தங்கமணிகள் மறக்கும் விஷயங்கள் 10....!!!
குடும்பத்தோடு வீட்டை பூட்டிக்கொண்டு எங்கேயாவது வெளியே புறப்படும்போது, எதையோ மறந்துவிட்டு மறுபடி வீட்டிற்குள் போகவேண்டுமென்பார்கள் (அவரவர்) தங்கமணிகள். அப்படி போவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கமுடியுமென்று பாருங்கள். விட்டுப்போனவற்றை சொல்லுங்கள்.
10. வீட்டில் பீரோ / லாக்கர் பூட்டவேண்டியிருக்கும்.
9. வெளியே காயப்போட்டிருக்கும் துணிகளை உள்ளே எடுத்துப் போடவேண்டியிருக்கும்.
8. ஜன்னல் / பால்கனி கதவுகளை மூட மறந்துவிட்டிருப்பார்கள்.
7. கைக்கடிகாரம், செயின், மோதிரம் - இவற்றை மறந்துவிட்டிருப்பார்கள்.
6. வாங்கவேண்டிய மளிகை/இதர பொருட்களின் பட்டியல் வீட்டுக்குள்ளேயே இருக்கும்.
5. வெளியே போகும்போது போடலாம் என்று வைத்திருந்த குப்பையை விட்டிருப்பார்கள்.
4. மேக்கப் மேல் டச்சப் தேவைப்படும்.
3. சமையல் கேஸ், தொலைக்காட்சிப் பெட்டி, அறையில் எரியும் விளக்கு - இவற்றை அணைத்தோமா என்று சந்தேகப்படுவார்கள்.
2. பர்ஸ், பணம், கைபேசி - இவற்றை எடுத்துக்கொள்ள மறந்திருப்பார்கள்.
டாப்-ஒன் காரணம் என்னவாக இருக்கும்?...
கீழே...
சற்று கீழே...
இன்னும் கொஞ்சம்...
1. ரங்கமணி ஓய்வறையில் பிஸ் அடித்துக்கொண்டிருக்கும்போது, அவரையே மறந்து விட்டிருப்பார்கள்.
முக்கியமான டிஸ்கி: முதலாவது காரணம் நிஜம்ம்ம்ம்ம்மா எனக்கு நடந்ததில்லைப்பா.... உங்களுக்கு யாருக்காவது நடந்திருந்தா மறைக்காமே உண்மையை ஒத்துக்கோங்க.... அவ்வ்வ்...
23 comments:
டெஸ்ட் மெசேஜ் - ப்ளாகர்லே ஏதோ பிரச்சினைன்னு நினைக்கிறேன். பழைய்ய்ய்ய்ய பதிவுகளை மறுபடியும் மேலே கொண்டுவந்துடுது....!!! லீவுக்கப்புறம் முதல் பதிவு இதுதான்!!!
me the 2nd
இல்ல உங்க வாய ஒட்டறத்துக்கு பிளாஸ்திரி எடுக்க மறந்திருக்கலாம்:):):)
ஒண்ணுமே சொல்லமுடியல. சூப்பர்!
அந்த குப்பை மேட்டரை யோசிச்சதுக்கு ஒரு சல்யூட்!
வாங்க ராப் -> ஹிஹி. இன்னிக்கு நானேதான் பஷ்டு!!!... ஆமா... மக்குக்குதானே பிளாஸ்திரி... அதனால் அது எனக்கில்லை..... அவ்வ்வ்..
வாங்க பரிசல் -> ஹாஹா... சினிமாக்காரங்க சொல்றாமாதிரியே படிங்க - "சமுதாயத்துலே நடக்கறததான் நாங்க பதிவுலே எழுதறோம்"....:-)))
விடுமுறையில் இதை தான் யோசித்துகொண்டிருந்தீரா
உங்களை உள்ள வச்சு பூட்டிட்டு கிளம்பியிருப்பாங்க..
welcome back!!!
ஆணியெல்லாம் புடுங்கியாச்சா???
எங்க வீட்ல இந்த பிரச்னையெல்லாம் இல்லவே இல்ல....
கெளம்பறதுக்கு முன்னாடி ஒரே ஒரு டயலாக்தான்..."எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு, கதவ பூட்டிடுங்க"....
அவ்வ்வ்வ்வ்......
வாங்க சரவணகுமரன் -> நன்றி...
வாங்க வால் -> ஹிஹி.. ஆமாங்க...
வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> இல்லே. இல்லே. இல்லவே இல்லே....:-(((
வாங்க விஜய் -> நீங்க லாலா மசாலாதான் பயன்படுத்தறீங்களா?... ஏன்னா... கொடுத்து வெச்சவங்க கேட்டு வாங்குவது... லாலா மசாலாதானாம்.... :-)))
ha.ha.ha. :)
:) :)
நல்ல பதிவு
செம கம்பேக் ச்சின்னப்பையன்.. கலக்கல் லிஸ்ட்..
//
1. ரங்கமணி ஓய்வறையில் பிஸ் அடித்துக்கொண்டிருக்கும்போது, அவரையே மறந்து விட்டிருப்பார்கள்.
முக்கியமான டிஸ்கி: முதலாவது காரணம் நிஜம்ம்ம்ம்ம்மா எனக்கு நடந்ததில்லைப்பா.... உங்களுக்கு யாருக்காவது நடந்திருந்தா மறைக்காமே உண்மையை ஒத்துக்கோங்க.... அவ்வ்வ்...
//
ஹா...ஹா... இதை அவாய்ட் பண்ணத்தான் நான் முதல்ல வெளிய வந்து வண்டியில உக்காந்துக்குவேன். எப்படி நம்ம ஐடியா??? :))))
வாங்க வீரா -> நன்றி..
வாங்க கயல்விழி -> நன்றி...
வாங்க வெண்பூ -> என்ன தைரியம்னா, எப்படியும் வண்டி ஓட்ட ஆள் தேவைப்படுமே - அப்ப தேடித்தானே ஆகணும்???....:-))
வெண்பூ, கமெண்ட் சூப்பர். நாங்களும் இப்படில்லாம் செய்வோமில்ல.
இப்படிக்கு
ஒரு விவரமான தங்கமணி
இப்பத்தான் விஜய் ஆனந்தோட கமெண்டை சரியா படிச்சேன்.
//எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு, கதவ பூட்டிடுங்க"....//
நானும் இதையேதான் சொல்லுவேன்.
அதே விவரமான தங்கமணி
உங்க தங்கமணி பரவாயில்லீங்க, எங்க தங்க மணிக்கு வீட்டையே பூட்டினோமான்னா சந்தேகம் இருந்துகிட்டே இருக்கும்.
எனக்கு தெரிஞ்ச காரணம் வெளியே வாங்க வேண்டிய (பெரிய) பட்டியலை மறந்து வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.
இல்ல உங்க வாய ஒட்டறத்துக்கு பிளாஸ்திரி எடுக்க மறந்திருக்கலாம்//
மறுக்கா கூவிக்கிறேன்.
கெளம்பறதுக்கு முன்னாடி ஒரே ஒரு டயலாக்தான்..."எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு, கதவ பூட்டிடுங்க"....
அவ்வ்வ்வ்வ்......//
இது சூப்பரா இருக்கே!
// ச்சின்னப் பையன் said...
வாங்க விஜய் -> நீங்க லாலா மசாலாதான் பயன்படுத்தறீங்களா?... ஏன்னா... கொடுத்து வெச்சவங்க கேட்டு வாங்குவது... லாலா மசாலாதானாம்.... :-))) //
சார்...ஒருத்தன் நொந்து போய் சொன்னா,இப்படி நக்கல் பண்றீங்களே சார்..
சமையல் கேஸ், தொலைக்காட்சிப் பெட்டி, அறையில் எரியும் விளக்கு - இவற்றை அணைத்தோமா என்று சந்தேகப்படுவார்கள்
//
இதுதான் முக்கியமான மேட்டராய் இருக்கும்.
நல்ல பதிவு
வாங்க விவரமான தங்கமணி -> நன்றி..
வாங்க கைலாஷி -> நன்றிங்க...
வாங்க கண்ணன் -> அதேதான் அதேதான்... வீட்டுக்கு வீடு ஜன்னல்னு சும்மாவா சொன்னாங்க....:-))
வாங்க புதுகை தென்றல் -> என்ன சந்தோஷம் பார்றா... நல்ல்ல்ல்ல்லாவே இருங்க.... :-)))
வாங்க விஜய் -> என்ன எல்கேஜி பையனாட்டம் சார், மேடம்னு சொல்லிக்கிட்டு???????
வாங்க அம்மா -> நன்றிங்க....
Post a Comment