Monday, September 22, 2008

உப்பில்லா பண்டம் புருஷன் வாயிலே - ஒரு உப்புமா பதிவு!!!


சமீபத்தில் தங்கமணி செய்த உப்புமாவில் தலைப்பில் சொல்லியிருக்கும் 'அந்த' ஐட்டம் கொஞ்சம் கம்மியாக இருக்கையில் - இதே உப்புமாவை சுமார் 108 வித சுவைகளில் சாப்பிட்ட அந்த காலங்கள் நினைவுக்கு வந்தன.

கொசுவர்த்தி ஸ்டார்ட்!!!

மூன்றாம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்பு படிக்கும் வரை, படேல் ஸ்கௌட்ஸ் (Patel Scouts & Guides) என்ற சாரணர் அமைப்பில் இருந்தேன். வாரந்தோறும் ஞாயிறன்று காலை 2 மணி நேரம் - சென்னை மெரினா விளையாட்டரங்கத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வென்லாக் பார்க்கில் வகுப்பு/பயிற்சி இருக்கும்.

அந்த பயிற்சியில் ஒரு பகுதியாக, மக்களுக்கு சமையலுக்கு ஒரு சிறு தேர்வு வைத்து ஒரு மெரிட் பேட்ஜ் கொடுப்பார்கள். இந்த பேட்ஜைப் பெறுவதற்கு 99% மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு பண்டம் - உப்புமா.

மாதமொருமுறை யாராவது ஓரிருவர் இந்த சமையல் கலைக்கான பேட்ஜை வாங்கும் முயற்சியில் உப்புமா செய்வர். 'தல'யாக இருப்பவர், அந்த உப்புமாவை டேஸ்ட் செய்த பிறகு, வகுப்பிற்கு வந்திருக்கும் மற்றவர்களுக்கு காலை வேளை சிற்றுண்டி அங்கேயே கிடைத்து விடும்.

அதே பூங்காவில் இருக்கும் கட்டிடத்துக்குப் பின்புறம் திறந்தவெளியில் சமைக்கவேண்டும். கேஸ் ஸ்டவ்வோ ஏன் சாதாரண மண்ணெண்ணெய் ஸ்டவ்வோக்கூட கிடையாது. மூன்று செங்கல்களைப் போட்டு அதன் மேலே வாணலியைப் போட்டு உப்புமா செய்யவேண்டியதுதான். அங்கேயே கிடைக்கும் சுள்ளி, இலை, தழை - இதையெல்லாம் சேகரித்து கையோடு கொண்டு வந்திருக்கும் கற்பூரத்தின் உதவியால் அடுப்பைப் பற்றவைத்துவிடுவார்கள்.அப்படி சமைக்கும்போது காற்று வேகமாக அடித்தாலும் கஷ்டம் - கொழுந்து விட்டு எரியும் அடுப்புக்கு மேல் உப்புமா செய்யவேண்டும். காற்றே இல்லாவிட்டாலும் கஷ்டம் - ஒருவர் உப்புமா செய்ய இன்னொருவர் உட்கார்ந்து அடுப்பை விசிறிக்கொண்டே இருக்கவேண்டும்.


வீட்டிலிருந்து கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம் முதலிய பொருட்களோடு அவையெல்லாம் எந்த வரிசைப்படி உப்புமாவில் போடவேண்டுமென்ற 'பிட்'டும் மக்கள் கையோடு கொண்டு வந்துவிடுவார்கள்.

"டேய், முதல்லே என்ன போடணும்",

"ரவை வறுத்தது போதுமா பார்றா",

"என்ன, கத்தி மறந்துட்டியா?" -

இதெல்லாம் அவர்கள் சமைக்கும்போது கேட்கும் வசனங்கள்.

இப்படி கஷ்டப்பட்டு உப்புமா செய்தபிறகு, அதை செய்தவர்களுக்கும், சாப்பிட்டவர்களுக்கும் கண்ணில் நீர் முட்டிக்கொண்டு இருக்கும். கையோடு கொண்டுவந்திருக்கும் கர்சீப்பில் துடைத்துக்கொண்டே உப்புமாவை சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்.

எதுக்கு எல்லார் கண்ணிலும் கண்ணீர்னு பாக்கிறீங்களா? அடுத்த பாராவில் இருக்கு பதில்.

படாத பாடு பட்டு பற்றவைத்த அடுப்பின் புகையில் ஒரு அரை மணி நேரம் சமைத்ததால், சமைத்தவர்கள் கண் சிவந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பார்கள். அப்பேர்ப்பட்ட உப்புமா சாப்பிட்டவர்கள், சில சமயம் கொழ கொழ உப்புமா சாப்பிட்டு வாய் திறக்க முடியாமலும், சில சமயம் பச்சைமிளகாய் காரம் அதிகமாகி, கண் எரிச்சலாலும் கண்ணீர் விட தயாராக இருப்பார்கள்.

இந்த காலகட்டத்தில்தான் சுமார் 100க்கும் மேற்பட்ட சுவைகளில் உப்புமா சுவைத்திருக்கிறேன். உதாரணத்திற்கு சில:

1. உப்பு குறைவு

2. உப்பு அதிகம்

3. காரம் அதிகம்

4. கொழ கொழ

5. அடிபிடித்தது

கொசுவர்த்தி ஸ்டாப்!!!

"என்ன, இன்னும் சாப்பிடாமே என்ன யோசனை?"

"இல்லேம்மா. இப்போ சாப்பிடறேன். சூப்பரா இருக்கு உப்புமா. நீ எது செய்தாலும் அருமையா இருக்கு. எங்கே கத்துக்கிட்டே இந்த மாதிரி செய்றதுக்கு?"

21 comments:

Anonymous,  September 22, 2008 at 2:21 PM  

ஹலோ சத்யா,

ஒன்ரை டம்ளர் சுடு தன்ணி வைக்க ஓங்கு தாங்காப் பதிவு போட்டுட்டு, இப்ப தங்க மணி செஞ்ச உப்புமா சாப்பிடக் கசக்குதோ?

உப்புமான்ன எங்கூரு கோதுமை உப்புமாதான். கொங்கு மண்டலத்தில் கிடைக்கும் கோதுமை உப்புமாவும் தயிரும் காம்பினேசன்ல சாப்பிட்டவனுக்கு வேற எதுவும் வேண்டாம். அதிலும் கவுண்டர் வீட்டுக் கோதுமை உப்புமாவும் கட்டித் தயிரும் அட அடா.

விஜய் ஆனந்த் September 22, 2008 at 3:17 PM  

:-))))....

வாங்கண்ணே!!!

உப்புமாஆஆஆ....

ஆஆஆஆ!!!...நல்லா இருக்கு!!!(எத்தன தடவ, எத்தன இடத்துல இதே டயலாக்க சொல்றது???அவ்வ்வ்வ்வ்வ்.......)

வ.வே அய்யாவின் இ.வே. முன்-னுக்கு ரிப்பீட்டேய்ய்ய்ய்!!!!

T.V.Radhakrishnan September 22, 2008 at 3:29 PM  

உப்புமா என்றதும்..என்.எஸ்.கிருஷ்ணன் காமெடி ஒன்று ஞாபகத்தில் வருகிறது

உப்புமா மா மா மா மா மா மா மா மா மா மா

rapp September 22, 2008 at 4:46 PM  

//வீட்டிலிருந்து கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம் //

உப்புமாவிற்கு எதுக்கு தக்காளி? கிச்சடிக்கு உபயோகப்படும் ஐட்டம் அது (எனக்கு சமைக்கத் தெரியும்னு சொல்றதுக்கு எப்படில்லாம் மொக்க போட வேண்டியிருக்கு, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................................)

ச்சின்னப் பையன் September 22, 2008 at 5:40 PM  

வாங்க வேலன் ஐயா -> நான் நினைச்சது வேறே. ஆனா வாய்விட்டு சொன்னதை கவனிச்சீங்களா?... அதுதான் முக்கியம்....

வர்றேன்... வர்றேன்.. அந்த உப்புமாவை எடுத்து ஃபிரிட்ஜிலே வைங்க.....

வாங்க விஜய் -> எவ்ளோ இடத்திலே போய் சாப்பிட்டாலும், வாய் திறந்துதானே சாப்பிடறீங்க? அதே மாதிரி, அதே பின்னூட்டத்தைப் போடறதிலே என்ன கஷ்டம்?.... அவ்வ்வ்....

ச்சின்னப் பையன் September 22, 2008 at 5:42 PM  

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> இந்த காமெடியை ரொம்ப நாள் முன்னாடி பாத்த மாதிரி ஞாபகம். நன்றி...

வாங்க ராப் -> என்ன கொடுமை இது ராப்?.... கலைஞரே காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கலாம்னு நினைக்கறப்போ, உப்புமாலே தக்காளி போடப்படாதா?.... :-)))

துளசி கோபால் September 22, 2008 at 5:46 PM  

உப்பே கூடாதுன்னு மருத்துவர் சொன்னபிறகு வெறும் .....மா செஞ்சு கொடுத்துக்கிட்டு இருக்கேன் மறுபாதிக்கு!!!!!

என்னோட கொசுவத்தி ஒன்னைப் பத்தவச்சுட்டையே பரட்டை.

தீர்த்தகிரி மலையில் செஞ்ச உப்புமா கண்முன்னே வந்தாடுது.

ச்சின்னப் பையன் September 22, 2008 at 6:00 PM  

வாங்க துளசி மேடம் -> ஹாஹாஹா.. கொளுத்துங்க கொசுவத்தியை.... எழுதுங்க பதிவை... :-)))

புதுகை.அப்துல்லா September 22, 2008 at 7:25 PM  

கலைஞரே காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கலாம்னு நினைக்கறப்போ, உப்புமாலே தக்காளி போடப்படாதா?.... :-)))

//

ஹா...ஹா...ஹா.. ராப்புக்கு அவருக்கு பிடிச்ச கலைஞரை(எனக்கும்தான்) வச்சே பதில் குடுத்துட்டீங்களே :))))))

ஜோசப் பால்ராஜ் September 22, 2008 at 10:42 PM  

//"இல்லேம்மா. இப்போ சாப்பிடறேன். சூப்பரா இருக்கு உப்புமா. நீ எது செய்தாலும் அருமையா இருக்கு. எங்கே கத்துக்கிட்டே இந்த மாதிரி செய்றதுக்கு?" //

சின்னப் பையனா இருந்தாலும் புத்திசாலிப் பையனா இருக்காருப்பா. பொழைக்கத் தெரிஞ்சவரு .

VIKNESHWARAN September 23, 2008 at 12:28 AM  

உங்க தலைப்பு சூப்பருங்க... பலமொழி மாற்றியமைக்க வேண்டும்...

வெண்பூ September 23, 2008 at 12:46 AM  

உங்க வீட்லயும் அடிக்கடி உப்புமாதானா? எங்க வீட்ல செய்யுற ரெண்டு ஃப்ரீக்வன்ட் ஐட்டம் ஒண்ணு உப்புமா இன்னொண்ணு மேகி நூடுல்ஸ்.. :(

Anonymous,  September 23, 2008 at 12:55 AM  

//கொசுவத்தி ஸ்டார்ட்

கலைஞர் ஆட்சியிலெ காங்கிரஸ் பங்கு ஹ்ஹாஹா ஹா

கொசுவத்தி ஸ்டாப்//

108 வடையா ச்சே வகையா.....

:-))))))))

இராஜா-பெங்களூரூ

ARUVAI BASKAR September 23, 2008 at 1:00 AM  

எங்க வீட்டில் வருடத்திற்கு இரண்டு முறையாவது உப்பில்லா உப்புமா செய்வார்கள் .நானும் நீங்கள் சொல்வதுபோல் சொல்லித்தான் அதனை சாப்பிடுவது உண்டு .

வால்பையன் September 23, 2008 at 3:13 AM  

//"இல்லேம்மா. இப்போ சாப்பிடறேன். சூப்பரா இருக்கு உப்புமா. நீ எது செய்தாலும் அருமையா இருக்கு. எங்கே கத்துக்கிட்டே இந்த மாதிரி செய்றதுக்கு?"//

இதுக்கு நீங்க எங்கே கத்துகிட்டிங்க
நமக்கு தான் வரவே மாட்டிங்குது

ச்சின்னப் பையன் September 23, 2008 at 8:34 AM  

வாங்க அப்துல்லா -> நன்றிங்கண்ணா...

வாங்க ஜோசப் -> இல்லேன்னா, அடுத்த நாள்லேர்ந்து சமைக்க வேண்டிவருமே????? அவ்வ்வ்...

வாங்க விக்னேஸ்வரன் -> அப்போ பதிவ படிக்கவேயில்லையா?????? ஆஆஆஆ...

ச்சின்னப் பையன் September 23, 2008 at 8:35 AM  

வாங்க ராஜா -> நன்றி...

வாங்க பாஸ்கர் -> வீட்டுக்கு வீடு உப்புமா... ஹாஹா...

வாங்க வால் -> எங்கேயாவது க்ராஷ் கோர்ஸ் இருக்கான்னு பாத்து சேந்துடுங்க...:-))))

பரிசல்காரன் September 23, 2008 at 10:00 AM  

//
உப்புமான்ன எங்கூரு கோதுமை உப்புமாதான். கொங்கு மண்டலத்தில் கிடைக்கும் கோதுமை உப்புமாவும் தயிரும் காம்பினேசன்ல சாப்பிட்டவனுக்கு வேற எதுவும் வேண்டாம்.//

annanikku uppumaa poduveengannu naanum, athishaavum nenaichchom.. escape ayitteenga aNNaa!

tamilraja September 23, 2008 at 3:34 PM  

"டேய், முதல்லே என்ன போடணும்",

"ரவை வறுத்தது போதுமா பார்றா",

"என்ன, கத்தி மறந்துட்டியா?" -

இதெல்லாம் அவர்கள் சமைக்கும்போது கேட்கும் வசனங்கள்.
//
/
/ ஹா..ஹா..ஹ..ஹ..ஹா பின்ரிங்க!!!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP