Wednesday, October 22, 2008

பதிவர் சந்திப்பு - சிறப்பு படங்களுடன்!!!மேலே படத்தில் தோன்றுபவர்கள் - ஒண்ணு நான், இன்னொண்ணு சில நாட்கள் முன்பு வரை பதிவு போட்டு கலக்கிட்டிருந்த - பதிவர் நண்பர் பிரேம்ஜி. இரண்டு பேரில் எது நான், எது பிரேம்ஜிங்கறது பதிவின் கடைசியில் சொல்றேன்.


பிரேம்ஜி அடுத்த வாரம் சென்னைக்கு திரும்பறார். லீவுக்கு இல்லே. அமெரிக்காவை விட்டுட்டு. ரொம்ப நாளா மொக்கை போட்டிருக்கோமே, சரி ஊருக்கு போறதுக்கு முன்னாடி ஒரு தடவை பாத்துக்கிடுவோம்னு சென்ற 5ம் தேதி (சென்னை பதிவர் சந்திப்பு நடைபெற்ற தினம்) எங்க
ஊரிலேருந்து புறப்பட்டு அவர் ஊருக்கு (120 மைல்கள்) சென்றோம்.


போய் சிறிது நேரம் பேசி முடித்தபிறகு - சாப்பாடு. பிரேம்ஜியின் தங்கமணி அருமையாக சமைத்திருந்தார். நல்ல்ல்ல்ல்ல்லா சாப்பிட்ட பிறகு, அங்கிருந்து புறப்பட்டு பக்கத்திலிருந்த ஒரு கோயிலுக்குச் சென்றோம். அங்கேயே புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு - (பிரேம்ஜி ஒரு
அருமையான SLR காமிரா வைத்திருக்கிறார். அதனால், அங்கே என்னோட ச்சின்ன காமிராவை நான் வெளியே எடுக்கவேயில்லை!!!)


அவர்களை புகைவண்டி நிலையத்தில் இறக்கிவிட்டு, நாங்கள் மறுபடி 120 மைல்கள் பயணித்து வீடு வந்து சேர்ந்தோம்.


----

வீட்டுக்கு திரும்ப வரும்போது, நானும் தங்கமணியும் பேசிக்கொண்டது.

நான்: ஏம்மா, பிரேம்ஜியோட படமெல்லாம் எடுத்திருக்கோம். நானும் என் படத்தை இணையத்திலே போடலாம்னு இருக்கேன்.

என் தங்க்ஸ்: எதுக்கு படத்தை போடணும்?

நான்: சில நண்பர்கள் கேட்டிருக்காங்க. அதைத்தவிர லட்சக்கணக்கான பேர் கேக்காம தினமும் நினைச்சிட்டிருக்காங்க. அதுக்காகத்தான். அது தவிர, நான் என்ன இட்லிவடையா, அஞ்சு வருஷம் மூஞ்சியையே காட்டாமே இருக்கறதுக்கு...

என் தங்க்ஸ்: எதுக்கும் ஒரு தடவை பின்விளைவுகளை நினைச்சி பாத்துக்கங்க.

நான்: என்ன சொல்ல வர்றே?

என் தங்க்ஸ்: இவ்ளோ நாளா உங்க முகம் தெரியாமே உங்களை அஜீத், சூர்யா ரேஞ்சுக்கு நினைச்சிருந்தாங்கன்னு வைங்க - நாளைக்கு படத்தை பாத்தபிறகு - இதை பாக்கவா நாம் படத்தை கேட்டோம்னு நொந்துக்கற அளவுக்கு அவங்களை கொண்டு வந்து விட்றாதீங்க.
அவ்ளோதான் நான் சொல்லுவேன்.

நான்: சேச்சே.. அவ்ளோ மோசமா நினைக்க மாட்டாங்கம்மா. ஒரு வேளை அப்படி நினைச்சாலும், யாரும் வெளிப்படையா பின்னூட்டத்திலே சொல்ல மாட்டாங்கன்ற நம்பிக்கையிலே நான் படத்தை போடத்தான் போறேன்.

என் தங்க்ஸ்: என்னமோ செய்ங்க.

நான்: ரொம்ப நன்றிம்மா..

----
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

61 comments:

வெண்பூ October 22, 2008 at 6:29 AM  

//
என் தங்க்ஸ்: இவ்ளோ நாளா உங்க முகம் தெரியாமே உங்களை அஜீத், சூர்யா ரேஞ்சுக்கு நினைச்சிருந்தாங்கன்னு வைங்க - நாளைக்கு படத்தை பாத்தபிறகு - இதை பாக்கவா நாம் படத்தை கேட்டோம்னு நொந்துக்கற அளவுக்கு அவங்களை கொண்டு வந்து விட்றாதீங்க.
அவ்ளோதான் நான் சொல்லுவேன்.
//

உங்கள விட உங்க தங்கமணி எங்க எல்லாரையும் நல்லா புரிஞ்சி வெச்சிருக்காங்க.. ஹி..ஹி..

வெண்பூ October 22, 2008 at 6:31 AM  

//
என் தங்க்ஸ்: என்னமோ செய்ங்க.
நான்: ரொம்ப நன்றிம்மா..
//

அடப்பாவி.. பதிவுல என்ன போடுறது அப்படின்றதுகூட தங்கமணிகிட்ட பர்மிஷன் வாங்கிட்டுதானா? என்னமோ போங்க.. :)))))

வெண்பூ October 22, 2008 at 6:34 AM  

கீழ இருக்குறது ரெண்டு பதிவுக்கு முன்னால நாங்க போட்ட பின்னூட்டம். அட, ஒண்ணும் சொல்லல. ஞாபகம் வந்தது, போய் படிச்சி பாத்துட்டு வந்தேன்.. :)))

//
வெண்பூ said...

//
தமிழ் பிரியன் said...
///ச்சின்னப் பையன் said...

வாங்க வெண்பூ -> அவ அழகுலே மட்டும் என்னாட்டம்.... :-)))///
காமெடி, கீமெடி பண்ணாதீங்க... நாங்க சீரியஸா பேசிக்கிட்டு இருக்கோம்ல
//

அட விடுங்க தமிழ்.. அவரு பொய் சொல்றாருன்றது குழந்தை அழகா இருக்குறப்பவே தெரியலயா? பாவம் சொல்லிட்டு போகட்டும் விடுங்க
//

வெண்பூ October 22, 2008 at 6:35 AM  

//
நான்: சேச்சே.. அவ்ளோ மோசமா நினைக்க மாட்டாங்கம்மா. ஒரு வேளை அப்படி நினைச்சாலும், யாரும் வெளிப்படையா பின்னூட்டத்திலே சொல்ல மாட்டாங்கன்ற நம்பிக்கையிலே நான் படத்தை போடத்தான் போறேன்.
//

அச்சச்சோ.. இதை சரியா படிக்காம மேல நாலு பின்னூட்டம் போட்டுட்டனே.. அதை யாரும் படிக்காதீங்கப்பா.. :))))

வெண்பூ October 22, 2008 at 6:39 AM  

உண்மையை சொல்லப்போனால் முகம் தெரியாத ஒருவரின் எழுத்துக்களை விட, பழகிய ஒருவரின் எழுத்துக்களை நம்மால் ரசிக்கவும் முடியும், தைரியமாக விமர்சிக்கவும் முடியும். உங்கள் படத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..

நேற்று உங்களுடன் தொலைபேசியதும், இன்று உங்கள் படத்தை பார்த்ததும் உங்களுடன் நெருக்கமானதாக உணர்கிறேன். நன்றி.

கார்க்கி October 22, 2008 at 6:42 AM  

உங்களுக்கு என்னங்கண்ணா.. அஜித்த விட நல்லாத்தான் இருக்கிங்க...

Anonymous,  October 22, 2008 at 6:43 AM  

நீங்க ஏன் ஜே.கே.ரித்திஷ் மேலே உயிரா இருக்கீங்கன்னு இப்ப புரியுது.

ஸ்ரீநிதியோட தங்கச்சி,  October 22, 2008 at 6:44 AM  

உங்கள ரொம்ப யூத் ஆ எதிர் பார்த்தேன். :(

rapp October 22, 2008 at 6:45 AM  

//உங்களுக்கு என்னங்கண்ணா.. அஜித்த விட நல்லாத்தான் இருக்கிங்க//

இன்னைக்கு பதிவு ரொம்ப பயங்கரமா இருக்கறதால, கார்க்கி காமடி பண்ணிட்டார்:):):)

ஸ்ரீநிதியோட தங்கச்சி,  October 22, 2008 at 6:46 AM  

கார்க்கி said...
//உங்களுக்கு என்னங்கண்ணா.. அஜித்த விட நல்லாத்தான் இருக்கிங்க...//
என் அக்காவ ஏமாத்தி விட்டாயே ... பாவி!

rapp October 22, 2008 at 6:48 AM  

//நீங்க ஏன் ஜே.கே.ரித்திஷ் மேலே உயிரா இருக்கீங்கன்னு இப்ப புரியுது//

ஆமா, நாம அவ்ளோ கெத்தா இல்லைன்னாலும் நம்ம தல அப்டி இருக்கனுங்கறதுதான ஒவ்வொரு அல்லக்கை மற்றும் லொடுக்கு சுந்தரியின் லட்சியமாக இருக்கும்:):):)

rapp October 22, 2008 at 6:49 AM  

//
நான்: சேச்சே.. அவ்ளோ மோசமா நினைக்க மாட்டாங்கம்மா. ஒரு வேளை அப்படி நினைச்சாலும், யாரும் வெளிப்படையா பின்னூட்டத்திலே சொல்ல மாட்டாங்கன்ற நம்பிக்கையிலே நான் படத்தை போடத்தான் போறேன்.
//
இப்படில்லாம் கெஞ்சனா நாங்க விட்டுருவமா:):):)

rapp October 22, 2008 at 6:50 AM  

திரும்ப எப்போ பிரேம்ஜி சார் எழுத ஆரம்பிப்பார்?

rapp October 22, 2008 at 6:51 AM  

//(120 மைல்கள்) சென்றோம்//

ஆஹா, போனீங்க சரி, அதுக்காக இப்படியா பதிவு முழுக்க அலுத்துக்கறது:):):)

தமிழ் பிரியன் October 22, 2008 at 6:56 AM  

தமிழ் பிரியன் said...
///ச்சின்னப் பையன் said...

வாங்க வெண்பூ -> அவ அழகுலே மட்டும் என்னாட்டம்.... :-)))///
காமெடி, கீமெடி பண்ணாதீங்க... நாங்க சீரியஸா பேசிக்கிட்டு இருக்கோம்ல..//

அன்னைக்கு போட்ட கமெண்டே இன்னைக்கு சூப்பரா பொருந்துது பாருங்க... நாங்கல்லாம் யாரு...:)))

rapp October 22, 2008 at 6:59 AM  

//அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்//

என்னைத்தவிர அன்னைக்கு எல்லாரும் சந்தோஷமா இருப்பீங்க:(:(:(

rajaharichandra October 22, 2008 at 7:01 AM  

//வெண்பூ said...

உங்கள விட உங்க தங்கமணி எங்க எல்லாரையும் நல்லா புரிஞ்சி வெச்சிருக்காங்க.. ஹி..ஹி..//

//வெண்பூ said...

அடப்பாவி.. பதிவுல என்ன போடுறது அப்படின்றதுகூட தங்கமணிகிட்ட பர்மிஷன் வாங்கிட்டுதானா? என்னமோ போங்க.. :)))))//

//சேச்சே.. அவ்ளோ மோசமா நினைக்க மாட்டாங்கம்மா. ஒரு வேளை அப்படி நினைச்சாலும், யாரும் வெளிப்படையா பின்னூட்டத்திலே சொல்ல மாட்டாங்கன்ற நம்பிக்கையிலே நான் படத்தை போடத்தான் போறேன்.//

//கார்க்கி said..

உங்களுக்கு என்னங்கண்ணா.. அஜித்த விட நல்லாத்தான் இருக்கிங்க...//

//Anonymous said...

நீங்க ஏன் ஜே.கே.ரித்திஷ் மேலே உயிரா இருக்கீங்கன்னு இப்ப புரியுது.//

//rapp said...

இன்னைக்கு பதிவு ரொம்ப பயங்கரமா இருக்கறதால, கார்க்கி காமடி பண்ணிட்டார்//

//rapp said...

இப்படில்லாம் கெஞ்சனா நாங்க விட்டுருவமா//

எல்லா கமெண்ட்டும்
ரிப்ப்ப்ப்ப்பீட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்......

ச்சின்னப் பையன் October 22, 2008 at 7:11 AM  

எல்லோருக்கும் -> எவ்ளோஓஓஒ கொலவெறியோட காத்திருக்கீங்கன்னு இப்பத்தான் புரியுது... அவ்வ்வ்வ்... வளர்த்த கடா மார்லே பாயும்னு பெரியவங்க சரியாத்தான் சொல்லியிருக்காங்க.... அவ்வ்வ்வ்வ்........ :-)))))))

ச்சின்னப் பையன் October 22, 2008 at 7:13 AM  

மறுபடி எல்லோருக்கும் -> மேக்கப் இல்லேன்னா அஜீத், சூர்யாகூட இப்படித்தான் இருப்பாங்க (அப்பாடா... சமாளிச்சாச்சு!!!).

நல்லதந்தி October 22, 2008 at 7:13 AM  

எனக்கும் இதுதாங்க பிரச்சனை! ரொம்ப அழகா இருக்கோமே எல்லோரும் கண்ணு வெச்சிருவாங்களோன்னு பயம்!.அதனால தான் என்னோட படத்தைப் போட ரொம்ம யோசிக்க வேண்டியிருக்கு.ஹி..ஹி..ஹி..

ச்சின்னப் பையன் October 22, 2008 at 7:14 AM  

இப்படி மொத்தமா எல்லோருக்கும் சேத்து பதில் சொல்றதாலே, என்னை மூத்தபதிவர்னு யாரும் சொல்லிடாதீங்க !!! ( நன்றி ப்ளீச் எ வால் எ நல்லா!!!)

வால்பையன் October 22, 2008 at 7:16 AM  

சரி சரி
விளையாட்டு போதும் ச்சின்னப்பையன் போட்டோவை ஒழுங்கா போடுங்க

தலயோட ரசிகன்,  October 22, 2008 at 7:26 AM  

//உங்களுக்கு என்னங்கண்ணா.. அஜித்த விட நல்லாத்தான் இருக்கிங்க...//

தலய கேவல படுத்துறதா நீ இன்னும் விடலை....
உன் பிளாக்கை பூட்டி வச்சிக்கிட்டு அடுத்த பிளாக்குல வந்து உன் வேலைய காட்டுற
இது நல்லதுக்கில்லை

பரிசல்காரன் October 22, 2008 at 7:34 AM  

யப்பா..

இப்பவாவது நாந்தான் உங்களை விட ச்சின்னப்பையன்னு ஊர் தெரிஞ்சுக்கட்டும்.

எப்ப, நான் சின்னப்பையன்ப்பா-ன்னாலும் அது நீங்க இல்ல-ன்னு சொன்னவங்களுக்கு சரியான பதிலடி..

இல்லையா அண்ணா?

ஆயில்யன் October 22, 2008 at 7:35 AM  

எனக்கும் இதுதாங்க பிரச்சனை! ரொம்ப அழகா இருக்கோமே எல்லோரும் கண்ணு வெச்சிருவாங்களோன்னு பயம்!.அதனால தான் என்னோட படத்தைப் போட ரொம்ம யோசிக்க வேண்டியிருக்கு.

பரிசல்காரன் October 22, 2008 at 7:35 AM  

வெண்பூ-வோட கொலவெறி நல்லாவே தெரியுது...

ஆயில்யன் October 22, 2008 at 7:36 AM  

// பரிசல்காரன் said...
யப்பா..

இப்பவாவது நாந்தான் உங்களை விட ச்சின்னப்பையன்னு ஊர் தெரிஞ்சுக்கட்டும்.

எப்ப, நான் சின்னப்பையன்ப்பா-ன்னாலும் அது நீங்க இல்ல-ன்னு சொன்னவங்களுக்கு சரியான பதிலடி..

இல்லையா அண்ணா?
//


ஆஹா மொத்ததுல பார்க்கப்போனா டோட்டல் தமிழ்மணத்துக்கே இப்ப நான்ந்தான் ச்ச்ச்ச்சின்ன்ன்ன பையன் போல

ஹய்யோ ஹய்யோ :))))

ஆயில்யன் October 22, 2008 at 7:37 AM  

மீ த முப்பது! :))

இங்க இருக்கறவங்க எல்லாம் மூத்தது!

நான் மட்டும்தான் ச்சின்னபையன் அப்படின்னு இன்னொரு தப்பா சொல்லிக்கிறேன்! :))))

வெண்பூ October 22, 2008 at 7:39 AM  

//
நல்லதந்தி said...
எனக்கும் இதுதாங்க பிரச்சனை! ரொம்ப அழகா இருக்கோமே எல்லோரும் கண்ணு வெச்சிருவாங்களோன்னு பயம்!.அதனால தான் என்னோட படத்தைப் போட ரொம்ம யோசிக்க வேண்டியிருக்கு.ஹி..ஹி..ஹி..
//

//
ஆயில்யன் said...
எனக்கும் இதுதாங்க பிரச்சனை! ரொம்ப அழகா இருக்கோமே எல்லோரும் கண்ணு வெச்சிருவாங்களோன்னு பயம்!.அதனால தான் என்னோட படத்தைப் போட ரொம்ம யோசிக்க வேண்டியிருக்கு.
//

நீங்க ரெண்டு பேரும் இந்த அளவுக்கு அளகா இருப்பீங்களா? இல்லை இதை விட அளகா இருப்பீங்களா? ஏன் கேக்குறேன்னா, நீங்க ஃபோட்டோ ரிலீஸ் பண்ற தேதியை வெச்சித்தான் எக்ஸ்ட்ரா இன்ஸூரன்ஸ் பண்ணனுமா வேணாமான்னு முடிவெடுக்கணும், அதுக்குத்தான்.. :)))

வெண்பூ October 22, 2008 at 7:42 AM  

//
பரிசல்காரன் said...
யப்பா..

இப்பவாவது நாந்தான் உங்களை விட ச்சின்னப்பையன்னு ஊர் தெரிஞ்சுக்கட்டும்.
//

வயசுல இல்லை, சைஸ்லன்னு தெளிவா சொல்லுங்க பார்ட்னர்.. எங்க போனாலும் நீங்க வெயிலான கூட்டிட்டு போறதே உங்கள எல்லாரும் சின்னபையன்னு சொல்லணும் அப்படிங்கறதுக்காகத்தான்றது பாவம் அவருக்கு இன்னும் தெரியாது.. கரெக்டா? :))))

கார்க்கி October 22, 2008 at 7:55 AM  

/ஸ்ரீநிதியோட தங்கச்சி said...
கார்க்கி said...
//உங்களுக்கு என்னங்கண்ணா.. அஜித்த விட நல்லாத்தான் இருக்கிங்க...//
என் அக்காவ ஏமாத்தி விட்டாயே ... பாவி!
//

ஹலோ என்னங்க ஏமாத்தினேன்? மெயில் அனுப்ப சொல்லுங்க..

கார்க்கி October 22, 2008 at 7:55 AM  

//தலயோட ரசிகன் said...
//உங்களுக்கு என்னங்கண்ணா.. அஜித்த விட நல்லாத்தான் இருக்கிங்க...//

தலய கேவல படுத்துறதா நீ இன்னும் விடலை....
உன் பிளாக்கை பூட்டி வச்சிக்கிட்டு அடுத்த பிளாக்குல வந்து உன் வேலைய காட்டுற
இது நல்லதுக்கில்லை

October 22, 2008 7:26 ஆம்//

ஹிஹிஹி வால்... ஐ மீன் தலயோட வால்

வெங்கட்ராமன் October 22, 2008 at 8:15 AM  

நீங்க தான் அந்த
ச்ச்ச்சின்னப்ப் பையனா. . .?

(கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

ராஜ நடராஜன் October 22, 2008 at 8:18 AM  

பிரேம்ஜி கூட நின்னு போட்டோ புடிச்சு பதிவு போட வேண்டியது.நீங்க முந்திகிட்டீங்க!

படத்தில சைடுல பார்த்தா பாக்கியராஜ் எபெக்ட் தெரியுது:)

இட்லி வடை மேலே உங்களுக்கு என்ன கோபம்? அஞ்சு வருசமா மூஞ்சியக் காமிக்க மாட்டேங்குறாருன்னு போற போக்குல அவரு காலை வாரி விட்டுட்டேங்களே:)))))

நசரேயன் October 22, 2008 at 8:25 AM  

யோசித்ததை பிரமாதம். படம் ரெம்ப நல்லா இருக்கு

அருப்புக்கோட்டை பாஸ்கர் October 22, 2008 at 8:38 AM  

//என் தங்க்ஸ்: என்னமோ செய்ங்க. //

ம்ம்ம்ம் எவ்வளவு அர்த்தங்கள் நிறைந்த வார்த்தை!!! ?

ILA October 22, 2008 at 9:05 AM  

ரெண்டு பேர் சந்திச்சா சந்திப்பா? மாநாடுய்யா

வடகரை வேலன் October 22, 2008 at 11:48 AM  

//அவ்ளோ மோசமா நினைக்க மாட்டாங்கம்மா. ஒரு வேளை அப்படி நினைச்சாலும், யாரும் வெளிப்படையா பின்னூட்டத்திலே சொல்ல மாட்டாங்கன்ற நம்பிக்கையிலே நான் படத்தை போடத்தான் போறேன்.//

நான் ஒத்துக்கிறேன், நீங்க ச்சின்னப் பையந்தான். இம்புட்டு வெள்ளாந்தியா இருக்கீங்க. ஹைய்யோ ஹைய்யோ.

விஜய் ஆனந்த் October 22, 2008 at 12:26 PM  

ஹாய் அங்கிள்!!!

நல்லா இருக்கீங்களா???

ச்சின்னப் பையன் October 22, 2008 at 1:09 PM  

வாங்க வெண்பூ -> வழக்கம்போல் நீங்க ஆரம்'பிச்சி' வெச்சிருக்கீங்க... நன்றிப்பா...

வாங்க கார்க்கி -> அவ்வ்வ். நீங்க அஜித்தை பார்த்ததேயில்லையாஆஆஆ!!!!!

வாங்க அனானி -> அவ்வ்வ்...

வாங்க ஸ்ரீனிதியோட தங்கச்சி -> நாங்க எப்பவுமே யூத்துதான்....:-)))

வாங்க ராப் -> சந்தடிசாக்குலே என்னையும் '#$#$'ன்னு சொல்லிட்டீங்களேஏஏஏ.... :-)))

பிரேம்ஜி October 22, 2008 at 1:18 PM  

இரு முறையே சந்தித்திருந்தாலும் பல வருடங்கள் பழகியது போல் இருவரும் உணர்கிறோம்.பலமுறை தொலை பேசியிருந்ததாலும் முதல் முறை பார்த்தபோது Breaking the ice எல்லாம் தேவை இல்லாமல் சகஜமா இருவரும் பேச ஆரம்பித்தோம்.பழகுவதற்கு மிக இனிமையானவர்.மனதில் பட்டதை தயங்காமல் அதே சமயம் அடுத்தவர் மனம் கோணாமல் சொல்வார்.அவர் நிஜமாவே ஹீரோ தாங்க.அவர் Coolers அணிந்து கார் ஓட்டற ஸ்டைலே தனி :-)))))

VIKNESHWARAN October 22, 2008 at 1:19 PM  

படத்தில் சிகப்பு சட்டை யாருங்க... :P

வருங்கால முதல்வர் October 22, 2008 at 1:23 PM  

ச்சின்னப்பையனா இல்ல க்குள்ளப்பையனா

ச்சின்னப் பையன் October 22, 2008 at 1:32 PM  

வாங்க தமிழ் பிரியன் -> அவ்வ்வ்.... (இன்னிக்கு எல்லாருக்குமே வெறும் அவ்வ்வ் தான்னு நினைக்கிறேன்)...

வாங்க ராஜாஹரிச்சந்திரா -> அவ்வ்வ். நீங்களுமா?????

வாங்க நல்லதந்தி -> போட்றாதீங்க போட்றாதீங்க (குளிக்காதீங்க ஸ்டைல்லே படிங்க!!!)...

வாங்க வால் -> குறும்புதான் உங்களுக்கு....ஹிஹி

வாங்க பரிசல் -> ஐஐ.. இப்படியெல்லாம் சொன்னா நம்பிடுவோமா... சரி விடுங்க.. நாம ரெண்டுபேருமே யூத்துதான்... ஓகேவா???

ச்சின்னப் பையன் October 22, 2008 at 1:38 PM  

வாங்க தலயோட ரசிகன் -> அண்ணா.. யார் மேலேண்ணா இவ்ளோ கோவமாயிருக்கீங்க???... கூல்ல்ல்...

வாங்க ஆயில்யன் -> நீங்க ச்சின்னப்பையனாவே இருங்க... ஆனா, நான் இங்கே எழுதறதுக்கெல்லாம் ராயல்டி கேட்றாதீங்க!!!!!!!

வெண்பூ -> எப்படியும் இன்னிக்கு இன்ஸ்யூரன்ஸ குறைச்சிருப்பீங்க!!!

வாங்க வெங்கட்ராமன் -> ஹிஹி.. நானேதான்....

வாங்க ராஜ நடராஜன் -> அவ்வ்வ். பாக்யராஜ்னு சொன்னது பிரேம்ஜியைதானே????...

ச்சின்னப் பையன் October 22, 2008 at 1:40 PM  

வாங்க நசரேயன் -> நன்றி...

வாங்க பாஸ்கர் -> நடுனிலைவாதிகள் இப்படித்தான் பேசுவாங்க.... :-)))

வாங்க இளா -> ஆஆஆ... இது தெரியாமே போச்சே.... போட்டு தாக்கியிருப்பேனே....:-(((

வாங்க வேலன் -> யூ டூ வேலன்.... நோ பீஸ் ஆஃப் மைண்ட்.... :-(((

வாங்க விஜய் -> அவ்வ்வ்வ்....

ச்சின்னப் பையன் October 22, 2008 at 1:46 PM  

வாங்க பிரேம்ஜி -> மன்னிச்சிடுங்க... சாப்பாட்ட பத்தி சொன்ன நான் உங்கள பத்தி சொல்லவேயில்லை...

மக்களே... தொழில் நுட்பத்தைப் பத்தி பதிவுகள் போட்டுட்டிருந்த பிரேம்ஜி, பேசும்போதும் அப்படியேதான் பேசுகிறார். பத்து வருஷம் கழிச்சு GPஸ்லே என்னன்ன முன்னேற்றம் வரப்போகுதுன்னும், கணிணி என்ன ஆகப்போகுது அப்படியெல்லாம் பேசிக்கிட்டே இருக்கார்... அப்பாடா... ஆள் ஒரு தொழில் நுட்பப்புலிதான்....

வாங்க விக்னேஸ்வரன் -> சிகப்பு சட்டை போடாமே ஒருத்தர் இருக்காருல்ல, அவருக்குப் பக்கத்துலே நிக்கிறவர்தான் சிகப்பு சட்டைக்காரர்.... ஓகேவா....

வாங்க வருங்கால முதல்வர் -> ச்சி..க்கு..ச்சின்னப் பையந்தாங்க....

T.V.Radhakrishnan October 22, 2008 at 2:20 PM  

நல்லாத்தான் இருக்கிங்க.(!!!)

ILA October 22, 2008 at 2:37 PM  

/அவர் நிஜமாவே ஹீரோ தாங்க.அவர் Coolers அணிந்து கார் ஓட்டற ஸ்டைலே தனி :-)))))//
இயக்குனர் பேரரசு கவனிக்கவும்..

ச்சின்னப் பையன் October 22, 2008 at 3:50 PM  

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> நன்றிங்க.. .என்னெ வெச்சி காமெடி கீமெடி பண்ணலியே..... :-))))

வாங்க இளா -> அவ்வ்வ்... ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு???... தமிழ் நாட்டு மக்கள் எவ்வளவோ பாத்துட்டாங்க.. ஆனா... இது மட்டும் வேணாம்..... :-)))

சரவணகுமரன் October 22, 2008 at 5:01 PM  

//இன்னைக்கு பதிவு ரொம்ப பயங்கரமா இருக்கறதால, கார்க்கி காமடி பண்ணிட்டார்//

:-))))

Raj,  October 22, 2008 at 5:03 PM  

naan ungal bloggai regulara vaasippavan. indru ungal padam paarththen. athai vaiththu paint il nagaichchuvaikkaga maatri ullen.

http://img134.imageshack.us/img134/3362/1ast8.png
http://img374.imageshack.us/img374/9458/1blf6.png

ithu thavaru endraalo, thangal manathu punpattu irunthaalo mannikkavum. intha padangalai neekki vidavum. sorry

ச்சின்னப் பையன் October 22, 2008 at 5:43 PM  

வாங்க அனானி -> என்ன, ஒரே ஆச்சரியமா இருக்கா?...

வாங்க சரவணகுமரன் -> நல்லா சிரிங்க...

வாங்க ராஜ் -> அவ்வ்வ்... எங்க தலைவரோட என்னை ஒப்பிடுவதா?... எங்க தலைவி பாத்தா நான் கட்சியோட சேத்து ஆட்சியையும் கைப்பற்றப் போறேன்னு நினைக்கப்போறாங்க. என்ன நடக்கப் போகுதோ தெரியலையே ஆண்டவா......

Raj,  October 22, 2008 at 6:03 PM  

thappa eduththukkaathathukku nadri saar. appuram innum oru 3 photo design panni vachchirunthen. nayagan padaththula irunthuthaan neenga enna ninaipeengalonnu podala...

Pls dont take this as serious ...

http://img60.imageshack.us/img60/3997/1ckb6.png
http://img231.imageshack.us/img231/324/1doo5.png
http://img444.imageshack.us/img444/5869/1eii2.png

amputtuthaan ... inimael onnum poda maataen.

சின்ன அம்மிணி October 22, 2008 at 7:44 PM  

//சில நண்பர்கள் கேட்டிருக்காங்க. அதைத்தவிர லட்சக்கணக்கான பேர் கேக்காம தினமும் நினைச்சிட்டிருக்காங்க. அதுக்காகத்தான்.// யாருங்க அவங்க , உங்க போட்டோவைப்போடச்சொல்லிக்கேக்கறவங்க :):)

வெயிலான் October 23, 2008 at 9:37 AM  

வெண்பூ said......

// எங்க போனாலும் நீங்க வெயிலான கூட்டிட்டு போறதே உங்கள எல்லாரும் சின்னபையன்னு சொல்லணும் அப்படிங்கறதுக்காகத்தான்றது பாவம் அவருக்கு இன்னும் தெரியாது.. கரெக்டா? //

வெண்பூ!

என்னை வச்சு காமெடி பண்ணிட்டிருக்கிற விசயம் கேள்விப்பட்டு வந்தேன்.

ஏம்ப்பூ வெண்பூ உங்க கும்மிக்கு இடையில மாட்டுனது நான் தானா?

வெண்பூ October 23, 2008 at 9:55 AM  

//
வெயிலான் said...
வெண்பூ!

என்னை வச்சு காமெடி பண்ணிட்டிருக்கிற விசயம் கேள்விப்பட்டு வந்தேன்.

ஏம்ப்பூ வெண்பூ உங்க கும்மிக்கு இடையில மாட்டுனது நான் தானா?
//

ஹி..ஹி.. நீங்க கோவிச்சிக்க மாட்டீங்கன்னு தெரியும். ஏன்னா நீங்க ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல‌வர்னு பரிசல் சொன்னாரு.. அதுதான்.. :)))

புதுகை.அப்துல்லா October 23, 2008 at 10:53 AM  

அடப்பாவிகளா கொஞ்சம் லேட்டா வந்தா நம்ம சொல்ல நினைச்சத எல்லா பயபுள்ளைகளும் சொல்லிருச்சே. இனிமே என்னாத்த சொல்றது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அண்ணே நீங்க சல்மான்கான விட அழகா இருக்கீங்கண்ணே.( வந்ததுக்கு எதயாவது சொல்லனும்ல )

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP