வாழ்க்கையை புரட்டிப் போட்ட கடலை!!!
ஆரம்ப காலத்தில், சென்னையில் ஒரு அலுவலகத்தில் உதவி கணக்கணாய் (Accounts Assistant) வேலை செய்துகொண்டிருக்கும்போது, ஒரு நல்ல மதிய வேளையில் நண்பன் சொன்னான். "மாப்ளே, கீழே ரெண்டாவது மாடியிலே ஒரு கணிணி பயிற்சி நிலையம் தொடங்கியிருக்காங்க. சூப்பரா இருக்குடா". அன்று மதியம் எங்களுக்கு வேலையே ஓடவில்லை. "மாப்ளே, நான் கண்டிப்பா கணிணி வகுப்புலே சேரறேண்டா" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தான் நண்பன். "ஏண்டா, அவ அலுவலகத்திலே இருப்பா. நமக்கு வந்து சொல்லிக் கொடுக்கல்லாம் மாட்டா. எதுக்கு வேஸ்டா அங்கே போய் சேர்றே" என்றால், "ஏதாவது ஒரு சந்தேகம் வைத்துக்கொண்டு தினமும் நான் அலுவலகத்திற்குப் போய்விடுவேன்" என்றான். கடைக்கு ரெண்டாவது தடவையா வந்த ஆடுகளை விடவே கூடாதுன்னு அவங்க - ஸ்காலர்ஷிப் தர்றோம், தவணை முறையிலே பணம் கட்டுங்கன்னு - அப்படி அடுத்த வாரம் திங்கட்கிழமை காலை அலுவலகத்தில். நண்பன்: ஏண்டா, அந்த கோர்ஸ் பத்தி என்ன நினைக்கிறே? சேரப்போறியா? நான்: நீ முதல்லே சொல்லு. நீ சேரப்போறியா? நண்பன்: ச்சேசே. நாந்தான் அப்பவே சொல்லிட்டேனே. நான் சும்மா கடலை போடத்தான் போறேன்னு.நான் சேரப்போறதில்லை. நீ கூடதான் பணம்லாம் ஜாஸ்தியாகும்னு சேரமாட்டேன்னு சொன்னே. நான்: அது அப்ப சொன்னேன். ஆனா இப்ப... நண்பன்: இப்ப? நான்: அது வந்து... அது வந்து... ***** ஒரு நல்ல Cost Accountant அல்லது Chartered Accountant ஆயிருக்கவேண்டியன - கடலையா போடறே, மகனே வா - We Change Lives அப்படின்னு சொல்லிட்டு என் வாழ்க்கையவே மாத்திட்டாங்க... ஆமாங்க. நான் அங்கே மூணு வருட கோர்ஸ்லே சேந்துட்டேன்..... அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் புவியியல்தான்.. ஐ மீன்... வரலாறுதான்...
அப்போது எங்க அலுவலகத்தில் ஒரே ஒரு கணிணி இருந்தது. அதையும் குளிர்சாதன வசதியுடன் ஒரு கண்ணாடி அறைக்குள் போட்டு பூட்டி வைத்திருந்தார்கள். சிறப்பு கட்டணம் கட்டி கோயிலுக்குள் அனுமதிப்பது போல் அந்த அறை பாதுகாக்கப்பட்டிருந்தது." நாமளும் கணிணி கத்துக்கிட்டு அந்த அறையில் உரிமையோட நுழையணும்டா" இது மறுபடியும் நண்பன். "சரி வா போய் பாத்துடலாம்னு" உணவு இடைவேளையில் கீழே போனோம்.
"பணம் அதிகமா கறந்துடப்போறாங்கடா" என்று நான் கூற, அவனோ " நாம எதிலேயும் சேரப்போறதில்லை. அங்கே இருக்கும் ஒரு பொண்ணு சூப்பரா இருக்குது. அதைப் பாத்து கொஞ்ச நேரம் கடலை போட்டுட்டு வந்துடலாம்" என்றபடியே உள்ளே நுழைந்துவிட்டான்.
வெளியே சூப்பராக பெயர்ப்பலகை வைத்திருந்தார்கள். "Aptech - We Change Lives". பயிற்சி நிலையத்துக்குள்ளேயும் அருமையாய் அலங்காரம் செய்திருந்தார்கள். நேராக அங்கிருந்த ரிசப்ஷனிஸ்டிடம் போனோம். "எங்களுக்கு கோர்ஸ் டீடெய்ஸ் வேணும்". அவரும் "உள்ளே போங்க. செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருப்பாங்க" என்றார்.
கண்ணாடி அலுவலகத்தில் நுழைந்து செல்வி முன்னால் உட்கார்ந்ததுதான் தெரியும். அடுத்த 20 நிமிடங்களுக்கு எனக்கும் நண்பனுக்கும் - மஞ்சகாட்டு மைனா நடிகைமுன் நின்ற பிரபுதேவாவைப் போல் - எதுவுமே காதில் விழவில்லை. பிறகு மந்திரித்து விட்ட ஆடுகளைப் போல் - நாளைக்கு வந்து பணம் கட்டுகிறோம் என்று கூறி வெளியே வந்துவிட்டோம்.
மறுநாள் மறுபடியும், "இன்னொரு தடவை போய் பாப்போம். சில சந்தேகங்கள் இருக்கு எனக்கு" என்றான். "இது வேலைக்காகாது. சரியில்லை" என்று புத்தி சொன்னாலும், எப்போதும் போல் மனது கேட்காததால், "சரி, வா போலாம்" என்றேன்.இந்த தடவை கொஞ்சம் தெளிவாக இருந்த நாங்கள் - கேள்வியெல்லாம் கேட்டு சந்தேகங்களை (!!!) தீர்த்துக்கொண்டோம்.
இப்படின்னு நிறைய கவர்ச்சித் திட்டங்களை சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்போவும் மசியாத நாங்கள், "ஒரு வாரம் டைம் கொடுங்க. யோசிச்சி திரும்ப வர்றோம்" அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டோம்.
33 comments:
நீங்க அமேரிக்கா போனதுக்கு கூட அந்த கடலை தான் காரணமா,
அப்போ கடலை போட்டா அமேரிக்கா போலாமா
நான்தான் பர்ஸ்டா
பரிசு ஏதாவது உண்டா
கும்மியர் சங்க தலைவி ராப்பை இன்னும் காணோமே
சீரியஸ் பதிவுன்னு நினச்சிட்டு யாரும் கும்மியடிக்க வரலியா
இப்போ அந்த நண்பர் என்ன பண்றார்
//நீங்க அமேரிக்கா போனதுக்கு கூட அந்த கடலை தான் காரணமா,
அப்போ கடலை போட்டா அமேரிக்கா போலாமா//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
Dr-BGL
//பரிசு ஏதாவது உண்டா//
Dr-BGL
//சீரியஸ் பதிவுன்னு நினச்சிட்டு யாரும் கும்மியடிக்க வரலியா//
Dr-BGL
இப்போ செல்வி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ன பண்றாங்க
//இப்போ அந்த நண்பர் என்ன பண்றார்//
Dr-BGL
//இப்போ செல்வி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ன பண்றாங்க//
Dr-BGL
//Dr-BGL//
இதுக்கு என்னாங்க அர்த்தம்
Thats name with initial and place Mr.Vaalpaiyan
சூப்பர் கொசுவத்தி.. பாராட்டுக்கள் ச்சின்னப்பையன். முதல் முறையாக கடலையினால் நல்ல நிலைக்கு வந்த ஒருவரை பார்க்கிறேன். வாழ்த்துக்கள். அமெரிக்கா போயும் அங்கிருக்கும் வெள்ளைக்கார ஃபிகர்களிடம் கடலை போடவும். இன்னும் நல்லா எதுனா நடக்குதான்னு பாக்கலாம். :)))
:-))))
ப்ரவாயில்லயே..aptech-la படிச்சி உருப்பட்டுருக்கீங்களே!! :-))
juz kidding!
வால்பையன் இதே மாதிரி கடலை மேட்டர்ல சிக்கியிருப்பார் போல...
கொலைவெறியோட கமெண்ட்டுறார்...
:-)))
valpaiyan's all comments - repeattttttttt!!!!!!
// "Aptech - We Change Lives//
illai
selvi changes lives
sariyaa sathya
வாங்க வால் -> ஆமா. நீங்க பஷ்டு... பரிசுதானே???? கண்டிப்பா கொடுத்திடுவோம்...
கடலை போட்டா அமெரிக்கா போலாமா - இதைப்பற்றி யாராவது ஆராய்ச்சி கட்டுரை எழுதினா நல்லாயிருக்கும்.... எனக்குத் தெரியல.....:-))
அந்த நண்பர் வேறே ஒரு கடலையின் விளைவால் துறை மாறி வேறே துறைக்கு போயிட்டார்...:-))
Dr-BGL -> Raja-bglனு ஒருத்தர் பின் போடுவார். இது அவராத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்....கண்டிப்பா அது நானில்லைங்கோ....:-)))
20
வாங்க வெண்பூ -> ஹிஹி.. இங்கே வந்தும் கடலை போட்டா, நல்லா எதுவும் நடக்காது... என்னாலேயே நடக்க முடியாமே போயிடும். கால்லேயே உதை விழும் வீட்லே....அவ்வ்வ்...
வாங்க சந்தனமுல்லை -> ஏங்க இப்படி சொல்றீங்க???? வேறே ஏதாவது ஒரு மோசமான உதாரணங்கள் இருக்கா????????>:-))
வாங்க ரவி -> அதேதான் நானும் நினைச்சேன்.... காலி பஸ்லே ஏறினவுடனே உக்கார இடம் தேடி பரபரன்னு அலைவோமே - அந்த மாதிரி பரபரப்பா பின்னூட்டம் போட்டிருக்கார்..... :-))))
வால் -> தமாசாதான் சொன்னேன். இதே மாதிர் கமெண்ட் போடறத விட்றாதீங்க.... :-)))))
என்ன நடக்குது இங்கே, பேரை மாத்தறேன்னு சொல்லி என்னை கலாய்ச்சிட்டீங்களே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................
கடலை வருத்தல் - ஒரு பார்வை அப்படின்னு ஒரு ஆராய்ச்சிப் பதிவு போட்டிரவேண்டியதுதான், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............
25
//"Aptech - We Change Lives"//
எப்படி? ஆயிரம் ரூபாய்க்கு அலஞ்சவங்களை, அஞ்சு பைசா பத்து பைசான்னு 'change'க்கு அலையை விட்டுருவாங்களா?
வாங்க விஜய் -> வழிமொழிந்ததற்கு நன்றி...
வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> அவ்வ்வ்வ்..... அப்படித்தான் ஆகிப்போயிடுச்சு....:-)))
வாங்க ராப் -> அவ்வ்வ்.. என்ன இப்படி சொல்லிட்டீங்க.. விட்டா 'செல்வி ஜெயலலிதா'கூட என் பேரைத்தான் பயன்படுத்தறாங்கன்னு சொல்வீங்க போலிருக்கே?????
அந்த கட்டுரையை தாங்கள்தான் எழுதவேண்டுமென்று இந்த இணைய உலகம் எதிர்பார்க்கிறது...:-))
//விட்டா 'செல்வி ஜெயலலிதா'கூட என் பேரைத்தான் பயன்படுத்தறாங்கன்னு சொல்வீங்க போலிருக்கே?????//
இல்லையாப் பின்ன?????????????????
//அந்த கட்டுரையை தாங்கள்தான் எழுதவேண்டுமென்று இந்த இணைய உலகம் எதிர்பார்க்கிறது...:-))//
தங்கள் எல்லோரின் சித்தம் என் பாக்கியம்
சென்னையில் ஒரு அலுவலகத்தில் உதவி கணக்கணாய் (Accounts Assistant) வேலை செய்துகொண்டிருக்கும்போது
//
அட நீங்களும் நம்ப ஜாதியா...ஐ மீன் கணக்கப் பிள்ளை :))
நீங்க கணக்கு படிச்சுட்டு கம்யூட்டரை தட்டிட்டு இருக்கிங்க. நான் கம்யூட்டர் படிச்சுட்டு இப்ப கால்குலேட்டரை தட்டிட்டு இருக்கேன்
//அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் புவியியல்தான்.. ஐ மீன்... வரலாறுதான்..//
U mean GodFather?
//////கடைக்கு ரெண்டாவது தடவையா வந்த ஆடுகளை விடவே கூடாதுன்னு அவங்க - ஸ்காலர்ஷிப் தர்றோம், தவணை முறையிலே பணம் கட்டுங்கன்னு - அப்படி
இப்படின்னு நிறைய கவர்ச்சித் திட்டங்களை சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்போவும் மசியாத நாங்கள், "ஒரு வாரம் டைம் கொடுங்க. யோசிச்சி திரும்ப வர்றோம்" அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டோம்./////----
"" ஆமாங்க. நான் அங்கே மூணு வருட கோர்ஸ்லே சேந்துட்டேன்..... ""
விதி வலியது !!!
Post a Comment