ச்சின்னப் பையன் மென்பொருள் நிபுணரானால்!!!
கடலையால் துறை மாறின கதையை ஏற்கனவே சொல்லியிருக்கேன். அப்படி மென்பொருள் உலகுக்கு வந்தபிறகு நான் செய்த முதல் ப்ராஜெக்ட் - சென்னையில் ஒரு முன்னணி பள்ளிக்கு மென்பொருள் செய்ததுதான். இவ்வளவு நேரம் பேசாமலிருந்த எங்க முதலாளி, இன்னும் இழுக்கறதுக்கு எங்களுக்கு நாக்கே இல்லைன்ற அளவுக்கு, நாக்கை பிடிங்கிக்கற மாதிரி கேள்விகள் கேட்டு திட்டினார். அவர் நன்றாகத் திட்டி முடித்தபிறகு, இங்க ஒருத்தன் மாட்டியிருக்காண்டா என்று சொல்லி, அந்த 'கேப்டன்' ஆசிரியரிடம் அனுப்பினார். ஒரு பத்து நிமிஷங்க, அவரும் திட்டு திட்டுன்னு திட்டிட்டு, தலைமை ஆசிரியடம், 'சார், நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா? இங்க ஒரு நல்லவன் சிக்கியிருக்கான்' அப்படியென்று எங்களை அவரிடம் அனுப்பி வைத்தார். எல்லா அர்ச்சனையும் முடிய அன்னிக்கு 10 மணி ஆயிடுச்சு. அதற்கு பிறகு அந்த ஆசிரியரே பல பள்ளிகளிலும், வேறு பல நிறுவனங்களிலும் எங்களை அறிமுகப்படுத்தியதும், எங்கள் மென்பொருள் வழக்கம்போல் எல்லா இடத்திலும் முதலில் சொதப்பி - பின்னர் சரியாக வேலை செய்ததும் வரலாறு.
அந்த பள்ளிக்கு கல்விக் கட்டணம் (ஃபீஸ்), கணக்கு வழக்கு, சம்பளப் பட்டுவாடா, நூலகம் மற்றும் பல துறைகளுக்கு மென்பொருள் செய்து கொடுப்பதாக ஏற்பாடு. அங்கிருந்த ஒரு ஆசிரியர்தான் எங்களுக்குண்டான முக்கிய தொடர்பு. அவரின் உதவியோடும் பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களின் துணையோடும், மூன்று மாதங்கள் உழைத்து மென்பொருள் செய்துவிட்டோம்.
புது கல்வியாண்டில் பள்ளி திறக்கும்போது கல்விக் கட்டணம் வாங்க எங்கள் மென்பொருளையே பயன்படுத்த வேண்டுமென்று பள்ளியில் கூறிவிட்டதால், இரவு பகலாக வேலை செய்து தயாராக இருந்தோம்.
முதல் நாள் காலை 8 மணிக்கு கட்டணம் வாங்கும் வேலையை துவக்க வேண்டும். நாங்கள் 7 மணிக்கே பள்ளிக்குச் சென்று எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தோம். மென்பொருள் பயன்படுத்தப்படும் முதல் நாளைப் பார்ப்பதற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மற்றும் எங்களுக்கு படியளக்கும் முதலாளி ஆகிய அனைவரும் ஆஜர்.
8 மணிக்கு முன்பாகவே சுமார் பத்து பேர் கட்டணம் கட்டுவதற்கு வந்துவிட்டிருந்தனர். கட்டணம் கட்டிவிட்டு அலுவலகம் போக வேண்டிய அவசரம் அவர்களுக்கு. சரி, துவங்கலாம் என்று முதல் ஆளிடம் கட்டணம் வாங்க ஆரம்பித்தோம்.
எடுத்தவுடனே மென்பொருளில் ஒரு பிரச்சினை. ரிசீப்ட் (Receipt) எண் ஒன்றுக்குப் பதிலாக பத்து என்று பதிவானது. அந்த தாளைப் பார்த்த தலைமை ஆசிரியர் அந்த தவறை உடனே திருத்தி அந்த நபருக்கு இன்னொரு ரிசீப்ட் கொடுக்க வேண்டுமென்று சொல்லி - தற்காலிகமாக கட்டணம் வாங்கும் பணியை நிறுத்தி விட்டார். சரியென்று நாங்கள் அங்கேயே வேலை செய்ய ஆரம்பிக்க, அப்போது கட்டணம் கட்ட வரிசையில் நின்றிருந்த மக்களின் எண்ணிக்கை - அதிகமில்லை ஜெண்டில்மேன் - சுமார் 25 இருக்கும்.
பிரச்சினையை கேள்விப்பட்டு அங்கு வந்த - எங்களுக்கு ஆர்டர் வாங்கிக்கொடுத்த - அந்த ஆசிரியர், கோபத்தில் கண்கள் சிவந்துபோய் நம் கேப்டன் போல் நின்றிருந்தார்.
காலையிலேயே வந்துவிட்டதால், சிற்றுண்டிகூட சாப்பிடாமலிருந்த நானும் என் நண்பனும் வேர்க்க விறுவிறுக்க வேலை பார்த்துக்கொண்டிருக்க, எங்களை சுற்றி நின்றிருந்த எல்லோரும் தேனீர் குடித்துக்கொண்டிருந்தனர்.
ஒரு பத்து நிமிடத்தில் எல்லாவற்றையும் சரிசெய்து விட்டு மறுபடி வேலையை துவக்கலாம் என்று நாங்கள் சொன்னோம். சத்தம் போட்டுக்கொண்டே இருந்த - ஏற்கனவே கட்டணம் கட்டிவிட்ட அந்த நபருக்கு - மறுபடி புதுசா ஒரு ரிசீப்ட் போட்டுக் கொடுக்கலாம் - என்று போகும்போது ப்ரிண்டரில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.
இவ்வளவு நேரமும் மெதுவாக சலசலத்துக் கொண்டிருந்த அந்த மக்கள் கூட்டம், இப்போது தைரியமாக கத்த ஆரம்பித்துவிட்டனர். தலைமை ஆசிரியர், அவரே முன்சென்று மென்பொருளில் ஏற்பட்டுவிட்ட சிறு பிரச்சினையை, அந்த கூட்டத்திற்கு விளக்கிக்கூறி, கொஞ்ச நேரம் பொறுமை காக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்.
இப்படியாக ஒரு அரை மணி நேரம் சண்டை போட்டு மென்பொருள்/ப்ரிண்டர் இரண்டிலும் வந்த பிரச்சினைகளை களைந்த பின், பயந்துகொண்டே மறுபடி கட்டணம் வாங்க ஆரம்பித்தோம். யார் செய்த புண்ணியமோ (சத்தியமாய் நாங்கள் செய்ததில்லை!!!) அதற்கு பிறகு நாங்களே ஆச்சரியப்படும் விதமாக அந்த மென்பொருள் வேலை செய்ய ஆரம்பித்தது.
22 comments:
me the first
:-)))))))))))
Ha..ha.. just miss..
உங்களுக்கு நல்ல தெள்ள தெளிவான நீரோடை போன்ற இயல்பான நகைச்சுவை நடை அருமையாக வருகிறது. Keep it up sir. வாழ்த்துக்கள்.
ஆஹா.. இந்த விசயத்துல நீங்களும் நானும் ஒத்துப்போறோம்.. சேலத்துல நான் வேலைக்கு சேந்தப்ப முதல் முதலா பண்ணின மென்பொருள் மேட்டூர்ல இருக்குற ஒரு ஸ்கூலுக்குதான்.. இந்த அளவுக்கு மோசமான அனுபவம் இல்லை (ஏன்னா அவங்க உஷாரா எங்கள நம்பாம மூணு மாசம் மேனுவலையும் ரன் பண்ணிகிட்டதால)
ஹி ஹி, இதெல்லாம் ஒரு விஷயமா? நானெல்லாம் மென்பொருள் நிபுணியானதால் எவ்ளோ டேமேஜ்னு சொல்ல ஆரம்பிச்சா இந்த உலகம் தாங்குமா?:):):)
//Ha..ha.. just miss..//
ஹையா, நான்தான் இன்னைக்கு பர்ஸ்ட்:):):)
//இவ்வளவு நேரம் பேசாமலிருந்த எங்க முதலாளி, இன்னும் இழுக்கறதுக்கு எங்களுக்கு நாக்கே இல்லைன்ற அளவுக்கு, நாக்கை பிடிங்கிக்கற மாதிரி கேள்விகள் கேட்டு திட்டினார். /
:-))))))
வெண்பூ! மேட்டுர்ல எந்த பள்ளி அது??
//
பிரேம்ஜி said...
வெண்பூ! மேட்டுர்ல எந்த பள்ளி அது??
//
Malco
நல்ல அனுபவம்
நீங்க உண்மையிலேயே நல்லவரு தான்
இப்போ வாங்குற டோஸ பத்தி எப்ப எழுதுவிங்க
வாங்க ராப் -> நீங்கதான் பஷ்டு... ஹிஹி.. டோட்டல் டேமேஜ்... அதையும் உங்க பாணியிலியே எழுதுங்களேன்... நாங்களும் மூச்சு விடாமே படிச்சிடறோம்.... :-)))
வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> நன்றி...
வாங்க வெண்பூ -> அது பரவாயில்லையே.... அந்த 'ஃபாதர்' எங்களை நம்ம்ம்ம்ம்ம்பிட்டாரே..... :-))))
வாங்க ராஜாராமன் -> நன்றிங்க... சத்யான்னு சொல்லுங்க.... :-))
வாங்க பிரேம்ஜி -> மேட்டூர்... சேம் சேம் லைக் லைக்... ??
வாங்க வால் -> அவ்வ்வ்வ்... இங்கே ஆங்கிலத்துலேதானே டோஸறாங்க... அதனால ஒண்ணும் புரியறதில்லே.... புரிஞ்சாதானே வருத்தப்பட்டு, எழுதறதுக்கு...:-))))
/*இங்க ஒருத்தன் மாட்டியிருக்காண்டா*/
அந்த ஒருத்தன் நீங்களா?:)
இவ்வளவு நேரம் பேசாமலிருந்த எங்க முதலாளி, இன்னும் இழுக்கறதுக்கு எங்களுக்கு நாக்கே இல்லைன்ற அளவுக்கு, நாக்கை பிடிங்கிக்கற மாதிரி கேள்விகள் கேட்டு திட்டினார்
ச்சின்னப்பையனின் பெரிய பதிவு:--)))))
வாங்க நசரேயன் -> அவ்வ்வ்... நாந்தான்.. நானேதான்.... :-((
வாங்க விலெகா -> ஆஆ.. இது பெரிய்ய்ய பதிவா??????? நோ நோ... இது ஒரு சின்ன பெரிய பதிவு. அவ்ளோதான்.....
ஸ்டார்டிங் டிரபிள் :))
இது எவ்வளவோ பரவால்ல... நாங்க ஒரு தடவை நம்ம சகோதர நாட்டுல எ.டி.எம். டெஸ்ட் பண்ணும்போது தவறுதலா டெஸ்ட் டேடாபேசுக்கு பதிலா ஒரிஜினல் டேடாபேஸ் கனேக்ட் ஆயிடுச்சு. 5 நிமிஷத்துல பாத்துட்டோம். ஆனா அதுக்குள்ள ஒருத்தன் 10000 துட்ட அடிச்சுட்டு போய்ட்டான். அப்பறம் பேங்க் அவனத் தொரத்தி புடிச்சு வாங்கிட்டாங்க.
ம்ம்ம்ம் நல்லாருக்கு பதிவு
ஆயிரம் தடவை சோதித்த பின்னும் - வாடிக்கையாளருக்குப் போட்டுக் காட்டும் ( டெமொ ) வைபவத்தில் எப்பொழுதும் ஏதாவது சொதப்பும். காரணம் கேட்டால் உதவியாளர்கள் சூழ்நிலை ( என்விரான்மெண்ட் செட்டிங்க்ஸ் - வெர்சன் கண்ட்ரோல்) சரியில்லை என்பார்கள். எல்லாவற்ரையும் மீறி ஆன்லைன் போகும் போது நிச்சயம் மானத்தை வாங்கும். இதெல்லாம் இல்லை எனில் அது மென்பொருளே அல்ல.
மறு நாள் முதல் பசு மாடு மாதிரி சாதுவாக வேலை செய்யும்.
நல்ல அனுபவம் சத்யா.
2000 மாணவர்கள் பரிட்சை எழுத 4000க்கும் மேல ஹால் டிக்கட் பிரிண்ட் பன்னியிருக்கேன் நான்.
ஒரு செமஸ்டருக்கு ஒரு ஹால் டிக்கட்னு அடிச்சுத் தள்ளீட்டமில்ல.
வெரி நைஸ்..
ramesh
www.vrfriendz.com
Post a Comment