Thursday, October 30, 2008

இனிமே எந்த ஆயாவுக்கும் ஹாய் சொல்லமாட்டேன்!!!

வருடத்தில் ஒரு நான்கைந்து தடவையாவது நடைப்பயிற்சிக்குப் போறேன்னு கிளம்பறது வழக்கம். ஒரு வாரம் வரைக்கும் போகும் அந்த பயிற்சி மெதுவாக அப்படியே மறக்கப்பட்டுவிடும். அப்படி போன மாதம் ஒரு வாரம் விடியற்காலையில்
நடந்தபோது, தினமும் பார்த்த ஒரு ஆயாவைப் பற்றிய பதிவுதான் இது.

அந்த ஆயா, காலை 6.30 மணிக்கெல்லாம் சுறுசுறுப்பாக எழுந்து வேலைக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்றுகொண்டிருப்பார். ஒரு கையில் காபி கோப்பை. காதல் தேசம் படத்தில் ஒரு பாட்டில் வினீத்தும் அப்பாஸும் ஆவி பறக்க காபி குடிப்பார்களே, அந்த மாதிரி இந்த ஆயா கையில் இருக்கும் சாயா (காபி?) கப்பிலிருந்து ஆவி பறந்துகொண்டிருக்கும்.

சுமார் 60 வயசுக்கு மேலிருக்கும் அந்த ஆயாவை பார்க்கும்போதெல்லாம், எங்க பாட்டி ஞாபகம் வந்துவிடும். நடந்துகொண்டே கொசுவத்தி சுத்திவிட்டாலும், கால்கள் மட்டும் தன்னிச்சையாக சரியான பாதையில் போய், மறுபடியும் சரியாக எங்க வீட்டுக்கே வந்து விட்டுவிடும். வீட்டுக்கு வந்த பிறகுதான் சுயநினைவு திரும்பி, கொசுவத்தியை ஆஃப் செய்வது வழக்கம்.



ச்சின்ன வயசில் (எங்க ச்சின்ன வயசில்தாங்க, பாட்டியோட ச்சின்ன வயசில் இல்லே!!!), நானும் என் தம்பியும் எப்போது பாட்டி வீட்டிற்குப் போனாலும், 5 பைசா கொடுப்பார்கள் - திரும்பி வரும்போது கடையில் பிஸ்கட் அல்லது சாக்லெட் வாங்கி சாப்பிடுவதற்கு. இப்போ மாதிரியே அப்போ இருந்த நிதி அமைச்சரிடமும் மந்திரக்கோல் இல்லாததாலும், பிஸ்கட்/சாக்லெட் விலை ஏறிக்கொண்டே போனதாலும், பாட்டி கொடுக்கும் அந்த 5 பைசா - 10, 25, 50ஆகி அதிகபட்சமாக 1 ரூபாயில் வந்து நின்றது.


கொஞ்ச நாளைக்குப்பிறகு - காசெல்லாம் வேண்டாம், நான் திரைப்படத்திற்கு கூட்டிப்போகிறேன் என்று சொல்லிவிட்டார். அதே மாதிரி என்னையும், தம்பியையும் நிறைய பக்திப் படங்களுக்கும் கூட்டிச் சென்றார். சென்னையில் பாரகன், ப்ளாசா, பைலட், ஸ்டார் ஆகிய அரங்கங்களில் நிறைய படம் பார்த்திருக்கிறோம். அப்படிப் பார்த்ததில் ஒரே ஒரு சம்பவம் இன்றும் நினைவில் இருக்கிறது.அதை மட்டும் சொல்லிவிட்டு, கொசுவத்தியை முடிச்சிடறேன்.

ஒரு முறை ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் 'பக்த துருவ மார்க்கண்டேயா' படம் பார்க்கப் போயிருக்கிறோம். பயங்கரக்கூட்டம். பாட்டி என்னையும், என் தம்பியையும் கைகளில் பிடித்துக்கொண்டு பெண்கள் வரிசையில் டிக்கட் வாங்க நின்றிருக்கிறார்கள். அப்போவும் என்னால் 'மீ த பஷ்டு' சொல்லமுடியவில்லை.... 'மீ த லேட்' என்று நீண்ட வரிசையில் 25 அல்லது 30 ஆளாக நின்றிருந்தோம்.

எப்போதும் எங்கேயும், நாம் நிற்கும் வரிசையைத் தவிர மற்ற எல்லா வரிசையும் வேகமாக முன்னேறும் - என்ற விதிப்படி எங்கள் வரிசையில் யாரோ தாய்க்குலம் தகராறில் ஈடுபட - ஆண்கள் வரிசை மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தது.

நானோ தவித்துக்கொண்டிருந்தேன். காரணம், முதல் நாளே பள்ளியில் நான் பாட்டியுடன் படம் பார்க்கப்போவதாகவும், திங்கட்கிழமை வந்து கதை சொல்வதாகவும் பக்கத்து சீட் பையனிடம் சொல்லியிருந்தேன். இப்படி டிக்கட் கிடைக்காமல் போய்விட்டால், அந்த நண்பன் முகத்தில் எப்படி முழிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு வழியாக எங்கள் வரிசையும் முன்னேறி, பாட்டி எங்களுக்கு டிக்கெட் வாங்கினார்கள்.

நானும் பயங்கர சந்தோஷத்துடன் தம்பியிடம் - "அப்பாடா, ஒரு வழியா படம் பாத்துடுவோம். இனிமே பிரச்சினையில்லே...!!!" என்று கூற, போட்டுக்குடுத்தே பேர் வாங்கும் அவனோ பாட்டியிடம் "இவன் ஏற்கனவே இந்த படம் பாத்தாச்சாம்" என்று கூறிவிட்டான். பாட்டியும் - "என்ன, இந்த படத்தை முன்னாடியே பார்த்துவிட்டாயா?" என்று கேட்க நான் தம்பியை முறைத்தபடி - "இல்லை பாட்டி, நாம்தான் இப்போ டிக்கட் வாங்கிவிட்டோமே. அதனால், படம்
பார்த்தா மாதிரிதான்" என்று கூறி சமாளித்தேன்.



அன்றும் அதே ஆயா அதே இடத்தில் நின்றிருந்தார். பக்கத்தில் வரும்போது பார்த்தால், அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நானும், சரி, இவ்ளோ பக்கத்துலே வந்தும் பார்த்துண்டே இருக்காரேன்னு 'ஹாய்' சொன்னேன்.

அவரும் ஏதோ சொன்னா மாதிரி இருந்தது ஆனால் ஒன்றும் புரியவில்லை. சரி ஹாய்தான் சொல்லியிருப்பார் என்று நினைத்துகொண்டு அவரை தாண்டி போகும்போதுதான் கவனித்தேன் - காதில் ஐபாட் வைத்துக்கொண்டு பாட்டு கேட்டுக்/பாடிக்கொண்டிருந்தார்.தனக்குத்தானே பாட்டு கேட்டுக்கொண்டிருந்த ஒரு ஆயாவிடம் போய் ஒரு ஹாய் வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு எனக்கு அன்னிக்கு தூக்கமே வரலை.

சூப்பர் ஸ்டார், கட்சி ஆரம்பிக்கலாமா வேணாமான்னு முடிவெடுக்கமுடியாமே கஷ்டப்படறா மாதிரியெல்லாம் கஷ்டப்படாமே, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முடிவை நான் உடனே எடுத்துவிட்டேன் --- இனிமே எந்த ஆயாவுக்கும் ஹாய் சொல்லமாட்டேன் - அப்படின்னு.

31 comments:

தாரணி பிரியா October 30, 2008 at 5:21 AM  

:) :) :)
பரவாயில்லைங்க. தினமும் அந்த பாட்டிக்கு ஹாய் சொல்லுங்க. (அதுக்காகவது நீங்க தினமும் வாக்கிங் போவிங்கதானே) அந்த பாட்டி என்னிக்காவது திரும்ப ஹாய் சொல்லுவாங்க. ஒரு வேளை உங்களுக்கு நல்ல நேரமா இருந்ந்தா பேத்தி கூட ஹாய் சொல்லலாம்.

Raghav October 30, 2008 at 6:24 AM  

ஆனாலும் உமக்கு ஓவர் குசும்பு ஓய்.. பாட்டி வடை சுட்ட கதைய விட ஆயாவுக்கு ஹாய் சொன்ன கதை சூப்பரா இருக்கு..

விஜய் ஆனந்த் October 30, 2008 at 10:44 AM  

ஆயாவுக்கு ஹாய் சொல்றதுல, இப்படி ஆழமா யோசி்ச்சு அதிதீவிரக்கொள்கை முடிவு எடுத்திருக்கற ஆள் ஒலகத்துலயே நீங்க ஒருத்தர் மட்டும்தான்....

வாழ்த்துக்கள்!!!!

பாராட்டுக்கள்!!!!

கடைசியா ஒரே ஒரு வேண்டுகோள்...தயவு செஞ்சு இத்தோட நிறுத்திக்குங்க...

:-)))....

வால்பையன் October 30, 2008 at 11:20 AM  

அந்த ஆயா மீது தப்பில்லை!

வால்பையன் October 30, 2008 at 11:22 AM  

நீங்களும் நிறைய தரம் நிறைய பேரிடம் ஹாய் சொல்லாமல் போயிருக்கீரீர்கள்

வால்பையன் October 30, 2008 at 11:22 AM  

இது ஆயா ரூபத்தில் வந்த பழிக்குபழி

Anonymous,  October 30, 2008 at 11:27 AM  

//கடைசியா ஒரே ஒரு வேண்டுகோள்...தயவு செஞ்சு இத்தோட நிறுத்திக்குங்க...//

:-)))))))))

VIKNESHWARAN ADAKKALAM October 30, 2008 at 2:08 PM  

அடுத்த முறை அந்த கிழவி ஹாய் சொல்லலனா சொல்லுங்க. ஐபோட்டில் ஜே.கே.ரித்திஷின் நிலா நிலா ஓடிவா பாடலை ஏற்றிவிட்டுடலாம். அப்பயாவது ஐபோட்டுக்கு விடுதலை கிடைக்கட்டும்...

சின்னப் பையன் October 30, 2008 at 3:27 PM  

வாங்க தாரணி பிரியா -> ஹிஹி.. அதுக்காகத்தான் முதல் தடவை ஹாய் சொன்னதே... :-))

வாங்க ராகவ் -> ஹாஹா... நன்றி...:-))

வாங்க விஜய் -> உங்ககிட்டேந்து ரெண்டு டஜன் வார்த்தைகளை வாங்கறதுக்காக நான் இதே மாதிரி எவ்ளோ வேணா கொள்கை முடிவுகளை எடுப்பேங்க.... :-))).. இல்லேன்னா வெறும் :-)))யோட போயிடுவீங்க....

வாங்க வால் -> ஹாஹா... "ஆயா... The Grandma".. அப்படின்னு ஒரு படம் எடுக்கலாமா???

சின்னப் பையன் October 30, 2008 at 3:28 PM  

வாங்க வேலன் ஐயா -> சிரிச்சதுக்கும் நிறுத்தச் சொன்னதுக்கும் நன்றி... :-))

வாங்க விக்னேஸ்வரன் -> ஐயயோ... அப்ப அந்த ஆயா பாடறதோட மட்டுமல்லாம, டான்ஸும் ஆட ஆரம்பிச்சிடுவாங்களே.... :-))))

rapp October 30, 2008 at 3:33 PM  

ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், ரத்தம் வரவர அறுப்பதில் எம்மை இன்று மிஞ்சி விட்டீர் துணைத்தலைவரே, அப்படின்னு நம்ம தல அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷும், சின்னத் தல ஏகன் அஜீத்தும் கதறுகிற அளவுக்கு பின்னீட்டீங்க போங்க:):):)

பிரேம்ஜி October 30, 2008 at 3:41 PM  

//இப்படி டிக்கட் கிடைக்காமல் போய்விட்டால், அந்த நண்பன் முகத்தில் எப்படி முழிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்//

:-))))))

ஓ! இதுல மானப்பிரச்சினை வேற இருக்கா?

rapp October 30, 2008 at 3:56 PM  

//இதுல மானப்பிரச்சினை வேற இருக்கா?
//

பிரேம்ஜி சார், தமிழ்ல எங்க மன்றத்து ஆளுங்கக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மானம். அதை பத்தி மட்டும் யாராவது பேசினாலே போதும் மன்றத்தை விட்டு உடனே நீக்கிடுவோம்:):):)

rapp October 30, 2008 at 3:58 PM  

ஹையா இன்னைக்கு சம்மந்தி வெண்பூவாலே கமெண்டே போட முடியாது போலருக்கே. நாளைக்கு வந்தாலும் லேட் கம்மராச்சே:):):) (கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தெனமும் வந்து மீ த பர்ஸ்ட் போட்டா வெறுப்பேத்தறீங்க:):):))

பழமைபேசி October 30, 2008 at 4:27 PM  

//உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப்பூ உலகம்!!!//

:-|)

சின்னப் பையன் October 30, 2008 at 5:22 PM  

வாங்க தமிழ் பிரியன் -> நன்றி

வாங்க தலைவி -> ஹாஹா... ஆயிரந்தான் இருந்தாலும் என்னை நம்ம தலயோட ஒப்பிட்டு பேசாதீங்க.. அவரு எங்கே. நான் எங்கே.... :-)))))))))))))))))))))))))))))))))))

இன்னிக்கு எனக்கு ப்ளாகர்லேயும் ஏதோ பிரச்சினை... தமிழ்மணத்துலேயும் பிரச்சினை... அதான் வெண்பூ வரலேன்னு நினைக்கிறேன்....

வாங்க பிரேம்ஜி -> இப்போ பின்னூட்டம் வரலேன்னா பிரச்சினை.. அப்போல்லாம் டிக்கெட் கிடைக்கலேன்னா பிரச்சினை.... :-)))

வாங்க பழமைபேசி, ராதாகிருஷ்ணன் ஐயா -> ஹாஆஆஆய்ய்ய்ய்ய்....

நசரேயன் October 30, 2008 at 9:39 PM  

எங்களுக்காவது ஒரு ஹாய் சொல்லுங்க

புதுகை.அப்துல்லா October 31, 2008 at 2:49 AM  

ஹாய் ச்சின்னப்பையன் அய்யா :)))))))))))))

Anonymous,  October 31, 2008 at 4:57 AM  

வணக்கம் தாத்தா... ரொம்ப நல்லா இருக்கு

சரவணகுமரன் October 31, 2008 at 5:14 AM  

//அப்போவும் என்னால் 'மீ த பஷ்டு' சொல்லமுடியவில்லை//

:-)

Anonymous,  October 31, 2008 at 7:54 AM  

ஹாய் டா செல்லம்....

சின்னப் பையன் October 31, 2008 at 9:29 AM  

வாங்க நசரேயன் -> ஹாய்....

வாங்க கிழஞ்செழியன் -> என்னய்யா பேர் இது... டைப்படிக்கவே முடியல.... :-)))

வாங்க அப்துல்லா அண்ணே -> ஹாய்... என்ன அது 25?... 25 வருஷத்துக்கு முன்னாலே உங்க வயசா??????

வாங்க அனானி -> அவ்வ்வ்வ்.....

வாங்க ஆயா -> ஐயய்யோ.... நான் வரலே இந்த ஆட்டத்துக்கு.....

வெண்பூ October 31, 2008 at 1:37 PM  

//
rapp said...
ஹையா இன்னைக்கு சம்மந்தி வெண்பூவாலே கமெண்டே போட முடியாது போலருக்கே. நாளைக்கு வந்தாலும் லேட் கம்மராச்சே

ச்சின்னப் பையன் said...
இன்னிக்கு எனக்கு ப்ளாகர்லேயும் ஏதோ பிரச்சினை... தமிழ்மணத்துலேயும் பிரச்சினை... அதான் வெண்பூ வரலேன்னு நினைக்கிறேன்....
//

மாசக்கடைசியில என்னை மிஞ்சி "மீ த பஷ்டு" போட்டுட்டதா யாரும் பீத்திக்கவேணாம்... சந்தோசப்படவேணாம்.. வருவேன்.. மாசத்தோட மீதி மூணே முக்கால் வாரமும் வெட்டியா இருக்குறப்ப வருவேன்.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi November 17, 2008 at 12:31 AM  

ஓரே கொசுவத்தி புகை.. :) அப்பறம் அந்த மார்க்கண்டேயன் கதை ய நண்பனுக்கு சொல்லிட்டீங்களா அன்னைக்கு. அதுல தானே அந்த பையன் நடந்து போகும் போது தண்ணி வேணும்ன்னதும் தரையிலிருந்து தண்ணீர் ஃபவுண்டென் மாதிரி வருமே.. கல்லு முள்ளுல நடப்பான் துருவன் பாவமா இருக்கும்.. நடைபயணத்தன்னைக்கு அது கரெக்டா ஞாபகம் வந்ததா பரவாயில்லையே..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP