நொறுக்ஸ் - செவ்வாய் - 11/11/2008
இந்த கேள்விகள் ரங்கமணிகளுக்கு:
வாரயிறுதியில் குடும்பத்தில் அமைதியா சண்டை, சச்சரவில்லாமே இருக்கணுமா?
இரண்டு நாளும் நீங்க அமைதியா கணிணியில் அமர்ந்தாலும், 'யாரும்' உங்களை #%$% திட்டாமே இருக்கணுமா?
நிறைய பேர் ஆமா, ஆமான்னு குதிக்கறது தெரியுது... பதில் பதிவின் கடைசியில்...
-----------------
தினமும் வகுப்பறையில் நுழைந்தவுடன் சஹானா நேராக ஆசிரியையிடம் சென்று, 'குட் மார்னிங்' சொன்னபிறகு, வீட்லே நடந்த ஏதாவது ஒரு விஷயத்தைப் பத்தி சொல்லிவிட்டுதான் தன் நண்பர்களைப் பாக்கப்போவாங்க.
ஒரு நாள், நண்பர்களைப் பார்த்த குஷியில், ஆசிரியையை மறந்துவிட்டு ஓட, ஆசிரியையோ கூப்பிட்டு, "சஹானா, கேன் யூ சே குட் மார்னிங்?(குட் மார்னிங் சொல்ல தெரியுமா?) என்று கேட்டார்.
ஓடிக்கொண்டிருந்த சஹானா, ஒரு நொடி நின்று திரும்பி "யெஸ்" (தெரியும்) என்று கூறிவிட்டு மறுபடி ஓடிவிட்டார்.
ஆசிரியை என்னிடம், "தப்பு என்னுதுதான். நான் குட் மார்னிங்னு சொல்லியிருக்கணும். தெரியுமான்னதுக்கு அவ தெரியும்னு சொல்லிட்டு ஓடிட்டா" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
-----------------
இப்போ எந்த நிலமையில் இருந்தாலும்,
பழசை மறக்கவேகூடாதுன்னு சொன்னாங்க.
நானும் ச்சின்ன வயசில் இருந்தா மாதிரி -
வெறும் **ட்டியோட வெளியே போனேன்.
அதுக்குப்போய் என்னை லூசுன்னு சொல்றாங்க.
பிகு: இது எழுதினது மட்டும்தான் நான். 'அது' நானில்லை.
------------------
உங்க எல்லாருக்கும் ஒரு கேள்வி:
CFL விளக்குகள். இதன் பயன்களைப் பற்றி நிறைய பேர் நிறைய பதிவுகளை போட்டிருப்பீங்க / படிச்சிருப்பீங்க... எல்லா பதிவுகளிலேயும் இந்த CFL விளக்குகளை, குண்டு விளக்குகளோடு ஒப்பிட்டு வருகின்றனர். என்னோட கேள்வி என்னன்னா, இந்த CFLஐயும் நீளமா நம்ம வீடுகள்லே இருக்கும் 'ட்யூப் லைட்'ஐயும் ஒப்பிடறா மாதிரி எங்கேயாவது படித்திருக்கிறீர்களா? இருந்தா, அதோட உரல் கொஞ்சம் கொடுங்க. நன்றி...
-------------------
'யாரும்' சொல்றதுக்கு முன்னாடியே, வெள்ளி இரவோ, சனி காலையிலோ ஒரு தடவை, மாமனார் வீட்டுக்கு தொலைபேசி எல்லார்கிட்டேயும் "எப்படி இருக்கீங்க? என்ன விஷயம்?" அப்படி இப்படின்னு ஒரு ரெண்டு நிமிஷம் பேசிடுங்க... அவ்ளோதான்.
கவனத்துடன் ஒரு டிஸ்கி : இது என்னுடைய அனுபவமல்ல...!!!
18 comments:
உங்க அனுபவங்களைதான் எழுதறீங்கன்னு எல்லாத்துக்கும்தான் தெரியுதே அப்புறம் ஏன் கவனத்துடன் ஒரு டிஸ்கி எல்லாம் போடணும்
நீங்க "இது எழுதினது மட்டும்தான் நான். 'அது' நானில்லை", "இது என்னுடைய அனுபவமல்ல...!!!" அப்படின்னு சொன்னது எல்லாத்தையும் நம்பிட்டேன்.. நம்பிட்டேன்... நம்பிட்டேன்.. :)))
அதே மாதிரி ட்யூப்லைட், சி.எஃப்.எல் கரெக்ட். நானும் இதேதான் யோசிப்பேன். குண்டு பல்பு வேணாம்னா ட்யூப்லைட் போட்டுகோங்கன்னு தோணும்.. ஆனா யாரும் சொல்லவே மாட்டேன்றாங்களே.. :(
//இந்த கேள்விகள் ரங்கமணிகளுக்கு: //
அப்ப, நான் இந்த பதிவ படிக்கக் கூடாதா ?
//கவனத்துடன் ஒரு டிஸ்கி : இது என்னுடைய அனுபவமல்ல...!!!//
சரி சரி நம்பீட்டன்.
//உங்க எல்லாருக்கும் ஒரு கேள்வி:
CFL விளக்குகள். இதன் பயன்களைப் பற்றி நிறைய பேர் நிறைய பதிவுகளை போட்டிருப்பீங்க / படிச்சிருப்பீங்க...//
யோசிச்சுப் பாக்காமலேயே சொல்றேன்.. எனக்கு தெரியாது..
//'யாரும்' சொல்றதுக்கு முன்னாடியே, வெள்ளி இரவோ, சனி காலையிலோ ஒரு தடவை, மாமனார் வீட்டுக்கு தொலைபேசி எல்லார்கிட்டேயும் "எப்படி இருக்கீங்க? என்ன விஷயம்?" அப்படி இப்படின்னு ஒரு ரெண்டு நிமிஷம் பேசிடுங்க... அவ்ளோதான் //
வருங்காலத்தில் ரங்கமணியா புரமோஷன் கிடைச்சப்புறம் முயற்சி பண்ணி பாக்குறேன்.. வொர்க் அவுட் ஆகலை........ ஆட்டோ வரும்.. வேற யோசனை கேக்க :))
:-)))...
// வெண்பூ said...
நீங்க "இது எழுதினது மட்டும்தான் நான். 'அது' நானில்லை", "இது என்னுடைய அனுபவமல்ல...!!!" அப்படின்னு சொன்னது எல்லாத்தையும் நம்பிட்டேன்.. நம்பிட்டேன்... நம்பிட்டேன்.. :))) //
நானும்...நானும்...நானும்!!!!
வாங்க தாரணி பிரியா -> எல்லாம் ஒரு சேஃப்டிக்காகத்தான்... ஹிஹி..
வாங்க வெண்பூ -> நம்பினதுக்கு நன்றி....
வாங்க ராகவ் -> எல்லாத்தையும் புக் மார்க் செய்து வைங்க. பிறகு பயன்படும்.... :-))
வாங்க வேலன் ஐயா -> நன்றிங்கோவ்....
//வாரயிறுதியில் குடும்பத்தில் அமைதியா சண்டை, சச்சரவில்லாமே இருக்கணுமா?//
வாரத்துல ஒரு நாள் கூட லீவு விடாம டோஸ் வாங்குறவரு, நமக்கு அட்வைஸ் பண்றாரு பாருங்க
//ஓடிக்கொண்டிருந்த சஹானா, ஒரு நொடி நின்று திரும்பி "யெஸ்" (தெரியும்) என்று கூறிவிட்டு மறுபடி ஓடிவிட்டார்.//
பூச்சாண்டிக்கு பிறந்தது பூனையாகுமா?
//நானும் ச்சின்ன வயசில் இருந்தா மாதிரி -
வெறும் **ட்டியோட வெளியே போனேன்.
அதுக்குப்போய் என்னை லூசுன்னு சொல்றாங்க.//
நல்லவேலை அதுவாவது போட்டுகிட்டு இருந்திங்களே
//அதோட உரல் கொஞ்சம் கொடுங்க. நன்றி...//
எங்க வீட்டுல ஆட்டு ”உரல்” இருக்கு வேணுமா?
//காலையிலோ ஒரு தடவை, மாமனார் வீட்டுக்கு தொலைபேசி எல்லார்கிட்டேயும் "எப்படி இருக்கீங்க? என்ன விஷயம்?" அப்படி இப்படின்னு ஒரு ரெண்டு நிமிஷம் பேசிடுங்க... அவ்ளோதான்.//
உங்களுக்கு என்ன அமெரிக்கவுல இருக்கிங்க
இங்க கூப்பிட்டா உடனே கிளம்பி வீட்டுக்கு வந்துருவாங்க.
/*
நானும் ச்சின்ன வயசில் இருந்தா மாதிரி -
வெறும் **ட்டியோட வெளியே போனேன்
*/
எனக்கு ஒரு உண்மை தெரியனும்
இது ச்சின்ன வயசிலயா?
இல்ல ச்சின்னப்பையன் ஆனா வயசிலயா?
/*
'யாரும்' சொல்றதுக்கு முன்னாடியே, வெள்ளி இரவோ, சனி காலையிலோ ஒரு தடவை, மாமனார் வீட்டுக்கு தொலைபேசி எல்லார்கிட்டேயும் "எப்படி இருக்கீங்க? என்ன விஷயம்?" அப்படி இப்படின்னு ஒரு ரெண்டு நிமிஷம் பேசிடுங்க... அவ்ளோதான்.
*/
அப்படியே எடுத்துக்கிறேன்
கலக்கறீங்களே....
நீங்களும் ஒவ்வொரு பதிவுலயும் இது என்னோட அனுபவமில்லங்கறீங்க. நாங்களும் நம்பிட்டமாதிரி அப்படியானுட்டே படிக்கறோம். அதுக்காக நிஜமாவே நம்பிட்டோம் நீங்க நினைச்சுக்க கூடாது
/
வால்பையன் said...
//காலையிலோ ஒரு தடவை, மாமனார் வீட்டுக்கு தொலைபேசி எல்லார்கிட்டேயும் "எப்படி இருக்கீங்க? என்ன விஷயம்?" அப்படி இப்படின்னு ஒரு ரெண்டு நிமிஷம் பேசிடுங்க... அவ்ளோதான்.//
உங்களுக்கு என்ன அமெரிக்கவுல இருக்கிங்க
இங்க கூப்பிட்டா உடனே கிளம்பி வீட்டுக்கு வந்துருவாங்க.
/
:))))))))))
ROTFL
வாங்க வால் -> //உங்களுக்கு என்ன அமெரிக்கவுல இருக்கிங்க
இங்க கூப்பிட்டா உடனே கிளம்பி வீட்டுக்கு வந்துருவாங்க//
இதைப் படிச்சிட்டு வாய் விட்டு சிரிச்சேன்.... :-)))
வாங்க நசரேயன் -> நன்றி...
வாங்க பாபாஜி, பரிசல் -> பெரியவங்க வந்திருக்கீங்க.. நன்றி...
வாங்க சின்ன அம்மிணி -> சரி சரி எனக்கு புரிஞ்சிடுச்சு....:-))
Post a Comment