Friday, October 17, 2008

நெருப்பில்லாமேகூட புகையும்...!!!

ஊரு விட்டு வரும்போது அம்மா - வாரத்துக்கொரு தடவை எண்ணைய் தேச்சி குளின்னு சொன்னா மாதிரியே - வண்டி வாங்கும்போது, மூணு மாசத்துக்கு ஒருதடவை வண்டிக்கு எண்ணைய் மாத்தணும்னு நண்பர்கள் சொன்னாங்க.

அதேமாதிரி கடந்த ரெண்டு வருஷமா எண்ணைய் மாத்தற விஷயம் அமைதியா நடந்துக்கிட்டிருக்கும்போது, போன மாதம் ஒரு சம்பவம் நடந்து போச்சு. அன்னிக்கு நான் எண்ணைய் மாத்தின விஷயம் இந்த ஊரெல்லாம் தெரிஞ்சி - எல்லோரும் ரொம்ப ஆச்சரியமா பாத்தாங்க. இதுக்கெல்லாம் காரணமாயிருந்த (எண்ணைய் மாத்தின) அந்த மெக்கானிக்குக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கேன்.

சரி. விஷயத்துக்கு வர்றேன்.

அன்னிக்கு கார்த்தாலே 10 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட். (இங்கே எல்லாத்துக்கும் அப்பாயிண்ட்மெண்ட்தான்). அரை மணி நேரத்துலே எண்ணைய் மாத்தற வேலை முடிஞ்சிடுச்சு. நானும் வண்டியை உருட்டிக்கிட்டு அலுவலகத்திற்கு வந்துட்டேன் (சுமார் 2 மைல்கள்).

தினமும் அலுவலகத்தில் நுழையும்போது அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் பல சூப்பர் கார்களைப் பார்த்து என் காதில் புகை வருவது வழக்கம். ஆனால், அன்னிக்குன்னு பார்த்து என் காதில் மட்டுமல்லாது, என் காரிலிருந்தும் புகை வரத்துவங்கியது. சரி, கொஞ்ச நேரத்தில்
சரியாகிவிடும்னு பார்த்தால், அந்த புகை நிற்கவேயில்லை.

என்னடான்னு முன்னாடி பேனட்டைத் திறந்து பார்த்தால் - பொது இடத்திலே அடிக்கமுடியாதுன்றதாலே, ஏகப்பட்ட பேர் என் காருக்குள்ளே உக்காந்து தம் அடிக்கறாப்லே - வண்டிக்குள்ளே பயங்கர புகை. இன்னும் சிறிது உற்றுப் பார்த்தால் - எண்ணைய் போடும் குழாயின் மூடியே காணோம். அதன் வழியாக எண்ணைய் வழிந்து - வண்டிக்குள்ளே விழுந்து ஒரே புகைமூட்டம். அந்த மூடி உள்ளேயே எங்கேயாவது விழுந்திருக்கிறதா என்று பாப்போம்னு பாத்தால், எங்கேயுமே காணோம். மெக்கானிக் அந்த குழாயை மூடாமலேயே விட்டிருக்கிறார்.

அவருக்கு தொலைபேசி விஷயம் சொன்னால் - அவரோ மிகவும் கூலாக - மறுபடி வண்டி கொண்டுவாங்க, சரி செய்துடலாம்னு சொல்லிட்டாரு. இப்படி புகை வருதே - ஏதும் பிரச்சினை வராதான்னால், அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. புகை அடங்கினப்புறம் வாங்க - அப்படின்னு கட் பண்ணிட்டாரு. சரின்னு சிறிது நேரம் கழிச்சி, மறுபடி வண்டி எடுத்துக்கிட்டு மெதுவா உருட்டிக்கிட்டு போனேன். அப்பவும் புகை அடங்கவேயில்லை.

ஏதோ ஒரு சினிமாவில் ஒரு பாட்டு சீன் வரும் - ஹீரோவும் ஹீரோயினும் ஒரு காரில் (ஸ்லோ மோஷனில்) பாட்டு பாடிக்கிட்டே போவாங்க. சுத்தி நிறைய பேர் வெள்ளை உடையில் டான்ஸ் ஆடுவாங்க - அந்த இடத்திலே பயங்கர புகை போட்டு வெச்சிருப்பாங்க. கிட்டத்தட்ட அதே காட்சி மாதிரிதான் நானும் கார் ஓட்டிக்கிட்டு போனேன். தெருவில் எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். ஒரே ஒரு ஹீரோயின் மட்டும்தான் பாக்கி.

அப்படி புகையோடவே அந்த கடைக்கு மறுபடி போனா, அந்த மெக்கானிக் சிரிச்சிக்கிட்டே - "ஹிஹி, உங்க எண்ணைக்குழாயின் மூடி இங்கேதான் இருக்கு. நான் அதை மூட மறந்துட்டேன். ஒரு அஞ்சு நிமிஷம் உக்காருங்க. சுத்தம் செய்து கொடுத்திடறேன்" - அப்படின்னு
சொன்னா மாதிரி செய்து கொடுத்தார்.


ஆனாலும், காரின் உள்ளே விழுந்திருந்த எண்ணையின் விளைவால், அடுத்த ரெண்டு மூணு நாள் புகையோடவே வண்டி ஓட்டிக்கிட்டிருந்தேன்.

அதான் மேட்டரு...

அப்போ நெருப்பில்லாமேகூட புகையும்தானே???

20 comments:

Anonymous,  October 17, 2008 at 6:19 AM  

me the first

Anonymous,  October 17, 2008 at 6:23 AM  

//ஏதோ ஒரு சினிமாவில் ஒரு பாட்டு சீன் வரும் - ஹீரோவும் ஹீரோயினும் ஒரு காரில் (ஸ்லோ மோஷனில்) பாட்டு பாடிக்கிட்டே போவாங்க.//

அப்போ நீங்க நெறைய பிகரு கூட டூயட பாடின்டே போனேளா?

வெண்பூ October 17, 2008 at 6:28 AM  

ஹா..ஹா..ஹா.. ரசித்து சிரித்தேன்..

எனக்கும் இதே மாதிரி ஆனது. ஆயில் மாத்தி கொஞ்ச தூரம் போனதும் ஒரே தீசல் நாத்தம். ஆஹா.. ஆயிலை மாத்துறன்னு சொல்லி இஞ்சினையே மாத்த வெச்சிடுவானுங்க போலன்னு நெனச்சி போன் பண்ணினா அவன் கூலா "கொஞ்ச தூரத்துக்கு அப்படித்தான் இருக்கும்" அப்படின்றான்.. நல்லா தெரியுது, அவன் ஆயிலை இஞ்சின்ல ஸ்பில் பண்ணினதுதான் பிரச்சினைன்னு. ரெண்டு நாளா அந்த கருகுற நாத்ததோடயே காரை ஓட்டிகிட்டு இருந்தேன் (கெட்ட கெட்ட வார்த்தையில அவனை திட்டிகிட்டு)

தமிழன்...(கறுப்பி...) October 17, 2008 at 9:15 AM  

புகையும் புகையும்...:)

வால்பையன் October 17, 2008 at 9:49 AM  

//வண்டி வாங்கும்போது, மூணு மாசத்துக்கு ஒருதடவை வண்டிக்கு எண்ணைய் மாத்தணும்னு நண்பர்கள் சொன்னாங்க.//

டேங்குல பெட்ரோல் போடனும் அத சொன்னாங்களா

வால்பையன் October 17, 2008 at 9:51 AM  

//ரெண்டு மூணு நாள் புகையோடவே வண்டி ஓட்டிக்கிட்டிருந்தேன்.//

நீங்க புகைவண்டி ஓட்டுனர் ஆகிட்டிங்க

ச்சின்னப் பையன் October 17, 2008 at 9:54 AM  

வாங்க ராஜா -> ஆமா நீங்கதான் பஷ்டு.... :-)))

வாங்க ராஜாஹரிசந்திரா -> ஹிஹி... தினமும் கனவுலே அதானே நடக்குது... :-))

வாங்க வெண்பூ -> நன்றி..

வாங்க தமிழன் -> நன்றி..

Anonymous,  October 17, 2008 at 11:41 AM  

நல்ல வேளை.

அன்புமணி இந்தப் பதிவப் பார்க்கல. நீங்க தப்பிச்சீங்க.

குடுகுடுப்பை October 17, 2008 at 12:02 PM  

//தினமும் அலுவலகத்தில் நுழையும்போது அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் பல சூப்பர் கார்களைப் பார்த்து என் காதில் புகை வருவது வழக்கம். //

கார் வாங்க கடன் கொடுத்தவன் காதுலயும் புகை வருதாம் இப்போ.

நசரேயன் October 17, 2008 at 4:04 PM  

நீங்க காருக்கு ஆவி பிடுச்ருக்கலாம் :):)

ச்சின்னப் பையன் October 17, 2008 at 5:54 PM  

வாங்க வால் -> ஹாஹா... புகை வந்ததால் அது புகைவண்டியா... ச்சே இது எனக்கு தோணாமெ போயிடுச்சே!!!!

வாங்க வேலன் ஐயா -> ஆமா. 200 ரூ வீதம் ஒரு 10 பேருக்காவது நான் அபராதம் கட்டியிருக்கணும்..... :-)))

வாங்க குடுகுடுப்பை -> இந்தியன் எக்கானமி, இந்தியன் எக்கானமி... :-))

வாங்க விஜய், நசரேயன், ராதாகிருஷ்ணன் ஐயா -> எல்லோருக்கும் நன்றி...

ILA October 17, 2008 at 8:26 PM  

yoov, ஏக நக்கலு..:) பதிவர்களுள்ல எதையாவது பொகைய வெக்கனும்னு நினைக்கிற உங்க நினைப்புக்கு உங்க காரே ஒரு உதாரணம்.

ILA October 17, 2008 at 8:26 PM  

yoov, ஏக நக்கலு..:) பதிவர்களுள்ல எதையாவது பொகைய வெக்கனும்னு நினைக்கிற உங்க நினைப்புக்கு உங்க காரே ஒரு உதாரணம்.

பரிசல்காரன் October 17, 2008 at 11:08 PM  

//வால்பையன் said...

//ரெண்டு மூணு நாள் புகையோடவே வண்டி ஓட்டிக்கிட்டிருந்தேன்.//

நீங்க புகைவண்டி ஓட்டுனர் ஆகிட்டிங்க/

:-)))))))))

ச்சின்னப் பையன் October 20, 2008 at 12:13 PM  

வாங்க இளா -> அவ்வ்வ்...

வாங்க பரிசல் -> சிரிப்பானுக்கு நன்றி...

rapp October 22, 2008 at 7:31 AM  

//தினமும் அலுவலகத்தில் நுழையும்போது அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் பல சூப்பர் கார்களைப் பார்த்து என் காதில் புகை வருவது வழக்கம். ஆனால், அன்னிக்குன்னு பார்த்து என் காதில் மட்டுமல்லாது, என் காரிலிருந்தும் புகை வரத்துவங்கியது. //

super:):):)

//என்னடான்னு முன்னாடி பேனட்டைத் திறந்து பார்த்தால் - பொது இடத்திலே அடிக்கமுடியாதுன்றதாலே, ஏகப்பட்ட பேர் என் காருக்குள்ளே உக்காந்து தம் அடிக்கறாப்லே - வண்டிக்குள்ளே பயங்கர புகை. //

:):):)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP