ஆற்காடு வீராசாமி மென்பொருள் நிபுணரானால்!!!
1. என் இருக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் ஜன்னலிலிருந்து காத்தே வரமாட்டேங்குது. அதனால் என்னால் சென்ற ஆறு மாதங்களாக சரியாக வேலை செய்ய முடியவில்லை.
2. இந்த அலுவலகத்தில் முதல் மாடியில் வேலை செய்பவர்களுக்கு வாரந்தோறும் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். மேல் மாடியில் இருப்பவர்களுக்கு 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும்.
3. நான் வேலை செய்யற இந்த ப்ராஜெக்ட் தோல்வி அடைஞ்சதாலே, இந்த கம்பெனிய ஊத்தி மூடிடுவாங்களான்னு யோசிச்சி யோசிச்சே, ராத்திரியெல்லாம் தூக்கம் வர்றதில்லே.
4. எங்க ப்ராஜெக்ட்லே கடந்த ரெண்டு மாசத்துலே 300 தவறுகள்தான் செய்திருக்கிறோம். அதே அந்த ப்ராஜெக்ட்லே 54,234 தவறுகள் செய்திருக்காங்க.
5. ஒரு வாரம் நல்ல மழை பெஞ்சா போதும். இந்த ப்ராஜெக்டை உடனே முடித்து விடலாம். (மனதில்: ஒரு வாரம் மழை பெஞ்சா ஊரே குளமாயிடும். மக்களை வீட்டுக்கு அனுப்பாமே, ஆபீஸ்லேயே பூட்டி வெச்சி வேலை வாங்கிடுவேன்!!!).
6. கோடையில்தான் எல்லாரும் லீவ் போட்டுண்டு ஊருக்குப் போயிடுவாங்க. அதனால் வேலை பாதிக்கும். ஆனால், இந்த தடவை குளிர் காலத்துலேயே நல்ல வெயில் அடிச்சதால், லீவ் போட்டுட்டாங்க. ஆள் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப் படுகிறது.
7. இந்த ப்ராஜெக்ட் எவ்ளோதான் சொதப்பலா போனாலும் எனக்கு பிரச்சினையில்லை. நானா ராஜீனாமா பண்ண மாட்டேன். எங்க தலைவர் என்ன சொல்றாரோ அதன்படிதான் செய்வேன்.
8. மென்பொருளில் வரும் தவறுகள் குறித்து க்ளையெண்டே ஒண்ணும் சொல்றதில்லை. சிலர் வேண்டுமென்றே அவர்களை தூண்டி விடுகின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து கவனித்து வருகிறோம்.
9. நான் வேலையே செய்யாமே எப்பவும் மேனேஜர்கூடவே இருக்கறேன்றதெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டு. சனி, ஞாயிறுகளில் நான் எப்பவும் எங்க வீட்லேதான் இருப்பேன். அவர்கூட இருக்க மாட்டேன்.
10. இந்த கம்பெனியில் மாசத்துக்கு ஐநூறுக்கு குறைவா தவறுகள் செய்றவங்களுக்கு தினமும் மூணு கப் காப்பி வழங்கப்படும். அதுக்கு மேலே ஒவ்வொரு நூறு தவறுகளுக்கும் ஒரு காபி குறைக்கப்படும். ஆயிரம் தவறுகள் செய்றவங்க, அவங்க வீட்லேந்து காபி கொண்டுவந்து இங்கே இருக்கறவங்களுக்கு கொடுக்கணும்.
11. அடுத்த ஜூன் 30க்கு மேல் நம்ம மென்பொருள்லே எந்த பிரச்சினையும் வராது.
12. எங்க டீம்லே இருக்கற ஒருத்தர் இப்போதான் இன்னொரு கம்பெனிக்கு போயிட்டு வந்தார். அங்கெல்லாம் நம்மை விட மோசமா மென்பொருள் பண்றாங்களாம். நாம எவ்வளவோ பரவாயில்லை.
26 comments:
எங்க மென்பொருள் நகரங்கள்ல காலை 6-9 வேலை செய்யாது, மாலை 5-8 வேலை செய்யாது. வெளியூர்கள்ல அப்பப்ப வேலை செய்யும்.
மத்த நேரங்கள்ல எங்க support dept வேலை செய்யாது
நாந்தா மொதொ !!!!
நாந்தா மொதொ !!!!
ஹா..ஹா..ஹா.. கலக்கல் கம்பேக் ச்சின்னப்பையன்.. இத்தனை நாளா பதிவு போடாம இருந்த குறைய தீத்துட்டீங்க..
அருமை
வாங்க மகேஷ் அண்ணே -> ஹாஹா... ஆமாண்ணே.. நீங்கதான் மொதோ... :-))
வாங்க வெண்பூ, முரளிகண்ணன் -> நன்றிங்கோ....:-))
ச்சின்னப்பையன் பார்த்து நாளைக்கு உங்களை பற்றி முரசொலியில் கவிதை வந்துவிடப்போகிறது. ஜாக்கிரதை. (கமெண்ட்ஸ் சூப்பர்)
எங்களை போன்ற சிறு தொழில் அதிபர்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்படுகிறோம் .
உங்களுக்கு காமாடியாய் போச்சு !
ம்ம்ம்ம் நடத்துங்க ! நல்லா இருக்கு !
வாங்க வணங்காமுடி -> ஹிஹி.. அப்படியாவது என் பேரு பத்திரிக்கையிலே வருதான்னு பாப்போம்..... :-)))
வாங்க பாஸ்கர் -> அடடா... என்ன இப்படி சொல்லிட்டீங்க... நான் என்ன அவரை சப்போர்ட் பண்ணி எழுதினா மாதிரியா இருக்குது?.. உங்க அப்புறம் நம்ம வடகரை வேலன் ஐயா - இப்படி பலரோட கஷ்டம் எனக்கு புரியுதுங்க... :-(((
//நான் வேலை செய்யற இந்த ப்ராஜெக்ட் தோல்வி அடைஞ்சதாலே, இந்த கம்பெனிய ஊத்தி மூடிடுவாங்களான்னு யோசிச்சி யோசிச்சே, ராத்திரியெல்லாம் தூக்கம் வர்றதில்லே.//
:-)))))))
பாவம் அவரே மனதில் வலியேடு தூங்காமல் இருக்கின்றார், அவரைப் போய் மென்பொருள் நிபுணராக்கி, வயத்தெரிச்சல் கிளப்பி விடுறீங்க.. இராகவன், நைஜிரியா
அவரு படத்தை அவருக்கே திருப்பி போடுரோமா !!!
"ஆற்காடு வீராசாமி மென்பொருள் நிபுணரானால்!!!"
//
க்கும்...அது ஒன்னுதான் பாக்கி :)
"ஆற்காடு வீராசாமி மென்பொருள் நிபுணரானால்!!!"
//
பவர்கட்டுல அவர் கம்ப்யூட்டரும் வேல செய்யாதுண்ணே :)))
அடடா! நாட்டுல இந்த தொழில் அதிபர்கள் தொல்லை தாங்கமுடியலை...
புதுகை.அப்துல்லா said...
"ஆற்காடு வீராசாமி மென்பொருள் நிபுணரானால்!!!"
//
க்கும்...அது ஒன்னுதான் பாக்கி ///
டபுள் ரிப்பீட்டேய்ய்
:-)))..
சூப்பரு!!!!
//எங்க ப்ராஜெக்ட்லே கடந்த ரெண்டு மாசத்துலே 300 தவறுகள்தான் செய்திருக்கிறோம். அதே அந்த ப்ராஜெக்ட்லே 54,234 தவறுகள் செய்திருக்காங்க.//
ஹா ஹா ஹா
ஐடி ஏற்கனவே தள்ளாடுது. இங்கேயும் ஆற்காட்டார் வந்தா பினிஷ்.
இப்பதான் அவர் கொஞ்சம் நிம்மதியா இருக்கார்.உட்டுடுப்பா????
back to the form
கலக்கலா இருக்கு
பதிவர் மீட்டிங் என்னாச்சு
வாங்க வேலன் ஐயா, ராகவன் நைஜீரியா -> நன்றி...
வாங்க நசரேயன் -> அதுக்குத்தானே நாம இருக்கோம்....:-))
வாங்க அப்துல்லா -> ஹாஹா... அவருக்கே கரண்ட் கட்டா!!!??????
வாங்க கவுண்டமணி -> அடச்சே... பாவங்க அவங்க.. அவங்கள விட்ருங்க....
வாங்க சின்ன அம்மிணி -> நீங்க என்ன கண்டக்டர் மாதிரி டபுள் விசில் குடுக்கறீங்க!!!!!!
வாங்க விஜய் ஆனந்த் -> :-)))
வாங்க அத்திரி -> என்ன? நிம்மதியா இருக்காரா??? அப்போ பவர்கட் ப்ராப்ளம் தீந்துடுச்சா??????
வாங்க வால் -> பதிவர் சந்திப்பு இந்த வாரயிறுதியில் தானுங்களே!!!
ஹா ஹா ஹா பதிவும் சூப்பர் பின்னூட்டங்களும் கலக்கல்:):):)
me the 25th:):):)
என்ன கொடுமை சார் இது?
// இந்த கம்பெனியில் மாசத்துக்கு ஐநூறுக்கு குறைவா தவறுகள் செய்றவங்களுக்கு தினமும் மூணு கப் காப்பி வழங்கப்படும். அதுக்கு மேலே ஒவ்வொரு நூறு தவறுகளுக்கும் ஒரு காபி குறைக்கப்படும். ஆயிரம் தவறுகள் செய்றவங்க, அவங்க வீட்லேந்து காபி கொண்டுவந்து இங்கே இருக்கறவங்களுக்கு கொடுக்கணும்.
Post a Comment