கார் ஓட்டும்போது ஏற்படும் சிறு பிரச்சினை.. தீர்வு தேவை!!!
இந்தியாவில் இருக்கும்போது எனக்கு இந்த பிரச்சினை இருந்ததில்லை. ஏன்னா, அங்கே நான் கார் ஓட்டினதேயில்லை. அமெரிக்கா வந்தும்கூட கார் வாங்கி சில நாட்களுக்கு இது ஒரு பிரச்சினையாகவே எனக்கு படவில்லை. ஆனால், சமீபகாலமாக ஒரே குழப்பமாக இருக்கிறது. இதை படிக்கும் லட்சக்கணக்கான நண்பர்கள் எனக்கு ஒரு நல்ல தீர்வைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சரி சரி. பிரச்சினை என்னன்னே சொல்ல மாட்றியேப்பான்னு பொறுமையை இழக்கறவங்களுக்கு - ஆல் சைலண்ட்.. நீங்களும் சைலண்ட்...
கார் வாங்கி சில நாட்களுக்கு இரண்டு கைகளாலும் ஸ்டியரிங்கைப் பிடித்து ஓட்டிக்கொண்டிருப்பேன். ஆனால், இப்போதெல்லாம் ஒரே கையே போதுமென்றிருக்கிறது. பிரச்சினை பிரச்சினைன்னு முதல்லேந்து சொல்லிக்கிட்டிருக்கேனே - அது என்னென்னா - வண்டி ஓட்டும்போது அந்த சும்மா இருக்கிற கையை (ஸ்டியரிங் பிடிக்காத கை) வைத்துக்கொண்டு என்ன செய்வது? அவ்ளோதான்.
தினமும் அலுவலகம் செல்லும்போதும், திரும்ப வரும்போதும் பயங்கர தொல்லையாக இருக்கிறது. என்னால் செய்யமுடிந்த சில செயல்களும் அதன் விளைவுகளும் பின்வருமாறு.
1. மீசையை முறுக்குதல்: இடது கையால் வண்டி ஓட்டும்போது, வலது கையை மீசை மேல் வைத்து, அதை முறுக்கி முறுக்கி முறுக்குவது சூப்பராக இருக்கிறது. அடிக்கடி முன்னால் இருக்கும் சிறு கண்ணாடியில் பார்த்தவாறே, மீசையை நேராக்குவது நல்ல பொழுதுபோக்கு.
ஆனால், மீசை நன்றாக முறுக்கியாகிவிட்டது என்ற நிலை வரும்போது அதன் மேல் கை வைக்க மனம் வரவில்லை. அப்பேர்ப்பட்ட சமயத்தில் அந்த கையை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
2. பாட்டுக்கு தாளம் போடுவது: MP3 ப்ளேயரில் ஓடும் பாட்டுக்கு தாளம் போடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு ரெண்டு மூணு பாட்டுக்கு மேல் தாளம் போடுவது போரடிக்கிறது. கை வலிக்கிறது. அதனால், இதை என்னால் தொடர முடியவில்லை.
3. அலைபேசியில் பேசுவது: வண்டி ஓட்டும்போது கையில் அலைபேசி வைத்துக்கொண்டு பேசுவதைப் பார்த்தால், மாமா வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவார். Handsfreeயில் பேசலாமென்றால், மறுபடி அந்த கை சும்மாதானே இருக்கும்?
4. வண்டிக்குள் சுத்தம் செய்வது: கீழே கிடக்கும் பேப்பர், சில்லறை ஆகியவற்றை சுத்தப்படுத்தலாம். ஆனால், வீடாயிருந்தாலும், காராயிருந்தாலும் - சுத்தம் செய்ய வேண்டுமென்றாலே எனக்கு தூக்கம் வந்துவிடுமென்பதால், அதையும் என்னால் செய்ய முடியவில்லை.
5. நகம் கடிப்பது: இரு கைகளிலும் உள்ள நகங்களை கடித்துத் துப்பிவிட்டால் மறுபடி அவை வளர ஒரு வாரமாவது ஆவதால், இதை தினமும் செய்ய முடியவில்லை. கால் நகத்தை என்னால் கடிக்க முடியவில்லை. வேகமாக நகம் வளர ஏதாவது மருந்திருந்தால் தேவலை.
இதைத்தவிர புத்தகம் படிப்பது, சுடோகு போடுவது, மடிக்கணிணியில் ஏதாவது அடிப்பது - இதெல்லாம் வண்டி ஓட்டும்போது என்னால் முடியாத செயல்களென்பதால் இவைகளையும் செய்யமுடியவில்லை.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்னோட பிரச்சினை என்னவென்று. இதற்கு ஏதாவது ஒரு தீர்வு இருந்தால், அதற்காக தயவு செய்து தற்போதைய ட்ரெண்டின்படி தந்தியெல்லாம் அடிக்காமல், இங்கே பின்னூட்டத்திலேயே சொல்லவும்!!!.
41 comments:
//ஜோசியம் பார்க்கலாம்//
//ஜென் தத்துவத்தின் படி ஒரு கை ஓசை சாத்தியமா என்று பார்க்கலாம்//
//தலையை வாரலாம்//
//முடியை கோதிவிடலாம்//
//விரல்களை எண்ணிப் பார்க்கலாம்//
//அப்படியே ஒற்றைக்கை போஸ் (கண்ணத்தில் வைத்தபடி) செய்து பார்க்கலாம்//
raja - bgl
ச்சின்னப்பசங்களை மாதிரி கட்டை விரலை சூப்பலாம்..
வழியில யாராவது அழகான வெள்ளக்கார ஃபிகர் லிஃப்ட் கேட்டா குடுக்கலாம். பக்கத்து சீட்ல உட்கார வைக்கலாம்.
டிஸ்கி: அவசரப் பட்டு இரண்டு கைகளயும் விடுவது விபத்துக்கு வழிவகுக்கும்
மீ த பர்ஸ்ட்
raja - bgl
கியர் மேல கைய வெச்சிக்கலாம்.. (இது கொஞ்சம் டீசண்டா இருக்கோ..)
அதுவும் இல்லைன்னா....
.
.
.
.
.
.
.
.
.
.
.
வேணா விடுங்க.. தமிழ்மணத்துல சென்சார் பண்ணிடுவாங்க... :)))))
அடுத்த பதிவு என்னா? ஹைவேஸ்ல ஓட்டும்போது க்ரூயிஸ் கன்ட்ரோல்ல போட்டுட்டேன் அதுனால காலை எங்க வெக்கிறதுன்னு தெரியலன்னு கேக்கப்போறீங்களா????
கை ரேகை எல்லாம் நல்லா இருக்கான்னு பாருங்க
நகத்தில பூ போட்டிருக்கான்னு செக் பண்ணுங்க
கையை கிள்ளி விட்டு எத்தனை நிமிஷம் வலிக்குதுன்னு பாருங்க.
மணிக்கட்டுல ஒரு ரப்பர் பேண்ட் போட்டுகிட்டு அந்த கை விரலாயே கழட்ட பாருங்க
ரெண்டு கார்களுக்கு நடுவுல உட்கார்ந்து கொண்டு ரெண்டு கார்கள் ரெண்டு கையால் ஓட்டலாம்.
எப்படி..................?
//தண்ணி 'தெளிச்சி' விட்டா போறாதுன்னு, குடத்தை அப்படியே தலையிலே கவுத்துட்டாங்க தங்கமணி!!! //
விவரமானவங்க.
சும்மா இருக்கற கையை மடக்கி நாக்கல முட்டியத் தொட முயற்சி பண்ணிட்டே இருங்க.
வண்டிய எதுலயும் மோதிடாதிங்க.
பார்க்கறவங்கள் கேனயன் என நினைத்தால் உண்மைதானே! பரவாயில்ல!ன்னு விட்டுடனும்.
கெளம்பும்போதே ஒரு வாட்டர் பாட்டில், அப்புறம் ஒரு கப்ல கொஞ்சம் மண்ணை எடுத்துக்கங்க. மீசைய முறுக்கி விட்டப்புறம், கொஞ்சம் தண்ணி எடுத்து, அதை அந்த மண்ணிருக்கும் கப்ல விட்டு குழைச்சுக்கிட்டு மீசைல நல்லா தடவிக்கங்க. பக்கத்துல ஏதாவது பேப்பர் இருந்தா அதை வெச்சு மீசைக்கு வீசி, வீட்டுக்கு போறவரை நல்லா காயவைங்க. வீட்டுல உங்க தங்கமணி உங்களை பார்த்து, சரி இன்னைக்குக் கோட்டாவுக்கு இவரு வேற எங்கயோ வாங்கியாச்சுன்னு விட்டுருவாங்க. இதையே காலையிலும் செய்யலாம், ஆபீசில், தங்கமணிகிட்ட இவரு ஏற்கனவே வாங்கியாச்சுன்னு அவங்களும் விட்டுருவாங்க:):):) ஓகே?
Sorry guys.. I will reply at 12 Noon EST today.. Busy now.... :-)))
கார் ஓட்டும் போது பக்கத்தில பீர் பாட்டில் பொட்டிய வெச்சிக்குங்க,ஒரு கையில பீரு இன்னொரு கையில ஸ்டியரிங்கு! இது செட்டாவுமா தலை! :)
எப்படி எப்படி இப்படியெல்லாம் தோனுது
இவன்
WWW.TAMILKUDUMBAM.COM
பாருங்க ரசிங்க நீங்களூம் அசத்துங்க
அங்க ஆட்டோமெடிக் கியர்தானே.அப்போ ஒரேக்கால் போதும் ஆக்ஸிலேட்டரையும்,ப்ரேகையும் பயன்படுத்த.அப்போ,வெட்டியா இருக்க இடதுகாலை என்னப் பண்றீங்க?? அமெரிக்கால இடதுபக்கத்தில் டிரைவர் சீட் என்பதால், பெரும்பாலும் இடதுகையும்,காலும் வெட்டியா இருக்கும்.ஆகவே ஜன்னலைத்திறந்து இடதுக்கையால் வெளியே தெரியும் அனைவருக்கும் டா...டா...காட்டவும்...
draw a picture in air that is too useful to time pass
எல்லோருக்கும் -> ஹாஹா.... இன்னிக்கு எல்லோருமே சூப்பர் ஐடியாவா கொடுத்திருக்கீங்க... தொடர்ச்சியா சிரிச்சிக்கிட்டே இருக்கேன்..:-))))))
வாங்க ராஜா -> முடி கோதிவிடலாமா? யாருக்கு?...
வாங்க வெண்பூ -> டர்டி பாய்.... இப்படில்லாமா செய்வது?????? :-))))
வாங்க தாரணி பிரியா -> கண்டிப்பா. கிள்றது பக்கத்துலே இருக்கறவங்களதானே??????
வாங்க மதுரை நண்பன் -> நான் என்ன ஜே.கே.ரித்தீஸா அப்படியெல்லாம் ரெண்டு வண்டியை ஓட்ட?????....:-)))
வாங்க சுல்தான் ஐயா -> முதல் வரவுக்கு நன்றிங்க.... இப்பவே எல்லாரும் அப்படித்தான் (கே***) நினைக்கிறாங்க..... :-((((
வாங்க ராப் -> நெம்ம்ம்ம்ம்ம்ப ஆராய்ச்சி பண்ணி எழுதியிருக்கீங்கன்னு நினைக்கறேன்..... நிறைய டாம் அன்ட் ஜெர்ரி பாப்பீங்களோ???????
வாங்க நல்ல தந்தி -> நிஜமாவே நீங்க நல்ல்ல்ல்ல தந்திதான். அப்படி செஞ்சா என்னை ஒரேடியா உள்ள்ள்ள்ள்ள்ளே வெச்சிடுவாங்க...... :-))))))
வாங்க தமிழ்குடும்பம் -> நாங்களும் தமிழ்குடும்பம்தாங்க.... :-))) அதனால்தான் இப்படியெல்லாம் யோசிக்க தோணுது..... :-)))
வாங்க மோகன் -> இடது கையால் டா டா சரி... இடது காலால், மைக்கேல் பீம்பாய் மாதிரி ரோட்லே தேச்சிக்கிட்டே போலாமா??????....:-)))))
வாங்க அருள் -> ஏற்கனவே நான் சொல்றதையெல்லாம் தண்ணியிலே எழுதணும்னு 'அவங்க' சொல்றாங்க... இதிலே காத்துலே வேறே எழுதணுமா????? அவ்வ்வ்....... :-))))
நல்லா ஸ்பீட்'ஆ போகும்போது இன்னொரு கையாள hand brake'அ புடிச்சி இழுக்கலாம். கார் ஒரு 360 டிகிரி சுத்தும். சூப்பர்'ஆ இருக்கும். -- McChamy
நல்ல கேள்வி. இதன் தீர்வை அறை போட்டு தீவிரமாக ஆராய்ந்தோமானால், கீழ்க்கண்ட முடிவுகளுக்கு நம்மால் வர முடியும்:
முடிவு 1: தலையில் இருந்து ஒரு முடியை எடுத்து (இன்னும் இருந்தால்!) அதை ஒரு கையைப் பயன்படுத்தி நேராக்கப் பார்க்கலாம்.
முடிவு 2: வெளியே செல்லும் வெள்ளைக்கார அக்காக்களுக்கு டாட்டா காட்டலாம் (பின் விளைவுகள் ஆளுக்கு ஆள் மாறுபடும்!)
முடிவு 3: மடிக்கணிணியைத் திறந்து, தமிழ்மண பதிவுகளுக்கு ஒற்றைக் கையில் பின்னூட்டமிடலாம் (முடிந்தால் அந்த பயங்கர அனுபவத்தை பதிவாகப் போட்டு அதை சூடான இடுகைகளில் கொண்டு வரலாம்!)
என்ன மாதிரி ஆக்சிலேட்டர் வயர கைல இழுத்து புடிச்சிக்குங்க.
எப்டீங்கண்ணா நம்ம ஐடியா?
சும்மா இருக்கிற கைய வெட்டிட்டா?
பதிவ விட பின்னூட்டங்க அருமை..சிரிப்பு தாங்கல...
வாங்க மொக்கை -> ஹாஹா... நீங்க ஒரு தடவை செய்து பாத்துட்டு எனக்கு சொல்லுங்க.. நானும் செய்றேன்... சரியா????
வாங்க வீரசுந்தர் -> அவ்வ்வ்... முயற்சி செய்றேன்.... :-)))
வாங்க குருவி -> ஹாஹா.... எவ்ளவோ செய்துட்டோம். இது செய்ய மாட்டோமா....:-)))
வாங்க இளா -> அண்ணா... ஏண்ணா இந்த கொல வெறி உங்களுக்கு?... அமைதி... அமைதி.... அவ்வ்வ்வ் :-))))
Buy a american car instead of civic or camry so it will have nice handrest in the center console.
ஒன்னும் செய்யாமச் சும்மா இருந்தா நல்லது. ரெண்டு கண்ணும் ரோட்டுமேலே நடனும்.
ரத்னேஷ் போட்ட ஒரு பதிவை இன்னும் நீங்க பார்க்கலைன்னு நினைக்கிறேன்(-:
லெப்டுல இண்டிகேட்டர் போடுங்க, ரைட்டுல கை போடுங்க ஆனா ஸ்ரைட்டா போயிட்டே இருங்க. அப்படியே இத மாத்தி மாத்தி பண்ணுங்க போர் அடிக்காது.
மூக்கை நோன்டலாம்
காது நோன்டலாம்
ஒவ்வொரு முடியாக மீசைலுருந்து புடுங்கலாம்
இதுல ஒரு கமெண்டை நீங்க இம்மீடியட்டா டிலீட் பண்ணணும்!
வெண்பூ,,
இரு... இரு... சிஸ்டர்கிட்ட போட்டுக் குடுக்கறேன்!
அநியாயத்துக்கு உங்க மூளை ஓவர் டைம் வேலை பார்க்குதுய்யா.. அதை மொதல்ல அடக்கணும்!
இந்த பதிவை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொண்டு இதை படித்து தலையை சொறியலாம்...
மீசை முறுக்கல் அபாரம் :)
ச்சின்னப் பையன்!உங்க பதிவு படித்ததும் நினவுக்கு வருவது இந்த ஊரின் உட்காரும் பாரம்பரியம் என்ன தெரியுமா? நாம் சப்பணம் போடுற மாதிரி உட்கார்ந்து ஒரு காலை முட்டி வானத்தைப் பார்க்கிற மாதிரி உட்கார்ந்து கொள்வது.சில பேர் காரிலும் இப்படித்தான் சீட் மேலே காலை வைத்து உட்கார்ந்து வலது கால் மட்டும் ஆக்சிலேட்டரையும்,பிரேக்கையும் அமுத்துகிறது.நீங்களும் முயற்சிக்கலாம்.என்ன இந்த ஊரு திர்தாஷா என்னும் நீளமான அங்கி உடையும் அணிந்து கார் ஓட்டினால் இன்னும் வசதியாக இருக்கும்:)
anna... edhu ellam romba over na....
//
குருவி விஜய் said...
என்ன மாதிரி ஆக்சிலேட்டர் வயர கைல இழுத்து புடிச்சிக்குங்க.
எப்டீங்கண்ணா நம்ம ஐடியா?
//
ஹாஹா
:))))))))))))))))))))))))))
வாங்க அனானி -> நன்றி..
வாங்க துளசி மேடம் -> இது வெறும் நகைச்சுவைக்காக போட்ட பதிவுங்க... ஆனாலும், உங்க அட்வைஸுக்கு மிக்க நன்றி....
வாங்க ஜேகே -> ஹாஹா... சூப்பர் ஐடியாவா இருக்கே .... :-))))
வாங்க பாலாஜி -> நீங்க இப்படிதான் பண்றீங்களா!!!!!
வாங்க தறுதலை -> மன்னிக்கவும். உங்க கமெண்டை தூக்கிட்டேன்.... நன்றி...
வாங்க பரிசல் -> நன்றி....
வாங்க ரவி -> ஹாஹா.... :-))
வாங்க ராஜ நடராஜன் -> ஹாஹா... வேஷ்டி அணிந்துகொண்டு இப்படி செய்தா நல்லாயிருக்குமா?????? :-)))
வாங்க அஷோக் -> :-))))
வாங்க சிவா -> நன்றி...
காப்பி குடிக்கலாம்
ஸென்விச் சாப்பிடலாம்
மினி டிவிடி-ல படம் பார்க்கலாம்
தூங்கலாம்
-வீணாபோனவன்
Post a Comment