கடைசி வரை பார்த்து, எழுந்து கை தட்டிய படங்கள் மூன்று!!!
நண்பர்களோடு தில்லி தமிழ்ச்சங்கத்தில் பார்த்த தெனாலி, உயிரோடு உயிராக போன்ற படங்களும் சரி, மனைவியோடு சென்னையில் பார்த்த பட்ஜெட் பத்மனாபன், மிடில்க்ளாஸ் மாதவன், லிட்டில் ஜான் ஆகிய மொக்கை படங்களும் சரி - கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் கடைசி வரை உட்கார்ந்து - இருட்டில் அனானியாக கமெண்ட் அடித்துக்கொண்டுதான் பார்த்திருக்கிறேன்.
அதனால், ட்ரெண்டிலிருந்து சற்று விலகி, கடைசி வரை பார்த்து எழுந்து கைதட்டிய படங்கள் மூன்று என்று இந்த பதிவிடுகிறேன். நல்ல படங்கள் என்று நிறைய் பார்த்திருந்தாலும்(!!!), உடனே நினைவுக்கு வருவது, அடிக்கடி அசைபோடுவது என்ற வகையில் இந்த மூன்றையும் சொல்ல விழைகிறேன்.
அன்பே சிவம்:
இந்தப் படத்தைப் பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை. கமலின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும், அன்பின் அருமையையும் எடுத்துரைத்த படம். இந்த படத்தை நண்பர்களுடன் தில்லியில் விடுதியில் இருந்தபோது குறுந்தகடு வாங்கி பார்த்தது. சும்மா பொழுது போகாமல் பார்க்க ஆரம்பித்தோம். போகப்போக படத்தில் ஐக்கியமாகி முடியும்வரை யாருமே எழுந்துபோகாமல் உட்கார்ந்திருந்தோம்.
படம் முடிந்தபிறகு நிஜமாகவே எழுந்து நின்று கைதட்டியவர்களில் நானும் ஒருவன். இன்றும் எப்போதாவது இணையத்தில் தேடி பார்க்கும் படங்களில் ஒன்று.
தன்மத்ரா
எகிறி, கத்தி, குதித்து, குட்டிக்கரணம் போட்டு, நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி நடிக்கும் தமிழ் நடிகர்கள் பார்க்கவேண்டிய படம்.
ஒரு சிறு மேக்கப்பும் இல்லாமல் நடித்திருக்கும் மோகன்லால், படம் முழுக்க அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.
ஒரு சாதாரண குடும்பத்தலைவனுக்கு அல்சைமர்ஸ் நோய் தாக்கியபின், அவரின் செய்கைகளும், அவர் குடும்பம் படும் பாடும்தான் கதை.
அலுவலகத்தில் சட்டையை கழற்றும்போதும், அங்கேயே கழிவறையில் குளிக்கும்போதும், மற்றும் பல காட்சிகளிலும் மோகன்லால் அனாயாசமாக நடித்திருப்பார்.
வெகு நாட்களாய் இணையத்தில் தேடிக்கொண்டே இருந்தபின், சமீபத்தில்தான் இந்த படத்தைப் பார்த்தேன். கொஞ்சம் கூட நகர முடியாமல் கட்டிப்போட்ட படம் முடிந்தபின், என்னையறியாமல் கைதட்டினேன்.
த க்வீன் (2006)
இளவரசி டயானா கார் விபத்தில் இறந்தபிறகு அடுத்த ஒரு வாரம் அந்த ராஜ குடும்பத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய கதை.
ராணியாக நடித்த ஹெலன் மிர்ரனுக்கு ஆஸ்கர் ( நம்ம தசாவதாரம் ஆஸ்கர் இல்லேங்க!!!) விருதை 2007ம் ஆண்டு பெற்றுத் தந்த படம். இந்த படத்தில் ஹெலனுடைய நடை, உடை, பாவனை ஆகிய எல்லாமே முதல் தரம் (தரம்=Class; தடவை இல்லே...).
பிரதமர் டோனி ப்ளேயராக நடித்தவரும் அருமையாக நடித்திருப்பார்.
படத்தில் நடித்தவர்களின் உடையலங்காரம், இசை, நிஜமாக டயானா இறந்தபோது ஒலிபரப்பப்பட்ட தொலைக்காட்சி காட்சிகளை நடு நடுவே இணைத்து காட்டப்பட்ட விதம் - எல்லாமே சூப்பர்ப்...
இந்த மாதிரி படம் நம் நாட்டில் எப்போது எடுக்கப்போகிறோம் என்று கவலைப்பட்டுக்கொண்டு எழுந்து நின்று கைதட்டினேன்.
30 comments:
அன்பே சிவம் ரெம்ப நல்ல படம். ஏன் பரவலான வரவேற்பைப் பெறவில்லை என்பது புரியவில்லை.
கிரன் அந்தப் படத்துக்கு ஒரு மைனஸ்.
மற்ற இரண்டும் நான் பார்க்கவில்லை.
பார்க்கத்தூண்டியது உங்கள் பதிவு.
நல்ல பதிவு பூச்சாண்டி, கண்டிப்பாக அந்த மலையாலப் படம் பார்த்து விடுகிறேன்
ஆஹா, எனக்குப் பிடிச்ச ரெண்டு படங்கள் உங்களுக்கும் ரொம்பப் பிடிக்குமா? வாட் ய கோஇன்சிடன்ஸ்? :):):)
எனக்குத் தெரிஞ்சு அன்பே சிவம் படத்துல அனாயாசமா நடிச்ச மாதிரிக் கமல் அவர்கள் வேறெந்தப் படத்திலும் சமீபத்தில் தோன்றியதில்லை(காமடி, மசாலாப் படங்களில் கூட ஒருவித டென்ஷனோடு காணப்படுகிறார்) . இதில் மாதவனும், இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு பாத்திரமும் அவ்வளவு சிறப்பாக செய்திருப்பார்கள். இது ஏன் ஓடவில்லைன்னு என்று எனக்கு இன்று வரை புரியவில்லை. 'மொழி' புரிந்தவர்களுக்கு இது ஏன் புரியவில்லை:(:(:(
தன்மத்ரா என்னை மறுபடியும் பிரியதர்ஷன், பாசில் காலக்கட்ட மலையாள பொற்காலத்துக்கு எங்க வெச்ச படம். எனக்கு இதில் அவரோட குழந்தைகளா நடிச்சவங்களை ரொம்பப் பிடிக்கும். நெடுமுடி வேணுவின் நடிப்பும் சூப்பர். இப்படிப்பட்ட நார்மல் பின்னணியை இங்க இருக்கறவங்களும் ஏற்று நடிச்சா எப்படி இருக்கும்?
த க்வீன் படம் எனக்குப் பார்க்கக் கூடப் பிடிக்காதப் படம். சும்மா இருந்தப் பெண்ணை, தன் மகனின் கேன புத்தித் தெரிஞ்சும் கட்டிவெச்சு, வாழ்க்கையப் பாழாக்கிட்டு, அப்புறம் பொறாமைப் பட்டு, அந்த மனுஷியைப் படாதப் பாடுப்படுத்திட்டு, அவங்க அதுக்கு ரியேக்ட் செஞ்சா , என்னமோ ஒரு மோசமானப் பெண்ணாக அவங்களை சித்தரிச்சு, அப்பப்பா, இவங்களுக்கெல்லாம் ஒரு கருத்து, அதன் சார்புநிலையெடுத்து ஒரு படம். இது ஒரு கலைப்படைப்புன்னு பார்க்க புத்தி(அப்படி ஒன்னு இருக்கான்னு கேக்கறீங்களா:):):) )சொன்னாலும், மனசு ஏத்துக்க மாட்டேங்குது.
வாங்க வேலன் ஐயா -> தன்மத்ரா பாருங்க. கண்டிப்பா உங்களுக்குப் பிடிக்கும்... நன்றி...
வாங்க குடுகுடுப்பை -> நன்றி....
வாங்க ராப் -> கமலை ஒரு காமெடி கண்ணோட்டத்தோடதான் எல்லாரும் பாக்கறாங்கன்னு நினைக்கறேன். படு அறுவையான ஜோக்குகள் அடிச்சிண்டு அவர் நடிச்சார்னா, மக்களும் அந்த படத்தை ஹிட் செய்துடறாங்க.... :-((
தன்மத்ரா -> சரியா சொன்னீங்க. மோகன்லாலை விட்டுட்டு அதில் நடிச்ச மத்தவங்ககூட அவங்கவங்க பகுதியை சிறப்பா செஞ்சிருப்பாங்க.
நான் சொல்லாமெவிட்ட ஒண்ணு நம்ம பாரதியார் பாடலை ("காற்று வெளியிடை கண்ணம்மா") பாடிக்கிட்டே இருப்பார் மோகன்லால்.
த க்வீன் -> நிஜமான டயானா கதையைப் பத்தி நான் ஒண்ணும் சொல்லலீங்க... நான் சொன்னது படம், படமாக்கப்பட்ட விதம், மற்றும் நடிப்பு - அவ்ளோதான்.
நீங்க சொல்றது எனக்குப் புரியுதுங்க. நான் அதை குறை சொல்லலை. ஆனாலும் அந்த அரசக் குடும்ப செய்தியோ, எதுவோ எனக்குப் பிடிக்கறதில்லை. அதைத்தான் நான் இங்க வெளிப்படுத்தினேன் :):):)
ச்சின்னப்பையன்,ராப்,வேலன் அண்ணாத்த இந்தமேரி பெர்ய பெர்ய மன்சங்கள்லாம் புர்யாத பாஷைல பேசிகினுகிறீங்கோ. நம்மளுக்கு தெர்ஞ்சதெல்லாம் வாத்தியார் படம் மட்டும்தான் :)
வாங்க அப்துல்லா -> உங்க அவையடக்கத்துக்கு ஒரு அளவே இல்லையா?... (உடனே யாராவது ஸ்கேல் இல்லையானு கேக்காதீங்கப்பா!!!!)))
நல்ல பதிவு ச்சின்னப்பையன். தசாவதாரத்துடன் ஒப்பிடுகையில் அன்பே சிவத்தில் கமல் நிஜமாகவே நடித்திருப்பார். அழுத்தமான மேக்கப் மட்டுமில்லாமல் அதற்கேற்ற முக பாவங்களை அழகாக காட்டியிருப்பார். எனக்கு படம் அவ்வளவாக பிடிக்காவிட்டாலும் கமலின் நடிப்பு பிடிக்கும்.
தன்மத்ரா இன்னும் பார்க்கவில்லை. ஆவலை அதிகப்படுத்தியுள்ளீர்கள்
நல்ல தேர்ச்சியான அனுபவக் குறிப்புகள்.. இப்படியும் எழுதுங்கள்.. :)
kaathal Koottai also
எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு ரெண்டு தடவதாங்க கிடைச்சது.. முதல்ல கானல் நீர் இப்போ நாயகன்...
இப்படிக்கு,
ஜே.கே.ஆரின் பி.கே.ஆர் (அதாவது ஜே.கே.ரித்திஷின் ,பி.கார்க்கி எனும் ரசிகனுங்கோ)
அன்பே சிவம் எனக்கும் மிகவும் பிடித்த படம் .வசனங்கள் மிக பிடிக்கும்.
மாதவனையும் பாராட்ட வேண்டும்.
இந்த மாதிரியான பதிவுகளை எல்லாம் படித்தா பயம்மா இருக்குங்க. படம்னா ஏதோ போனோமா பார்த்தோமா வந்தமான்னு இல்லாம இப்படில்லாம் கூடப் பார்க்கணுமா? வாழ்த்துக்கள்.
தன்மந்த்ராங்கற படம் பார்க்கணும்னு ஆவலா இருக்கு.
இந்த மாதிரியான பதிவுகளை எல்லாம் படித்தா பயம்மா இருக்குங்க. படம்னா ஏதோ போனோமா பார்த்தோமா வந்தமான்னு இல்லாம இப்படில்லாம் கூடப் பார்க்கணுமா? வாழ்த்துக்கள்.
தன்மந்த்ராங்கற படம் பார்க்கணும்னு ஆவலா இருக்கு.
நல்ல பதிவு தான்
ஆனா சீரியஸா இருக்கு
ச்சின்னபையனுக்கு அது அழகல்ல
உடனடியாக ஒரு மொக்கை ப்ளீஸ்
அன்பே சிவத்தில் மாதவன் நடிப்பு ஆச்சர்யப் படுத்தவைத்த ஒன்று!
அன்பேசிவம் படத்தைப் பார்த்து நான் வேதனைப் பட்ட விஷயம்...
இந்த மாதிரிப் படங்களை வெற்றியடைய வைக்காத நம்மாளுகளை என்னவென்று சொல்ல!!
வாங்க வெண்பூ -> ஆமாங்க. கமல் மற்றும் மாதவனுக்காகத்தான் நான் நிறைய தடவை அந்த படத்தை பார்த்திருக்கிறேன்... நன்றி...
வாங்க முரளிகண்ணன் -> கண்டிப்பா பாருங்க....
வாங்க தமிழ் பிரியன் -> நன்றிங்க....
வாங்க அனானி -> காதல் கோட்டை -> ஹிஹி. எழுந்து நின்னு கைதட்டற அளவுக்கெல்லாம் இல்லேன்றது என்னோட தாழ்மையான கருத்து. அவங்கவங்க கருத்து அவங்கவங்களுக்கு... என்ன நான் சொல்றது...!!!
வாங்க கார்க்கி -> ஹாஹா... தலயோட ரெண்டு படங்களையும் பார்த்திருக்கீங்களா?... அப்போ நீங்கதான் மன்றத்தின் நிரந்தர உறுப்பினர்னு நினைக்கிறேன்......:-))
வாங்க பாபு -> ஆமா. அதுவரைக்கும் பாத்த மாதவனுக்கு, அந்த படம் ஒரு சவாலாகத்தான் அமைந்திருக்கும்...
வாங்க ரத்னேஷ் -> அடடா. நீங்க மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள். இங்கே வந்ததற்கு நன்றி... நீங்களே இப்படி சொல்லிட்டா அப்புறம் என்னங்க... இலக்கியத்திலிருந்து - அரசியல் வரைக்கும் எல்லாத்திலேயும் கலக்குறீங்க.. நாங்க ஏதோ மொக்கை போட்டு காலத்தை ஓட்டறோம். மீண்டும் நன்றி... :-))
வாங்க வால் -> ஹிஹி. இந்த மாசம் எல்லா மொக்கைகளும் வவாச-க்கு ஒதுக்கி வெச்சாச்சு... அதனால இன்னும் சில சீரியஸ் பதிவுக்கு தயாரா இருங்க.... :-)))
Super Vimarsanam.
இங்கப்பாருங்க.. நம்பாளு ஜீரியஸா ஒரு பதிவு போட்ருக்காரு.! டாப்பிக்க மாத்தி உடறீங்களா.. இருங்க வெச்சிக்கிறேன். (மெகா மொக்கப்படங்களின் லிஸ்ட் எடுத்துக்கினுருந்தேன்.)
வாங்க தமிழ் குறும்படம் -> நன்றி..
வாங்க தாமிரா -> பின்னே என்னங்க, நடுவிலே ஓய்வறைக்கு போகறதுக்காக வெளியே வந்தேன், இடைவேளைக்கு கோன் ஐஸ் சாப்பிட வெளியே வந்தேன்னு பதிவு போட சொல்றீங்களா.... (இவ்ளோ நாளா அப்படித்தானே மொக்கை போட்டுண்டிருந்தே..ன்னு கேக்கப்படாது).... மனுசனை ஒரு சீரியஸ் பதிவு போட விடமாட்டீங்களே..... :-))
எனக்கும் மிகவும் பிடித்த படம் அன்பே சிவம். இங்கே கடையிலிருந்து DVD வாடகை எடுத்து வந்தபோது கிட்டத்தட்ட 4-5 முறை பார்த்த படம்.
கமலின் அடக்கி வாசித்த நடிப்பு, மதனின் அற்புதமான வசனங்கள், நாசரின் வழக்கம்போன்ற அலேக் நடிப்பு, மாதவனின் அசத்தல் performance ... மறக்கவே முடியாது.
இப்படத்தை பற்றி சில ஆண்டுகள்முன் ரா.கா.கி-யில் என் கருத்தை எழுதியிருந்தேன்.
இது பற்றி இணையத்தில் பரப்பப்பட்ட ஒரு அபத்தமான ஒப்பீடு இப்படம் Trains, Trucks and Automobiles-ன் காப்பி என்பது. அதையும் பார்த்தபின் எனக்குத்தோன்றியது, இரண்டும் ஒரே சாயல். ஆனால் நம்மாள் சொன்ன செய்தி வேறு.
சிறுபத்திரிகைகளின் மொழியில் சொன்னால் "உருவம் ஒன்று, உள்ளடக்கம் வேறு வேறு"
வாங்க முத்துகுமார் -> நிறைய விஷயங்களை சொல்லியிருக்கீங்க... நல்ல படங்கள்னு நினைச்சா உடனே நினைவுக்கு வந்ததுதான் அசி. அதுக்குதான் அதை பட்டியலில் சேர்த்தேன்....
நீங்க சொல்ற படம் - Planes, Trains and Automobiles -தானே. நான் அந்த படத்தை பாத்ததில்லை. நீங்க சொன்னவுடன் எங்க நூலகத்திலே (online) தேடினேன். என்ன ஆச்சரியம் - அந்த படம் இருக்குது. நாளைக்கே அதை எடுத்துப் பாத்துடறேன்... நன்றி...
hi cinnapaiyan
this week you dont need write blog for vavaasangam. mr tamil priyan wrote comedy today which is more than enough for years
Anony,
Pls give me the link where he wrote the post and let me also read and enjoy it... Thanks!!!
please delete all the comments related to this as well.
http://majinnah.blogspot.com/2008/09/1400.html
என்ன கொடுமை இது அனானி? ...
ஆதாரம் வேணுண்ணா அவரை கேளுங்க... பொய்னு மறுத்தீங்கன்னா, அதுக்கு உங்க நியாயத்தை சொல்லுங்க...
சண்டை போட இஷ்டம் இல்லையா, மூடிட்டு இருங்க...
இங்கன வந்து ஏன் கமெண்டறீங்க??????
Post a Comment