Thursday, October 16, 2008

எனக்கு என் மாமியார் செய்யும் கொடுமைகள் 10...!!!

1. மூக்கிலே விரலை விட்டு நோண்டாதீங்க. எனக்கு அசிங்கமா இருக்கு.

2. துவைக்க வேண்டிய துணிகளையெல்லாம் ஒழுங்கா ரூம்லே இருக்கற கூடையிலே போடுங்க.

3. எனக்கு கொஞ்ச நேரம் உங்க கணிணி வேணும். எப்போ பாத்தாலும் கெக்கேபிக்கேன்னு எதை பாத்து சிரிக்கிறீங்களோ?

4. கார்த்தாலே எழுந்தவுடனே போர்வையை மடிச்சி வெக்கணும்னு தெரியாதா?

5. ஷேவ் செய்தபிறகு வாஷ்பேசினை நல்லா சுத்தப்படுத்தணும்றது தெரியுமா?

6. தினமும் சோபா (sofa) உறையை ஒழுங்குபடுத்தி போடணும்னு தெரியாதா?

7. இப்படி நகத்தை கடிக்காதீங்க. அது ரொம்ப கெட்ட பழக்கம்.

8. சாப்பிட்ட பிறகு மரியாதையா தட்டை எடுத்து கழுவி வைங்க.

9. தும்மும்போது முகத்தை மூடிக்கோங்க.

10. நீங்க சொல்ற அறுவை ஜோக்குக்கெல்லாம் என்னாலே சிரிக்க முடியாது. அதுக்கு வேறே ஆளை பாருங்க.இப்படியெல்லாம் என்னோட தனிமனித சுதந்திரத்திலே தலையிடறாங்க.
சொந்த வீட்லேகூட நிம்மதியா இருக்கமுடியாம தவிக்கிறேன்..மேலே சொன்னமாதிரியெல்லாம் என்னை கொடுமைபடுத்தற .... மாமியாருக்கு நிகரான... அந்த ஆள் இவங்கதான்..... அவ்வ்வ்வ்...


57 comments:

பரிசல்காரன் October 16, 2008 at 5:17 AM  

அடங்கவே மாட்டியா நீ??

VIKNESHWARAN October 16, 2008 at 5:22 AM  

ஹா ஹா ஹா சூப்பரு...

வெண்பூ October 16, 2008 at 6:26 AM  

சரி விடுங்க.. உங்க பொண்ணு அவங்க அம்மா போலன்னு சொல்லாம சொல்லீட்டீங்க.. (ஏன்னா என் வீட்ல தங்கமணிதான் இந்த கொடுமையெல்லாம் பண்ணுறாங்க..) ஹி..ஹி..ஹி..

***

ரெண்டாவது போட்டோ சூப்பர்..

சுல்தான் October 16, 2008 at 7:08 AM  

அட இப்பவே இவ்வளவு விவரமா? அம்மா மாதிரியா?
கண்ணு பட்றப் போகுது.

குசும்பன் October 16, 2008 at 7:20 AM  

//1. மூக்கிலே விரலை விட்டு நோண்டாதீங்க. எனக்கு அசிங்கமா இருக்கு.//

யார் மூக்கிலே?

குசும்பன் October 16, 2008 at 7:20 AM  

//8. சாப்பிட்ட பிறகு மரியாதையா தட்டை எடுத்து கழுவி வைங்க.//

எல்லார் தட்டையுமா?

குசும்பன் October 16, 2008 at 7:21 AM  

//10. நீங்க சொல்ற அறுவை ஜோக்குக்கெல்லாம் என்னாலே சிரிக்க முடியாது. அதுக்கு வேறே ஆளை பாருங்க.//

வேற ஆள பாக்க சொல்லிட்ட அப்படின்னு சொல்லி இரண்டாவது பாப்பாவை ரெடி செஞ்சுடலாம்ன்னு ஐடியாவா?

குசும்பன் October 16, 2008 at 7:22 AM  

//சொந்த வீட்லேகூட நிம்மதியா இருக்கமுடியாம தவிக்கிறேன்..//

வாடகை வீடா இருந்தாலும் இப்படிதான் இருக்கும்.

குசும்பன் October 16, 2008 at 7:23 AM  

//5. ஷேவ் செய்தபிறகு வாஷ்பேசினை நல்லா சுத்தப்படுத்தணும்றது தெரியுமா?//

வாழ்பேசினுக்கா ஷேவ் செய்யுறீங்க!

குசும்பன் October 16, 2008 at 7:26 AM  

//2. துவைக்க வேண்டிய துணிகளையெல்லாம் ஒழுங்கா ரூம்லே இருக்கற கூடையிலே போடுங்க.//

இப்படி சொன்னா துணி துவைப்பது யாரோ என்பது போல் இருக்கு.
துவைச்ச துணிய ஒழுங்கா காயப்போடுங்க, சுருக்கம் இல்லாம அயன் செஞ்சு மடிச்சு வையுங்க இது எல்லாம் கிடையாதா?

Raghavan,  October 16, 2008 at 7:40 AM  

வேலை டென்ஷன்.. மதிய உணவு இடை வேளையின் போது படித்தேன். டென்ஷன் போய்விட்டது. என் வீட்டில் தான் இப்படி என நினைத்தேன்.. அப்பாடா ஒரு துணை கிடைத்தது. ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இராகவன், நைஜிரியா

குசும்பன் October 16, 2008 at 8:17 AM  

//Raghavan said...

வேலை டென்ஷன்.. மதிய உணவு இடை வேளையின் போது படித்தேன். டென்ஷன் போய்விட்டது. என் வீட்டில் தான் இப்படி என நினைத்தேன்.. அப்பாடா ஒரு துணை கிடைத்தது. ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இராகவன், நைஜிரியா//

லக்கி நைஜிரியாவில் தமிழ் படிக்கும் ஆளை தேடிக்கிட்டு இருந்திங்கள்ளே இங்க வந்து வசமா மாட்டிக்கிட்டாரு பாருங்க. :)))

ச்சின்னப் பையன் October 16, 2008 at 8:19 AM  

Friends - Replies to your comments by 9.30am EST. Thanks

ராஜ நடராஜன் October 16, 2008 at 8:20 AM  

கெக்கே பிக்கே :)

இப்பத் தெரியுதா நான் ஏன் பதிவுகளுக்கு பின்னூட்டம் போடறதில்லைன்னு:)

murugesan, singapore,  October 16, 2008 at 8:20 AM  

யப்பா மெசேஜ் விட கொளந்த போடோ சூபரப்பு...

ஜே கே | J K October 16, 2008 at 8:33 AM  

//குசும்பன் said...

//2. துவைக்க வேண்டிய துணிகளையெல்லாம் ஒழுங்கா ரூம்லே இருக்கற கூடையிலே போடுங்க.//

இப்படி சொன்னா துணி துவைப்பது யாரோ என்பது போல் இருக்கு.
துவைச்ச துணிய ஒழுங்கா காயப்போடுங்க, சுருக்கம் இல்லாம அயன் செஞ்சு மடிச்சு வையுங்க இது எல்லாம் கிடையாதா?//

எல்லாம் அனுபவமானே???

ஜே கே | J K October 16, 2008 at 8:35 AM  

//துவைக்க வேண்டிய துணிகளையெல்லாம் ஒழுங்கா ரூம்லே இருக்கற கூடையிலே போடுங்க.//

இப்படியா இல்ல

கூடைல இருக்கிற துணியெல்லாம் ஒழுங்கா துவைச்சு போடுங்க அப்படினு சொன்னாங்களா???

ஜே கே | J K October 16, 2008 at 8:37 AM  

//ங்க சொல்ற அறுவை ஜோக்குக்கெல்லாம் என்னாலே சிரிக்க முடியாது. அதுக்கு வேறே ஆளை பாருங்க.

இப்படியெல்லாம் என்னோட தனிமனித சுதந்திரத்திலே தலையிடறாங்க.//

நீங்க கொடும படுத்துறது நிறுத்துங்க மொதல்ல...

rapp October 16, 2008 at 8:40 AM  

உங்க குழந்தை செம க்யூட்.

VenkatSatheesh,  October 16, 2008 at 9:10 AM  

Super....Vidungapa....Veetukku veedu vasappadi

Kusumban Pugundu vilayadittar

Venkat Satheesh

Raghavan,  October 16, 2008 at 9:18 AM  

//லக்கி நைஜிரியாவில் தமிழ் படிக்கும் ஆளை தேடிக்கிட்டு இருந்திங்கள்ளே இங்க வந்து வசமா மாட்டிக்கிட்டாரு பாருங்க. :)))//

குசும்பனாரே.. இப்போதுதான் என்னை பார்க்கின்றீர்களா.. ரொம்ப நாளாகவே நான் இந்த விளையாட்டில் இருக்கின்றேனே.. கவனிக்கவில்லையா.. ரொம்ப மோசம்...

ச்சின்னப் பையன் October 16, 2008 at 9:25 AM  

வாங்க பரிசல் -> ஹிஹி. முதல்லே எல்லோரையும் அடங்கச் சொல்லுங்க. நானும் அடங்கறேன்.... :-))

வாங்க விக்னேஸ்வரன் -> சிரிங்க. சிரிங்க... இப்பவே நல்லா சிரிச்சிக்கோங்க.... :-)))

வாங்க வெண்பூ -> அவ அழகுலே மட்டும் என்னாட்டம்.... :-)))

வாங்க சுல்தான் ஐயா -> அவ்வ்வ்வ்..... நன்றிங்க.... :-))

Kannan October 16, 2008 at 9:32 AM  

இது அப்பாவோட ரத்தமிலே... அதன் குழத்தை இப்படி சொல்லியிருக்கு.

ஆனாலும், குழந்தை மிக அழகு!!!

நண்பன் - ரங்கோலி கண்ணன், இந்தியா.

dharshini October 16, 2008 at 10:32 AM  

ungalamathiri azhaga irundha?! paravalla........nalliku padhivula unga photo serthu irruka mathiri podunga.....
mattikitingala? :-(

தமிழ் பிரியன் October 16, 2008 at 11:18 AM  

ஆகா.. இந்த கொடுமை எல்லாம் நடக்குமா?... பயமுறுத்தாதீங்கப்ப... எனக்கும் இந்த பழக்கமெல்லாம் இருக்கு.

தமிழ் பிரியன் October 16, 2008 at 11:19 AM  

///ச்சின்னப் பையன் said...

வாங்க வெண்பூ -> அவ அழகுலே மட்டும் என்னாட்டம்.... :-)))///
காமெடி, கீமெடி பண்ணாதீங்க... நாங்க சீரியஸா பேசிக்கிட்டு இருக்கோம்ல

ச்சின்னப் பையன் October 16, 2008 at 11:22 AM  

வாங்க குசும்பன் -> சூப்பர் கமெண்ட்ஸுக்கு நன்றி... உங்க டச் பளிச்சுனு தெரியுது.... அவ்வ்வ். இதுக்கும் ஏதாவது எதிர்பின்னூட்டம் போட்டுடப்போறீங்க.... :-))))

வாங்க நைஜிரியா ராகவன் -> சேம் ப்ளட்டா? ஹாஹா... :-))

வாங்க ராஜ நடராஜன் -> ஹாஹா... சூப்பர்.... :-))

வாங்க முருகேசன் -> நன்றிங்க....

ச்சின்னப் பையன் October 16, 2008 at 11:38 AM  

வாங்க ஜேகே -> அவ்வ்வ்.. எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லமுடியுமாண்ணே???...:-)))

வாங்க ராப், வெங்கட்சதீஷ், ராதாகிருஷ்ணன் ஐயா, சிவா, விஜய் -> நன்றி...

ச்சின்னப் பையன் October 16, 2008 at 11:40 AM  

வாங்க கண்ணன் -> நன்றிங்க...

வாங்க தர்ஷிணி -> ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு?????? காக்கைக்கும் தன் மூஞ்சி பொன் மூஞ்சிதானுங்களே....:-)))

வாங்க தமிழ் பிரியன் -> அவ்வ்வ்..... :-)))

வெண்பூ October 16, 2008 at 11:50 AM  

//
தமிழ் பிரியன் said...
///ச்சின்னப் பையன் said...

வாங்க வெண்பூ -> அவ அழகுலே மட்டும் என்னாட்டம்.... :-)))///
காமெடி, கீமெடி பண்ணாதீங்க... நாங்க சீரியஸா பேசிக்கிட்டு இருக்கோம்ல
//

அட விடுங்க தமிழ்.. அவரு பொய் சொல்றாருன்றது குழந்தை அழகா இருக்குறப்பவே தெரியலயா? பாவம் சொல்லிட்டு போகட்டும் விடுங்க :))

பிரேம்ஜி October 16, 2008 at 11:57 AM  

She is so Cute.

PremG and Thangamani.

நல்லதந்தி October 16, 2008 at 12:29 PM  

விடுங்க சார்!.எவ்வளவோ பாத்தாச்சி இதெ அடக்க வழி பாக்க மாட்டோமா?
பி.கு(முதெல்லே திருஷ்டி சுத்திபோடுங்க! அப்புறமா மத்ததை பேசிக்கலாம்!)

அதிஷா October 16, 2008 at 1:32 PM  

கலக்கல் தலைவா..

புதுகை.அப்துல்லா October 16, 2008 at 3:44 PM  

பாப்பா எவ்ளோ அழகு! நல்லவேளை எங்க அண்ணி மாதிரி பொறந்துருச்சு

:))))))

புதுகை.அப்துல்லா October 16, 2008 at 3:46 PM  

என்னோட முந்தைய பின்னூட்டத்திற்கு பதிலா " அறிவுவுல என்னைய மாதிரின்னு சொல்லுவீங்க, ஆனா அது எவ்வளவு பெரிய பொய்யின்னு உங்க மனசாட்சிக்கே தெரியும்.

( அண்ணே! இன்னைக்கு வேற யாரும் மாட்டலண்ணே :)

துளசி கோபால் October 16, 2008 at 4:38 PM  

ஹைய்யோ..........

எனக்கு 'அந்த மாமியாரை' உடனே அனுப்பிவைக்கவும். உடனடித் தேவையில் இருக்கேன்.

ச்சின்னப் பையன் October 16, 2008 at 5:44 PM  

வாங்க வெண்பூ -> அவ்வ்வ்....

வாங்க பிரேம்ஜி -> நன்றி உங்களுக்கும் உங்க தங்ஸுக்கும்..

வாங்க நல்லதந்தி, அதிஷா -> நன்றி...

வாங்க அப்துல்லா -> அவ்வ்வ். எல்லாம் வர்ற புதன் வரைக்கும்தான். அன்னிக்கு தீபாவளி ரிலீஸா என் படத்தை வலையேத்தறேன்..... :-)))

வாங்க துளசி மேடம் -> நன்றிங்க.... :-)))

தாரணி பிரியா October 17, 2008 at 12:38 AM  

என்ன பண்ணறது ? அப்பா இந்த மாதிரி ச்சின்ன பையனாவே இருந்தா பொண்ணு இப்படித்தான் விவரமா இருக்கு வேண்டியிருக்கும்.

அப்புறம் உங்க பொண்ணு அழகில மட்டுமில்ல அறிவுல கூட அவங்க அம்மா மாதிரிதான். எத்தனை வெவரமா இருக்காங்க.

Anonymous,  October 17, 2008 at 3:24 AM  

அழகு :)

அத்திரி October 17, 2008 at 5:15 AM  

சூப்பர். என் வீட்டுல இனிமே தான் ஆரம்பமாகும்னு நினைக்கிறேன்.

வால்பையன் October 17, 2008 at 9:53 AM  

லேட்டா வந்ததுனால குசும்பன் முந்தீட்டார்

வால்பையன் October 17, 2008 at 9:53 AM  

ஆனாலும் நான் தான் 50

ச்சின்னப் பையன் October 17, 2008 at 10:01 AM  

வாங்க ஜி, தூயா, அமுதா -> நன்றி..

வாங்க தாரணி பிரியா -> அவ்வ்வ்...

வாங்க அத்திரி -> எஞ்சாய் பண்ணுங்க... :-))

வாங்க வால் -> லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா 50 போட்டுட்டீங்க.... :-))

சந்தனமுல்லை October 17, 2008 at 10:26 AM  

ஹாஹ்ஹா! சூப்பர்!!

nawab October 18, 2008 at 5:20 AM  

idu paravayillai, yen magandhan yen manaivikku dress select pannuvan(vayasu 4.60), oru naal veetukku adutha kadaiku lungi anindu poi vandaduku yen magal kettaal, lungi yellam pottukitu veliya pogadinga yenakku shame.

nawab October 18, 2008 at 5:21 AM  

idu paravayillai, yen magandhan yen manaivikku dress select pannuvan(vayasu 4.60), oru naal veetukku adutha kadaiku lungi anindu poi vandaduku yen magal kettaal, lungi yellam pottukitu veliya pogadinga yenakku shame.

ச்சின்னப் பையன் October 20, 2008 at 12:15 PM  

வாங்க சந்தனமுல்லை -> நன்றி...

வாங்க நவாப் -> ஹாஹா... ஷேம் ஷேம் பப்பி ஷேம் அப்படின்னுட்டாங்களா??????

புதுகைத் தென்றல் December 8, 2008 at 5:54 AM  

உங்க எதிர்காலம் ப்ரகாசமா தெரியுது.

Poovaragavan sheela,  May 24, 2010 at 4:01 AM  

Mikka nanrri, Ennaip pole oruvani kandatharkku

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP