சினிமா சினிமா, கிருஷ்ணா, சினிமா சினிமா
பதிவின் தலைப்பை முகுந்தா முகுந்தா பாணியில் படிக்கவும். மாட்டிவிட்ட பரிசலுக்கு நன்றி... ஒரு பாட்டுக்கு 30 ஆடைகள் மாற்றி, 40 நாடுகள் செல்வார்கள். கொரியாவிலிருந்தோ, நைஜீரியாவிலிருந்தோ ஒரு பாடகரை கொண்டு வந்து தமிழ்ப்படத்தில் பாடவைப்பார்கள். கட்டவுட்களுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும். அரசு மானியம் பெற்று திரையிடப்படும் படங்கள் வெளியாகும் நாளன்று அரசு விடுமுறை அளிக்கப்படும்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
நாலைஞ்சு வயசிருக்கும்னு நினைக்கிறேன். அப்போ பாத்த படங்கள்னு நினைவுக்கு வருவது - சென்னை பைலட் தியேட்டரில் பக்த துருவ மார்க்கண்டேயா (பாட்டியுடன்). சத்யம்-ல் லாரல் ஹார்டி (அப்பாவுடன்). இதைப்பற்றி விரிவான ஒரு கொசுவத்தி பதிவு அடுத்த வாரம் வருது. (வருங்காலப் பதிவுக்கு இப்பவே உரல் கொடுக்கமுடியுமான்னு யாராவது சொல்லுங்கப்பா!!!).
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
கஜினி கணக்காக விடாமுயற்சியுடன் முயன்று பார்த்த படம் தசாவதாரம்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
புதையல். இதுதான் நான் இணையத்தில் கடைசியாகப் பார்த்த தமிழ் படம். பிங்க் சட்டை, பச்சை பேண்ட் என்று கலக்கல் ஸ்டைலில் அரவிந்த்சாமி நடித்த படம். நல்லா வாய் விட்டு சிரிச்சி ( நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா) பார்த்தேன். கணிணியின் பவர்ப்ளக்கை சொருகாமல், பேட்டரியில் பார்த்ததால்தான், படம் இருட்டாக (வெளிச்சம் கம்மியாக) இருந்ததென்று கடைசியில் உணர்ந்தேன்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
பாட்ஷா.
ஒவ்வொரு தடவை பாட்ஷா பாத்தப்புறமும் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தும். என்னன்னா, செம பசியாயிருக்கும். பசியைக்கூட மறந்து அந்த படத்தை பார்ப்பதுதான் காரணம்.
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
ரொம்ப நாட்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் இணையத்தில் தமிழ்முரசு பார்த்தேன். காதலில் விழுந்தேன் படத்தைப் பற்றிய சர்ச்சை - ஒரு முழுப் பக்கத்தில் படங்களுடன் கூடிய செய்தி. ஒரு வெட்டி (NOT நம்ம வெட்டி) படத்துக்கு இவ்ளோ பிரச்சினையா அப்படின்னு கொஞ்ச நேரத்துக்கு கோபம் இருந்தது.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
சில நல்ல சீன்கள் வரும்போது மட்டும், ஒரு பூவை க்ளோசப்பிலோ அல்லது ஒரு புலி மானைத் துரத்தி கொல்வது போலவோ காட்டி நம்மை ஏமாற்றும் அந்த தொழில் நுட்பம் என்னை மிகவும் தாக்கும்.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
குமுதமோ அல்லது இணையமோ - சினிமா செய்திகளை கடைசியில்தான் படிப்பேன். பேட்டி போக எல்லா இடத்திலும் ஒரே கிசுகிசு மேட்டர்தான். நமக்கு ஒரு நயா பைசா பிரயோசனம் இல்லாத மேட்டரை படிச்சி என்ன ஆகப்போகுது சொல்லுங்க.
7.தமிழ்ச்சினிமா இசை?
இசையைப் பொறுத்தவரை நமக்கு பாட்டு வரிகள் புரியணும், கேட்பதற்கு இனிமையா இருக்கணும், வாத்திய இரைச்சல் குறைவா இருக்கணும் - அவ்ளோதான்.
அது - தேவா (உதா: மனம் விரும்புதே உன்னை, நலம் அறிய ஆவல்) இருந்தாலும் சரி, இளையராசா (ஏகப்பட்ட பாடல்கள்) இருந்தாலும் சரி, ரகுமான் (உதா: என்னவளே அடி என்னவளே) இருந்தாலும் சரி.
இதே ரீதியில் இருக்கும் பாடல்கள் எப்போவும் காரில், வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும்.
கஜினிக்குப் பிறகு முகுந்தா முகுந்தாதான் ஸஹானா விரும்பிக் கேட்கும் பாடல் என்பதால் அந்த பாட்டு அடிக்கடி வீட்டில் ஒலிக்கும்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நல்ல படம்னு எங்கேயாவது விமர்சனம் படித்தால், தேடிப்பார்த்துவிடுவேன்.
மலையாளம் - கத பறயும் போள், தன்மத்ரா
இந்தி - சக் தே இந்தியா, லகான், முன்னாபாய் MBBS
ஆங்கிலம் - விரும்பிப்பார்ப்பது நகைச்சுவை/திகில் படங்கள்.
சென்ற வாரம் க்வாரண்டைன் (Quarantine) பார்த்தேன். பயங்கர திகில் படம். பெரிய அரங்கில் மொத்தமே 5 பேர்தான் அமர்ந்திருந்தோம். அடிக்கடி பக்கத்தில், பின்னால் யாரோ வந்து நிற்பதுபோலவே இருந்தது. படம் முடிந்ததும், விட்டாப் போதும்டா சாமி என்று ஓடிவந்துவிட்டேன்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடியா டிக்கட் வாங்கி, நேரடியா உக்காந்து பார்ப்பதைத் தவிர எனக்கு சினிமாவுடன் எந்த தொடர்பும் கிடையாது.
அதனால், கிளைக்கேள்விகள் N/A.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு படத்தின் தயாரிப்பு செலவு 1000 கோடியாகும். (இதில் ஹீரோ மற்றும் டைரக்டர் இவங்களோட சம்பளம் மட்டும் 950 கோடியாகும்).
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
பால், பீர் விலை குறைய வாய்ப்புண்டு.
பதிவர் மற்றும் வாசகர் சந்திப்புகளை பரிசல் ஏதாவது ஒரு திரையரங்கத்தில் வைத்துக்கொள்ளலாம்.
உடனடியா எல்லா டாஸ்மாக் கடைகளையும் பக்கத்து திரையரங்கத்திற்கு மாற்றிவிடலாம்.
மதன்ஸ் திரைப்பார்வையில் - ஆங்கிலத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட தமிழ் படங்களுக்கு விமர்சனம் செய்வதைவிட - நேரடியாக அந்த ஆங்கிலப்படத்துக்கே விமர்சனம் செய்யலாம்.
அலுவலகத்தில் எல்லோரும் தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி விவாதிப்பார்கள் (இப்போவும் அப்படித்தான். இன்னும் அதிகமாயிடும்!!!).
-----
இந்த பதிவை படிக்கிறவங்க - இன்னும் இந்த தொடரை எழுதாதவங்க - கண்டிப்பா எழுதணும்னு கேட்டுக்கறேன்.... :-))
17 comments:
கலக்கல்.. எங்கடா நம்ம ச்சின்னப்பையன் பஞ்ச் இல்லையேன்னு படிச்சிட்டே இருந்தேன்..
//
சில நல்ல சீன்கள் வரும்போது மட்டும், ஒரு பூவை க்ளோசப்பிலோ அல்லது ஒரு புலி மானைத் துரத்தி கொல்வது போலவோ காட்டி நம்மை ஏமாற்றும் அந்த தொழில் நுட்பம் என்னை மிகவும் தாக்கும்
//
இதைப் படிச்சி வாய் விட்டு சிரிச்சேன்.
கலக்கல் சின்னப் பையன்.
அ சாமியின் புதையல் எனக்குப் பிடித்த படம். நல்ல நக்கல்.
பரிசல் பற்றி எழுதியிருப்பதும் சிரிப்பை வரவழைத்தது.
//இதே ரீதியில் இருக்கும் பாடல்கள் எப்போவும் காரில், வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும்.//
எப்பவுமா அண்ணே ஆப் செய்யுங்க மின்சார சிக்கனம் அவசியம், வீட்டில் இருக்கும் பொழுது மட்டும் கேளுங்க!
கலக்கல்!!
இந்த தலைப்பில் எழுதியவர்களில் உங்கள் பதிவு மட்டும் தான் முழுவதுமாய் படிக்க கூடியதாய் இருந்தது !
நானும் படிச்சுட்டேன், ஆனா இன்னும் பதிவு போடலைங்க.சிக்கிரம் போடுறேன்
வாங்க வெண்பூ, வேலன் ஐயா -> நன்றி...
வாங்க குசும்பன் -> வீட்டில் இருக்கும்போது 'வேறே' ஒண்ணும் கேக்கவேண்டியது இருக்கே... அதை ஆஃப் செய்யக்கூட முடியாது.... :-(((
வாங்க சிவா, பாஸ்கர் -> நன்றி...
வாங்க நசரேயன் -> சீக்கிரம் எழுதுங்க... :-))
ஜீப்பரு!!!
(வருங்காலப் பதிவுக்கு இப்பவே உரல் கொடுக்கமுடியுமான்னு யாராவது சொல்லுங்கப்பா!!!).
//
உங்கள உரலாலே உதைக்கனும்..
:)))
சாரிண்ணே அவசர வேலையா வெளியூர் போய்ட்டதால போன பதிவுகளுக்கு வரமுடியல..சாரிண்ணே.
( இதுக்கு நீங்க போடபோற பதிலையும் நானே எழுதிடுறேன் "பாத்ரூம்க்கெல்லாம் வெளியூரா போகணும் அவ்வ்வ் )
//
சில நல்ல சீன்கள் வரும்போது மட்டும், ஒரு பூவை க்ளோசப்பிலோ அல்லது ஒரு புலி மானைத் துரத்தி கொல்வது போலவோ காட்டி நம்மை ஏமாற்றும் அந்த தொழில் நுட்பம் என்னை மிகவும் தாக்கும்
//
//
இந்த தலைப்பில் எழுதியவர்களில் உங்கள் பதிவு மட்டும் தான் முழுவதுமாய் படிக்க கூடியதாய் இருந்தது !
//
பின்றீங்களே சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
கலக்கலோ கலக்கல்
//வருங்காலப் பதிவுக்கு இப்பவே உரல் கொடுக்கமுடியுமான்னு யாராவது சொல்லுங்கப்பா!!//
விரல் மட்டும் கொடுக்கலாம்
//சில நல்ல சீன்கள் வரும்போது மட்டும், ஒரு பூவை க்ளோசப்பிலோ அல்லது ஒரு புலி மானைத் துரத்தி கொல்வது போலவோ காட்டி நம்மை ஏமாற்றும் அந்த தொழில் நுட்பம் என்னை மிகவும் தாக்கும்.//
அதை முழுசா காட்ட வேற படங்கள் இருக்கு தலைவா
வாங்க விஜய், ராஜாஹரிச்சந்திரா -> நன்றிங்க...
வாங்க அப்துல்லா -> பேசும்போதுகூட கவிஞர்களுக்கு எகனமொகனையா வார்த்தைங்க வந்து விழுதுப்பா.... :-)))
வாங்க வால் -> 'அதை'ப்பத்தி நான் உங்களுக்கு தொலைபேசறேன்.... இங்கே வேணாம்....:-)))
//
சில நல்ல சீன்கள் வரும்போது மட்டும், ஒரு பூவை க்ளோசப்பிலோ அல்லது ஒரு புலி மானைத் துரத்தி கொல்வது போலவோ காட்டி நம்மை ஏமாற்றும் அந்த தொழில் நுட்பம் என்னை மிகவும் தாக்கும்
//
super:):):)
//கட்டவுட்களுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும்.//
இப்பவே அப்படி நடக்குதே:):):)
//அரசு மானியம் பெற்று திரையிடப்படும் படங்கள் வெளியாகும் நாளன்று அரசு விடுமுறை அளிக்கப்படும்//
:):):)
//சாரிண்ணே அவசர வேலையா வெளியூர் போய்ட்டதால போன பதிவுகளுக்கு வரமுடியல..சாரிண்ணே.
( இதுக்கு நீங்க போடபோற பதிலையும் நானே எழுதிடுறேன் "பாத்ரூம்க்கெல்லாம் வெளியூரா போகணும் அவ்வ்வ் )//
:):):)
Post a Comment