Monday, October 20, 2008

கடைசிப் பெயர் அல்லது Last Name!!!

அர்னால்ட் ஸ்வாஜ்ஜெனிகருக்கு பெரிசாயிருக்கும்...
மடோன்னாவுக்கு இருக்காது...

இப்படி இன்னும் சில நபர்களைக் குறித்து சொல்லப்படும் இந்த ஜோக்குக்கு விடை என்ன என்பது உங்களுக்குத் தெரிந்தேயிருக்கும். அதுதான் இந்த பதிவின் தலைப்பில் இருக்கும் - கடைசிப் பெயர் அல்லது sur name அல்லது Last name.

கடைசிப் பெயர் - நம்ம ஊர்லே இதைக் கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா, இங்கே எங்கே போனாலும் முதல்லே உங்க பேர் என்னன்னு கேக்காமே, உங்க கடைசிப் பேர் என்னன்னுதான் கேக்கறாங்க. அதுக்கு என்ன இப்போன்னு நீங்க கேக்கலாம். இருங்க. சொல்றேன்.

என் பெற்றோர் எனக்குப் பேர் வைக்கும்போது - ரொம்ப பெரிசா வெச்சது மட்டுமில்லாமே, அதை வார்த்தை வார்த்தையா பிரிச்சி வேறே வெச்சிட்டாங்க. முதல் பேர்லே ரெண்டு பகுதியும், கடைசிப் பேர்லே ரெண்டு பகுதியும், ஆக மொத்தம் நாலு வார்த்தைகள். அதாவது,
6+9+10+8=33 ஆங்கில எழுத்துக்களைக் கொண்டது என் முழுப்பேரு.

என்னோட முதல் பேரோட முதல் பகுதி (சத்யா) உங்க சில பேருக்கு தெரிந்திருக்கும். கடைசிப் பேர்லே முதல் பகுதி ஒரு ஊரில் உள்ள இடத்தின் பேரு (கடைசி பேர்ன்றதாலே அதை இந்த பதிவின் கடைசியிலே சொல்றேன்!!!). இரண்டாம் பகுதி எங்கப்பா பேரு.

நிற்க. (ஏற்கனவே நின்றிருந்தால் உட்கார்க). இப்போ இந்த கடைசிப் பேராலே என்னென்ன பிரச்சினை வந்திருக்குன்னு பாக்கலாம்.

ஒரு தடவை, இங்கே ஒரு அரசாங்க அலுவலகத்துக்கு போய் வேலையை முடிச்சிட்டு, என் பேர் சொல்லிக் கூப்பிடுவாங்கன்னு உட்காந்திருந்தேன். வழக்கம்போல், கண்ணை ஏதோ ஒரு இடத்திலே குத்தி வெச்சிட்டு, மனசை இந்தியாவிலே எங்கேயோ சுத்தவிட்டிருந்தேன்.
அந்த ஆள் என்னோட கடைசி பேரை (முதல் பகுதியை) சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருந்தார் நானோ - ஆஹா, நாம பொறந்த இடத்தை யாரோ ஒருத்தர் எவ்ளோ அழகா சொல்றாரு பாருப்பா - அப்படின்னு சும்மா உக்காந்திருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சிதான் தெரிஞ்சுது -
அடடா, நம்ம பேரை சொல்றதுக்கு பதிலாதான் ஐயா அப்படி சொல்லிக்கிட்டிருக்காருன்னு. எழுந்து அவர்கிட்டே போனேன். அவரும் 'இது உங்க பேருதானே. ஏன் சும்மா முறைச்சிக்கிட்டு உக்காந்திருந்தீங்க?'ன்னாரு. எனக்கு பயங்கர வெக்கமா போயிடுச்சு. நம்ம கேப்டனுக்கு
தமிழ்லே பிடிக்காத அந்த ஒரு வார்த்தையை சொல்லிட்டு வெளியே வந்துட்டேன்.

அதே மாதிரி இன்னொரு தடவை ஒரு மருத்துவமனைக்குப் போயிருக்கும்போது, அங்கிருந்த நர்ஸம்மா - "உன்னோட கடைசி பேரு (முதல் பகுதி) உச்சரிக்க ரொம்ப கஷ்டமாயிருக்கு. அதுக்கு பதிலா முதல் பேரை (முதல் பகுதி) - சத்யான்னு - சொல்லி கூப்பிடவா" அப்படின்னாங்க. அடக்கஷ்ட காலமே, அதான்மா என் பேரு - அப்படின்னு நினைச்சிக்கிட்டு, "ஓ, அதுக்கென்ன, தாராளமா கூப்பிடுங்க" - அப்படின்னேன்.

இன்னொரு சந்தர்ப்பத்துலே நடந்தது இது. மேஜைக்கு அந்தப்பக்கத்திலிருந்து கேக்குறாரு ஒருத்தரு. "குடும்பத்துலே நீங்க மூணு பேரு ( நான், மனைவி மற்றும் குழந்தை). ஆனா, மூணு பேரோட கடைசி பேரும் வெவ்வேறா இருக்கே. அது எப்படி. குடும்பப்பேரு ஒண்ணுதானே
இருக்கணும்".

நானும் தொண்டையை கனைச்சிக்கிட்டு - "ஐயா, கடைசிப் பேருன்றது எங்களைப் பொருத்தவரை குடும்பப்பேரு கிடையாதுங்க. அது, அவங்கவங்க அப்பா பேருதான். எனக்கு - எங்கப்பா பேரு. என் மனைவிக்கு - அவங்கப்பா பேரு. என் பொண்ணுக்கு - என்னோட முதல்
பேரு. அதனால்தான், எல்லாமே வெவ்வேறா இருக்கு" - அப்படின்னேன்.

"இல்லையே. இந்தியாலே ஷர்மா, குப்தா அப்படின்னு குடும்பப்பேர் இருக்கே. அது எப்படி?" என்றார்.

சரி. இன்னிக்கு இது ஆவறதில்லே அப்படின்னு நினைச்சிக்கிட்டு - இந்திய பழக்கவழக்கங்கள், வட-தென்னிந்தியர்களின் பெயர்களில் உள்ள வித்தியாசங்கள் அனைத்திலும் ஒரு சிறிய சொற்பொழிவு நிகழ்த்தவேண்டியதாயிற்று.

அதன்பிறகுதான் அவர் சமாதானமாகி எங்களை வெளியே போகவிட்டார்.

----

சரி இவ்ளோ சொல்லிட்டு என்னோட கடைசி பேர்லே முதல் பகுதி என்னன்னு சொல்லாமே இருக்க முடியுமா? அது 'Triplicane'.

ஐந்தாவது படிக்கும்போது, என்னோட பேர் மற்றும் அதே இனிஷியலோட இன்னொருவன் வந்துவிட, என்ன பண்றதுன்னு தெரியாம, இனிஷியல்லே கூட ஒரு எழுத்து சேர்க்கறேன்னு பெற்றோர்கள் சேத்துவிட்டதுதான் இந்த 'Triplicane'.

தற்போது சென்னையில் வருமானவரி அலுவலகத்தில் வேலை செய்யும் அந்த சத்யாவை பார்க்கும்போதெல்லாம் - உன்னாலே என் பேரையே மாத்திக்கிட்டேனே? எனக்கு மட்டும் வருமான வரி போடாமே இருக்கக்கூடாதா? என்று வேண்டுகோள் வைப்பது வழக்கம்.

அவரும் வழக்கம்போல் சிரித்துக்கொண்டே - "வேணும்னா ஒரு சாப்பாடு வாங்கித் தர்றேன் - அவ்ளோதான் என்னாலே முடியும்" அப்படின்னு அங்கிருக்கும் கேண்டீனுக்கு கூட்டிப்போய்விடுவார்.



26 comments:

வெண்பூ October 20, 2008 at 5:58 AM  

கலக்கல்.. வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பாலோனோர்க்கு இந்த பிரச்சினை இருக்கிறது. ஆண்களுக்காவது பரவாயில்லை, பெண்களை அவர்களது அப்பாவின் (ஆண்) பெயரை கூப்பிடும்போது வித்தியாசமாக இருக்கும்.

உங்களுக்காவது "சத்யா"ன்னு சின்னதா ஒரு பேர் இருக்கு. என் முதல் பெயர்ல ஸ்பேஸ் இல்லாததால முதல்ல படிக்கிறவங்க ரொம்ப தடுமாறிடுவாங்க. (30 எழுத்துக்கள்) (சின்னத்தம்பி கவுண்டமணி ஸ்டைலில்) ஆனா ஒரே ஒரு சந்தோசம், எம்பேரை இதுவரைக்கும் எந்த வெள்ளைக்காரனும் முழுசா சொன்னதே இல்லை.

பெரும்பாலும் பெயர் அழைக்க காத்திருக்கும்போது, நான் கூப்பிடுபவரையே பார்த்துக் கொண்டிருப்பேன். அவர் லிஸ்டில் பெயரை பார்த்து முகத்தை சுருக்கி இதை எப்படி படிப்பது என்று திணற ஆரம்பிக்கும்போதே ஓடிப் போய் அவர் முன் நின்று என் பெயரை சொல்லிவிடுவேன். :)

தாரணி பிரியா October 20, 2008 at 6:07 AM  

உங்களுக்கு வெளிநாட்டிலதான் பிரச்சனை. எனக்கெல்லாம் உள் நாட்டிலேயே. பெரும்பாலும் என் பேர் தரணின்னு தப்பாதான் உச்சரிப்பாங்க. உடனே நானும் ஜீன்ஸ் ராஜூ சுந்தரம் மாதிரி தரணி இல்லை தாரணின்னு கத்த வேண்டியிருக்கும்.

Anonymous,  October 20, 2008 at 8:01 AM  

வடனாடு போனா எனக்கும் இதே பிரச்சினைதான்.

சமயங்கள்ல நானே அந்தப் பேரச் சொல்லி யாருப்ப அது உங்களக் கூப்பிடுறாங்கன்னு எல்லாம் சொல்லி காமெடியா இருக்கும்.

MADURAI NETBIRD October 20, 2008 at 9:27 AM  

நல்ல அனுபவம்தான்

சின்னப் பையன் October 20, 2008 at 9:46 AM  

வாங்க வெண்பூ -> ஆமா. ஒவ்வொரு தடவையும் பெண்களின் இந்த கடைசி பெயர் பிரச்சினையை சொல்லி புரியவைக்கறதுக்குள்ளே. அப்பப்பா... அப்படியும் தங்ஸை அவங்க அப்பா பேர் சொல்லிதான் கூப்பிடுவாங்க. நான் அப்போ சொல்றது என்னன்னா - நான் மறந்தாலும், இவங்க நினைவு'படுத்தி'டறாங்களே!!!!.

வாங்க தாரணி பிரியா -> ஹையா.. நீங்களும் டான்ஸ் மாஸ்டரா இருக்கீங்களா?? ...:-)))

வாங்க காசி ஆறுமுகம் -> உங்க பதிவை பார்த்தேன். சூப்பர். தவிர இதே மேட்டர்லே நிறைய விவாதம் ஆயிருக்குன்னும் தெரிஞ்சிக்கிட்டேன்.. நன்றி...

வால்பையன் October 20, 2008 at 9:51 AM  

கடைசி பெயருக்கு பதிலாக
ப்ளீச்சிங் பவுடர்
நல்ல தந்தி என்று
புனைப்பெயர் வைத்து கொள்ள
அமேரிக்காவில் வழி இருக்கிறதா

நசரேயன் October 20, 2008 at 10:27 AM  

நல்ல அனுபவம் ச்சின்னப் பையன். நானும் இது போன்ற அனுபவத்தை சமிபத்திலே சந்தித்தேன். குடும்ப பெயர் இல்லையா என்று மிக ஆச்சரிய பட்டார்கள். நானும் நீங்கள் சொன்ன பாடத்தை எடுத்தேன் :)

Sridhar Narayanan October 20, 2008 at 11:50 AM  

:-))

தென்னிந்தியர்கள் எல்லாருக்கும் இந்த பெயர் பிரச்சினை இருக்குன்னு நினைக்காதீங்க. கேரளாவுல வீட்டுப் பெயரை குடும்பப் பெயரா வச்சிருப்பாங்க.

கன்னடிகர்கள் பெரும்பாலும் சாதிப் பெயரோ வேறு குடும்பப் பெயரோ கடைசிப் பெயரா இருக்கும். அவர்களில் சிலருக்கு இந்த பிரச்சினை உண்டு.

ஆந்திரவாடுகளுக்கு கேட்கவே வேண்டாம். ஒரு ஐந்தாறு பெயர்களை தொடர்ந்து வைத்திருப்பார்கள்.

நம்மூரிலும் இப்ப நிறைய பேரு ஊர் பேரை வைத்துக் கொண்டு சமாளிக்கிறார்கள். சிலர் அழகாக ஒரு பெட் நேமை முதல்ப் பெயராக வைத்துக் கொண்டு தப்பித்துவிடுகிறார்கள். சரவணன் - சரோ சரவணன் ஆகிவிடுவது போல :-))

சின்னப் பையன் October 20, 2008 at 12:08 PM  

வாங்க வேலன் ஐயா, மதுரை நண்பன், நசரேயன் -> நன்றி...

வாங்க வால் -> ஏங்க, புரட்சி - திலகம் - தளபதி - இப்படியெல்லாம் வேணாங்களா????

வாங்க ஸ்ரீதர் நாராயணன் ஜி -> தகவல்களுக்கு நன்றி... 'வேற்றுமையில் ஒற்றுமை'யை நேரத்துக்கு தகுந்தாப்பல நீங்க சொன்னா மாதிரி விரிவாகவும், நான் சொன்னா மாதிரி சுருக்கமாகவும் சொல்லி மக்களுக்கு, கூட வேலை பார்ப்பவர்களுக்கு புரியவைக்க முயற்சித்திருக்கிறேன்.... :-))

T.V.ராதாகிருஷ்ணன் October 20, 2008 at 12:52 PM  

நீங்கள் பரவாயில்லை..நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் பாருங்கள்
Thiruvaiyaaru Varadarajan Radhakrishnan

குடுகுடுப்பை October 20, 2008 at 2:53 PM  

நான்கூட எங்க தாத்தா மாதிரி சாதிப்பேர லாஸ்ட் நேமா மாத்திரலாமான்னு இருக்கேன்.

துளசி கோபால் October 20, 2008 at 4:29 PM  

எத்தனை முறை சொல்லியும் இவுங்க அடங்குறதா இல்லை.
இன்னிக்கும் என் மாமியார் பெயரில்தான் எனக்கு கடிதம், அழைப்பிதழ் எல்லாம் வருது.

பார்ட்டிகளில் போனால்
நேம் டேக் இப்படித்தான் அச்சடிச்சு வச்சுருக்கும். நான் அதைத் திறந்து சர்நேம் பகுதியைக் கிழிச்சுட்டு வச்சுக்குவேன்.

நல்லவேளை வாக்காளர் லிஸ்டில் ஒழுங்காப் போட்டுருக்கு.

கோபாலுக்கு அவுங்க அப்பா பெயர் சர்நேமுன்னா எனக்கும் அதுதான்னு இவுங்களா முடிவு பண்ணிக்கிட்டாங்க.

நம்ம குடும்பத்தில் மூவருக்கும் மூணு வித சர்நேம்.

சின்னப் பையன் October 20, 2008 at 5:57 PM  

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> ஹாஹா.. எஞ்சாய் மாடி... :-))

வாங்க குடுகுடுப்பை -> அவ்வ்வ்.... மறுபடி சாதிப்பேரா!!!!

வாங்க இளா -> தலைவா, நாங்க ச்சின்னப்பதிவருங்க எந்த தலைப்பை எடுத்தாலும், அதில் நீங்கல்லாம் மூழ்கி முத்தெடுத்திருப்பீங்கன்னு தெரியுது... அவ்வ்வ்... :-)))

வாங்க துளசி மேடம் -> பெரிய பின்னூட்டத்திற்கு நன்றி... ஹாஹா. இங்கேயும் அதே கதைதான்... "என் அப்பா பேரை மாத்தறதுக்கு இவன் யாரு?" - இதை அடிக்கடி யார் சொல்வாங்க நினைக்கிறீங்க????? :-)))

வீணாபோனவன் October 20, 2008 at 7:23 PM  

A South Indian's registration in an US collage

(Looks long, but is very interesting and good)

"Your name?"

"Dinesh."

"How do you spell it?"

"D-I-N...."

"Slow, slow, T?"

"No, D."

"Is that T as in Tom, or D as in Dennis?"

"No, not Dennis, my name is Dinesh."

"I know that. I am asking you, is that a T as in Tom, or D as in as in Detroit?"

"I don't know who Tom is, and I haven't been to Detroit. I just came to the US from Madras."

"OK, OK, I know that. Is that T-I- or D-I- ?"

"D. D-I-. D-I-N-E-S-H."

"Is that your last name or first name?"

"Uh? Dinesh is my name."

"OK. What is your LAst name?"

"That is my first and last name. Dinesh."

"Then, is your name Dinesh Dinesh?"

"No. My name is Dinesh."

"But what is your LAST NAME? I am ASKING YOU ABOUT YOUR LAST NAME."

"I told you, Dinesh. I always had the same name, from birth till now.

DINESH. That's my name."

"OK, what is your family name?"

"Family? Family name? My family doesn't have a name."

"What do the neighbors call you?"

"Dinesh."

"Not you. Your whole family. What do they call your family?"

"Beedida bhat'rr."

"So, that is your family name. Do you understand?

"How do you spell that?"

"Spell what?"

"B.D. whatever you said, what your neighbors call your family."

"Oh, that ... Beedida bhat'rr.

"What do you need that for? It only means 'the brahmin who makes beedis.'"

"What are B-Ds?"

"Not B-D. Beedi, is like a cigarette, you see, they roll the tobacco in a leaf and tie a thread around it. 25 in a kattu."

"25 in a what?"

"Kattu, or katta, whatever. Like a bunch, you see. If there is even one less or one more, my father could always tell without counting. He then taught me how to do it."

"I am not worried about your 'cutter' or whatever.

What-is-your-last-name?"

"I told you, Dinesh."

"OK, OK, I don't want to go over this again. What is common to the names of all the members of your family?"

"They are all in Sanskrit. My first sister is Suneetha, the second sister is Sumathi ... "

"Not about the language. When you write your name, and your sister writes her name, what do you two have in common?"

"We have the same handwriting. Even my father can't tell our handwritings apart."

"Blast it! What is your father's name?"

"G.K.Nettar."

"What does G.K. stand for?"

"His name, Gopala Krishna."

"Then what is Nettar?"

"That is our house name."

"House name? Aha, does every one at your house have this name?"

"It is not our name. It is the name of our house. Strictly speaking, it should be Honnadka. But my father was too lazy to change it. My father was born in Honnadka, but, see, my grandfather was born in Nettar."

"What was his name?"

"I told you, G.K.Nettar."

"Your grandfather was also called G.K. whatever?"

"No. That is my father."

"Then what is your grandfather's name?"

"Govinda Bhat. See, my relatives still call me Mangalore Govinda.

Because it is a tradition to name the first son after his grandfather.

All the brothers of my father have done this. So, we have Honnadka Govinda, Jogibettu Govinda, Kanchodu Govinda, and I am Mangalore Govinda."

"So, then, your name is Mangalore Govinda, not Dinesh."

"No. My name is Dinesh. Mangalore Govinda is how my relatives call me.

That is not my NAme."

"What do they call your sister?"

"Ammanni."

"What? You said her name is Sooneetha."

"Yes, that is her name, Suneetha, but we call her Ammanni."

"Is that her nick-name?"

"No. she doesn't have a nick name. Only our neighbor's daughter has a nick name. She is called 'soote'. She is very active. That's why."

"What about your brother?"

"I have no brothers. But then, you can count all those Govindas as my brothers too. See, they are really kind of my brothers."

"OK, what are their names?"

"The oldest one, he is my big brother. He is called GovindaNNa."

"Govind Anna? Then Anna is his last name."

"No, ANNA, not anna. ANNA means big brother."

"What is his NAME?"

"His name is Govinda Bhat."

"Then your last name is But."

"Not but, Bhat, B-H-A-T. But that's not his name, you see."

"If that's not his name, what is it? Why does he have it in his name?"

"Bhat simply means he is a brahmin. He might as well write Rao,like his father does, or Sharma, like my father's second brother does."

"How does he write his name in official papers?"

"Nettar Govinda Bhat. That's how he writes it."

"How does his father write it?"

"Nettar Venkata Subba Rao."

"Aha, I can see now. Your father is G.K.Nettar, his brother is Nettar something Rao... your last name is then Nettar. Aha, I got it."

"But Nettar is not the last name. It is the house name."

"I don't care. Tell me one last time, what is YOUR last name?"

"But I told you, my last name is the same as my first name, my only name, Dinesh."

"Then, I am going to write Nettar here. I don't care if it is your house name, your grandfather' s name, your dog's name, whatever. It is your last name. How do you spell it? N-E-..."

"N-E-T-T-A-R."

"N-E-T-T-? Is that T as in Tom or D as in Dennis?"

"My name is Dinesh, not Dennis."

"AARRGGHHHHH. Do we have to go through this again? Here, write it down."

"That's it. From now on, you are Dinesh Nettar, Dinesh is your first name, and Nettar is your last name. OK?

வால்பையன் October 20, 2008 at 11:43 PM  

பாருங்க! வீணாபோனவன்

பாப்பானுங்க முட்டாப்பயளுகன்னு டுவிஸ்ட் பண்ணி விடுறாரு

:))

Anonymous,  October 21, 2008 at 6:59 AM  

Hi Chchinna paiya,

very great post..laughed a lot..

\\'இது உங்க பேருதானே. ஏன் சும்மா முறைச்சிக்கிட்டு உக்காந்திருந்தீங்க'//

hahaahaaa :)

வீணாபோனவன் October 21, 2008 at 12:31 PM  

ஆஹா... பாருங்க...வால்பையன் சந்துல சிந்து பாடுறாரு :-) புது டொபிக் ஆரம்பிக்க பார்குறாரு... ஐய்யா சாமி ஆளவிடுங்கப்பா :-)

VIKNESHWARAN ADAKKALAM October 22, 2008 at 3:08 AM  

//அவ்ளோதான் என்னாலே முடியும்" அப்படின்னு அங்கிருக்கும் கேண்டீனுக்கு கூட்டிப்போய்விடுவார்.//

வாக்கியப்பிழை உள்ளது..... கூட்டிக்கொண்டு போய்விடுவேன்னு போடுங்க... :P

வரி விலக்கு கிடைக்கலனாலும் பரவாயில்லை சாப்பாட்டை விட மாட்றாரு பாருனு ஊர்ல பேசுக்கிறாங்க...

அதான் சொல்ல வந்தேன் :P

rapp October 22, 2008 at 7:12 AM  

//வழக்கம்போல், கண்ணை ஏதோ ஒரு இடத்திலே குத்தி வெச்சிட்டு, மனசை இந்தியாவிலே எங்கேயோ சுத்தவிட்டிருந்தேன்//

ஆஹா, ஆஹா, அருமை அருமை:):):) கலக்கலா ஒரே வரியில பலப்பேரோட உணர்வுகளை சொல்லிட்டீங்க:):):)

rapp October 22, 2008 at 7:13 AM  

//பெரும்பாலும் பெயர் அழைக்க காத்திருக்கும்போது, நான் கூப்பிடுபவரையே பார்த்துக் கொண்டிருப்பேன். அவர் லிஸ்டில் பெயரை பார்த்து முகத்தை சுருக்கி இதை எப்படி படிப்பது என்று திணற ஆரம்பிக்கும்போதே ஓடிப் போய் அவர் முன் நின்று என் பெயரை சொல்லிவிடுவேன்.//

super:):):)

rapp October 22, 2008 at 7:15 AM  

// அது 'Triplicane'//

ஆஹா, வித்தியாசமா இருக்கே:):):)

சின்னப் பையன் October 22, 2008 at 1:51 PM  

வாங்க வீணாபோனவன் -> இவ்ளோஓஓ பெரிய கதைக்கு நன்றி...

வாங்க வால் -> அவ்வ்வ்... நீங்க ஏங்க வரிகளுக்கு நடுவிலே போய் படிக்கிறீங்க....

வாங்க சுதா -> நன்றி...

வாங்க விக்னேஸ்வரன் -> ஹிஹி... எப்போ அவரைப் பாக்க போகணும்னாலும், மதிய உணவு நேரத்துக்குத்தான் கரெக்டா போவேன்.... :-))

வாங்க ராப் -> நன்றி...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP