கெட்டி மேளம்... கெட்டி மேளம்!!!
சிறிய வயதில் உறவினர்களின் திருமணத்திற்குப் போவது படுகுஷியாக இருக்கும். பள்ளிக்கு மட்டம் போட்டுவிடலாம், படிக்கவும் வேண்டாம்.
அதுமட்டுமல்லாமல் திருமண மண்டபத்தில் நம்மை யாரும் கண்டுக்க மாட்டாங்க. நம்ம இஷ்டத்துக்கு சாப்பிட்டு நம்ம இஷ்டத்துக்கு
சுத்திக்கிட்டே இருக்கலாம்.
என்னோட இதே வேவ்லெங்தில் (வார்த்தை நன்றி: பரிசல்) இன்னொரு உறண்பனும் இருந்தான். (உறண்பன் = உறவினன் + நண்பன்). அவனும்
அதே திருமணத்திற்கு வந்துவிட்டால், அப்புறம் எங்களை யாரும் பிடிக்கவேமுடியாது. அப்படி என்னதான் செய்வீங்கன்றீங்களா, அதைத்தான்
இங்கே சொல்லியிருக்கேன். பொறுமையா படிங்க.
ஞானும் அவனும் நடுவில் இன்னொருவரும்:
திருமணத்தை பார்வையிட வந்தவர் யாராவது ஒருவர் தனியாக உட்கார்ந்திருந்தால், நாங்கள் இருவரும் ஒவ்வொருவராக போய் அவரின்
இரண்டு பக்கங்களிலும் உட்கார்ந்து விடுவோம். ஒரு ஐந்து நிமிடம் கழித்து, ஒருவரையொருவர் திடீரென்று பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு -
'டேய், எப்படிடா இருக்கே. பாத்து ரொம்ப நாள் ஆச்சு' என்று ஒருவன் ஆரம்பிக்க, இன்னொருவனும் 'ஹேய்' என்று பேச ஆரம்பிப்பான்.
நடுவில் உட்கார்ந்திருக்கும் அந்த நபர் எங்கள் தொல்லை பொறுக்க முடியாமல் எழுந்து போகும் வரை - நாங்கள் பார்த்த சினிமா,
தொலைக்காட்சி விளம்பரம் என்று சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் எதையாவது பேசிக்கொண்டிருப்போம்.
மனிதர் பயங்கர பொறுமைசாலியாக இருந்து, பத்து நிமிடங்களுக்கு மேல் எழுந்துபோகாமல் இருந்துவிட்டால், நண்பன் பயங்கர டென்சனாகிவிடுவான். அவன் திறமையை நிரூபிக்கும் சவாலில் அவன் தோற்றுப்போனதுபோல் ஆவேசப்பட்டு - நான் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு - ஆங்கிலம், இந்தி என்று வெவ்வேறு மொழிகளில் பேச/உளற ஆரம்பித்து விடுவான். எங்களுக்கு நடுவில் அமர்ந்திருப்பவர், அதற்கு மேல் அந்த அறுவையை தாங்கமுடியாமல் கண்டிப்பாக எழுந்து போய்விடுவார்.
தொலைபேசுதல்:
தொலைபேசுதல் அப்படின்னா - ஃபோன்லே பேசுதல் இல்லீங்க. தொலைவிலிருந்து பேசுதல். ஒரு படத்தில் மணிவண்ணன் பேருந்து
நிலையத்தில் நின்றுகொண்டு அங்கிருக்கும் ஒரு பேருந்தில் ஒவ்வொருவராக முன்னால் இருக்கும் நபரை கூப்பிடச்சொல்வாரே, அப்படி
கூப்பிட்டு பேசுவது.
மண்டபத்தில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் ஒரே வரிசையில் வெவ்வேறு மூலையில் உட்கார்ந்திருப்போம். நான் எழுந்து அதே
வரிசையில் நடுவில் உள்ள இன்னொருவரை கூப்பிட்டு - "ப்ளீஸ், அவரை கூப்பிடுங்களேன்" - அப்படின்னு பக்கத்தில் இருப்பவரை காட்டி, அப்படியே கூப்பிட்டு கூப்பிட்டு வரிசையின் கடைசியில் உள்ள நண்பன் பார்த்தவுடனே, வழக்கம்போல் "டேய், எப்படிடா இருக்கே. பாத்து ரொம்ப நாள் ஆச்சு' - என்று ஆரம்பிப்பேன்.
மற்ற விஷயங்கள் எல்லாம் மேலே சொல்லியிருக்கிறா மாதிரிதான். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இங்கே ' நடுவில்' இருக்கும் ஆட்கள் அதிகம். அதனால், எல்லோரும் எழுந்து போவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சிறிது நேரம் கழித்து நாங்களே விளையாட்டை முடித்துக் கொண்டு எழுந்து போய்விடுவோம்.
படுபிஸியாக காட்டிக்கொள்ளுதல்:
அந்த திருமணமே எங்க உழைப்பில்தான் நடக்கிற மாதிரி பயங்கர பிஸியாக நடந்து கொண்டிருப்போம். கல்யாண மேடை, பார்வையாளர்
உட்கார்ந்திருக்கும் இடம், சமையலறை ஆகிய எல்லா இடங்களிலும் இப்படியே நாங்கள் நடையா ஓடிக்கொண்டிருப்பதால், பார்ப்பவர்கள்
அனைவரும் நாங்கள் ஏதோ திருமண வேலையாகத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணுவர்.
அப்படியும் சில பேர் எங்களை நம்பாமல் ஏதாவது வேலை செய்ய கூப்பிடும்போது, நண்பன் படுசீரியஸாக - அந்த மாமா வெற்றிலை வாங்கி
வரச்சொன்னார், இந்த மாமி சுண்ணாம்பு வாங்கி வரச்சொன்னார் - ஒரு ரெண்டு நிமிஷம் இருங்க. கொடுத்துட்டு வந்துடறேன் - அப்படி ஏதாவது சொல்லிவிட்டு எஸ்ஸாயிடுவான்.
சிறிது நேரம் இப்படி 'திருமண வேலைகளை' செய்தபிறகு - முதல் பந்தியில் சாப்பிட்டுவிட்டு - மண்டபத்தில் ஏதாவது ஒரு மூலையில் படுத்திருந்தாலும் - பார்ப்பவர்கள் - "நல்ல வேலை போலிருக்கு. பாவம் சின்னபுள்ள டயர்டாகி படுத்துவிட்டான்" என்று கூறுமளவிற்கு எங்கள் நடிப்பு அப்போதே ஜே.கே.ரித்தீஸுக்குப் போட்டியாக இருந்தது.
பதிவு ஓவர். இனி பின்குறிப்பு மட்டும்தான் பாக்கி.
அதெல்லாம் அந்த காலம். கல்யாணம் ஆனப்பிறகு - இந்தியாவில் நான் கலந்துகொண்ட திருமணங்களில் அங்கே இங்கே சுற்றாமல் மனைவி
பின்னாடியே வாலை (பதிவர் வாலை இல்லீங்க, என் வாலை) சுற்றி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்ததுதான் அதிகம்.
14 comments:
எனக்கு இப்பவும் பிரச்சனை இல்லை நண்பா!
எந்த கல்யாணம் போனாலும் என்னோட வேவ்லெந்தில் ஒரு உறண்பன் கிடைத்து விடுவார்.
நாங்கள் மட்டும் தனியாக ஒதுங்கி ஒரு நல்ல பாராக தேடி சென்று விடுவோம்.
காலையில் கல்யாணதிற்க்கு வருவதும், வராததும் இரவில் எங்களுக்குள் நடக்கும் விவாதத்தை பொறுத்தது
me the second:):):)
//நடையா ஓடிக்கொண்டிருப்பதால்//
அதெப்படி நடையா நடக்காம, ஓடுறீங்க?
//நண்பன் படுசீரியஸாக - அந்த மாமா வெற்றிலை வாங்கி
வரச்சொன்னார், இந்த மாமி சுண்ணாம்பு வாங்கி வரச்சொன்னார் - ஒரு ரெண்டு நிமிஷம் இருங்க. கொடுத்துட்டு வந்துடறேன் - அப்படி ஏதாவது சொல்லிவிட்டு எஸ்ஸாயிடுவான்.
//
உறண்பன் ஓகே, நீங்க எப்படி எஸ்சாவீங்க:):):)
//(பதிவர் வாலை இல்லீங்க, என் வாலை) //
:):):)
//எங்கள் நடிப்பு அப்போதே ஜே.கே.ரித்தீஸுக்குப் போட்டியாக இருந்தது.
//
நம்ம தலயவே மிஞ்சுற தெறமக்காரர்ந்கற இறுமாப்பு உங்க மனசுல வருவது நல்லதுக்கில்லைன்னு மட்டும் சொல்லிக்கிறேன்:):):)
எங்கள் நடிப்பு அப்போதே ஜே.கே.ரித்தீஸுக்குப் போட்டியாக இருந்தது.
//
எங்க கேப் கிடைச்சாலும் தலைவன் புகழப் பரப்பிடுறீங்களே து.தல :))
அப்துல்லா அண்ணாவைப் பாருங்க, பதிவ முழுசா படிக்காம, கடசீல மட்டும் ஜல்லியடிக்க வசதியா படிச்சுட்டு, அத வெச்சு பின்னூட்டம் போடறாரு:):):)
me the sixth!
;-)
வாங்க வால் -> அவ்வ்.... கல்யாணத்துக்கு வரலேன்னாலும் சரியா சாப்பாட்டு நேரத்துக்கு வந்துடுவீங்கதானே!!!!!!!!!!
வாங்க ராப் -> ஆஆஆ.. அப்போ பதிவு முழுக்க படிச்சிட்டீங்களா??? அங்கங்கே குறிச்சி வெச்சிக்கிட்டு கேள்வி கேக்கறீங்களே?????
வாங்க அப்துல்லா அண்ணே -> பாருங்க. ராப்பும் கேட்டிருக்காங்க. நானும் கேக்கறேன்.... அது எப்படி கரெக்டா கடைசி வரியை மட்டும் கோட் பண்ணியிருக்கீங்க?.... பதிவ வழக்கம்போல் படிக்கலை இல்லையா!!!!!!!! அவ்வ்வ்வ்...
//
அந்த திருமணமே எங்க உழைப்பில்தான் நடக்கிற மாதிரி பயங்கர பிஸியாக நடந்து கொண்டிருப்போம்.//
இந்தப் பயிற்சிதான் இப்ப வேலையே செய்யாம ஆனா ரெம்ப வேலை செய்யிற மாதிரி சீன் போட உதவுதா?
அப்பொ ச்சின்னப்பையன்.. இபோ நல்ல பையனா?? நம்பறோம்...
அப்துல்லா சொன்ன மாதிரி கேப் கிடச்சா ரித்தீஸ் கெடா வெட்டிடறீங்களே !!!
//என்னோட இதே வேவ்லெங்தில் (வார்த்தை நன்றி: பரிசல்)//
அது ஏற்கனவே பீட்டர்ல இருக்கற வார்த்தைதானே நண்பா.. நான் இந்த உலகத்துக்கு தாரை வார்த்த மாதிரி சொல்றீங்களே..
நீங்க சொன்ன உறண்பன் வேண்ணா, புது வார்த்தைன்னு வெச்சுக்கலாம்!
:-)))))))))
கல்யாண வீட்ல மட்டும்தான் இப்படி பண்ணுவீங்களா..
நானும் என் நண்பன் அறிவழகன் இப்பவும் என்கூட வேலை பாக்கறான் (கவனிக்க: வேலை செய்யறாந்னு சொல்லல), தினமும் இப்படி எதுனா செய்யறதுண்டு.
ஒரு பதிவு போட மேட்டர் ரெடி!!!
கல்யாண வீட்ல மட்டும்தான் இப்படி பண்ணுவீங்களா..
நானும் என் நண்பன் அறிவழகன் இப்பவும் என்கூட வேலை பாக்கறான் (கவனிக்க: வேலை செய்யறாந்னு சொல்லல), தினமும் இப்படி எதுனா செய்யறதுண்டு.
ஒரு பதிவு போட மேட்டர் ரெடி!!!
\\அப்போதே ஜே.கே.ரித்தீஸுக்குப் போட்டியாக இருந்தது.\\
வன்மையாகக் கண்டிக்கிறேன்:))
Post a Comment