Thursday, October 23, 2008

நடைப்பயிற்சி செய்வது ரங்கமணிகளுக்கு மிகவும் நல்லது!!!

தினமும் நடைப்பயிற்சி செய்வது எல்லோருக்கும் - குறிப்பாக ரங்கமணிகளுக்கு மிகவும் நல்லது.

ரங்கமணிகளுக்கு மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல் நல்லது?? ரங்கமணியா (திருமணமான ஆணா) இருக்கறவங்க மட்டும் அடுத்த பாராவை படிங்க. அப்படி இல்லாதவங்க பாயிண்ட் #1லேந்து ஆரம்பிங்க...

கீழே பத்து பாயிண்டுகள் கொடுத்திருக்கேன். ஒவ்வொரு பாயிண்டும் 'அதே...'ன்னு முடிஞ்சிருக்கும். நீங்க செய்ய வேண்டியது என்னன்னா... ஒவ்வொரு 'அதே...'வுக்கு பிறகும் 'ரங்கமணி வீட்லே இருந்தா...' அப்படின்னு சேத்து படிச்சிட்டு, சித்த நேரம் விட்டத்தை பார்த்து சிந்தனை பண்ணுங்கோ... அப்புறம் ஒரு பெரிய பெருமூச்சு விட்டுட்டு, அடுத்த பாயிண்டை படிங்கோ...


1) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் - தன்னோட அல்லது தன் அப்பாவோட பிறந்த நாள் நினைவில் இருக்கா? அது என்னிக்கி? - அப்படின்னு கேக்கமாட்டாங்க. அதே...

2) தெருவுலே கிடக்கிற குப்பையை யாரும் சுத்தம் செய்ய சொல்லமாட்டாங்க. அதே...

3) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் - நம்மோட லொடலொடன்னு பேசமாட்டாங்க. அதே...

4) ரெண்டு மூணு நாளா ஷேவ் செய்யலேன்னாக்கூட - எதிர்லே வர்ற யாரும் நம்மை திட்டமாட்டாங்க. அதே...

5) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் - நம்மை சினிமாவுக்கோ, உணவகத்துக்கோ கூட்டிப்போக வேண்டுமென்று வற்புறுத்த மாட்டார்கள். அதே...

6) வழியில் இருக்கும் உணவகத்திலோ, டீக்கடையிலோ - பத்துப் பாத்திரம் தேச்சிட்டுப் போங்க - அப்படின்னு யாரும் தொந்தரவு செய்யமாட்டாங்க. அதே...

7) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் - தன்னோட தலைவகிடு, மேக்கப் இதெல்லாம் சரியாயிருக்கான்னு கேட்டு தொந்தரவு பண்ணமாட்டாங்க... அதே...

8) வழியில் நாம் பார்க்கும் எந்த குழந்தைக்கும் நாம் தலை வாரிவிடவோ, *ட்டி போட்டுவிடவோ, ஆடை மாற்றவோ தேவையில்லை. அதே...

9) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் நம்மகிட்டே - உப்பு, புளி, மிளகாய் இதெல்லாம் ஆயிடுச்சு. வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல மாட்டாங்க. அதே...

10. எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் நம்மகிட்டே - "வெளியே வந்தாகூட என்ன எப்போ பாத்தாலும் தொலைபேசிலே பேசிட்டிருக்கீங்க?. என்கிட்டே கொஞ்ச நேரம் பேசுங்க" - அப்படின்னு சொல்லமாட்டாங்க. அதே...

இப்போ சொல்லுங்க... நடைப்பயிற்சி ரங்கமணிகளுக்கு ரொம்ப நல்லதுதானே???



26 comments:

rapp October 23, 2008 at 8:18 AM  

ஹப்பா, சரியாகிடுச்சா:):):) ரொம்ப நேரமா பின்னூட்டப் பெட்டி திறக்கலை

Anonymous,  October 23, 2008 at 8:24 AM  

//7)எந்த பெண்ணும் - தன்னோட தலைவகிடு, மேக்கப் இதெல்லாம் சரியாயிருக்கான்னு கேட்டு தொந்தரவு பண்ணமாட்டாங்க...//

அப்போ நீங்க பண்ணுவீங்களா.....

rapp October 23, 2008 at 8:25 AM  

ரங்கமணிகள் நடைப்பயிற்சிக்குப் போறது தங்கமணிகளுக்கும் நல்லது, ஏன்னா, கொஞ்ச நேரமாவது தன் வாழ்க்கை இப்படியாகிடுச்சேங்கர கவலைய மறந்து நிம்மதியா இருக்கலாம்ல:):):)

சின்னப் பையன் October 23, 2008 at 10:22 AM  

வாங்க ராப் -> ரொம்ப நேரம் கழிச்சிதாங்க பாத்தேன். 175 பேர் வந்துட்டு போயிட்டாங்க ஆனா ஒரு கமெண்ட் கூட இல்லையேன்னு வெறுத்துட்டேன்... :-((.. பிறகு தமிழ் பிரியன் பதிவ பாத்ததுக்குப் பிறகுதான் சால்வ் பண்ணேன்.... :-))

வாங்க ராஜாஹரிசந்திரா -> அவ்வ்வ்.. நான் மேக்கப்பே போடமாட்டேன்... பிறகு நான் ஏங்க கேக்கப்போறேன்!!!!

விஜய் ஆனந்த் October 23, 2008 at 10:56 AM  

திட்டமிட்டு கண்டனங்களை பதிவு செய்ய விடாமல் பின்னூட்டப்பெட்டியை பூட்டி வைத்த ச்சின்னப்பையர் அங்கிளுக்கு கண்டனங்கள்...

விஜய் ஆனந்த் October 23, 2008 at 10:59 AM  

கஷ்டப்பட்டு தங்கமணிகளை defend பண்ண முயற்சித்த ஆப்பீசருக்கு வாழ்த்துக்கள்!!!

இப்படிக்கு,
நொந்து நூடுல்ஸ் ஆன வாக்கிங் மேன்

குடுகுடுப்பை October 23, 2008 at 11:01 AM  

வடைப்பயிற்சி கூட பண்ணலாம்

மொக்கைச்சாமி October 23, 2008 at 11:15 AM  

rapp'ஐ "me the first" போட விடாமல் பின்னூட்ட பெட்டியை முடக்கி வைத்திருந்த ச்சின்னப்பையனை வன்மையாக கண்டிக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் October 23, 2008 at 11:36 AM  

காய்கறி வாங்க போயிட்டுவாங்கன்னு தொந்தரவு பண்னிட்டு..வாங்கி வந்ததும்..சொத்தை..தொத்தல்னு குற்றம் சொல்லமாட்டாங்க அதே..

Sridhar V October 23, 2008 at 11:46 AM  

//எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் //

உம்ம எதிர்ல பொண்ணுங்க மட்டும்தான் வர்றாங்கப் போல. இல்ல அப்படி நினச்சிகிடுறீங்கப் போல. இப்படியே இருந்தா சீக்கிரம் வீட்டுக்குள்ளேயே 'ஓட்டப்' பயிற்சி ஆரம்பிக்க வேண்டியதுதான் :))

சின்னப் பையன் October 23, 2008 at 12:16 PM  

வாங்க விஜய் -> பிரச்னைன்னே எனக்கு முதல்லே தெரியலே. சரி யாருக்கும் பதிவு பிடிக்கலே போலிருக்குன்னு விட்டுட்டேன்.. :-(((

வாங்க வருங்கால முதல்வர் -> அது சரி... பண்ணலாம் பண்ணலாம்.... :-))

வாங்க மொக்கைச்சாமி -> வேணா அழுதுடுவேன்.....

சின்னப் பையன் October 23, 2008 at 12:18 PM  

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> அப்ப சரி. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.. அவ்வ்வ்... :-))

வாங்க ஸ்ரீதர் நாராயணன் -> ஐயா.. இது ரங்கமணிகளுக்கான பதிவுதானே... அதுதான் இப்படி... நம்ம நண்பர்கள் சில பேர் என்ன செய்வாங்கன்னா - நடக்கும்போது கண்லேயே ஃபில்டர் செஞ்சிடுவாங்க - எதிர்லே வர்ற ஆம்பளைகளையே தெரியாதமாதிரி.... :-)))

ஜே கே | J K October 23, 2008 at 1:11 PM  

எப்படியோ உங்க பிரச்சனையெல்லாம் சொல்லீட்டீங்க.

அதேசமயம் உங்க ரகசியத்தையும் இப்படி பப்ளிக்ல சொல்லீட்டீங்களே, நாளைக்கே யாராவது தங்கமணிகிட்ட போட்டு குடுத்துட்டா???

Anonymous,  October 23, 2008 at 1:30 PM  

நெறையத் தங்கமணிகள் வாக்கிங் போனா திரும்பி வருவாங்கன்னு நிச்சயமில்லை இதப் படிச்சா.

சின்னப் பையன் October 23, 2008 at 6:38 PM  

வாங்க ஜேகே -> அவ்வ்வ். உலக நடைமுறையை சொன்னா, உடனே என் கதைன்னுட்டீங்களே????????

வாங்க தமிழ் பிரியன் -> நன்றி...

வாங்க வேலன் ஐயா -> ஹாஹா... நன்றி..

தாரணி பிரியா October 23, 2008 at 11:52 PM  

இனிமேல் நீங்க வாக்கிங் போகும் போது உங்க தங்கமணியே எதிர்ல வர போறாங்க பாருங்க.


இப்ப என்ன பண்ணுவிங்க?

வால்பையன் October 24, 2008 at 7:26 AM  

உங்களுடைய வாக்கிங் அனுபவம் நல்லாத் தான் இருக்கு
ஆனா தொப்பை குறைந்த பாட காணோமே

நசரேயன் October 24, 2008 at 8:23 AM  

தங்கமணியும் அவரு வீட்டுக்காரரும் சேர்ந்து வெளியே போனால?

கயல்விழி October 24, 2008 at 2:17 PM  

ச்சின்னப்பையன்,

இதற்கு எதிர்வினையாக ஒரு பதிவு எழுதினால் உங்களுக்கு பரவாயில்லை தானே?

குடுகுடுப்பை October 24, 2008 at 3:21 PM  

//ச்சின்னப் பையன் said...

வாங்க ஜேகே -> அவ்வ்வ். உலக நடைமுறையை சொன்னா, உடனே என் கதைன்னுட்டீங்களே????????//

உங்களுக்கு உலகம் எதுன்னு வேற சொல்லிட்டீங்களே

சின்னப் பையன் October 24, 2008 at 7:50 PM  

வாங்க தாரணி பிரியா -> அவ்வ்வ்.... அங்கேயுமா??????

வாங்க வால் -> அதுக்காகத்தானே ந.ப போறதே!!!!

வாங்க நசரேயன் -> மறுபடியுமா???

வாங்க கயல்விழி -> சூப்பர்... எழுதுங்க... நீங்க எழுதினாத்தான் அது சரியா வரும்.... :-))

வாங்க வருங்கால முதல்வர் -> இது என்ன திருவிளையாடல் மாம்பழக்கதை மாதிரியா?????

VIKNESHWARAN ADAKKALAM October 24, 2008 at 8:19 PM  

வர வர நெம்ப அட்டகாசம் பண்றிங்க :P

தீபாவளி வாழ்துகள்...

Thamira October 26, 2008 at 8:48 AM  

இதுவே லேட்டாயிடுச்சு, ஜூனியர் நானும் இந்த தலையாய பதிவுக்கு ஆஜர் போட்டுக்கறேன்.

Thamira October 26, 2008 at 8:53 AM  
This comment has been removed by the author.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP