2008 புத்தாண்டு தீர்மானங்கள் - ஒரு பின்னோட்டம்
போன வருஷம் வரைக்கும் புத்தாண்டுத் தீர்மானங்கள் அப்படின்னு எதையும் நினைத்ததில்லை. சரி, இந்த வருஷம் இரண்டு விஷயங்கள் செய்யலாம்னு ஆரம்பத்திலே நினைச்சதும், இன்னியோட முடிஞ்ச இந்த பத்து மாசம் வரைக்கும் அந்த இதே மாதிரி யாரையும் புண்படுத்தாத நகைச்சுவையோட (மொக்கையோட- ந்னு நீங்க சொல்றது கேக்குது!!!) எழுதணும்னு நினைச்சாலும், வருங்காலத்துலே உருப்படியா எதையாவது எழுதணும்னு நினைக்கறதுண்டு.
இரண்டு விஷயங்களையும் ஒழுங்கா செய்துட்டு வர்றதாலேயும், இனிமே வருஷா வருஷம் ஏதாவது தீர்மானம் போட்டு அதை நிறைவேற்ற முயற்சிக்கலாம்னு ஒரு தைரியம் பிறந்திருக்கு.
முதல் தீர்மானம்: பூச்சாண்டி
போன வருஷம் மத்தியிலே தமிழ்மணம் பாக்க ஆரம்பிச்சாலும், டிசம்பர் இறுதியில் நாமும் ஏதாவது எழுதுவோம்னு ஆரம்பிச்சேன். டிசம்பர் 24ம் தேதியிலிருந்து பல ஆரம்பகட்ட பிரச்சினைகளைத் தாண்டி, தமிழ்மணத்தில் இணைந்து, முதல் பின்னூட்டம் பெற்ற நாள் ஜனவரி 8.
வாரம் ஒண்ணு அல்லது இரண்டு சிரிப்பு பதிவு போட்டு, இந்த வருஷம் முழுதும் எழுதணும் - தினமும் இரண்டு பேராவது நல்லா சிரிக்கறதுக்கு நாம காரணமா இருக்கணும்னு நினைச்சி ஆரம்பிச்சது, வேகம் பிடிச்சி இன்னியோட 165+ பதிவுகளாயிடுச்சு.
அரை மணி நேரத்துலே அஞ்சு மேட்டர் உருவாகி, ரெண்டு மணி நேரத்துலே டைப் செய்து, அந்த வாரம் முழுக்க பதிவு போட்ட நாட்களும் உண்டு; ஒரே மேட்டரை ஒரு மாசம் வரைக்கும் முடிக்கத் தெரியாமல் இழுத்தடிச்சி வெளியிட்ட நாட்களும் உண்டு.
இந்த தீர்மானத்தாலே சாதிச்ச பெரிய விஷயம் என்னன்னா - உலகமெங்கும் பல இடத்தில் இருந்தாலும், மனம் விட்டு சிரிச்சி பேசக்கிடைத்த நண்பர்கள்.முதல் தடவை பேசும்போதே பலப்பல நாட்கள் பேசியதைப் போல் ஒரு உணர்வை பெற்றுத் தந்ததற்காக இந்த இணையத்துக்கு ஒரு நன்றி.
இரண்டாவது தீர்மானம் : ஒரு வெளிநாட்டு மொழி
அர்னால்டும், ஜாக்கி சானும் நமக்கு பிடிச்ச வெளிநாட்டு நடிகர்கள். இதிலே அர்னால்ட் பேசும்
ஆங்கிலம் நமக்குத் தெரியும்றதாலே, ஜாக்கி பேசும் சைனீஸ் கத்துக்கணும்னு ஆசை வந்துடுச்சு.
இங்கே நூலகத்திலிருந்து மாண்டரின் CD வாங்கி காரில் போகும்போதெல்லாம் கேட்க ஆரம்பித்தேன். ஒரு நாலு மாசம் வரைக்கும் மெதுவாக போன அந்த பழக்கம், நம்ம வழக்கமான வழக்கப்படி மெதுவாக குறைந்துகொண்டே வந்தது. யாராவது ஒருவரிடத்தில் பணம் கட்டிப் படித்தாலேயொழிய எதையும் கற்றுக்கொள்ள முடியாது என்றென்ணி இங்கே சைனீஸ் கற்றுக்கொடுக்க யாரையாவது தேடினேன்.
ஆள், பணம், நேரம் இந்த மூன்று காரணிகளில் ஏதோ ஒன்று சரிப்படாமலேயே போனதால், தொடர்ந்து காரிலேயே கேட்டு கற்றுக்கொள்ள முயற்சித்து வந்தேன். இப்படியே போய்க்கொண்டிருந்தபோது சென்ற மாதம் ஒரு ஆள் கிடைத்தார்.
உடனே பயிற்சியில் பணத்தைக் கட்டி சேர்ந்துவிட்டேன்.வாரம் ஒரு நாள் 1.5 மணி நேர வகுப்பு - 2 மாதத்துக்கு இந்த பயிற்சி வகுப்பு. எப்படியும் இந்த வருட முடிவில், மாண்டரின் மொழியில் சரளமாக (இல்லாவிட்டாலும், மெதுவாக) பேச முடியும் என்ற நம்பிக்கை இப்போது வந்திருக்கிறது. பேசுவதற்கு மட்டும்தான் இந்த பயிற்சி. எழுத, படிக்க கிடையாது. அதனால், அடுத்த புதுவருட தீர்மானம் ஒன்று ஏற்கனவே ரெடியாயிடுச்சு.... :-)
பிகு: நானும் ஏதாவது ஒரு சங்கிலித் தொடரை ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன். இதை படிக்கும் மக்களில் ஒரு மூணு பேராவது தங்கள் 2008 தீர்மானங்களின் பின்னோட்டத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டால் நல்லாயிருக்கும்.
11 comments:
மீ த ஃபஷ்டு :)
//பிகு: நானும் ஏதாவது ஒரு சங்கிலித் தொடரை ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன். இதை படிக்கும் மக்களில் ஒரு மூணு பேராவது தங்கள் 2008 தீர்மானங்களின் பின்னோட்டத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டால் நல்லாயிருக்கும்.//
நான் இந்த வெள்ளாட்டுக்கு வரல்ல :))
ஹீம் ஒவ்வொரு வருசமும் தவறாம ஒரே விஷயத்தை புத்தாண்டு தீர்மானமா எடுத்துகிட்டு இருக்கேன். வழக்கம் போலவே 2009 க்கும் அதே விஷயத்தை ஸ்டாக் வெச்சு இருக்கேன். atleast 2010லிலாவது மாறுதான்னு பார்க்கலாம்.
//நான் இந்த வெள்ளாட்டுக்கு வரல்ல//
அட ஆல விடுங்கப்பா...
ச்சின்னப்பையன் உங்கள் இலக்கில் வெற்றியடைய வாழ்த்துக்கள், ஆக அடுத்த வருடம் முதல் மாண்டரின் மொழியில் பேசுவீர்கள்தானே ச்சே எழுதுவீர்கள்தானே!!
வாங்க சென்ஷி -> ஹாஹா. இன்னிக்கு நீங்கதான் பஷ்டு!!! அட... என்ன இப்படி சொல்லிட்டீங்க.... சும்மா பூந்து விளையாடுங்க....:-))
வாங்க தாரணி பிரியா -> என்ன அந்த தீர்மானம்? எல்லாரும் உங்களை ' நல்ல்ல்ல்ல்ல்லவள்'னு சொல்ற தீர்மானமா? ஹாஹா... :-))
வாங்க அனானி -> அட ஆளை நான் பிடிக்கவேயில்லையே!!! அப்புறம் எங்கன விடறது!!!
வாங்க ராஜஹரிசந்திரா -> ஹிஹி.. கவலையேபடாதீங்க... ஒரு ஆடியோ போஸ்ட் போட்ருவோம்... :-)))
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என் ஒரே புதுவருஷத் தீர்மானம் எந்தத் தீர்மானமும் எடுக்கக் கூடாதுங்கறதுதான். அதை நான் சின்ன வயசுல இருந்தே அவ்ளோ சூப்பரா பாலோ பண்றேனே:):):)
//மீ த ஃபஷ்டு :)//
சென்ஷி அண்ணே, இன்னைக்கு உங்களுக்கு லீவு. அதால இது போங்காட்டம்:):):)
இந்தப் பதிவு ஏன் gaptain ஸ்டயில்ல எழுதப்பட்டிருக்கு?:):):)
என்னை சுத்தி இருக்கற எல்லாரும் உங்களை மாதிரி இருக்கும் போது நான் எப்படி நல்லவ ஆக முடியும்? நல்லவ ஆக முடியும்? நல்லவ ஆக முடியும்? நல்லவ ஆக முடியும்?
எக்கோ போட்டு படிங்க்
வாழ்த்துக்கள் ச்சின்னப்பையன். நமக்கெல்லாம் இந்த புத்தாண்டு தீர்மானம் போடுற பழக்கமெல்லாம் இல்லை. புத்தாண்டும் வழக்கமான இன்னொரு நாளே!!
Post a Comment