தொதொ பார்ப்பதற்குமுன் செய்ய வேண்டிய செயல்கள் 10!!!
தொதொன்னா என்னன்னு குழம்பிடாதீங்க. தொதொ = தொலைக்காட்சித் தொடர். இப்போ தலைப்பை இன்னொரு தடவை படித்துவிட்டு பதிவுக்கு போயிடுங்க...
1. வீட்டிலுள்ள தொலைபேசியை, கைபேசியை அணைத்து விடவேண்டும். தொலைபேசியை அணைக்க முடியாத பட்சத்தில், மிமிக்ரி செய்யத் தெரிந்தால் நலம். அப்போதுதான் - நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும் - என்று சொல்லி தேவையில்லாத அழைப்புகளை உடனே வெட்டிவிட முடியும்.
2. சமையலறையில் பாதியில் விட்ட வேலைகளை விரைவில் முடித்துவிடவும். துவக்காத வேலைகளை தொதொக்குப் பிறகு துவக்கவும். இதில் குக்கர்தான் முக்கியம். அதன் ஒலி தொதொவின் ஒலியை கேட்கவிடாமல் செய்துவிடும்.
3. தொலைக்காட்சியின் ரிமோட்டை பார்வையிலேயே வைத்துக்கொள்ளவும். ரிமோட் தேடுவதற்கு ஒரு கருவியே இருக்கிறது - முடிந்தால் அதையும் வாங்கி வைத்துக்கொள்ளவும். இதனால் நேரவிரயத்தை தவிர்க்கமுடியும்.
4. கைப்பை, பர்ஸ், சில்லறை ஆகிய எல்லாவற்றையும் பக்கத்திலேயே வைத்துக்கொள்ளவும். வீட்டிலுள்ளவர்களோ அல்லது கோவில் போன்ற விழாக்களுக்கு கலெக்ஷன் செய்ய வருபவர்களுக்கோ கொடுக்கத் தேவைப்படும். இதனால், தொதொ அதிக நேரம் தவறவிடாமல் பார்க்கலாம்.
5. குடிக்க தண்ணீர், பேனா -> இவற்றையும் அருகிலேயே வைத்துக்கொள்ளவும். தொதொ பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் கொரியர் ஆள் வருவார். கடிதம் நமக்கு இல்லையென்றாலும், குமார் வீடு இதுவா /மாடிக்கு எப்படி போவது என்று கேட்பார் அல்லது குடிக்க தண்ணீர் கேட்பார்.
6. மின்சார அட்டை, கேபிள் அட்டை, பால் அட்டை, காஸ் (gas) அட்டை போன்ற எல்லாவற்றையும் உடனே எடுக்கக்கூடிய இடத்தில் வைக்கவும். இந்த ஆட்கள் வந்தால், அவர்களை உடனடியாக பேசி அனுப்ப வசதியாக இருக்கும்.
7. வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்களுக்கான மருந்து/தண்ணீரை எடுத்து வைத்துவிடவும். படிக்கும் வயதினர் இருந்தால், அவர்கள் தங்கள் வீட்டுப்பாடத்தை செய்துவிட்டார்களா என்று பார்த்துக்கொள்ளவும். சரியாக தொதொ பார்க்கும்போது அவர்களுக்கு நினைவு வந்துவிட்டு, உங்களை உதவிக்குக் கூப்பிட்டால் தொதொ புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
8. தொதொவின் தன்மைக்கேற்ப கைக்குட்டையோ டிஷ்யூ காகிதமோ ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். இவையில்லாமல் தொதொ பார்ப்பது அபாயகரமானது.
9. இயற்கையின் அழைப்புகள் - அவை அழைக்காவிட்டாலும் நீங்கள் அழையா விருந்தாளியாக 'போய்' முடித்துவிடவும். பிறகு, தண்ணீர் குடிப்பதை குறைத்துக்கொள்ளவும். தொதொக்கு நடுவில் மீண்டும் அழைப்பு வந்துவிட்டால் கஷ்டம்.
10. தொதொ ஆரம்பிக்குமுன்பே, அன்றைய செய்தித்தாள், அந்த வாரத்திய விகடன், குமுதம் இவற்றை தேடி பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். என்னேரமும் பக்கத்து ஃப்ளாட்டிலிருந்தோ, வீட்டிலிருந்தோ யாராவது வந்து ஓசியில் படிக்க கேட்கலாம்.
------------------
இவ்ளோ முன்னேற்பாடுகள் செய்தபிறகும் ஆற்காட்டார் தயவில் தொதொ பார்க்கமுடியாமல் போய்விட்டால், கவலையேபடாமல் காத்திருந்து அடுத்த நாள் பாருங்கள். கதை என் வலைப்பூ கௌண்டர் (counter) போல் நகராமல் அங்கேயே இருக்கும்.
