு வயசு.
அப்ப பழுப்புக்கு?
அதுக்கும் அஞ்சு வயசுதான் ஆகுது.
(இதே மாதிரி பல கேள்விகள் கேட்டபிறகு)
என்னங்க, எது கேட்டாலும் முதல்லே வெள்ளையா பழுப்பான்றீங்க... ஆனா பதில் ரெண்டுதுக்கும் ஒண்ணுதானே சொல்றீங்க?
ஏன்னா, வெள்ளை மாடுங்க என்னுது.
அப்ப பழுப்பு மாடுங்க?
அதுவும் என்னுதுதான்.
(கேள்வி கேட்டவர் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்).
--------------
நாளைக்கு வட அமெரிக்கா பதிவர் சந்திப்பு நியூ ஜெர்ஸியில் திட்டமிட்டபடி நடைபெறுகிறது. அறிவிப்புக்கு இங்கே செல்லவும். இந்த பக்கம் இருக்கும் பதிவர்கள், அனானிகள் கண்டிப்பாக வரவும்.
------------
சென்ற வாரம் ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தோம். அங்கு வந்திருந்த இன்னொரு தமிழ் தெரியாத தமிழ் சிறுமியிடம் தங்ஸ் "கத்தக்கூடாதும்மா. பாப்பா தாச்சி" என்றார். அந்த சிறுமி "what is தாச்சி?" என கேட்க, தங்ஸோ "பாப்பா தாச்சி means பாப்பா sleeping" என்றார். அப்போது நான் "அப்போ புள்ள தாச்சின்னா?" என்று கேட்டேன். அது புரியாமல் அந்த சிறுமி ஓடிவிட, தங்ஸின் பார்வையை பார்க்க முடியாத நானும் வேறுபக்கம் ஓடினேன்.
----------
25 comments:
Naan dhan first. :)
As im just the reader of the blogs, i always wonder why they say 'im the first or 5th or 25th or so' in comments of the blog post.
As per the saying "OOrodu othu vazh", i also said the same in my last comment. :)
//"பாப்பா தாச்சி means பாப்பா sleeping" என்றார். அப்போது நான் "அப்போ புள்ள தாச்சின்னா?"//
சரியான கேள்வியும் பதிலான அர்த்தமும்:)
:-)))...
// என் தம்பி ஆதர்ஷோட //
இந்த வாக்கியத்தில் சொற்குற்றம் உள்ளது.
வரலாறு ரொம்ம்ப்ப்ப்ப்பப ரொம்ம்ப்ப்ப்பப முக்கியம் அமைச்சரே!!!
// தங்ஸின் பார்வையை பார்க்க முடியாத நானும் வேறுபக்கம் ஓடினேன் //
அப்புறம்??? வீட்டுக்குப் போனதும் என்ன ஆச்சு???
நொறுக்ஸ் ..நல்லா இருக்கு.. :) :)
:-)
:))
நேத்து அடி ஒன்னும் பலமில்லை தானே?...;)
நர்ஸ்கிட்ட நல்ல பலமா கட்டு போடச் சொல்லுங்க... நீங்க கேட்ட கேள்வில, தங்கமணி அடிச்சதுல, இப்போ அந்தக் கையை என்ன பண்ணணும் - ங்கற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்கு விடை தெரிஞ்சிருச்சுல்ல???
//என் மாமனாரை ஒரு திரைப்படம் எடுக்கச் சொல்லணும். அந்தப் படத்துக்காக பாட்டு எடுக்கற சாக்குலே ஒரு 25 நாடுகளுக்கு போயிட்டு வந்துடணும்//
Story-dialogue-direction
T.V.Radhakrishnan
வாங்க சுதா -> எடுத்தவுடனே ஒரு அனானி பின்னூட்டமா??? பயபுள்ளைங்க நம்ப மாட்டாங்களே!!!!! இருந்தாலும் நன்றி..
வாங்க ராஜ நடராஜன் -> //சரியான கேள்வியும் பதிலான அர்த்தமும்//
இது என்ன கவிதையா!!!! ஆஆஆஆ!!!
வாங்க விஜய் -> ஓ. தம்பின்னு சொல்லாமே அண்ணன்னு சொல்லியிருக்கணுமா?????? அவ்வ்வ்
வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி -> நன்றி...
வாங்க கபீஷ் -> நன்றி...
வாங்க தமிழ் பிரியன் -> அவ்வ்வ். தனி மெயிலில் சொல்றேன்... :-))
வாங்க பரிசல் -> அவ்வ்வ்... சரி சரி... இப்படி வெளிப்படையாவா பேசறது?????
வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> ஆமா.ஆமா... ஏதாவது ஒரு நல்ல அரசியல் கதையா இருந்தா சொல்லுங்க. முடிச்சிடுவோம்.... :-))
//என் மாமனாரை ஒரு திரைப்படம் எடுக்கச் சொல்லணும். அந்தப் படத்துக்காக பாட்டு எடுக்கற சாக்குலே ஒரு 25 நாடுகளுக்கு போயிட்டு வந்துடணும்.//
கிளி மாதிரி வளர்த்த பெண்ணை உங்க கையில கொடுத்துட்டு நொந்து போயி இருக்காரு, படம் எடுக்கனுமாம்ல படம். நல்ல பாம்பு ஒன்னப் புடிச்சுத்தான் எடுக்கனும்.
வாங்க வேலன் ஐயா -> அவ்வ்வ். என்ன ஒரு வில்லத்தனம்?????? ஏன்.. ஏன் இப்படி?
அது சரி... கிளி பாம்புன்னு வரிசையா மிருகங்களா வந்துக்கிட்டிருக்கே... இராம நாராயணன்சார் படம் ஏதாவது பாத்தீங்களா சமீபத்துலே!!!!!!
/*என் மாமனாரை ஒரு திரைப்படம் எடுக்கச் சொல்லணும். அந்தப் படத்துக்காக பாட்டு எடுக்கற சாக்குலே ஒரு 25 நாடுகளுக்கு போயிட்டு வந்துடணும்.
*/
டைரக்டர் வாய்ப்பு எனக்கு தான் கொடுக்கணும்
எப்படியோ நீங்க தனியா சிரிக்க ஆரம்பிச்சுட்டிங்கதானே. அது போதும்.
எல்லா யோசனையிலும் டிராபிக் கான்ஸ்டபிள் யோசனைதான் டபுள் ஒ.கே ( போன வாரம் 200 ரூபாய் பிடிங்கிட்டாங்க. கேட்டா லைசென்ஸ் எல்லாம் வண்டியிலத்தான் வெச்சுகிடணுமின்னு சட்டம் பேசறாங்க)
ஒரு பாட்டுக்கே 25 வெளி நாடா? ஹீம் நடத்துங்க.
போன வாரம் நீங்க சரியா பதிவு போடாத காரணம் இப்பதான் தெரியுது. அடி ரொம்ப பலமோ?
//நசரேயன் said...
டைரக்டர் வாய்ப்பு எனக்கு தான் கொடுக்கணும்//
யார் டைரக்ட் செஞ்சா என்னங்க ஹீரோ அகிலாண்ட நாயகன் தானே?
//"பாப்பா தாச்சி means பாப்பா sleeping" என்றார். அப்போது நான் "அப்போ புள்ள தாச்சின்னா?"//
ha ha ha
good question.
வாங்க நசரேயன் -> அவ்வ். எவ்ளோ பேரு கிளம்பி இருக்கீங்க இந்த மாதிரி? ஏற்கனவே ஒருத்தரு துண்டு போட்டிருக்காரு... குலுக்கல் முறையில்தான் டைரக்டரை தேர்ந்தெடுக்கணும் போல....
வாங்க தாரணி பிரியா -> சரி சரி.. லைசன்ஸ் வீட்லே இருக்குன்னு (பொய்) சொல்லி தப்பிச்சிட்டீங்க போல... :-))) ஐஜி எனக்கு தெரியும்னு சொல்லியிருக்கலாமே!!!
வாங்க நாடோடி இலக்கியன் -> நன்றி..
//"பாப்பா தாச்சி means பாப்பா sleeping" என்றார். அப்போது நான் "அப்போ புள்ள தாச்சின்னா?" என்று கேட்டேன்.//
அதேதாங்க,
"புள்ள (அங்கே) sleeping"தான்
;-)
கலக்கல் காமெடி நொறுக்ஸ் ச்சின்னப்பையன்...
சென்னை வந்தா சொல்லுங்க.. ஆதர்ஷ் ஸ்கூல்லுக்கு போய் பாக்கலாம் (ஸ்கூல் எப்படி நடக்குதுன்னு).. :)))
//
என் மாமனாரை ஒரு திரைப்படம் எடுக்கச் சொல்லணும். அந்தப் படத்துக்காக பாட்டு எடுக்கற சாக்குலே ஒரு 25 நாடுகளுக்கு போயிட்டு வந்துடணும்.
//
ஹி..ஹி.. ஆனா அவரு ஹீரோயின் உங்க தங்கமணிதான்னு சொல்லுவாரே.. அதை யோசிச்சீங்களா??? :)))
என் தம்பி ஆதர்ஷோட (தெரியாதவங்களுக்கு: குட்டி வெண்பூ) ஸ்கூலுக்கு போகணும்.
//
அடடே என் சின்ன அண்னன் ஆதர்ஷ் உங்க தம்பியா?? :)))
(கேள்வி கேட்டவர் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்)./
ithapadicavangalum than
என்னாது ஆதர்ஷ் உங்க ரெண்டு பேருக்கும் அண்ணன் தம்பியா? மொத்த்தத்துல என்னை சித்தப்பா, பெரியப்பான்னு மறைமுகமா சொல்றீங்க.. சரியா?? :))))
me the 25TH:):):)
Post a Comment