சமைக்கப் போறீங்களா? GPS வாங்குங்க!!!
புதுசா சமையல் செய்றவங்க - அது பேச்சிலர்களின் சொ(நொ)ந்த சமையலாகட்டும் அல்லது புதிதாக திருமணமாகி புருஷனுக்கு சமைச்சுப் போட முயற்சி செய்யும் தங்கமணிகளாகட்டும் - என்ன செய்வாங்கன்னா, அடுப்பு பத்தவச்சப்புறம்தான் சமையலுக்குத் தேவையான பொருட்களை தேடுவாங்க.
ஒரு முறை பயன்படுத்திய பொருளை மறுபடி அதே இடத்தில் வெச்சாத்தான் அடுத்த முறை கிடைக்கும்ன்றது மனசுக்குத் தெரிஞ்சாலும் புத்திக்கு எட்டாததாலே, தினமும் இந்த தேடல் படலம் தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கும்.
இந்த மாதிரி ஆட்களுக்காகத்தான் ஒரு புதிய கருவி கண்டுபிடிக்கலாம்னு இருக்கேன். அது பேரு GPS - Grocery Positioning System. இந்த கருவி, மளிகை சாமான்கள் வீட்லே எங்கெங்கே இருக்குன்னு சொல்றதோட, சமையல் செய்யும் முறையையும் சொல்லிக் கொடுக்கும்.
நீங்க கீழே படிக்கப்போற 10 பாயிண்டுகளும், பேச்சிலர்களுக்கான வெர்ஷனாகும். பேச்சிலி (பெண்பால்) அல்லது தங்கமணிகளுக்கான வெர்ஷன் எப்படியிருக்கும்னு படிக்கறவங்க யாராச்சும் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்.
1. ஃப்ரிட்ஜைத் திறந்து மேல்தட்டில் கை விடவும். முதலில் இருக்கும் பெரிய வெள்ளை டப்பாவை வெளியே இழுக்கவும். அதுதான் பால் டப்பா.
2. அலமாரியில் முதலில் தெரியும் சிகப்பு டப்பாவை எடுக்கவும். உள்ளே ச்சின்னச்சின்ன சதுரமாக வெள்ளைப் பொருள் தென்பட்டால், அதுதான் சர்க்கரை டப்பா. அல்லது வெள்ளைப் பொடியாக இருந்தால் அது உப்பு டப்பா.
3. பக்கத்தில் இருக்கும் கூடையில் கைவிடவும். பச்சையாய், நீளமாய் இருக்கும் பொருள்தான் பச்சை மிளகாய். கூடையில் பச்சை மிளகாய் கிடைக்காவிட்டால், மேஜைக்கு கீழே உள்ள குப்பைத்தொட்டியில் பார்க்கவும். உள்ளே கிடக்கும் பச்சை மிளகாய்களில் இரண்டை சட்டென்று எடுத்து, யாரும் பார்க்குமுன் கழுவிவிட்டு, அதை பயன்படுத்தவும்.
4. கண்ணில் தெரியும் சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும். வீட்டை விட்டு வெளியே போய், பக்கத்து வீட்டு கதவை தட்டி, காப்பிப்பொடி கேட்கவும். நாம் சிறிது நாட்களாய் காப்பிப்பொடியே வாங்குவதில்லை.
5. கொறிப்பதற்காக முந்திரி பருப்பு தேடுகிறீர்களா? பின்பக்க அலமாரியில் கீழ்த்தட்டில் சிகப்பு மூடியுடைய டப்பாவை எடுக்கவும். டப்பா கிடைக்கவில்லையெனில், வீட்டிற்குள் சோபா (sofa) பக்கத்தில் கிடைக்கும். நேற்று சைட்டிஷ்க்கு பயன்படுத்தியிருப்பீர்கள்.
6. இந்த நேரத்துலே உப்புமாவா? அதெல்லாம் வேணாம். போய் டிவி போடுங்க. மானாட மயிலாட ஓடிக்கிட்டிருக்கும். அதை பார்த்தாலே பசி அடங்கிவிடும்.
7. அலமாரியில் உருண்டையாக பசுமாடு படம் போட்ட டப்பா இருந்தால் அதுதான் வெண்ணெய். அதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். எலி படம் போட்டிருந்தால், அது எலி பாஷாணம். கவனமாக கையாளவும்.
8. இப்போ எதுக்கு மேக்கி? ஃப்ரிட்ஜ்லே இந்த வாரம் செய்த சாதமும், போன வாரம் செய்த குழம்பும் அப்படியேயிருக்கு. அதை அவனில் சுடவைத்து சாப்பிடவும்.
9. பச்சை ப்ளாஸ்டிக் டப்பாவில் இருப்பது கடலை பருப்பு. அது கையிருப்பு குறைவாக இருப்பின், நீல ப்ளாஸ்டிக் டப்பாவில் இருக்கும் துவரம் பருப்பைப் போட்டு அட்ஜஸ்ட் செய்யவும். பிரச்சினை ஒன்றுமில்லை. நாம்தானே சாப்பிடப் போகிறோம்.
10. சாதத்துக்கு வைக்கப்போறீங்களா? குழம்பு சாதம் சாப்பிடணும்னா, குக்கர்லே இரண்டு டம்ளர் தண்ணீர் போட்டா போதும். குழம்பு சாதம் குடிக்கணும்னா, நாலு டம்ளர் தண்ணீர் போடுங்க.
35 comments:
கலக்கல்.. அதிலும் 7வது பாய்ண்ட்ல வார்னிங், வாய் விட்டு சிரிச்சேன்..
வழக்கம் போல மீ த பஷ்டூ... :)))
சமையல் அறிவுரை சொல்ல சரியான ஆளுதான்
இன்னைக்கு என்ன சமையல் பண்ணிங்க
இருங்க பதிவ படிச்சிட்டு வர்றேன்
//புதிதாக திருமணமாகி புருஷனுக்கு சமைச்சுப் போட முயற்சி செய்யும் தங்கமணிகளாகட்டும் - //
அப்படில்லாம் இப்போ நடக்குதா
//அடுப்பு பத்தவச்சப்புறம்தான் சமையலுக்குத் தேவையான பொருட்களை தேடுவாங்க.//
சில பேரு அப்போ தான் என்ன சமைக்கலாம்னு யோசிக்கவே ஆரம்பிப்பாங்க
//தினமும் இந்த தேடல் படலம் தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கும்.//
இதுக்கு ஒரே வழி தினமும் பக்கத்து வீட்டில் கடன் வாங்கிர்றது தான்
//சமையல் செய்யும் முறையையும் சொல்லிக் கொடுக்கும்.//
இதுதான் ரங்கமணிகளின் தலையாய தேவை
//ஃப்ரிட்ஜைத் திறந்து மேல்தட்டில் கை விடவும்.//
பாம்புகள் இருக்கலாம். ச்சின்னப்பையன் பொறுப்பல்ல
//உள்ளே ச்சின்னச்சின்ன சதுரமாக வெள்ளைப் பொருள் தென்பட்டால், அதுதான் சர்க்கரை டப்பா. அல்லது வெள்ளைப் பொடியாக இருந்தால் அது உப்பு டப்பா.//
சோப்பு தூளாகவும் இருக்கலாம். எதற்கும் கொஞ்சம் வாயில் போட்டு நுரை வருகிறதா என்று பார்க்கவும்
//நீளமாய் இருக்கும் பொருள்தான் பச்சை மிளகாய். //
அதுவே சிகப்பாய் இருந்தால் கேரட்.
எதற்கும் இதையும் கடித்து பார்ப்பது நல்லது.
உரைத்தால் அது கன்ஃபார்மாக பச்சைமிளகாய் தான்
//. உள்ளே கிடக்கும் பச்சை மிளகாய்களில் இரண்டை சட்டென்று எடுத்து, யாரும் பார்க்குமுன் கழுவிவிட்டு,//
யாரேனும் திருட்டு பார்வை பார்த்தால், கழுவாமல் அப்படியே உபயோகிக்கவும்
//வீட்டை விட்டு வெளியே போய், பக்கத்து வீட்டு கதவை தட்டி, காப்பிப்பொடி கேட்கவும்//
இல்லையென்று தான் சொல்வார்கள் வெறும் கிண்ணத்தோடு திரும்புவது புறமுதுகுக்கு சமம்.
//நேற்று சைட்டிஷ்க்கு பயன்படுத்தியிருப்பீர்கள்.//
எல்லோரும் உங்ககளை போல இல்லையென்றால்!!??
//இந்த நேரத்துலே உப்புமாவா? //
இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா
நான் பட்டினியாவே படுத்துக்கிறேன்
// ஃப்ரிட்ஜ்லே இந்த வாரம் செய்த சாதமும், போன வாரம் செய்த குழம்பும் அப்படியேயிருக்கு. //
நல்லா பாருங்க, அது ஒரு மாசமா அப்படியே தான் இருக்கு
//குழம்பு சாதம் "குடிக்கணும்னா", நாலு டம்ளர் தண்ணீர் போடுங்க. //
குசும்பா! இனிமே டெயிலி காஞ்சி தான்
//குழம்பு சாதம் சாப்பிடணும்னா, குக்கர்லே இரண்டு டம்ளர் தண்ணீர் போட்டா போதும். குழம்பு சாதம் குடிக்கணும்னா, நாலு டம்ளர் தண்ணீர் போடுங்க.
//
:-))))))
சின்ன "விஞ்ஞான" பையன் ஆகிட்டீங்க.திருமணம் ஆகும்வரை ரங்கமணிகள் பேச்சிலர்.அதன் பின் "பேச்சு" இலர்.
கலக்கல்.... :))
வாங்க வெண்பூ -> :-))) நன்றி...
வாங்க வால் -> ஆஆஆ... சமையல்னவுடனே பூந்து விளையாடிட்டீங்களே????????
வாங்க பிரேம்ஜி, ராதாகிருஷ்ணன் ஐயா, இராம் -> நன்றி எல்லோருக்கும்...
அண்ணே! உங்களுக்கு இந்த துறையில் ஏகப்பட்ட அனுபவம் இருக்கும் போல இருக்கு... :)
இன்னும் அனுபவங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருங்க
எனக்கு கல்யாணம் ஆகிடுசுங்கோ.
கல்யாணம் ஆகி தங்கமணி ஊருல இருக்கிறவங்களுக்கு என்ன சொல்ல?
நோட் பண்ணிக்கிட்டோம். உங்க கஷ்டமும் புரியுது.
:-)))
//எலி படம் போட்டிருந்தால், அது எலி பாஷாணம்//
பிரிஜ் உள்ள எலி படம் போடாமலும் நீங்க செஞ்ச குழம்பு, பொரியல் போன்ற பாஷாணங்கள் இருக்கலாம், ஜாக்கிரதை:):):)
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நீங்க ஏன் கடலைப்பருப்ப ஜாஸ்தி யூஸ் பண்றீங்க???????????? துவரம்பருப்புத்தான் ஜாஸ்தி யூஸ் பண்ணனும். ம்ஹூம், உங்க தங்கமணி இவ்ளோ நாளாகியும் சரியா டிரெயினிங் கொடுக்கலையா?:):):)
வாங்க தமிழ் பிரியன் -> அவ்வ்வ்... எல்லாம் உங்க மாதிரி ஆளுங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டதுதாங்க.... :-))))
வாங்க நசரேயன் -> கல்யாணம் ஆகி தங்கமணி ஊர்லே இருக்கறவங்களுக்கு 'வாழ்த்துக்கள்'னு தாங்க சொல்லணும்..... :-))))
வாங்க வேலன் ஐயா, பாஸ்கர் -> :-)))))
வாங்க ராப் -> ஹாஹா... இப்போதைக்கு பருப்பு வகைகள்லே எனக்கு முந்திரிபருப்பு மட்டும்தான் டக்குன்னு கண்டுபிடிக்கத் தெரியும்.... :-)))
சமையலே செய்யற மாதிரி ஒரு கருவியை கண்டுபிடிக்கலாம்தானே. :(
1. ஃப்ரிட்ஜைத் திறந்து மேல்தட்டில் கை விடவும். முதலில் இருக்கும் பெரிய வெள்ளை டப்பாவை வெளியே இழுக்கவும். அதுதான் பால் டப்பா.
சில சமயம் அது தயிர் டப்பா ஆகவும் இருக்கலாம்
7. அலமாரியில் உருண்டையாக பசுமாடு படம் போட்ட டப்பா இருந்தால் அதுதான் வெண்ணெய். அதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். எலி படம் போட்டிருந்தால், அது எலி பாஷாணம். கவனமாக கையாளவும்.
சில கோபக்கார தங்கமணிகள் இருக்கும் வீட்டில் பசுமாடு போட்ட டப்பாவில் கூட எலி பாஷாணம் இருக்கலாம். மிகவும் கவனமாக கையாளவும்.
பதிவு மட்டுமல்ல
கீழே உள்ள ஒவ்வொரு முத்து முத்தான
கமெண்ட்டும் சூப்ப்ப்ப்ப்பபபபபர்ர்ர்ர்
"வாங்க நசரேயன் -> கல்யாணம் ஆகி தங்கமணி ஊர்லே இருக்கறவங்களுக்கு 'வாழ்த்துக்கள்'னு தாங்க சொல்லணும்..... :-))) "
அப்படியே கொஞ்சம் அடிவயிற்றிலிருந்து பெருமூச்சும், காதுகளிலிருந்து புகையும்.
இல்லையா ச்சின்னப்பையன் ?
அன்புடன்
முத்து
வாங்க தாரணி பிரியா -> ஹாஹா... அப்பவாவது சுவையான சமையல் கிடைக்கும் - அப்படின்னு சொல்ல வர்றீங்களா????!!!!!!!!!!!!
வாங்க ராஜாஹரிச்சந்திரா -> நன்றி...
வாங்க முத்து -> ஹாஹா... சரியா பிடிச்சிட்டீங்க..... :-)))
Post a Comment