34 comments:
ha ha me the first rapp & venpu emathutingala
Sankar
kadisi punchthan super thalaiva
sankar
//தொதொன்னா என்னன்னு குழம்பிடாதீங்க.//
நான் நாய்குட்டிய கூப்பிடறது பத்தி பதிவுன்னு நினைச்சேன்
//நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும் //
போதையில் உள்ளார்
போன்ற வசனங்கள் எடுபடுமா?
//சமையலறையில் பாதியில் விட்ட வேலைகளை விரைவில் முடித்துவிடவும்.//
நேற்று ஆரம்பித்த சாம்பார் இன்னும் அடுப்பை விட்டு இறக்கவில்லை என்று ராப் மெயில் அனுப்பியிருக்கிறார்
//ரிமோட் தேடுவதற்கு ஒரு கருவியே இருக்கிறது//
ஒளித்து வைப்பதற்க்கும் என் வீட்டில் ஒரு ஜீவன் இருக்கிறது. அது என் மகள்
//கைப்பை, பர்ஸ், சில்லறை ஆகிய எல்லாவற்றையும் பக்கத்திலேயே வைத்துக்கொள்ளவும்.//
வீட்டுக்கு வரும் திருடர்கள் எடுத்து போகவும் வசதியாக இருக்கும்
//தொதொ பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் கொரியர் ஆள் வருவார்.//
வீட்டில் யாரும் இல்லை சொன்னால் போகமாட்டார்களா?
//அவர்களை உடனடியாக பேசி அனுப்ப வசதியாக இருக்கும்.//
அதைவிட கையில் புது பத்து ரூபாய் தாள்களை வைத்து கொண்டால் அதை விட உடனடியாக வேலை நடக்கும்
அய்யோ பாவம்... ரொம்ப நொந்து நூடுச்ஸ் ஆகி போட்ட பதிவு போலத் தெரிகின்றது. தொ தொ வால் ரொம்ப பாதிக்கப்பட்டு விட்டீங்கன்னு நினைக்கின்றேன்.
//அவர்கள் தங்கள் வீட்டுப்பாடத்தை செய்துவிட்டார்களா என்று பார்த்துக்கொள்ளவும்.//
இல்லையென்றால் நீங்களே எழுதி கொடுக்கவும்
// தொதொவின் தன்மைக்கேற்ப கைக்குட்டையோ டிஷ்யூ காகிதமோ ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்.//
அதுவும் இல்லையென்றால், புடவை தலைப்போ, சட்டையின் கைப்பாகமோ உதவலாம்
//அவை அழைக்காவிட்டாலும் நீங்கள் அழையா விருந்தாளியாக 'போய்' முடித்துவிடவும்.//
இதற்க்கு பதில் ”அங்கேயே” ஒரு தொபெ வைத்து விட்டால் என்ன?
//அன்றைய செய்தித்தாள், அந்த வாரத்திய விகடன், குமுதம் இவற்றை தேடி பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்//
என்னை கேட்டால் நாமே வழிய போய் அவர்கள் வீட்டில் கொடுத்து விட்டு வருவது நல்லது
விட்டால் வேறு என்ன வந்திருக்கபோவுது
ஒரு தொதொ-வுல போன வாரம் சாப்பிட உக்காந்தவன் இன்னும் எந்திரிக்கலையாம்
தொதொவின் தன்மைக்கேற்ப கைக்குட்டையோ டிஷ்யூ காகிதமோ ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். இவையில்லாமல் தொதொ பார்ப்பது அபாயகரமானது.ஃஃஃஃ
இதெல்லாம் ச்சின்னபையனுக்கு தான் யூஸ் ஆகும். எங்கூரு பொம்மனாட்டிங்கல்லாம் தலைதுவட்டும் துண்டை வைத்துக்கொண்டு அழுது தொலைக்கிறார்கள். சீரியல்கள் பார்த்தால் மனப்பாரம் குறைகிறதாமே... கேள்விப்பட்டீர்களா?
இவ்ளோ முன்னேற்பாடுகள் செய்தபிறகும் ஆற்காட்டார் தயவில் தொதொ பார்க்கமுடியாமல் போய்விட்டால், கவலையேபடாமல் காத்திருந்து அடுத்த நாள் பாருங்கள்.
//
அட உங்க அமெரிக்காவுலயும் ஆற்காட்டார்தான் கரண்டு மினிஸ்டரா?? :))))
\\ரிமோட் தேடுவதற்கு ஒரு கருவியே இருக்கிறது - முடிந்தால் அதையும் வாங்கி வைத்துக்கொள்ளவும். \\
ha ha ha ha ha ha ha
தொதொ பதிவு
டக்ளஸ், டரியல், கொக்கு........
எல்லாத்தையும் ஒன்னு விடாம குறிச்சு வச்சுகிட்டேன்
சூப்பரு..
சரி.. இதெல்லாம் தங்கமணிகள் பண்ணுறது.. அவங்க தொதொ பாக்குறப்ப ரங்கமணிகள் என்ன பண்ணுறதுன்னும் சொன்னீங்கன்னா பரவாயில்ல...(தெரியாதான்னு கேக்காதீங்க) :))
தொதொவின் தன்மைக்கேற்ப கைக்குட்டையோ டிஷ்யூ காகிதமோ ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். இவையில்லாமல் தொதொ பார்ப்பது அபாயகரமானது.
ஹி ஹி ஹி ஹி
அய்யோ பாவம்... ரொம்ப நொந்து நூடுச்ஸ் ஆகி போட்ட பதிவு போலத் தெரிகின்றது. தொ தொ வால் ரொம்ப பாதிக்கப்பட்டு விட்டீங்கன்னு நினைக்கின்றேன்
ரிப்பீட்டு
//தொலைபேசியை அணைக்க முடியாத பட்சத்தில், மிமிக்ரி செய்யத் தெரிந்தால் நலம். அப்போதுதான் - நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும் - என்று சொல்லி தேவையில்லாத அழைப்புகளை உடனே வெட்டிவிட முடியும்//
:-)))))))
வாங்க சங்கர் -> எங்கிருந்தோ வந்தான், நாந்தான் பஷ்டு என்றான் அப்படின்னுதான் பாடணும்... :-))
வாங்க வால் -> மறுபடி பூந்து விளையாடிட்டீங்க.... நடத்துங்க நடத்துங்க...
வாங்க ராகவன் -> நைஜீரியாதானே.... இல்லீங்கோ... இப்போ மூணு வருஷமாத்தான் தொதொ பிரச்சினையில்லாமே இருக்கேன்.... :-)))
வாங்க தமிழ் சினிமா -> பதிவ போட்டப்புறம்தான் நினைச்சேன்.. துண்டு போடணும்னு.. நீங்க சொல்லிட்டீங்க... நன்றி....
வாங்க அப்துல்லா அண்ணே -> ஹிஹி.. உலகம் பூராவும் ஆற்காட்டாரே அமைச்சரா இருந்தா எப்படி யிருக்கும்னு நினைச்சி பாக்கறேன்... ம்ஹூம்.. முடியல.... :-))
வாங்க முரளிகண்ணன் -> :-)))
வாங்க ராஜாஹரிச்சந்திரா -> என்னவோ சொல்றீங்கன்னு தெரியுது.. ஆனா.. என்னன்னுதான் தெரியல.... ;-))
வாங்க நசரேயன் -> கடைசீஈஈஈஈ பாராவையும் பாத்துட்டீங்கல்லே.. என்னோட பதிவை திறந்து வெச்சிட்டு, F5 மேலே ஒரு கல்லை தூக்கி வெச்சிடுங்க.... :-))))
வாங்க வெண்பூ -> ஆஆஆ... அப்படி ஒண்ணு இருக்கோ.. நான் நெனெச்சேன்... நீங்களும்.. ஐ மீன்... தங்கமணிகளும் சேந்து தொதொவை பாப்பாங்கன்னு.... :-))
வாங்க விலெகா -> அவ்வ்வ்... இல்லீங்கோ...... இப்பல்லாம் தொதொவையே பாக்கறதில்லீங்கோ.....
வாங்க பிரேம்ஜி -> நன்றி...
:-)))...
செம்ம காமெடி!!!
oru naal nalla ponna office velai partha me the late agittenla :(
naan friday mattumthan serial pakkarathu. weekly once partha podum kathai supera puriyum .
மெட்டிஒலி கிளைமேக்ஸ் பாக்க ஆபீசுக்கு லீவு போட்டவராச்சே, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்:):):)
ச்சான்ஸே இல்லே ராப்.... எப்படி இப்படி ஞாபகம் வெச்சிருக்கீங்க?... ஐயய்யோ.. இனிமே கண்டின்யுட்டி சரியா பாத்துக்கணுமே..... :-)))
வாங்க விஜய் ஆனந்த் -> எது காமெடி? தொதொவா? இந்த பதிவா?
வாங்க தாரணி பிரியா -> அச்சச்சோ... வெள்ளிக்கிழமை எல்லா தொதொவும் சஸ்பென்ஸா முடிப்பாங்களே???? அடுத்த வெள்ளி வரைக்கும் எப்படி தாங்குவீங்க!!!!!!!!!!
ஹா ஹா ஹா...
//வெண்பூ said...
சூப்பரு..
சரி.. இதெல்லாம் தங்கமணிகள் பண்ணுறது.. அவங்க தொதொ பாக்குறப்ப ரங்கமணிகள் என்ன பண்ணுறதுன்னும் சொன்னீங்கன்னா பரவாயில்ல...(தெரியாதான்னு கேக்காதீங்க) :))//
இந்த ஏற்பாடுகள எல்லாம் ரங்க மணிகள்தானே செய்யனும். அப்பத்தான் தங்கமணிகள் நிம்மதியா அழமுடியும்.
Post a Comment