நொறுக்ஸ் - திங்கள் 11/10/08
நிறைய குட்டி குட்டி மேட்டர்கள் கையில் இருப்பதால் (NO வெண்பூ, NO Bad Meaning!!!), இந்த வாரம் பூச்சாண்டியில் நொறுக்ஸ் வாரமாக (கு.ப. 3 பதிவுகள்) கொண்டாடப்படுகிறது.
----------------------
எல்லா குழந்தைகளையும் போல், சஹானாவும் இரண்டு வயது இருக்கும்போது பேச ஆரம்பித்திருந்தார். நமக்குத் தெரிந்தது ஏதாவது கற்றுக்கொடுப்போம் என்றெண்ணி நானும் அவரிடம் பேச முற்பட்டபோது, அவருக்கு நான் எதுவும் சொல்லித் தரக்கூடாது என்று எங்கள் வீட்டில் எனக்குத் தடை போட்டுவிட்டார்கள். ஏன்னு கேக்கறீங்களா?. காரணம் பதிவின் கடைசியில்.
---------------------
மனைவி: ஏங்க, நடிகர் சூர்யாவே "என்னை கொஞ்சம் மாற்றி"ன்னுதான் பாடறார். நீங்க என்னடான்னா, உங்க பழக்கவழக்கங்களை கொஞ்சம்கூட மாத்திக்காமே, எப்பவும் என்னையே மாறச் சொல்றீங்களே?
கணவன்: ஜோதிகா மாதிரி ஒரு மனைவி கிடைச்சான்னா, கொஞ்சம் என்ன, நான் முழுசாவே என்னை மாத்திக்கிட்டிருப்பேன்.
(டம், டம், டமால், டப்)
பிகு: இது என் அனுபவமல்ல. ஒரு ஜோக்தான்.
---------------------
என்னுடன் வேலை பார்க்கும் நான்கைந்து அமெரிக்க நண்பர்களிடம் கண்ட பழக்கம் இது.
காலையிலிருந்து எல்லோரும் சேர்ந்தே உட்கார்ந்து மீட்டிங்கில் பேசியிருப்போம். ஆனாலும், சிறிது நேரம் கழித்து எதிரெதிரே பார்க்க நேர்ந்தால் - "ஹாய், சத்யா, ஹவ் ஆர் யூ?" - என்பார்கள். அடப்பாவிகளா, இவ்ளோ நேரம் சேர்ந்துதானே பேசிக்கிட்டிருந்தோம். மறுபடியும் முதல்லேர்ந்து ஆரம்பிக்கிறீங்களா என்று நினைத்தாலும், "ஃபைன், ஹவ் அபௌட் யூ?" என்று சொல்லுவேன்.
மத்த நாடுகள்லேயும் இப்படித்தான் நலம் விசாரிக்கறாங்களான்னு தெரியல.
----------------------
பெண்களுக்கு ஞாபகசக்தி அதிகமாணுமா?
உடனே திருமணம் செய்துவிடுங்கள்.
திருமணமான பெண்கள்தான் ச்சின்னச்சின்ன விஷயங்களை
ரொம்ப நாள் ஞாபகம் வைத்துக்கொள்கிறார்கள்.
பிகு: இப்போ நான் சொன்னது. இதுக்கு முன்னால் வேறே யாராவதுகூட சொல்லியிருக்கலாம்.
----------------------
யார் வந்து "உன் பேர் என்ன?" என்று கேட்டாலும், இரண்டு கைகளை தரையிலோ, மேஜையிலோ ஊன்றிக்கொண்டு - "என் பேர் சஹானா... எனக்கு... இன்னொரு பேரு இருக்கு... வர்ஷா... வர்ஷா..." (... போட்ட இடத்திலெல்லாம் சிறிய இடைவெளி விட்டு படிக்கவும்) - இதைத்தான் நான் சஹானாவுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாரமாக சொல்லியதில், தத்தக்கா புத்தக்கா என்று சொல்ல ஆரம்பித்திருந்தார். ஆனால், வீட்டில் எல்லோரும் என்னை #$%#$ திட்டி சஹானாவுக்கு வேறெதுவும் சொல்லித்தராதே என்று கூறி என் கட்டுக்கடங்காத ஆவலை கட்டுப்படுத்தி விட்டனர்... :-(((
27 comments:
aha me the first
உங்க பின்குறிப்பை நம்பிட்டேன்
\\மத்த நாடுகள்லேயும் இப்படித்தான் நலம் விசாரிக்கறாங்களான்னு தெரியல.\\
அது அமெரிக்கான்றதால ஆங்கிலத்தில கேட்டு இருக்காங்க. இதுவே தமிழ்நாடா இருந்தா தமிழ், கேரளாவா இருந்தா மலையாளம், ஜப்பானா இருந்தா ஜப்பானீஸ் போன்ற மொழிகளில் கேட்டு இருப்பாங்க
\\#$%#$ \\
எனக்கு இதுக்கு அர்த்தம் தெரியுமே
me the 3RD
முதலில் வணக்கம் சொல்லிக்கிறேன்.எங்கே ஆளையேக் காணோம்! (இது நான் கேட்கவேண்டிய கேள்வின்னு முணங்குறது காதுல விழுது:))
எனக்கு புரியவேயில்லை. ஏன் நீங்க அப்டி வர்ஷான்னு சொல்ல சொல்லிக்கொடுத்தீங்க?
// rapp said...
எனக்கு புரியவேயில்லை. ஏன் நீங்க அப்டி வர்ஷான்னு சொல்ல சொல்லிக்கொடுத்தீங்க? //
ஹிஹி...அண்ணன் பாட்ஷா எஃபெக்ட்ல என்னமோ ட்ரை பண்ணியிருக்காருன்னு நெனக்கிறேன்...
//ஏன் நீங்க அப்டி வர்ஷான்னு சொல்ல சொல்லிக்கொடுத்தீங்க?//
வர்ஷா சத்யா சார் வச்ச பேர் !
சஹானா , மேடம் வச்ச பேர் !
என்ன சரியா ?
வாங்க தாரணி பிரியா ->
//அது அமெரிக்கான்றதால ஆங்கிலத்தில கேட்டு இருக்காங்க. இதுவே தமிழ்நாடா இருந்தா தமிழ், கேரளாவா இருந்தா மலையாளம், ஜப்பானா இருந்தா ஜப்பானீஸ் போன்ற மொழிகளில் கேட்டு இருப்பாங்க//
அவ்வ்வ்... எப்படிங்க இப்படி?????
வாங்க ராஜ நடராஜன் -> அவ்வ்.. அப்பப்ப வேலையும் செய்ய வேண்டியிருக்கே.... :-(((
//பிகு: இது என் அனுபவமல்ல. ஒரு ஜோக்தான்.//
பிபிகு : இது ஜோக்கல்ல உண்மைதான்.
வாங்க ராப் -> அவ்வ்வ்.. நீங்க பாட்ஷா பாக்கலியா??? அதுலே தல சொல்லுவாரே.... "என் பேரு மாணிக்கம். எனக்கு இன்னொரு பேரு இருக்கு... பாட்ஷா பாட்ஷா" அதே எஃபெக்ட் கொடுக்கலாம்னு நினைச்சேன்... முடியல..... :-((
வாங்க விஜய் தம்பி -> தமிழ் டு தமிழ் மொழிபெயர்த்தற்கு நன்றி..... :-)))))
வாங்க பாஸ்கர் -> சரியா விடை சொன்னதாலே உங்களுக்கு நாலு பாயிண்ட்.... :-))))
சூப்பர்...
//இப்போ நான் சொன்னது. இதுக்கு முன்னால் வேறே யாராவதுகூட சொல்லியிருக்கலாம்.//
இத எங்கயோ எப்பவோ படிச்ச மாதிரி இருக்கு... அஞ்சாங் கிளாஸ்ல யாருக்காவது சொல்லி கொடுத்திருப்பாங்களோ...
//திருமணமான பெண்கள்தான் ச்சின்னச்சின்ன விஷயங்களை
ரொம்ப நாள் ஞாபகம் வைத்துக்கொள்கிறார்கள்.//
:-))))
ஓஹோ, ஓகே ஓகே. ஆனா எனக்கு பாட்ஷா படம் ரொம்பப் பிடிக்காது. ரஜினிக்கு வயசாகிடுச்சின்னு வெளிப்படையா தெரிய ஆரம்பிச்சது இந்தப்படத்துலதானே, அதான்.
ஆனா செமக் க்யூட்டா இருந்திருக்குமே, ச்சே அதை ஏன் நிறுத்துனீங்க? ரெக்கார்ட் பண்ணி வெச்சிருக்கீங்களா?
இங்க பிரான்ஸில் கன்னத்தில் முத்தம் கொடுத்தும் கேட்பார்கள்:):):)
//பிகு: இது என் அனுபவமல்ல. ஒரு ஜோக்தான்.// அதானே , உங்க அனுபவமா இருந்தா இன்னேரம் பதிவா போட்டுட்டு இருப்பீங்க!!
////திருமணமான பெண்கள்தான் ச்சின்னச்சின்ன விஷயங்களை
ரொம்ப நாள் ஞாபகம் வைத்துக்கொள்கிறார்கள்.//
ஆண்களுக்கு மறதி வரணும்னா கல்யாணம் பண்ணி வைக்கணும் தெரியுமா!!!
அண்ணே கொஞ்சம் வேளையா போனதால உங்க கடை பக்கம் எட்டிப் பார்க்கல..... அதுக்குள்ள மைலாப்பூர் பி2 ஸ்டேசன்ல என்னைய காணோம்னு கம்ப்ளெயின்ட் பண்ணிட்டீங்களே????
//அவருக்கு நான் எதுவும் சொல்லித் தரக்கூடாது என்று எங்கள் வீட்டில் எனக்குத் தடை போட்டுவிட்டார்கள்//
ஆஹா...அண்ணே இலட்சனம் வீட்லயும் தெரிஞ்சு போச்சா??
:))))))))))))))))))
இது என் அனுபவமல்ல. ஒரு ஜோக்தான்.
//
நம்பிட்டேன் :)
ஆனாலும் குழந்தைக்கு சொல்லி கொடுத்தது சூப்பர்.. இப்படித்தான் வீட்டுல இருக்குறவங்க நம்பள புரிஞ்சிக்கவே மாட்டாங்க.. அப்புறம், குழந்தைக்கு சொல்லி குடுத்தீங்களா, இல்லியா?
//அவருக்கு நான் எதுவும் சொல்லித் தரக்கூடாது என்று எங்கள் வீட்டில் எனக்குத் தடை போட்டுவிட்டார்கள். //
சொல்லு சொல்லு ”செக்கஸ்லோவாக்கியா”
ஞாபகம் வந்துருச்சு எனக்கு
//பிகு: இது என் அனுபவமல்ல. ஒரு ஜோக்தான்.//
ஆனாலும்
டம் டம் டமால் மட்டும் தினமும் நடப்பது உண்மை
//மத்த நாடுகள்லேயும் இப்படித்தான் நலம் விசாரிக்கறாங்களான்னு தெரியல.//
இங்கெல்லாம் பாத்தாலே முகத்த திருப்பீட்டு ஓடிடுவானுங்க
//திருமணமான பெண்கள்தான் ச்சின்னச்சின்ன விஷயங்களை
ரொம்ப நாள் ஞாபகம் வைத்துக்கொள்கிறார்கள்.//
எனக்கு அப்படி தெரியவில்லை.
பொதுவாகவே பெண்கள் ஆண்கள் தரும் வாக்குறுதிகளை ஞாபம் வைத்திருக்கிறார்கள்.
(அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை கூட மறந்து விடுகிறார்கள்.)
//என் பேர் சஹானா... எனக்கு... இன்னொரு பேரு இருக்கு... வர்ஷா... வர்ஷா..."//
இதற்கு வேறு எதாவது காரனம் இருக்கா?
என் மகளை வீட்டில் இப்படி தான் அழைக்கிறோம். உண்மையில் வைத்த பெயர் “தேன்மதி”
:(
வாங்க விக்னேஷ்வரன் -> தெரியல. நான் அன்னிக்கு லீவ்லே இருந்திருப்பேன்னு நினைக்கிறேன்.... ஹிஹி..
வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> ஆமோதித்ததற்கு நன்றி...
வாங்க ராப் -> அவ்வ்வ்வ்வ்.... இவ்ளோ லேட்டா சொல்றீங்களே?????
வாங்க சின்ன அம்மிணி -> ஹிஹி நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.... இது எப்படி.... :-))
வாங்க அப்துல்லா -> அவ்வ்வ்... நம்ம இலட்சணம் இங்கே தெரியாம இருக்குமா????? :-((((
வாங்க வெண்பூ -> இல்லேப்பா. அது அப்புறம் மறந்துட்டா.... :-))
வாங்க வால் -> ஆளாளுக்கு ஒரு பேரு வெச்சிட்டாங்க. வர்ஷா, மதுமிதா அப்படின்னு. ஆனா வீட்லே, பள்ளியிலே எல்லாம் சஹானாதான்..... :-))
Post a Comment