கனவு... கனவு... கனவு...
என்னுடைய கனவில் என்னுடைய குடும்பம் தவிர, நடிக(??) நடிகையர், கூட வேலை பார்க்கும் அமெரிக்க இந்திய நண்பர்கள், பரிசல் மற்றும் அறிமுகமாகி போன வாரம்தான் முகத்தைப் பார்த்த சிங்கை நாதன் வரைக்கும் அனைவரும் முறை வைத்துக்கொண்டு வந்து போவார்கள்.
நான் விடும் குறட்டையால் (தங்கமணியும், சஹானாவும்தான் அப்படி சொல்வார்கள், ஆனால் நானாவது குறட்டை விடுவதாவது என்று மறுத்துவிடுவேன்!!!) என் கனவில் சிறிய ஜெர்க் எப்பவும் இருக்கும். ஆனாலும், அந்த ஜெர்க்கை பொருட்படுத்தாமல், நண்பர்களும், உறவினர்களும் என்னுடன் பேசிக்கொண்டிருப்பர்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மேற்கூறிய அனைத்து நண்பர்களுடனும் - நான் பிறந்து வளர்ந்து 25 வருடம் வாழ்ந்த வீட்டில்தான் பேசிக்கொண்டிருப்பேன். அந்த வீட்டை விட்டு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டாலும், கனவில் அந்த வீட்டில் இருக்கும்போது, அங்கிருந்த மாடிப்படிக்கட்டுகள், எங்கள் அறையில் இருந்த அலமாரிகள், பெரிய பெஞ்சு, கோலி விளையாடிய குழிகள் எல்லாமே தெள்ளத்தெளிவாக வந்து போகும்.
பதிவு போட ஆரம்பித்தபிறகு, ரொம்ப நேரம் (நாள்) யோசித்து ஒரு மேட்டரை எப்படி முடிப்பது என்று தெரியாமல் இருக்கும்போது திடீரென்று ஒரு நாள் கனவில் அந்த ஃபினிஷிங் டச் கிடைத்துவிடும். (ரொம்ப டூ மச்சா இருக்குன்றீங்களா, ஆனா இது நிஜம்தாங்க!!!). ஆனா, காலையில் எழுந்தவுடன் அவை மறந்துவிடும். பிறகு எதையோ மொக்கையாக எழுதி பதிவை வெளியிடுவது வழக்கம்.
வேறெங்கேயோ கூட படித்திருக்கிறேன் (ஒருவேளை சுஜாதாவோ) - அதாவது, தூங்கும்போது பக்கத்தில் ஒரு நோட்டும் பேனாவும் வைத்துக்கொண்டு, தூக்கத்திலேயே எழுந்து - நாம் காணும் கனவை அதில் எழுதுவதாக. சரி, நாமும் அப்படியே செய்வோமென்று சில நாட்கள் நோட்/ பேனா இரண்டையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்கினேன்.
மொட்டை மாடியில் (கனவில்) விளையாடும் கோலி மற்றும் கிரிக்கெட்டில் இருந்த ஆர்வத்தினால் - காலையில் எழுந்து பார்த்தால் - பக்கத்திலிருந்த நோட்டில் ஒன்றுமே இருக்காது. இரவில் கண்ட கனவும் கொஞ்சமாய் நினைவில் இருக்கும் அந்த நேரத்தில் எழுத சோம்பேறித்தனப்பட்டு சிறிது நேரம் கழித்து யோசித்தால், சுத்தமாய் எதுவுமே நினைவிலிருக்காது.
இப்படியாக போயிட்டிருக்கும்போது, திடீர்னு ஒரு நாள் அந்த நோட்டைப் பார்த்தேன். ஏதேதோ எழுதியிருந்தது. ஆஹா, நாம்கூட இரவு கனவு முடிந்ததும் உடனேயே எழுந்து எழுதிவிட்டிருக்கிறோமென்று சந்தோஷப்பட்டுக்கொண்டே அந்த நோட்டைப் பார்த்தால் - அவ்வ்வ்.... எதுக்காக அப்படி எழுதியிருக்கிறேனென்றே தெரியவில்லை.
அதாவது எழுதியது இருக்கு - கனவு மறந்து போச்சு. அப்படி நான் எழுதியதைத்தான் மேலே படத்தில் உள்ளது. உங்களுக்கு ஏதாவது புரிஞ்சா, அதைப் பத்தி நீங்களே ஒரு பதிவு எழுதிடுங்க.... அவ்வ்வ்வ்..
11 comments:
மீ த பர்ஸ்ட்..
ஹாஹா..ஜெயித்து விட்டேன் rapp அக்காவை.. :))
making round chapatthi - ஒரு தடவையாவது ரவுண்டா செஞ்சிருக்கீங்களா ?
ஒருநாள் உங்க சித்தப்பா உங்ககிட்ட வந்து டே ச்சின்னபையா உனக்கு ஒரு பரிசு வாங்கி தரலாம்னு இருக்கேன்னு சொன்னார்.
சரின்னு நீங்களும் ஒரு கடிகாரம் கேட்டிங்க
எதாவது சிறுசா கேப்பிங்கன்னு எதிர்பார்த்த உங்க சித்தப்பா டரியல் ஆகிட்டார்.
இருந்தாலும் உங்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார், அது என்னான்னா நீங்க ஒரு சப்பாத்தியாவது ரவுண்டா சுடனும்னு சொல்றார்.
எவ்வளவோ தேச்சு பார்த்தும் உங்களால முடியல.
கடைசியா ஒரு கப் கேக்காவது வாங்கி கொடுங்க சித்தப்பான்னு கேட்டு பாத்திங்க,
முடியாது சுட்ட சப்பாத்திய நீயே சாப்பிட்டுனு சொல்லிட்டு போயிட்டார்.
அப்போ சாப்பிட ஆரம்பிச்ச நீங்க எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிடிங்க, அப்படியும் ஒண்ணே ஒண்ணு மீதம் ஆகிருச்சு
அது தான் நீங்க எழுதி வச்ச அந்த பேப்பர்
ஹீ ஹீ ஹீ
நீங்க ஒன்னும் தொடர் விளாட்டுக்கு ௬ப்பிட வில்லையே?
:-))
:-))
@ வால்
ரைட்டு
வாங்க ராகவ் -> கேக்கறத பாத்தா நீங்க சப்பாத்தியை சதுரமாத்தான் செய்வீங்க போலிருக்கே??????
வாங்க வால் -> அவ்வ்வ்வ்வ்... சில வார்த்தைகளை குடுத்தா ஒரு பெரிய திரைக்கதையே எழுதறீங்களே.... நீங்க அங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை..... :-))))))))
வாங்க நசரேயன் -> :-))) அடடா... அந்த வரி விட்டுப்போச்சு... இருந்தாயென்ன... உங்க கனவுகளைப் பற்றி எழுதிடுங்க.... :-))
வாங்க பழமைபேசி, சரவணகுமரன், சிவா -> நன்றி....
//நான் பிறந்து வளர்ந்து 25 வருடம் வாழ்ந்த வீட்டில்தான் பேசிக்கொண்டிருப்பேன். அந்த வீட்டை விட்டு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டாலும்,//
10 என்ன 100வருடம் ஆனாலும் அதுதான் கனவில் வரும்..இன்று எவ்வளவு வசதிகளுடன் எந்த தேசத்தில் வசித்தாலும் அவை "ஃப்ளாட்டே(flats).". கனவில் வந்த அதுதான் "வீடு"
நல்ல பதிவு
நர்சிம்
:)
இன்னும் நான் கனவில் வருகிறேனா
அன்புடன்
சிங்கை நாதன்
Post a Comment