அப்போ எங்க வீடும் சிங்கப்பூர் மாதிரிதான் - பார்ட் 1
முன்: இந்த பதிவு நம் நண்பர் கிரி அவர்களின் இந்த பதிவைப்போலவே இருந்தால் அது என் குற்றமல்ல!!!
நாங்க இந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகி விட்டது. அதனால் இந்த ஒரு வருடத்தில் இந்த வீட்டைப் பற்றி நான் தெரிந்து கொண்டவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். புதிதாக வருபவர்கள் என்னை போல பல விஷயங்கள் புரியாமல் சிரமப்படாமல் இருக்க ஓரளவுக்கு உதவியாக இருக்கும்.
அனைத்து அறைகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை, முன்பு கொஞ்சம் அறைகள் குளிர்சாதன வசதிகள் செய்யப்படாமல் இருந்தன அவற்றை தற்போது காணமுடிவதில்லை.
இந்த வீட்டில் நடத்துனர் மட்டும் உண்டு. அவர் பேர் குடும்பத்தலைவி.
அடிக்கடி ஷாப்பிங் செல்ல வேண்டியிருப்பதால், கடனட்டை (ATM அட்டை இருந்தால்கூட ஓகே) கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். கடனட்டை இல்லாதவர்கள் காசை வைத்துக்கொண்டும் செலவழிக்கலாம்.
இங்கேயும் பரிசோதகர்கள் அவ்வப்போது வருவார்கள், நாங்கள் ஷாப்பிங் செய்தவைகளை பரிசோதனை செய்வார்கள்.
வீட்டுக் கதவுகள் சாவி போட்டுவிட்டால் போதும், தானாகவே திறந்து கொள்ளும்.
நடத்துனருக்கு ஓய்வு பெறும் வயது என்ன என்று தெரியவில்லை. மிக மிக வயதானாலும் கூட அவரே நடத்துனராக இருப்பார் எனத் தெரிகிறது.
தமிழகத்தை சேர்ந்த அல்லது தமிழகத்தில் இருந்து இங்கு குடி ஏறியவர்களே இந்த வீட்டுக்கு குடி வந்துள்ளனர்.
குறிப்பிடத்தக்க அளவில் ஆண் நடத்துனர்களும் உண்டு.
வீட்டிற்குள் எங்கேயும் ஏற இறங்க முடியாது, ஏனென்றால் வீட்டிற்குள் படிக்கட்டுகளே கிடையாது.
பெரும்பாலான நேரங்களில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டே இருக்கும்.
வரும்போதும், போகும்போதும் முன்பக்க கதவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குதிக்க வேண்டுமென்றால் பால்கனியிலிருந்து குதிக்கலாம்.
வரும்போதும், போகும்போதும் எந்த ஒரு தள்ளு முள்ளும் இருக்காது. பொறுமையாகவே வருவார்கள், போவார்கள்.
வரவேற்பறையில் வயதானவர்களுக்கு முடியாதவர்களுக்கு கர்ப்பிணிகளுக்கு என்று தனி இருக்கைகள் உண்டு.
கார் இருக்கும் தளத்திற்கு செல்ல படிக்கட்டை பயன்படுத்த முடியாதவர்கள் மின் தூக்கியை (lift) பயன்படுத்தலாம்
ஆட்சி மொழியில் ஆங்கிலம் இந்தி மற்றும் தமிழ் உள்ளது. எனவே தமிழிலும் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்வார்கள். சாப்பாடு ரெடி என்ற அறிவிப்பானாலும் 3 மொழியிலும் எழுத பட்டு இருக்கும் (எனக்கு இதை முதன் முதலில் பார்த்த போது
மற்றும் கேட்ட போது நான் அடைந்த சந்தோசத்திற்கும் ஆச்சர்யத்திற்கும் அளவே இல்லை)
தொலைக்காட்சிப் பெட்டிக்கருகே மற்றும் மிக அருகே எதையும் சாப்பிடக்கூடாது மீறினால் அபராதம். தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் இடத்திற்கு ஒரு அடி முன்பு மஞ்சள் கோடு (படமெல்லாம் போடலை) இருக்கும் அதற்க்கு முன்பே அமர வேண்டும் அதை தாண்டி அமர்ந்தால் அபராதம். இந்த அறிவிப்புகள் சமையலறையில் ஒலித்துக்கொண்டே இருக்கும். சமையலறையிலும் சாப்பிடக்கூடாது எதையும் குடிக்க கூடாது என்று அறிவித்துக்கொண்டே இருப்பார்கள்.
ஒவ்வொரு சாப்பாட்டின்போதும் என்ன மெனு என்று அறிவிப்பு செய்யப்படும் அதே போல அடுத்த வேளை மெனுவும் கூறப்படும்.
விமான நிலையத்தில் இருந்து இந்த வீட்டுக்கு ரயில் மூலமே வந்து விடலாம்.
மண் தரையே கிடையாது முழுவதும் கார்பெட் இருக்கும் அதனாலேயே தரையில் மண்ணை எங்கும் காண முடியாது.
இங்கு அடிக்கடி மழை பெய்யும்,பல மணி நேரம் தொடர்ந்து மழை பெய்வது இங்கு சர்வசாதாரணம். பால்கனி கதவு சாத்தியிருந்தால் போதும். மழை பெய்ததற்கான அடையாளமே இருக்காது.
தோசை எந்த வித பாதிப்பும் இல்லாமல் தரமாக இருக்கும். புதிதாக தோசை போடப்படுகிறது என்றால் ஏற்கனவே தோசைக்கல்லில் இருக்கும் தோசையின் குறிப்பிட்ட பகுதி வெட்டி எடுக்கப்பட்டு புதிதாக போடப்படும். இதன் மூலம் ஓவ்வொரு முறை போடப்படும் தோசையும் ஒரே மாதிரி உயரத்திலேயே வரும்.
வீட்டை சுத்தம் செய்யும் (வாக்கூம்) பணியாளர்கள் பெரும்பாலும் இந்தியர்களே குறிப்பாக தமிழர்கள்.
வாக்கூம் போடுவது பெரும்பாலும் வாரயிறுதியில் நடைபெறும். பகலில் என்றால் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் எல்லோரும் அலுவலகத்திற்கு சென்றபின் போடப்படும்.
இதுவே அதிகம் ஆகி விட்டதால் இன்னும் பல சுவராசியமான விஷயங்கள், அக்கம் பக்கத்து வீட்டு மக்கள் பற்றி அடுத்த இடுகையில் கூறுகிறேன்.
பின் - 1: இன்னும் அடுத்த இடுகையா என்று பயப்பட வேன்டாம். அது ச்ச்ச்சும்மாதான்.....!!!
பின் - 2: பின் - 2 எல்லாம் இல்லை. அவ்ளோதான்...
35 comments:
me the first :):):)
ஆஹா என்ன அதிசயம், இன்னைக்கு வெண்பூ அவர்களும் அப்துல்லா அண்ணாவும் கோதாவில் காணோம் :):):)
aahaa aahaa ini giri aduththa pathivu poodamaadddaar
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................பேக் டு பார்மா?????????????
சூப்பர் :):):)
என்ன யாரயுமேக் காணோம். அப்போ சரி நானும் ஜூட் விட்டுக்கறேன்.
;-)))...
என்ன ஒரு சிந்தனை!!!
//ஆஹா என்ன அதிசயம், இன்னைக்கு வெண்பூ அவர்களும் அப்துல்லா அண்ணாவும் கோதாவில் காணோம் :):):)
//
அண்ணாவின் 100 வது நினைவு தினத்தை முன்னிட்டு அப்துல்லா அண்ணா இன்று விடுமுறை
//நாங்க இந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகி விட்டது. //
அப்போ பழைய வீடு
//இந்த வீட்டில் நடத்துனர் மட்டும் உண்டு. அவர் பேர் குடும்பத்தலைவி.
//
இந்த வீட்டில் ஓடுனர்(ஓடி ஓடி போறவர்) ஓருவரும் உண்டு. அவர் பெயர் ச்சின்னப்பையன் :)
//கடனட்டை இல்லாதவர்கள் காசை வைத்துக்கொண்டும் செலவழிக்கலாம்.
//
இரண்டும் இல்லாதவர்கள் திருடிக்கிட்டு வரலாம்
//வீட்டுக் கதவுகள் சாவி போட்டுவிட்டால் போதும், தானாகவே திறந்து கொள்ளும்.
//
உடைச்சாலும் திறந்துக்கும்
//குறிப்பிடத்தக்க அளவில் ஆண் நடத்துனர்களும் உண்டு.
//
யாருப்பா அந்த ஆம்பளை...சீக்கிரம் கோயில் கட்டனும் அந்தாளுக்கு
//வரும்போதும், போகும்போதும் முன்பக்க கதவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்//
ஏன்னா பின்பக்க கதவு இல்லை :0))
//சாப்பாடு ரெடி என்ற அறிவிப்பானாலும் //
என்னாது சாப்பாடு ரெடின்னு அறிவிக்கிறாங்களா? நமக்கெல்லாம் தட்டுல போட்டு நாய்க்கு விட்டெரியிற மாதிரி முன்னாடி வீசிட்டு போய்ருவாங்க
//பின் - 1: இன்னும் அடுத்த இடுகையா என்று பயப்பட வேன்டாம். அது ச்ச்ச்சும்மாதான்.....!!!
//
ச்ச்சும்மா என்கின்ற வார்த்தைக்கு என்னிடம் அனுமதி வாங்காமல் காப்பிரைட்டை மீறிய அண்ணன் ச்சின்னபையனைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் :))
:))))
ஹா ஹா ஹா இதை தான் கூறினீர்களா :-))))
நடத்துங்க நடத்துங்க
:-))))))
இது உங்களோட எத்தனாவது எதிர் பதிவு:)
மிகவும் தாமதமான பதில்களுக்கு... சாரி....
வாங்க ராப் -> ஆமா ஆமா நீங்கதான் முதல்... வெண்பூ இன்னிக்கு காணாமெயே போயிட்டாரு.... (வீட்லே) வேலை ஜாஸ்தியாயிருக்கும்.... :-))
வாங்க முரளிகண்ணன் -> என்ன இப்படி சொல்லிட்டீங்க? அவரு அடுத்தடுத்த பாகங்களைப் போட்டால்தானே நான் பதிவு போடமுடியும்?.... ஹிஹி...
வாங்க விஜய் -> நன்றி...
வாங்க அப்துல்லா -> வாழ்க அறிஞர் அண்ணா....
அது பழைய சிங்கப்பூர்னா இதுவும் பழைய வீடுதான்...
அவங்கவங்க வீட்லே அவங்கவங்க ஓடுனர்தான்....ஹிஹி..
//என்னாது சாப்பாடு ரெடின்னு அறிவிக்கிறாங்களா? நமக்கெல்லாம் தட்டுல போட்டு நாய்க்கு விட்டெரியிற மாதிரி முன்னாடி வீசிட்டு போய்ருவாங்க//
சரி சரி.. நான் எப்படி பாலிஷ்டா சொல்லியிருக்கேன்.. நீங்க ஏன் சேம் சைட் கோல் போடறீங்க????
ஐயயோ... அதுக்கும் காப்பிரைட்டா???? விடுங்க ஊருக்கு வந்து உங்களுக்கு ரெண்டு காப்பி வாங்கி கொடுத்துடறேன்...
வாங்க சுபாஷ் -> நன்றி..
வாங்க கிரி -> சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்க... :-))
வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> நன்றி...
வாங்க சின்ன அம்மிணி -> ஹிஹி... நமக்கெல்லாம் மேலே நிறைய எதிர்பதிவு எஜமான்கள் இருக்காங்க..... நான் இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன்... :-)))
ரொம்பவே கிரி குத்தா இருக்கு.. ஏதேனும் முன் பகையா , உங்களுக்கும் கிரிக்கும் ? :)) இல்ல சொல்லிவெச்சி பதிவு போட்டீங்களா ?
நான் போடுறேன்.. சிங்கை கிளு கிளுப்பு பதிவு..சீக்கிரமே..
ஏங்க சின்னா,
எங்க போனிங்க இத்தனை நாளா?
ம்ம்ம் செம மொக்கை....
கலக்குங்க... ஸ்டார் ரெடி மியூசிக்!!!
:-)))))))))
யோவ் லூசு புதுகை.! அண்ணா நினைவு தினம் இல்லை, பிறந்த தினம்.! மேலும் பின்ணூட்டங்கள் பின்னர்.
வன்மையாக கண்டிக்கத்தக்கது. பு்துகை அப்துல்லாவின் தவறான அண்ணா பற்றிய செய்தி.......
இராஜா-பெங்களூரூ
வாங்க ஜெகதீசன் -> சிங்கப்பூர் என்றதும் டக்குன்னு வந்துட்டீங்களே... :-))) நன்றி...
வாங்க கீ - வென் -> ஏங்க... ஏங்க.. எதுவும் பகை இல்லேன்னு வருத்தப்படுறீங்களா?... :-)))அதெல்லாம் ஒண்ணுமில்லேங்க...
அது சரி.. ஒரு கிளு கிளு பதிவு போட சாக்கு தேடிக்கிட்டிருந்தீங்க.. இப்ப நான் மாட்னேனா?... அவ்வ்வ்....
வாங்க ராஜா - பெங்களூரு -> யப்பா. சாமி. தமிழிலேயும் அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க... ரொம்ப நல்லது. அப்படியே மேலே ஒரு அறிவிப்பு போட்டிருக்கேன் பாருங்க.. இல்லேன்னா தமிழ்மணம் பாருங்க. இந்த மாசம் நம்ம மொக்கையெல்லாம் வவாச-விலேதாங்க.... இங்கே இல்லே..... சரியா... நன்றி...
வாங்க தாமிரா -> ஓ. நானும் பாக்கலே... :-(((... இருந்தாலும் சமாளிக்கறேன்... அப்துல்லா என்னா சொல்லியிருப்பாருன்னா, அண்ணாவை நினைவு படுத்தும் நாள்னு சொல்றார். வருடத்திலே வேறே எந்த நாளும் யாரும் அவரை நினைக்கறதில்லையே?... ஓகேவா?....:-)))
அங்கே வவாசங்கத்தில் என்னால் கமெண்ட்ட முடியவில்லை.
அனானி அப்டேட் பண்ணுங்க சின்னா?
அப்றம் என்ன மாதிரி தீவிர இரசிகர்கள் தங்களை கமெண்டுவது.
2011 ல் தமிழகத்தின் முதலமைச்சர் சின்னா வாழ்க!
:-))))))))
இராஜா-பெங்களூரூ
"2011ல் நான் தான் தமிழகத்தின் முதலமைச்சர் இதை படிப்பதற்கு காமெடியாக இருந்தால் இந்த ப்ளாக் உங்களுக்காகத் தான்" என்ற வாசகத்தை உங்கள் ப்ளாக்கின் டாக் லைனாக பார்த்ததாக ஞாபகம்.
என்ன சரிதானே!!
ஹி ஹி நாங்களும் கெளப்புவம்ல.....
பார்ரா பார்ர்ரா சிரிக்கிறத :-))))))))
இராஜா - பெங்களூரூ
Dear Chinna,
I have sent request to you. Can u pls accept that I need to discuss with you regarding.... So I expect you will be
Thanks and Regards
Raja - BGL
ராஜா - பெங்களூரு -> சாரிங்க. நான் அது கவனிக்கலை. ஆனா வவாச-விலே என்னாலே எதுவும் செட்டிங்ஸ் மாத்த முடியாதுங்க.... நீங்க ஒரு ஐடி ஆரம்பிச்சி, அதிலே பின் போட முடியுமான்னு பாருங்க...
எனக்கு அலுவலகத்தில் ஜிடாக்/ஜிமெயில் பாக்க அனுமதி கிடையாது. அதனால், மாலை வீட்டுக்குப் போனபிறகுதான் எதுவும் பாக்கமுடியும். அதனால், இன்று மாலை சென்று பார்க்கிறேன்... ( நான் இருப்பது NY பக்கத்தில். எனது டைம் சோன் EST).
Hi Chinna,
I have ID in wordpress, even i could not post comments.
I send mail to your ID, there can you explain how to post comments.
Raja - BGL
எத்தனை எதிர்ப்பதிவுடா சாமி. ம்ம்முடியலே...
Post a Comment