கொலம்பஸ்... கொலம்பஸ்...!!!
தனியொரு மனிதனுக்கு ஆணியில்லையெனில், அவனை இந்தியாவுக்கு அனுப்பிடுவோம் - அப்படின்ற திட்டத்தின்கீழ் என் கூட இருந்தவங்க சில பேர் இந்தியாவுக்குப் போயிட்டதாலே - எனக்கு இங்கே ஆணிகள் நிறைய சேந்துடுச்சு...
நீ எவ்ளோ ஆணிவேணா குடு - ஆனா நான் எதுவும் செய்யமாட்டேன் - அப்படின்ற திட்டத்தின்கீழ் நான் இருந்தாலும், சில சமயம் சமாளிக்கமுடியாம போயிடுது.
அதனால், பூச்சாண்டிக்கு ஒரு பத்து நாளைக்கு லீவ் விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனவே, என்னுடைய அடுத்த பதிவு அக்.13ம் தேதிதான்.
இந்த லீவ் லெட்டரை கடந்த ரெண்டு நாளாய் drafts வெச்சிருந்ததாலே, நேத்து அலெக்ஸாலேந்து போன். "அடடா, நீங்க 10 நாள் லீவ் எடுத்துட்டா, மக்கள் என்ன பண்ணுவாங்க? எதைப் படிப்பாங்க?" அப்படின்னு ஒரே தொந்தரவு. அதுமட்டுமில்லாமே, பூச்சாண்டி அவங்க ratingலே, சிலபல லட்சம் கீழே போயிடும்னு பயமுறுத்தல் வேறே.
நான் அதெல்லாம் முடியாதுன்னுட்டேன். நான் ஒரு தடவை முடிவெடுத்துட்டா... அது எப்பவுமே சொதப்பலாதான் முடியும்... ம். ஐ மீன்... முடிவெடுத்ததுதான்.
அதனால், மக்களே நல்லா என்ஜாய் பண்ணுங்க... அப்பப்போ எட்டிப் பாத்து பின்னூட்டம் போடமுடியுதான்னு பாக்கறேன்..
நான் 13ம் தேதி மீட் பண்றேன்...
பை பை!!!
பின்குறிப்பு:
அகில உலக வரலாற்றிலே முதல்முறையாக - ஒரே லீவ் லெட்டர்லே ரெண்டு பேர் லீவ் போடறது இதுதான் முதல் முறையாக இருக்கும்...!!!
பதிவர் நண்பர் அப்துல்லாவும் ஐந்து நாள் லீவ் வேணும்னு என்கிட்டே அனுமதி கேட்டிருந்தார். உங்ககிட்டேயெல்லாம் கேக்காமே நானே லீவ் கொடுத்துட்டேன். என்னெ மன்னிச்சிடுங்க.... அவ்வ்வ்வ்...
21 comments:
அப்துல்லாவுக்கு இதே வேலையா போச்சு, ஒரு லீவ் லெட்டர எத்தன பேருகிட்டத்தான் குடுப்பாருன்னு தெரியல. என்கிட்ட முந்தா நாளே லீவு கேட்டாரு நானும் குடுத்துட்டேன். (அவரு பாஸ்கிட்ட லீவு கேட்டாரான்னு தெரியல)
:))
அப்படி சொல்லிட்டு லீவெடுங்க இல்லைன்னா தெரியும்தானே...!!!
\\
அகில உலக வரலாற்றிலே முதல்முறையாக - ஒரே லீவ் லெட்டர்லே ரெண்டு பேர் லீவ் போடறது இதுதான் முதல் முறையாக இருக்கும்...!!!
\\
நல்லா இருங்க...:)
அட... அவரு ஆபிஸுக்கு லீவு போட்டுட்டு ஜாலி டூர் போறார். நீங்க என்னடான்னா ஜாலியான விசயத்துக்கு லீவு போட்டுட்டு ஆபிஸ் போறீங்க. இதுல கம்பேரிசன் வேற... :)))
என்ன சொன்னாலும், ஆணிதான் முக்கியம். கவனிங்க. அதுவும் இப்ப இருக்குற நிலமைல எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது.. :(
:)-
வாங்க ஜோசப் -> அவ்வ்வ்... அவரோட பாஸ் யாரு??????
வாங்க தமிழன் -> நல்லா இருங்கன்னு வாழ்த்தியதற்கு நன்றிங்க....
வாங்க வெண்பூ -> ஆமா ஆமா.. ஆணிதான் முக்கியம்... அதான் இங்கே லீவ்...:-))
வாங்க மணிகண்டன் -> அமைதியா சிரித்ததற்கு நன்றி...
எனக்கும் ஒரு பத்து மணி நேரம் லீவு வேணும் !
ஆகா...ரெண்டு சங்கத்து சிங்கங்களும் லீவுல போய்ட்டா, J.k.R-அ யாரு காப்பாத்துவா????
:-(((((
வாங்க பாஸ்கர் -> சரி சரி... மட்டையாகப் போறீங்கன்னு சொல்லுங்க... குட் நைட்....:-))
வாங்க விஜய் -> JKற் தாங்க நம்மளை எல்லாம் இந்த அரசியல்வாதிங்ககிட்டேந்து காப்பத்தணும்....:-))
வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> :-(((( போட்டதுக்கு நன்றிங்க....
//தனியொரு மனிதனுக்கு ஆணியில்லையெனில், அவனை இந்தியாவுக்கு அனுப்பிடுவோம் //
ஆமா ,இங்கே திருப்பூர்ல பட்டன் வைக்க ஆள் வேனுமாமாம்
//என்னுடைய அடுத்த பதிவு அக்.13ம் தேதிதான்.//
நிம்மதி,நிம்மதி உங்கள் சாய்ஸ்
// "அடடா, நீங்க 10 நாள் லீவ் எடுத்துட்டா, மக்கள் என்ன பண்ணுவாங்க? //
வேறென்ன சந்தோசமா இருப்பாங்க
//பதிவர் நண்பர் அப்துல்லாவும் ஐந்து நாள் லீவ் வேணும்னு என்கிட்டே அனுமதி கேட்டிருந்தார்.//
செல்லாது செல்லாது,
அதெப்படி எங்களுக்கு தெரியாம நீங்களே லீவு கொடுக்கலாம்,
அப்துல்லா எங்கிருந்தாலும் உடனே கும்மிக்கு வரவும்
//
பின்குறிப்பு:
பதிவர் நண்பர் அப்துல்லாவும் ஐந்து நாள் லீவ் வேணும்னு என்கிட்டே அனுமதி கேட்டிருந்தார். உங்ககிட்டேயெல்லாம் கேக்காமே நானே லீவ் கொடுத்துட்டேன். என்னெ மன்னிச்சிடுங்க.... அவ்வ்வ்வ்...
//
கொய்யாஆஆஆஆலே
உங்க தலைவரோட தசாவாதாரத்தை இந்த வார ஆனந்த விகடன்ல பாத்திங்களா? அதை பத்தி ஒரு கட்டுரை!? இருக்குமுன்னு நினைச்சு வந்தா இப்படி பண்ணிட்டிங்களே ச்சின்னபையா?
ச்சின்னபையா.,
Enjoy .... :)) :)) :))
Us Toooo ... :))
Take Rest...
Come back with fresh...
//அகில உலக வரலாற்றிலே முதல்முறையாக - ஒரே லீவ் லெட்டர்லே ரெண்டு பேர் லீவ் போடறது இதுதான் முதல் முறையாக இருக்கும்...!!!//
:-))))))))))))))))))
நண்பா..
என்னாச்சு பங்காளிய கொஞ்ச நாளா காணலியேன்னு நெனச்சுகிட்டேயிருந்தேன். ஸாரிப்பா. இப்போதான் பார்த்தேன்.
சீக்கிரம் வாங்க.. ஒரு மொக்கையப் போடுவோம்!
Post a Comment