நடுநிலைவாதிகள் போடவேண்டிய டிஸ்கி 10...!!!
நடுநிலைவாதிகள் அரசியலை/அரசியல்வாதிகளைப் பற்றி பதிவெழுதும்போது எழுதவேண்டிய டிஸ்கிகள் என்னென்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. நான் கலைஞரை மட்டும் திட்டி எழுதுவதாக நினைக்கவேண்டாம். புரட்சித்தலைவி, கேப்டன்,
சூப்பர் ஸ்டார் யார் முதல்வராக வந்தாலும் இப்படித்தான் எழுதுவேன்.
2. சென்ற ஆட்சிக்காலத்தில் நீ இப்படி எழுதினாயா என்று கேட்கவேண்டாம். நான் இந்த வருடம்தான் வலைப்பூ துவக்கினேன்.
3. என் சட்டைக்குள் நெளியற மேட்டர் இருக்கான்னு பார்க்கவேண்டாம். அதற்கும் என் கருத்திற்கும் சம்மந்தமில்லை.
4. நான் யாருக்கும் அல்லக்கை அல்ல.
5. நான் எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை.
6. இந்த பிரச்சினையை மட்டும் பற்றி பேசுவோம். மற்ற பிரச்சினைகளைச் சொல்லி பதிவை திசை திருப்ப வேண்டாம். அதை வேறு பதிவுகளில் பேசுவோம்.
7. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடுதான். நான் மறத்தமிழன்தான்.
8. என்னைப் பற்றியோ என் உறவினர்களைப் பற்றியோ தரக்குறைவாக எழுதவேண்டாம்.
9. இந்த பதிவுக்கு மட்டும் 'பின்னூட்ட மட்டுறுத்தல்' செய்திருக்கிறேன். 'நல்ல' பின்னூட்டங்கள்
மட்டுமே வெளியிடப்படும்.
௰. நான் அவனில்லை.
34 comments:
hai intha time me the first
\\. நான் கலைஞரை மட்டும் திட்டி எழுதுவதாக நினைக்கவேண்டாம். புரட்சித்தலைவி, கேப்டன்,
சூப்பர் ஸ்டார் யார் முதல்வராக வந்தாலும் இப்படித்தான் எழுதுவேன்\\
அடுத்த முதல்வர் லிஸ்ட்ல வடிவேலுவை விட்டுட்டிங்களே
\\2. சென்ற ஆட்சிக்காலத்தில் நீ இப்படி எழுதினாயா என்று கேட்கவேண்டாம். நான் இந்த வருடம்தான் வலைப்பூ துவக்கினேன்.\\
அப்ப அடுத்த ஆட்சிக்காலத்திலும் எழுதுவிங்களா?
\\என் சட்டைக்குள் நெளியற மேட்டர் இருக்கான்னு பார்க்கவேண்டாம். அதற்கும் என் கருத்திற்கும் சம்மந்தமில்லை.\\
நாம சொல்றதையெல்லாம் கருத்துன்னு இன்னுமா நம்பிட்டு இருக்காங்க?
\\நான் யாருக்கும் அல்லக்கை அல்ல\\
அப்ப வலது கையா?
\\5. நான் எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை.\\
அடிப்படை உறுப்பினர் கூட இல்லை
\\6. இந்த பிரச்சினையை மட்டும் பற்றி பேசுவோம். மற்ற பிரச்சினைகளைச் சொல்லி பதிவை திசை திருப்ப வேண்டாம். அதை வேறு பதிவுகளில் பேசுவோம்\\
அப்புறம் இந்த பதிவு எதுக்காக ஆரம்பிச்சோமுன்னு மறந்திடுவோம்
\\7. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடுதான். நான் மறத்தமிழன்தான்.\\
ஜார்ஜ் புஷ் பத்தி கருத்து போடும் போது போட வேண்டிய டிஸ்கி
\\8. என்னைப் பற்றியோ என் உறவினர்களைப் பற்றியோ தரக்குறைவாக எழுதவேண்டாம்\\
அப்புறம் ஆட்டோ அனுப்ப வேண்டி வரும்
\\9. இந்த பதிவுக்கு மட்டும் 'பின்னூட்ட மட்டுறுத்தல்' செய்திருக்கிறேன். 'நல்ல' பின்னூட்டங்கள்
மட்டுமே வெளியிடப்படும்.\\
புரிஞ்சுருச்சு
\\10. நான் அவனில்லை.\\
மெய்யாலுமே நான் அவனில்லை
//நான் யாருக்கும் அல்லக்கை அல்ல//
உங்களோட இந்த ஆணியப் போக்கை நான் கன்னாபின்னாவென கண்டிக்கறேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................... லொடுக்கு சுந்தரிகளை ஏன் விட்டுட்டீங்க?
//நான் கலைஞரை மட்டும் திட்டி எழுதுவதாக நினைக்கவேண்டாம். புரட்சித்தலைவி, கேப்டன்,
சூப்பர் ஸ்டார் யார் முதல்வராக வந்தாலும் இப்படித்தான் எழுதுவேன்//
லிஸ்ட்ல நம்ம தல ஜே.கே.ரித்தீஷை விட்டுட்டீங்களே:(:(:(
இராப்
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்
\\ rapp said...
//நான் கலைஞரை மட்டும் திட்டி எழுதுவதாக நினைக்கவேண்டாம். புரட்சித்தலைவி, கேப்டன்,
சூப்பர் ஸ்டார் யார் முதல்வராக வந்தாலும் இப்படித்தான் எழுதுவேன்//
லிஸ்ட்ல நம்ம தல ஜே.கே.ரித்தீஷை விட்டுட்டீங்களே:(:(:(
இராப்
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம் \\
அவரையெல்லாம் திட்டி எழுதிடுவாங்களா என்ன?
\\rapp said...
//நான் யாருக்கும் அல்லக்கை அல்ல//
உங்களோட இந்த ஆணியப் போக்கை நான் கன்னாபின்னாவென கண்டிக்கறேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................... லொடுக்கு சுந்தரிகளை ஏன் விட்டுட்டீங்க?\\
இதை நானும் வழி மொழிகிறேன்
நல்ல கலெக்ஷன் ஆஃப் டிஸ்கிஸ்... புக்மார்க் பண்ணிட்டேன்..:)))
அவருக்கு சொந்தமாக கல்லூரி உள்ளது என்றும், அவருடைய சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் எனவும் கூவுவது முறையானது அல்ல. வேண்டுமானால் நீங்கள் வழக்கு தொடுக்கலாம்.
இது டிஸ்கில வருமா?
raja - bgl
:-)))...
:)
//நான் கலைஞரை மட்டும் திட்டி எழுதுவதாக நினைக்கவேண்டாம். புரட்சித்தலைவி, கேப்டன்,
சூப்பர் ஸ்டார் யார் முதல்வராக வந்தாலும் இப்படித்தான் எழுதுவேன்.//
இதிலிருந்து நீங்க வடிவேலு ரசிகர்ன்னு தெரியுது.
அவரு பேர காணோமே
// சென்ற ஆட்சிக்காலத்தில் நீ இப்படி எழுதினாயா என்று கேட்கவேண்டாம். நான் இந்த வருடம்தான் வலைப்பூ துவக்கினேன்.//
அடுத்த ஆட்சியில் கூட வேற பெயரில் துவங்குவேன்
//என் சட்டைக்குள் நெளியற மேட்டர் இருக்கான்னு பார்க்கவேண்டாம். அதற்கும் என் கருத்திற்கும் சம்மந்தமில்லை.//
சட்டைக்குள்ள பாம்பெல்லாம் இருக்குமா
//நான் யாருக்கும் அல்லக்கை அல்ல.//
அப்போ உடுக்கைனு வச்சுக்கலாமா
//நான் எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை.//
கட்சியின் தலைவரே நீங்க தானே அப்பு
//இந்த பிரச்சினையை மட்டும் பற்றி பேசுவோம். மற்ற பிரச்சினைகளைச் சொல்லி பதிவை திசை திருப்ப வேண்டாம். அதை வேறு பதிவுகளில் பேசுவோம்.//
கும்மி வேணாமா
//நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடுதான். நான் மறத்தமிழன்தான்.//
வெளிநாட்டில் பிறந்தால் மரத்தமிழனா
//என்னைப் பற்றியோ என் உறவினர்களைப் பற்றியோ தரக்குறைவாக எழுதவேண்டாம்.//
வேண்டுமென்றால் உங்களை நீங்களே திட்டி கொள்ளுங்கள்
//'நல்ல' பின்னூட்டங்கள்
மட்டுமே வெளியிடப்படும்.//
யாரு அது நல்லதுன்னு சான்றிதல் தருவா
//நான் அவனில்லை.//
இது
நான்
ப்ளீச்சிங் பவுடர்
நல்ல தந்தி மட்டுமே
உபயோக படுத்துவது
மற்றவர்களுக்கு அனுமதியில்லை
வாங்க தாரணி பிரியா -> அவ்வ்வ். நீங்கதான் பஷ்டுன்றதாலே இப்படியா ஒரு ச்சின்னப்பையன் பதிவ பிரிச்சி மேய்வாங்க?????? .. முடியல..... :-)))
வாங்க ராப் -> ஆஆஆ... நான் மறந்துட்டேன்.... நிஜமாவே மறந்துட்டேன்... நம்ம தலய யாராவது திட்டி எழுத முடியுமா என்ன??????
வாங்க வெண்பூ -> ஹிஹி... எப்போவாவது யூஸாகும். வெச்சிக்குங்க.... :-))
வாங்க ராஜா -> டிஸ்கின்னு போட்டுட்டா யாரும் திட்டமாட்டாங்க.. அதனாலே என்னவேணா டிஸ்கியா போட்டுக்கலாம்.... கவலைய விடுங்க.. இதையும் போட்டுடுவோம்..... :-))
வாங்க விஜய், சஞ்செய் -> நன்றிங்கோ....
வாங்க வால் -> ஹிஹி... மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா????? நான் இன்னும் நிறைய இலக்கியங்கள் படைக்க இருப்பதால், நீங்க பிரிச்சி மேய்ஞ்சிருக்கிறதுக்கெல்லாம் தனித்தனியா பதில் சொல்ல முடியல.... பரவாயில்லைதானே????.... :-))))
இருடி... ஒனக்கிருக்குது...
யாருய்யா அது? நான் அவனில்லைன்னு சொன்னது அதுதான் எங்க வால்! சொல்லிட்டாரில்லே.அது எங்களோட ட்ரேட் மார்க் அப்படின்னுட்டுட்டு.யாராவது அதை உபயோகிக்கினம்னா எங்க கும்பல்லெ சேரணும்கிறது கட்டாயம். :))
வாங்க பரிசல் -> ஏதாவது ட்ரீட் தரப்போறீங்களா????? சீசீசீசீசீசீக்கிரம் குடுங்க........
வாங்க நல்ல தந்தி -> அவ்வ்வ்வ்..... ' நான் அவனில்லை'ன்னு சொல்லக்கூடாதுன்னா 'அவன் நானில்லை'ன்னு சொல்லிக்கவா??????????.....:-)))
Post a Comment