Monday, September 8, 2008

பாகிஸ்தான்காரன் மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!!!

இப்படி ஒரு பதிவை எழுதவே கஷ்டமாகதான் இருக்கு என்ன செய்ய நேற்று ஊறுகாய் பாட்டிலை (மேட் இன் பாகிஸ்தான்) திறக்கும்போது குப்பென்று பூண்டு வாசனை அடித்தது.


நேற்று நண்பர் வீட்டில் புதிய ஊறுகாய் டப்பா வாங்கியிருப்பதைக்கண்டு சப்பாத்தியோடு தொட்டுக்கொண்டு சாப்பிட அவரது வீட்டிற்குப்போனேன். பாகிஸ்தானியர் அவ்வளோவாக காரம் போடவில்லை என்று வருத்தப்பட்டு இருந்தார், அதை நினைத்து வருத்தப்பட்டேன்.

அவரது ஃப்ரிட்ஜின் ஓரத்தில் அந்த #$# ஊறுகாய் பாட்டிலை வைத்திருந்தார். எனக்கு அதை சாப்பிட்டுப் பார்க்கும் ஆவல் அதிகரிக்கவே, கொஞ்சம் தொட்டு நக்கப்பார்த்தேன். என்னுடைய கை வழுக்கி வழுக்கி விட்டதால் பாட்டிலை திறக்கவேமுடியவில்லை. ஆகையால், எங்கு
புதிய ஊறுகாய் பாட்டில் இருக்கு என்று தேடி அலைந்து சஞ்சய் வீட்டுக்கு சென்றேன். அங்கு ஏற்கனவே அது ஓப்பன் ஆகி இருந்தது, ஒரே ஒரு தடவை அதை நக்கிய பிறகு என்னால் உட்காரமுடியவில்லை.


அது 2008ல் வந்த ருசி ஊறுகாயின் வகையான எலுமிச்சையின் அப்பட்டமான காப்பி என்று தெரிந்தது.

அப்படியே அச்சு அசலாக காப்பி அடித்து இருக்கிறார்கள், இதில் கொடுமையின் உச்சக்கட்டமாக தயாரிப்பு பாகிஸ்தானில் என்று போட்டு இருந்தது, எங்கேயாவது ருசியின் சிறப்பம்சமான பூண்டு வாசனை வருகிறதா என்று பார்க்கவே திரும்பி திரும்பி அதை பத்து முறை நக்கிப்
பார்த்தேன். (நம்புங்கப்பா அதுக்காகவேதான் திரும்ப திரும்ப நக்கினேன்.).


ருசி ஊறுகாய் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதே ஊறுகாய் இன்றும் என்னிடம் இருக்கிறது. அவ்வளவோ அருமையான ஊறுகாயை சுட்டிருக்கிறார்களே நன்றி என்று ஒரு வார்த்தை போடவில்லையே என்ன செய்யலாம்? ஒரு கிண்ணத்தில் வாங்கி வீட்டில் போய் சாப்பிடலாமா என்று கிண்ணம் கேட்டேன். கொடுக்கவில்லை. அதனால் நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை. சரி நம்மால் என்ன செய்யமுடியும் இப்படி ஒரு பாட்டிலை சுட்டுக்கொண்டு வரமுடியுமா? அல்லது ஊறுகாயை சட்டைப்பையில் போட்டுக்கொண்டுதான் வர
முடியுமா என்று பயங்கர பசியில் அவருக்கு ஒரு போன் போட்டேன். அந்த ஊறுகாய் பாட்டிலை எனக்கு அனுப்பமுடியுமா என்று?


இரவு திரும்ப போய் அவரது ஃப்ரிட்ஜைப் பார்த்தால் அந்த பாட்டில் அந்த இடத்திலிருந்து நீக்கப்பட்டு இருந்தது. அதைவிட கொடுமையாக அந்த ஃப்ரிட்ஜே அங்கிருந்து நீக்கப்பட்டு இருந்தது.


அவர் ஏன் அந்த ஊறுகாய் பாட்டிலையும், ஃப்ரிட்ஜையும் நீக்கவேண்டும்?

பிற்ச்சேர்கை: பதிவு சமையலை லைட்டாக டச் செய்வதால் பதிவுலக நீதிப்படி இந்த பதிவை ஆசான் காஞ்சனா ராதாகிருஷ்ணன் ஐயாவுக்கு டெடிக்கேட் செய்கிறேன்.

18 comments:

Kanchana Radhakrishnan September 8, 2008 at 10:19 PM  

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை..

Sridhar Narayanan September 8, 2008 at 10:40 PM  

/இரவு திரும்ப போய் அவரது ஃப்ரிட்ஜைப் பார்த்தால் அந்த பாட்டில் அந்த இடத்திலிருந்து நீக்கப்பட்டு இருந்தது. அதைவிட கொடுமையாக அந்த ஃப்ரிட்ஜே அங்கிருந்து நீக்கப்பட்டு இருந்தது.//

எப்படி? எப்படிங்கறேன்... ஃப்ரிட்ஜைப் பாத்து, பாட்டில் இருந்த இடத்தைப் பாத்தபிறகுதான் ஃப்ரிட்ஜ் நீக்கப்பட்டது தெரிந்ததா? டெக்னிகல் ஃபால்ட்.

இன்னமும் பெட்டரா எதிர்ப்பாக்குறோம். நெக்ஸ்ட் டைம் பெட்டர் லக் :-))

வெட்டிப்பயல் September 8, 2008 at 11:13 PM  

//Sridhar Narayanan said...

/இரவு திரும்ப போய் அவரது ஃப்ரிட்ஜைப் பார்த்தால் அந்த பாட்டில் அந்த இடத்திலிருந்து நீக்கப்பட்டு இருந்தது. அதைவிட கொடுமையாக அந்த ஃப்ரிட்ஜே அங்கிருந்து நீக்கப்பட்டு இருந்தது.//

எப்படி? எப்படிங்கறேன்... ஃப்ரிட்ஜைப் பாத்து, பாட்டில் இருந்த இடத்தைப் பாத்தபிறகுதான் ஃப்ரிட்ஜ் நீக்கப்பட்டது தெரிந்ததா? டெக்னிகல் ஃபால்ட்.

இன்னமும் பெட்டரா எதிர்ப்பாக்குறோம். நெக்ஸ்ட் டைம் பெட்டர் லக் :-))//

டெக்னிக்கல் ஃபால்ட் இல்லை... அது இப்படி வர வேண்டியது

அதைவிட கொடுமையாக "ஒரு மணி நேரத்தில்" அந்த ஃப்ரிட்ஜே அங்கிருந்து நீக்கப்பட்டு இருந்தது.

ஸ்லிப் ஆஃப் தி ஃப்ங்கர்ஸ் ;)

வெட்டிப்பயல் September 8, 2008 at 11:14 PM  

//ஸ்லிப் ஆஃப் தி ஃப்ங்கர்ஸ் ;)//

இங்கயே ஸ்லிப் ஆகிடுச்சி பார்த்தீங்களா?

அது

ஸ்லிப் ஆஃப் தி ஃபிங்கர்ஸ் :)

வெட்டிப்பயல் September 8, 2008 at 11:17 PM  

சரி இது ருசி ஊறுகாய்ல இருந்து காப்பி அடிச்சதுனா ருசி ஊறுகாய் தானே கோபப்படனும். பாகிஸ்தான்காரனுக்கு இதுல என்ன கோபம் வரப்போகுது :)

வெண்பூ September 9, 2008 at 12:59 AM  

அதிர்ச்சியின் உச்சம் இது ச்சின்னப்பையன். இது குறித்து கண்டிப்பாக எதாவது செய்தாக வேண்டும். உண்மையை உரக்க சொன்னதற்கு பாராட்டுகள்.

ஹி...ஹி... என்ன‌ ப‌ண்ண‌ அங்க‌ போட்ட‌ பின்னூட்ட‌மே இங்க‌யும்..

வெண்பூ September 9, 2008 at 1:02 AM  

cheena said...
ருசியே ஒரு காப்பி மன்னர்தானே
அவரது பல ஊறுகாய்களும் பிரியா ஊறுகாய் போன்ற பேர் வாங்கிய ஆந்திர தயாரிப்பாளர்களின் தழுவல்தானே. இது ஆந்திர ஊறுகாய் சுவைத்தோருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

அவரது மாங்கா தொக்கு கூட பிரியா மேங்கோ ஊறுகாயின் அப்பட்டமான காப்பி என்பது பலருக்கும் தெரியும்

அவரது ஊறுகாய் ரெசிப்பியை காப்பியடிப்பதில் என்ன தவறு

வெண்பூ September 9, 2008 at 1:03 AM  

TBCD said...
பல முறை காரமாக ருசியில் கொடுக்கப்பட்ட மிக்ஸ்டு வெஜிடபுள் ஊறுகாய் பாக்கெட்டுக்கு ருசி உபயம் போட்டு எழுதினதா எனக்கு நினைவே இல்லை...

உங்களுக்குத் தெரியும்மா

வெண்பூ September 9, 2008 at 1:05 AM  

கார்த்திக் said...
// இப்ப பிரச்சினை ருசி பண்ணினது சரியா இல்லையான‌றது இல்லை. அவரோட ஒரு ரெசிப்பியை காப்பி அடிச்சி தன் பேர் போட்டுகிறது சரியான்றதுதான்.//

ருசி பண்ணியது சரியா இல்லையானு நக்கி பாக்கவேண்டியதில்லைன்னா பாகிஸ்தான் காரன் பண்ணியதையும் நக்க வேண்டியதில்லை

வால்பையன் September 9, 2008 at 2:23 AM  

ஒண்ணும் சொல்றதுகில்ல!
பாவம் கேபிள் சங்கர்

rapp September 9, 2008 at 2:51 AM  

ஏதாவது செய்யணும் பாஸ்:):):)

rapp September 9, 2008 at 2:53 AM  

/வெண்பூ said //cheena said...
ருசியே ஒரு காப்பி மன்னர்தானே
அவரது பல ஊறுகாய்களும் பிரியா ஊறுகாய் போன்ற பேர் வாங்கிய ஆந்திர தயாரிப்பாளர்களின் தழுவல்தானே. இது ஆந்திர ஊறுகாய் சுவைத்தோருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

அவரது மாங்கா தொக்கு கூட பிரியா மேங்கோ ஊறுகாயின் அப்பட்டமான காப்பி என்பது பலருக்கும் தெரியும்

அவரது ஊறுகாய் ரெசிப்பியை காப்பியடிப்பதில் என்ன தவறு//

//TBCD said...
பல முறை காரமாக ருசியில் கொடுக்கப்பட்ட மிக்ஸ்டு வெஜிடபுள் ஊறுகாய் பாக்கெட்டுக்கு ருசி உபயம் போட்டு எழுதினதா எனக்கு நினைவே இல்லை...

//

:):):)சூப்பர், கலக்கலோ கலக்கல்

குடுகுடுப்பை September 9, 2008 at 2:40 PM  

:-)))).... போடுற விஜய் ஆனந்த் பற்றி ஒரு பதிவு போடுங்கப்பா.

புதுகை.அப்துல்லா September 9, 2008 at 3:18 PM  

சுத்த அயோக்கியத்தனம். மொள்ளமாரித்தனம் பொருக்கித்தனம்.

ஹி...ஹி... என்ன‌ ப‌ண்ண‌ அங்க‌ போட்ட‌ பின்னூட்ட‌மே இங்க‌யும்..

சின்னப் பையன் September 9, 2008 at 6:35 PM  

Too much busy today. Sorry for not replying the comments.... Thanks...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP