நூலகம் - அரைபக்கக் கதை
அந்த பெரிய 24x7 நூலகத்தில் ஒரு விடியற்காலை வேளை. நூலகர் செல்வன் தூக்கக்கலக்கத்தில் இருக்கிறார். அப்போது அவர் தோழி செல்வி வேகமாக வந்து அவரை எழுப்புகிறார்.
செல்வி: ஹலோ, எழுந்திரிப்பா. இந்தா சீட்டு. இந்த தகவல தேடித்தா. நம்ம தலைவருக்கு உடனடியா வேணுமாம்.
செல்வன்: என்னம்மா இது காலங்கார்த்தாலே வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டு.. ச்சே ஒரு மனுசனை நிம்மதியா தூங்கக்கூட விடமாட்டேங்கறாங்க... சரி குடு... தேடித் தர்றேன்.
செல்வி: இந்தா. சீக்கிரம்..
(ஒரு பத்து நிமிடம் கழித்து...)
செல்வி: என்னய்யா... இன்னுமா கிடைக்கலே. இவ்ளோ பெரிய நூலகம் வெச்சிருக்கே. இந்த சின்ன தகவலை தேடி கண்டுபிடிக்க முடியலியா. என்னமோ போ...
செல்வன்: இரும்மா. அவசரப்படாதே. தேடிக்கிட்டிருக்கேன்லே..
செல்வி: ரொம்ப பழைய பழைய விஷயமெல்லாம் டக்குன்னு தேடிக்குடுக்குறியே.. இது இப்போ சமீபத்துலே நடந்த ஒரு விஷயம்தானே...
செல்வன்: இதோ பாரும்மா. இங்கே எல்லா புத்தகமும் / தகவல்களும் வருடவாரியாகவோ / தேதிவாரியாகவோ அடுக்கி வைக்கலே புரியுதா. அதனால், சில விஷயங்கள் உடனே கிடைச்சிடும். சிலது ரொம்ப நேரமாகும்.
(இன்னும் ஒரு பத்து நிமிடம் கழித்து)
செல்வன்: இல்லேம்மா. இங்கே இதை பற்றிய தகவல் இல்லை. தலைவரை வேறே யார்கிட்டேயாவது கேட்டு தெரிஞ்சிக்கச்சொல்லு. இந்த நேரத்திலே அவங்க பொண்டாட்டிகூட தூங்கிக்கிட்டிருப்பாங்க. அவங்க எழுந்தப்புறம் கேட்கச்சொல்லு. இப்போ ஆளை விடு. கொஞ்ச நேரம் தூங்கணும்.
செல்வன் இன்னொரு முறை அந்த சீட்டைப் பார்க்கிறான். அதில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது.
"படையப்பாவில் ரஜினிக்கு எதிரே கால் மேல் கால் போட்டு உக்காந்திருந்த நடிகை பேர் என்ன?"
19 comments:
:-)))...
இவ்ளோ கஷ்டமான கேள்விக்கெல்லாம் பதில் எப்படி நூலகத்துல கிடைக்கும்???
விஜய் ஆனந்த் said...
:-)))...
இவ்ளோ கஷ்டமான கேள்விக்கெல்லாம் பதில் எப்படி நூலகத்துல கிடைக்கும்???
//
விஜய் அண்ணே! இந்தக் கதை நடக்கும் ஆண்டு 2108.
(ஓரு மனுசனுக்கு இதுக்கு மேல எப்படி ஆதரவு தர்றதுன்னு தெரியல)
:))
ஒண்ணுமே புரியல ச்சின்னப்பையன். நூலகம், செல்வன், செல்வி, தலைவர்: எதை மீன் பண்ணுகிறீர்கள். விளக்கிடுங்களேன். :)
ஹி..ஹி.. நாங்கல்லாம் கொஞ்சம் மரமண்டைகள், அதனால கோச்சிக்காம...
//விஜய் அண்ணே! இந்தக் கதை நடக்கும் ஆண்டு 2108.
(ஓரு மனுசனுக்கு இதுக்கு மேல எப்படி ஆதரவு தர்றதுன்னு தெரியல)//
பயங்கரமா யோசிக்கிறீங்க அப்துல்லா. ஆனா ஒண்ணை மறந்துட்டீங்க. ச்சின்னப்பையன் 2030 தாண்டி அவ்ளோ சீக்கிரம் போகமாட்டாரு.
ஐயய்யோ... அரைபக்கக் கதைக்கு அரைபக்க விளக்கம் கொடுத்திடறேன்...... என்னை விட்ருங்கப்பா....!!!
நூலகம் = மூளை
தலைவர் = எழுத்தாளர் சுஜாதா
செல்வன், செல்வி = மூளைக்குள் உள்ள செல்கள்
அவரோட பிறந்த நாள் சிறப்பு 'கற்றதும் பெற்றதும்' லே சொல்லியிருந்தாரே, ரம்யா கிருஷ்ணன் பேரை எவ்ளோ நேரம் யோசித்தும் நினைவுக்கு வரவில்லையென்று....
அதையேதான் இங்கே சொல்ல முயற்சித்திருக்கிறேன்.... அவ்வ்வ்வ்......
நான் என்ன நெனச்சேன்னா, கதை நடக்குறது 2030ல. கரென்ட் கட் தொடர்கதையானதால கம்ப்யூட்டர், இன்டர்நெட் எல்லாம் தமிழ்நாட்டுல அழிஞ்சி போயி 20 வருசம் முன்னால போயிடுறோம். எது வேணும்னாலும் கூகுள்ல தேடுறதுக்கு பதிலா லைப்ரரியில போயி தேடுறோம்.
இது எப்படி இருக்கு?
விளக்கத்திற்கு அப்புறம் தான் புரிகிறது !
நான்கூட திரு வெண்பூ சொன்னது போல் கதை 2030 இல் நடக்கிறது என்று நினைத்தேன் !
விளக்கத்திற்கு அப்புறம் தான் புரிகிறது !
நான்கூட திரு வெண்பூ சொன்னது போல் கதை 2030 இல் நடக்கிறது என்று நினைத்தேன் !
உங்கள யாரு இந்த மாதிரி சீரியஸான பதிவப் போடச் சொன்னது?
பின்னூட்டத்தால் தெளிவடைந்தேன்
// வடகரை வேலன் said...
உங்கள யாரு இந்த மாதிரி சீரியஸான பதிவப் போடச் சொன்னது?
//
கன்னாபின்னாவென வழிமொழிகிறேன் :):):)
:-))))))
நன்றி சுஜாதானு பதிவுல போடலில இருங்க உங்கள பரிசல்காரகிட்ட மாட்டிவுடறேன்
//பின்னூட்டத்தால் தெளிவடைந்தேன்//
சூப்பர் ஐடியா நண்பா!
//"படையப்பாவில் ரஜினிக்கு எதிரே கால் மேல் கால் போட்டு உக்காந்திருந்த நடிகை பேர் என்ன?"//
ரம்யாகிருஷ்ணன்.
யாருக்காவது பொறுப்பிருக்கா? ச்சே!
ஏதாவது செய்யணும் பாஸ்!
இவ்ளோ தானா மேட்டர்
எங்கிட்ட கேட்டா சொல்லப்போறேன்
அவுங்க பேரு,......
பேரு
கும்யா புருஷன்னு நினைக்கிறேன்
எங்கெ போயிர்ந்தீர் நீவு,
பல நாலா காணள
கலக்கல்
:-(
வந்திருந்த எல்லோருக்கும் நன்றி... என்னை விட்ருங்க... இனிமே 'இந்த' மாதிரி பதிவு போடாமே 'அந்த' மாதிரி பதிவு போடறேன்....:-))
Post a Comment