டேய்!! தண்டவாளத்தை நடந்து கடக்காதீங்கடா!!!
பலமான எச்சரிக்கை:
நக்கலும், நையாண்டியும் எப்போதும் இருக்கும் பூச்சாண்டியில் முதல்முறையாக ஒரு சோகப்பதிவு. பல நாட்களாக போடலாமா, வேண்டாமா என்றெண்ணி மனதில் உள்ள சோகத்தை கொட்டிவிட முடிவு செய்து போடப்படும் பதிவு. இன்னிக்கு சந்தோஷமா இருக்கறவங்களும், இருக்கப் போறவங்களும் மற்றும் இளகிய மனசுக்காரங்களும் தயவு செய்து படிக்கவேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
---------
டேய். இங்கே வாடா. நீயும் வாடி. கையை பிடிங்க. தண்டவாளத்தைத் தாண்டி அந்தப்பக்கம் வீட்டுக்குப் போகணும்.
அப்பா... அப்பா... இந்தப் பக்கம் பாருங்கப்பா.. ரெயில் வந்துடுச்சுப்பா...
தடக்.. தடக்... தடக்... தடக்..
-------------
செய்தி: 2007ல் ரெயிலில் அடிபட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை - தமிழ் நாட்டில் 1979 - சென்னையில் 870.
-------------
சென்னையில் எங்கள் அடுக்கு மாடி வீட்டில் பின்பக்கம், சஹானாவுக்கு இரண்டு குட்டி நண்பர்கள் இருந்தார்கள். இரண்டு வயது வித்தியாசத்தில் அழகான அண்ணன் தங்கை. பள்ளி முடிந்தபிறகு எங்கள் வீட்டுக்கு வந்து விளையாடிக்கொண்டு இருப்பார்கள். சஹானாவின் பொம்மைகளை வீடு பூராவும் பரத்தி, தினமும் நாங்கள் பலமுறை சுத்தம் செய்யவேண்டியிருக்கும்.
--------------
தினமும் இணையத்தில் தினமலர், தினகரன் படிக்கும்போது பார்க்கும் செய்தி - தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இன்னார்
மரணம்ன்றது. சென்னை புறநகரில் அடிக்கடி நடக்கும் விபத்து இது. யார் இறந்தார்கள், எந்த ஊர் என்று மட்டும் பார்த்துவிட்டு அடுத்த
செய்திக்கு போய்விடும் அளவுக்கு பழகிப்போய்விட்ட ஒரு செய்தி. இது எனக்கு மட்டுமல்ல, அந்தப்பக்கம் இருப்பவர்களுக்கும், புறநகர்
ரெயில் பயன்படுத்துவோருக்கும் அப்படித்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.
-----------
சென்ற வருடத்தில் ஒரு நாள் வழக்கம்போல் அலுவலகத்திலிருந்து அம்மாவுக்கு தொலைபேசியிருந்தேன். தொலைபேசி எடுத்தவுடன், அம்மா -
ஓ வென்று அழ ஆரம்பித்து விட்டார்கள்.
"என்னம்மா ஆச்சு, உடம்பு சரியில்லையா?. சொல்லுங்க. எனக்கு ஒண்ணும் புரியல".
" நம்ம __குட்டி... நம்ம _குட்டி.... நேத்து ரெயில்லே அடிபட்டு.... ராத்திரியே..... ".... இன்னிக்கு தினகரன்லே வந்துருக்கு பாரு" -
அழுதுகொண்டே தொலைபேசியை வைத்துவிட்டார்கள்.
----------
அலுவலகத்தில் நுழைந்த அரை மணியில் இந்த செய்தி. உடனே லீவ் போட்டுவந்து, சஹானாவின் பழைய ஆல்பத்தைத் தேடி எடுத்து
__குட்டியைப் பார்த்து அழுது மயக்கம் போடாத குறைதான். என் தந்தை மறைந்தபோதுகூட நாங்கள் அவ்வளவு அழுததில்லை.
அந்த விபத்து நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கும் அந்த ஆல்பத்தைப் புரட்டும்போதும், __குட்டியை பார்க்கும்போதும்
அழாமல் இருக்கமுடியவில்லை. அப்படியே அடுத்த இரண்டு நாளுக்கு மூட் அவுட்டாவதையும் தடுக்க முடியவில்லை.
--------
டேய்.. ஒரு அஞ்சு நிமிஷத்தில் ஒண்ணும் குடிமுழுகிப் போகாதுடா... தண்டவாளத்தை நடந்து கடக்காமே, படியிலோ சுரங்கப்பாதையிலோ
போய் பழகுங்கடா...
23 comments:
நல்ல அறிவுரை ச்சின்னப்பையன்.. நம்ம ஆளுங்க கேப்பாங்கன்னு நெனக்கிறீங்களா? :((((
உங்கள் சோகத்தில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன்.
தண்டவாளத்தை பொறுத்தவரை நடந்து செல்லும் போது நடக்கும் விபத்துகள் அபூர்வம், வாகனத்தில் கடக்கும் போது தான் பெரிய பெரிய விபத்துகள் நடக்கின்றன.
நல்ல பதிவு
me the 3RD:(:(:(
அச்சச்சோ, சாரிங்க. வழக்கம்போல பதிவை படிக்காம வந்துட்டேன், முதல்ல:(:(:(
பயங்கரமான விபத்து:(:(:( ஆழ்ந்த அனுதாபங்கள்:(:(:(
:(((
ஹூம் சுரங்க பாதையெல்லாம் கடை போடத்தானே கட்டீருக்காங்க?
நல்ல அறிவுரை
சுரங்ப்பாதை எதுக்கு?
1.வியாபாரம் பண்ண
2.சும்மா பேசிட்டு இருக்க(ரெளடிங்க மட்டும்)
3.ராத்திரியானா-வேற வியாபாரம்
அண்ணே எனக்கு சீட் பெல்ட் போடாம மண்டையில அடிபட்ட போதுதான் சீட் பெல்ட் அவசியம் புரிஞ்சது.( நீங்க கூட நான் நலம்பெற பதிவு போட்டீங்களே)
ஆனா ரயில பொறுத்தவரை பட்டுத் தெரிய முடியாது. டைரக்டா டிக்கெட்தான். அடுத்தவங்க அறிவுரைய கேட்டுத்தான் ஆகனும் :(
:(
:(
:(
மனசு கஷ்டமா இருக்கு சத்யா.
எத்தனை சொன்னாலும் கேட்காதவங்களை என்ன சொல்றது?
:(
அன்புடன் அருணா
:-(((...
Time is Gold
Life is more precious than Gold
2. Better be called as Mr. Late
instead of Late Mr.
வருத்தமா இருக்கு.
சுரங்கப்பாதையோ, மேம்பாலமோ எதுன்னாலும் அங்கே கடைவிரிச்சுக் கூட்டம் சேர்த்துக்கறாங்க. நம்ம ஆளுங்களுக்கு 'சட்'னு போகணும்.
எல்லாம் இப்படி ஒன்னில் இருந்து தப்பிக்க இன்னொன்னுன்னு ஆகித்தான்.....
:-(
:-(, so sad
அனைவருக்கும் நன்றி...
ஹ்ம்!
என் நண்பனின் தம்பி இரயிலில் அடிப்ப்ட்டு இறந்தது நினைவுக்கு வருகிறது.
ஒரு நிமிஷம் யோசிக்காததால், பொறுமை இல்லாததால், நம்மைச் சுற்றி இருப்பவர்களை, காலம் பூரா கலங்கடிச்சிடறோம் :(
ஓரிரு நிமிடங்கள் செலவளித்தாலே போதுமான விஷயம்..:(
ரயில் தண்டவாளங்கள் இருக்கும் அளவுக்கு போதுமான சுரங்கப்பாதைகளும் மேம்பாலங்களும் இல்லாமல் இருப்பது இன்னுமொரு சோகம்...
வெளிநாடுகளில் இருப்பதைப்போல ரயில் தண்டவாளங்களின் இருபுறங்களிலும் முழுமையாக மூடிவிடவேண்டும்...
வெண்பூ சொல்வதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
இங்கே திருப்பூரில் பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே சப்வே வேண்டும் என்றூ இல்லாத லோளாயெல்லாம் செய்தார்கள். போக்குவரத்துக்கு ஏகப்பட்ட இடையூறு செய்து, பல மாதங்களுக்குப் பின் கட்டினார்கள்.
அதை இப்போது எவனும் பயன்படுத்துவதில்லை.
போலீஸே அதற்கருகில் நின்று கொண்டு பாதசாரிகள் கடக்க, வாகனத்தை நிறுத்துகிறார்கள். ‘சப்வே-ஐ பயன்படுத்தச் சொல்லி அவர்களை அறிவுறுத்துவதில்லை!
ச்சின்னப்பையன்!நான் உங்களை பதிவுப் பக்கம் காணோமின்னு கவலைப்பட்டுகிட்டிருந்தேன்.கூடுதலாக இன்னொரு கவலையான தகவலையும் தருகிறீர்கள்:(
Post a Comment