நொறுக்ஸ் - வியாழன் - 11/13/2008
ரெண்டு வடை வாங்க 50 ரூபாய் கொடுக்கலாம் அல்லது 100 ரூபாய் கொடுக்கலாம். ஆனா யாராவது 1300 ரூபாய் கொடுப்பாளோ???? கொடுத்துட்டாளே.... விவரம் பதிவின் கடைசி செய்தியாக...
-------------
நாம சுவாசிக்கறது பிராண வாயு. மரங்கள் சுவாசிக்கறது கரி அமில வாயு. நமக்கும் மரங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள்னு எனக்கு சின்ன வயசுலே தெரிஞ்சதுலே இந்த பாயிண்ட்தான் முக்கியமானது.
இந்த ஊர்லே வந்து தெரிஞ்சிக்கிட்ட இன்னொரு வித்தியாசம் - குளிர் காலம் வரவர நாம உடுத்தற துணியோட தடிமன் (or தடிப்பு) அதிகமாயிட்டே போகுது; ஆனா, மரத்தோட ஆடையான இலை குறைஞ்சிக்கிட்டே போய் மொட்டையாயிடுது. (சரி சரி, கை
தட்டாதீங்கப்பா!!!).
இவைகளைத் தவிர இன்னும் பல வித்தியாசங்கள் இருந்தாலும், நம்மை 'யாராவது' - மசமசன்னு மரம் மாதிரி நிக்காதீங்க - அப்படின்னு 'பாசமா' சொல்லும்போது கோபம் வராமே, சந்தோஷமா இருக்கே - ஏன்னு யாராவது சொல்றீங்களா????
-------------------
ஓட்டுனர் உரிமம் வாங்கிய அனுபவம்:
சென்னை ஆலந்தூரில்:
ஒரே காரில் ஒரு பத்து பதினைந்து பேர் ஓட்டிக் காண்பிக்கணும். ஒருவர் வண்டியை ஓட்ட, மற்றவர்கள் தங்கள் பைக்கிலோ, வேறொரு காரிலோ பின்னாலேயே தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு சின்ன ஊர்வலம் மாதிரி எல்லோரும் போய்க்கொண்டிருந்தோம். வண்டி ஓட்டுவதற்கு என் முறை வந்தபோது - பக்கத்தில் அமர்ந்திருந்த கண்காணிப்பாளர் - வண்டியை ஸ்டார்ட் பண்ணி போங்க - என்றார்.
நானும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முற்பட்டபோது - வண்டியிலிருந்து ஒரு மாதிரி புர்புர்ரென்று சத்தம் வந்தது. அமைதியாக அவர் சொன்னார் - வண்டி ஸ்டார்ட் ஆகித்தான் இருக்கு. "இதை ஏன்யா முன்னாடியே சொல்லலே" - அப்படின்னு நான் சொல்லியிருப்பேன்னு நினைக்கிறீங்க... கரெக்ட்.. நானும் அப்படியேதான் நினைச்சேன். ஆனா சொல்லலே... :-)
அவரோ ரோட்டையே பாக்கலே. தன் கையில் இருந்த நோட்டில் ஏதோ எழுதிக்கிட்டே இருந்தார். நான் கியர் மாத்தி 1,2,3,4 போனவுடன், வண்டியை ஓரம் கட்டுங்க என்று கூறிவிட்டார். அவ்வளவுதான். ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்.
அமெரிக்காவில்:
ஒரு பத்து நிமிடம் சந்து பொந்தாக சுற்றிவிட்டு திரும்ப புறப்பட்ட இடத்துக்கே வந்தோம். இப்போது கண்காணிப்பாளர், வண்டியை பின்பக்கமாக ஓட்டி நிறுத்துங்க (back parking) என்றார். நானும் ஸ்டைலாக பின்பக்கம் போய் வண்டியை நிறுத்தினேன்.
சரியாக இரண்டு கோடுகளுக்கு நடுவில் நிறுத்தவேண்டும். நானும் வண்டியை நிறுத்தியபிறகு கோட்டை பார்த்தேன். இரண்டு பக்கமும் இரு கோடுகளும் சிறிது தூரம் தள்ளி இருந்தது. சரி, ஒரு பெரிய லாரி நிறுத்தவேண்டிய இடத்துலே நாம வண்டியை நிறுத்தியிருக்கோம்.
அதனால்தான், இரண்டு பக்கமும் கோடு தள்ளியிருக்கு அப்படின்னு நினைச்சிக்கிட்டு ஒரு மிதப்போட அந்த கண்காணிப்பாளரைப் பார்த்தேன்.
"ம்ஹும். நீங்க ஃபெயில். பத்து நாள் கழிச்சி மறுபடி வாங்க" - அப்படின்னுட்டார். என்னடான்னு பாத்தா, கீழே இருக்கற படத்தை பாருங்க. அதே மாதிரி நான் சரியா கோட்டு மேலேயே வண்டியை நிறுத்திட்டேன். அவ்வளவுதான்.
--------------
ஒரு முறை அலுவலக விஷயமாக என்னையும் சேர்த்து நண்பர்கள் மூன்று பேர் சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்தோம். ரயில் புறப்பட்டு செக்கிங், இரவு சாப்பாடு எல்லாம் ஆனது. படுக்கப்போகும்போது வண்டி ஏதோவொரு நிறுத்தத்தில் நின்றபோது, நண்பன் பசிக்கிறதென்று போய் எல்லோருக்கும் வடை வாங்கி வந்தான்.
சிறிது நேரம் கழித்து டிடிஆர் இரண்டாவது தடவை செக்கிங் செய்வதற்கு வந்துவிட்டார். இந்த மாதிரி இரண்டு தடவை செக்கிங் செய்வது அன்று மட்டுமா அல்லது தினமுமா என்று தெரியவில்லை.
வடை வாங்கிய நண்பன் பரபரவென்று தன் பர்ஸை நோண்டிக்கொண்டிருந்தான் - "மாப்ளே, டிக்கெட் தொலைஞ்சு போச்சுடா!!!". அதன்பிறகு டிடிஆரிடம் கெஞ்சி கூத்தாடி, பேரம் பேசி ஒரு வழியாக பிரச்சினையை தீர்த்தோம்.
மறு நாள் காலை நண்பன் சொன்னான். " நான் ரெண்டு பத்து ரூபாய் நோட்தான் வைத்திருந்தேன். அவை இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அப்படின்னா, நான் நம்ம டிக்கெட்டை கொடுத்துத்தான் வடை வாங்கியிருக்கேன் போல!!!".
16 comments:
me the first
கும்மி கொஞ்சம் லேட்டாகும்
நீங்கதான் இப்படின்னு பாத்தா, உங்க கூட இருக்கவங்களும் அப்படித்தானா?
தமாஸ் மாதிரி இல்லீங்க .. நல்லாவே தமாஸா இருந்தது.. :)))
வாங்க வால் -> மெள்ளமாவே வாங்க... இப்பல்லாம் இங்கே ரொம்பவே காத்து வாங்குது... :-(((
வாங்க வேலன் ஐயா -> அவ்வ்வ்.. என்ன பண்றது சொல்லுங்க!!!
வாங்க முத்துலட்சுமி-கயல்விழி -> நன்றிங்க... :-))
// "இதை ஏன்யா முன்னாடியே சொல்லலே" - அப்படின்னு நான் சொல்லியிருப்பேன்னு நினைக்கிறீங்க... கரெக்ட்.. நானும் அப்படியேதான் நினைச்சேன். ஆனா /சொல்லலே... :-)//
ஹாஹ்ஹஹ்ஹா!
:---))))
வடை காட்டி சிரிக்க வச்சுடீன்களே
செம காமெடி போங்க..
வாங்க வாங்க நல்லதந்தி, ராதாகிருஷ்ணன் ஐயா, விலெகா, நசரேயன், உண்மைத் தமிழன் -> எல்லோருக்கும் நன்றி...:-))
" நான் ரெண்டு பத்து ரூபாய் நோட்தான் வைத்திருந்தேன். அவை இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அப்படின்னா, நான் நம்ம டிக்கெட்டை கொடுத்துத்தான் வடை வாங்கியிருக்கேன் போல!!!".
//
adap paavikalaa :))))))))))
//இப்போது கண்காணிப்பாளர், வண்டியை பின்பக்கமாக ஓட்டி நிறுத்துங்க (back parking) என்றார்//
நம்ம ஊருல வண்டிய ரீவேர்ஸ் எடுக்க சொன்னா கால் மட்டும் தான் வண்டிக்குள்ள இருக்கும் மத்தபடி உடம்பை தூக்கி ஜன்னலுக்கு வெளியே போட்டுட்டு தான் ரீவர்ஸ் எடுப்பாங்க. அங்க எப்படிங்க ரீவர்ஸ் எடுக்கும் போது சீட் பெல்டை கழட்ட கூடாதா??
டிரைவிங்க் சூப்பரூ :)))))
- ஒரு நண்பர் இப்படித்தான் கார் ஓட்ட கூடவே டூவீலர் ஓட்டிக்கு பேரணியில பங்கு பெற,கார் ஓட்டும் நேரம் வந்ததுமே ஆபிசர் தம்பி நீ ஓட்ட வேணாம் பெயிலு அப்படின்னு சொல்லிட்டாரு - காரணம் டூவீலர் தெனாவெட்ட ஹெல்மெட் போடாம வந்ததுதானாம் - நல்ல ஆபிசர் :)
வாங்க அப்துல்லா -> :-)))
வாங்க ப்ளீசிங்பவுடர் -> முன்னாடியோ, பின்னாடியோ வண்டி எப்படி போனாலும், சீட் பெல்ட் கழட்ட முடியாதுங்க.... :-))
வாங்க ஆயில்யன் -> ஒரு வேளை இந்தியன் ஸ்டைல்லே - அந்த முக்கியமான பேப்பர் இல்லென்னு சொல்லியிருப்பாரோ....:-))))
அப்புறம்..
ஜூப்பரு... உங்க ட்ரைவிங் கதைய படிச்சதுக்கபறம் ஒரு சர்தார் ஜோக் ஞாபகம் வருது...
சர்தார் விமானம் ஒட்ட பழகிட்டு இறக்க சொல்லும்போது, ரன்வேல குறுக்கால வந்து இறக்க ட்டை பண்ணிட்டு திரும்ப மேல போயிடுவாரு. இன்ஸ்ட்ரக்டர் கேட்டா சொல்லுவாரு "பன்னாடைக...ரன்வேய நெடுக்கால போடாம, குறுக்கால போட்டுருக்கங்க... எப்பிடி எறங்கறது?"ம்பாரு.
Post a Comment