Thursday, September 18, 2008

படிக்காமலிருக்க பத்து காரணங்கள்...!!!

1. நான் டாம் அண்ட் ஜெர்ரி பாத்து ஒரு நாளாச்சு.

2. ஒரே ஒரு தடவை ஷமீலுக்கு போன் பண்ணிக்கறேன்.

3. உன்னோட ரேமண்ட் ட்ராமா இப்போ ஆரம்பிச்சிருக்கும்.

4. அப்பா லைப்ரரி போகலான்னாரு.

5. என்னோட ப்ரெட் ஆயிடுச்சு. போய் வாங்கணும்.

6. எனக்கு தூக்கம் வருது.

7. இன்னிக்கு ஸ்கூல்லே என்ன ஆச்சு தெரியுமா?

8. இன்னிக்கு வீடு பெருக்கணும்னு சொன்னியே?

9. எனக்கு கால் பயங்கரமா வலிக்குது.

10. பாட்டிக்கு போன் பண்ணலாமா?


படிக்காமலிருக்க சஹானா சொல்லும் காரணங்களில் இவைதான் உயரப் பத்து (டாப் டென்).

இதையெல்லாம் மீறி படிக்க வைக்கறதுக்குள்ளே தாவு தீந்துடுது!!!

வீட்லே பெரியவங்க சொல்றா மாதிரி - நாங்கல்லாம் அந்த காலத்துலே - அப்படின்னு சொல்ல வேண்டியிருக்கு....:-((((. இருந்தாலும் இந்த ச்சின்ன வயசுலே சொல்ல வேண்டியிருக்கே... அதை நினைச்சாதான் கவலையா இருக்கு....:-)))

18 comments:

அழகான ராட்சசி September 18, 2008 at 11:37 PM  

ரொம்ப கவலைபடாதீங்க.இது எல்லாம் சகஜம் தானே....

ramachandranusha(உஷா) September 19, 2008 at 12:27 AM  

என் புக்கை காணோம்

(அதைவிட குட்டி ஒன்று வீட்டில் இருந்தால் ) பப்பு என் கிளாஸ் ஓர்க்கை கிழிச்சிடுச்சு.

அம்மா, வந்து என்னோட ஒக்காரேன்

நீ சொல்லிக் கொடுக்க வேண்டாம் (வீட்டில் யார் இல்லையோ) அம்மா/ அப்பா/ தாத்தா/ பாட்டி சொல்லிக் கொடுக்கணும்

எனக்கு ரொம்ப பசிக்குது

போதுமா :-)

Anonymous,  September 19, 2008 at 5:07 AM  

இத
......படிக்கும் போது
..........L.K.G. லாஸ்ட் பெஞ்ச் தாதாக்கள்
...............ஜோக் ஞாபகம் வருது
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹி ஹி ஹி ஹிஹீ!

இப்போ EST (US & Canada) Time 05:07:786 (AM)

கரெக்ட்டா..

raja - bgl

ச்சின்னப் பையன் September 19, 2008 at 6:24 AM  

வாங்க அழகான ராட்சசி -> கடைசியிலே அப்படித்தான் நினைக்கவேண்டியிருக்கு... ஊருக்குப் போனா எல்லாம் சரியாயிடும்னு ஒரு நம்பிக்கை..... நன்றி...

வாங்க விஜய் -> நன்றி...

வாங்க ராஜா -> ஆமாங்க. கரெக்ட்தான்... நன்றி.....

ச்சின்னப் பையன் September 19, 2008 at 6:26 AM  

வாங்க உஷாஜி -> ஹாஹா.. ஆமாமா. இதுலே சிலதுகூட இருக்கு..

பிரச்சினை என்னன்னா இங்கே பள்ளியில் எதுவும் சொல்லித்தரது இல்லே... (ப்ரீ கே ஜீ யில் வெறும் விளையாடிட்டு வர்றாங்க).

வீட்லே நாமதான் ஆங்கிலம், தமிழ், இந்தி இந்த மூணும் சொல்லித்தர வேண்டியிருக்கு.....

நன்றி...

Anu September 19, 2008 at 6:46 AM  

idhellam valkkaiyil jagajamappa... my son has more reasons to say...

idhellam enga miss padikka vendamnu sollittanga...

keyboard classukku time aiduchumma...(3 hrs before eh)

pakkathu veettu amma madhiri irumma.. andha aunty kutti pappa va padinnu solradhe illa..

innaikku nan vilayadave illa... adhanala ippo vilayadittu vandhudren

ippadi avarukku daily neriya ideas thonum..hmm innaikku ennavo :P

வால்பையன் September 19, 2008 at 9:07 AM  

என் பொண்ணும் இதே மாதிரி தான் பண்றா!
வீட்ல தங்கமணி மிரட்டினா அப்பாகிட்ட சொல்லிருவேன்னு சொல்றது தான் பெரிய தமாஷா இருக்கு!

புதுகை.அப்துல்லா September 19, 2008 at 2:06 PM  

சஹானா சொல்ல வேண்டிய சரியான காரணம்.....

போம்மா! அப்பால்லாம் படிச்சா பெரிய ஆளா ஆனாரு.

சுபாஷ் September 19, 2008 at 2:46 PM  

//சஹானா சொல்ல வேண்டிய சரியான காரணம்.....

போம்மா! அப்பால்லாம் படிச்சா பெரிய ஆளா ஆனாரு.//

:)))))

சுபாஷ் September 19, 2008 at 2:47 PM  

நல்ல ஐடியாக்கள். ஆனா இப்படி சொல்லித்திரிய அந்த மழலைக்காலம் முடிந்துவிட்டதுதான் சோகம்.

rapp September 22, 2008 at 4:49 PM  

//வீட்லே பெரியவங்க சொல்றா மாதிரி - நாங்கல்லாம் அந்த காலத்துலே - அப்படின்னு சொல்ல வேண்டியிருக்கு....:-((((. இருந்தாலும் இந்த ச்சின்ன வயசுலே சொல்ல வேண்டியிருக்கே... அதை நினைச்சாதான் கவலையா இருக்கு//

யாரோட சின்ன வயசுல? சஹானாவோட சின்ன வயசத்தான சொல்றீங்க?:):):)

Sridhar Narayanan September 22, 2008 at 7:41 PM  

//பிரச்சினை என்னன்னா இங்கே பள்ளியில் எதுவும் சொல்லித்தரது இல்லே... (ப்ரீ கே ஜீ யில் வெறும் விளையாடிட்டு வர்றாங்க).//

நல்லதுதானே. அவங்களா கத்துக்கட்டும் பாஸு. நீங்கள் சொல்லிக் கொடுத்து கெடுத்துறப் போறீங்க :-))

ஜோசப் பால்ராஜ் September 22, 2008 at 10:32 PM  

//புதுகை.அப்துல்லா said...

சஹானா சொல்ல வேண்டிய சரியான காரணம்.....

போம்மா! அப்பால்லாம் படிச்சா பெரிய ஆளா ஆனாரு.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஜோசப் பால்ராஜ் September 22, 2008 at 10:34 PM  

//வால்பையன் said...
என் பொண்ணும் இதே மாதிரி தான் பண்றா!
வீட்ல தங்கமணி மிரட்டினா அப்பாகிட்ட சொல்லிருவேன்னு சொல்றது தான் பெரிய தமாஷா இருக்கு! //


ஹா ஹா, ஏன் வாலு இப்டியா உண்மைய உரக்க சொல்றது?

அடியே வாங்குனாலும் யாரும் பார்கலடா சூனா பானான்னு சொல்லிகிட்டு போயிகிட்டே இருக்கனும், நமக்கு கவுரவம் முக்கியமில்லையா?

ச்சின்னப் பையன் September 23, 2008 at 9:44 AM  

வாங்க அனு -> ஹாஹா... தினத்துக்கு புதுப்புது ஐடியாக்களா??? என்ஞாய் பண்ணுங்க...

வாங்க வால் -> அதுவும் நீங்க முகத்தை சீரியஸா வெச்சிக்கறா மாதிரி கற்பனை பண்ணவே முடியல என்னாலே.... :-))))

வாங்க அப்துல்லா -> ஏன், ஏங்க இப்படி? .... அதாவது ஏன் இப்படி வெளிப்படையா பேசறீங்கன்னு கேட்டேன்?.... அவ்வ்வ்வ்வ்...

வாங்க சுபாஷ் -> சிரிங்க சிரிங்க.... அவ்வ்வ்...

ச்சின்னப் பையன் September 23, 2008 at 9:50 AM  

சுபாஷ் -> அப்பாடா உங்களுக்கு மழலைக்காலம் முடிஞ்சிபோச்சா? எனக்கு இன்னும் முடியல....:-))

வாங்க ராப் -> அவ்வ்வ்வ்.... மேலெ சுபாஷுக்கு சொல்லியிருக்கேன் பாருங்க....

வாங்க ஸ்ரீதர் -> அது சரிங்க... ஆனா, அடுத்த வருஷம் இந்தியாவுக்கு வரும்போது அங்கே பள்ளியிலே சேக்க முடியாதே? நம்ம ஸ்டாண்டர்ஸ் ரொம்பவே உயரத்திலே இருக்குதே.... :-(((

வாங்க ஜோசப் -> ஆமா ஆமா. நீங்க சொல்றா மாதிரி எல்லா வீட்லேயும் ஒரு சூனா பானா இருக்காங்க போல....:-))

ஸ்ரீமதி September 24, 2008 at 5:59 AM  

டாம் அண்ட் ஜெர்ரி பதிலா எங்க வீட்ல ரோடு ரன்னர் ஷோ..!! :))

மத்ததெல்லாம் 100% same..!! :))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP