வட அமெரிக்க பதிவர்கள் தேசிய மாநாடு 2008!!!
வட அமெரிக்கப் பதிவர்கள் சார்பில் ஒரு மாபெரும் தேசிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் நாள்: நவம்பர் 29, 2008 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு
இடம்: நியூ ஜெர்ஸி. (இப்போதைக்கு மாநாட்டுத் திடல் இருக்கும் இடம் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது - அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்).
தலைமை வகிப்பவர்: திரு. பாஸ்டன் பாலா
முன்னிலை: திரு. இலவசக்கொத்தனார்
வரவேற்புரை: திரு. கே.ஆர்.எஸ்
மக்கள் தொடர்பு: திரு. இளா
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இன்னும் சிலரை சாட்டிங்கில் அழைக்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது.
சிரஞ்சீவிகாரு கூட்டத்தில் போட்டதைப்போல் முட்டை வீசத் தயாராக இருப்பவர்கள், தயவுசெய்து அந்த முட்டைகளை முன்கூட்டியே எங்களுக்கு அனுப்பிவிட்டால் உபயோகமாக இருக்கும். (அழுகாத) தக்காளி கிடைத்தாலும் நலம்.
மேலும், மாநாட்டை வாழ்த்தி குறைந்த பட்சம் ஒரு லட்சம் தந்திகளாவது எதிர்பார்க்கிறோம்.
அனைவரும் வருக!!! ஆதரவு தருக!!!
38 comments:
me the first:):):)
all the best:):):)
மோகன் கந்தசாமி அவர்கள் அங்கதான இருக்கார், அவர் வரலையா?
வாங்க ராப் -> மோகன் இல்லாமயா... அவருதாங்க இங்கே எல்லாமே.... ( நீங்க என்ன, சிறப்பு விருந்தினர் பேரெல்லாம் இப்படி வெளிப்படையா போட்டு உடைச்சிட்டீங்க????)...:-)))
//மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இன்னும் சிலரை சாட்டிங்கில் அழைக்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது.//
அட்ரா சக்கை அட்ரா சக்கை.....
அழுகின நாமக்கல் முட்டை 10000 தயாரா இருக்கு
ஈராக்கிலிருந்து ஒரு பெட்டாலியணும்,ஆப்கான்ல இருந்து ஒரு பெட்டாலியணும் பாதுகாப்பிற்கு ராணுவம் வருகிறது, இதை ஒபாமா உடனடியாக உறுதுபடுத்துவார்.அவருக்கு உள்நாட்டு பிரச்சினைதான் இப்போதைக்கு முக்கியம்.எதிர்பாராத இந்த பிரச்சினையை எப்படி அமெரிக்கா சமாளிக்க போகிறது என உலகமே எதிர்பார்க்கிறது
இலவசமா சோறு போடறீங்கன்னு சொல்லும்போதே சந்தேகப்பட்டேன்... இப்படி கவுத்துட்டீங்களே :)
வாழ்த்துக்கள்.
பாஸ்டன் பாலா அண்ணாவை மிகவும் கேட்டதாகக் கூறவும் (என்னது கடனா..)
சிறந்தமுறையில் வீடியோ கவரேஜ் செய்து யூ ட்யூப்பில் ஏற்றவும்.
//இலவசமா சோறு போடறீங்கன்னு சொல்லும்போதே சந்தேகப்பட்டேன்..//
இதுக்கு கொத்ஸ்க்கும் சம்பந்தம் இல்லைன்னு நான் நினைச்சாலும், நுண்ணரசியல் உண்டுன்னு பஞ்ச் பாலா சொல்றாரு.
தலைமைதானே பொருளாதாரத்துக்கு காரணம் என்கிற அடிப்படையில்.....:)
வாங்க பழமைபேசி -> நன்றி..
வாங்க பிரேம்ஜி -> ஏதாவது கவுண்டர் படம் பாத்துக்கிட்டிருக்கீங்களா???
வாங்க நசரேயன் -> என்னங்க, ஏதாவது முட்டை கடத்தல் பண்றீங்களா?????
வாங்க குடுகுடுப்பை -> லேமேன் பிரதர்ஸைவிட பெரிய பிரச்சினையா இருக்கும்னு சொல்ல வர்றீங்களா??????
வாங்க பாபாஜி -> அவ்வ். என்ன இப்படி சொல்லிட்டீங்க... மாநாடு முடிஞ்சி பாருங்க... "தட்டினான்.. தட்டினான்... அடடா.. தட்டிக்கிட்டே இருந்தான்" அப்படின்னு கல்யாணபரிசு தங்கவேலு மாதிரி சொல்லப்போறீங்க...
சர்வேசன் வருவாரா..
வந்தால் நான் மிகவும் விசாரித்ததாகச் சொல்லவும்.
பாபாவை கேட்கவில்லை என்று சொல்லவும்..
மதியச் சாப்பாடு கேட்கும் நபர்களுக்கு மட்டும் கொடுக்கவும்..
முட்டைகளின் விலை தமிழ்நாட்டில் கொஞ்சம் ஜாஸ்தியாகிவிட்டது. அதனால் அங்கேயே வாங்கி வீசி அல்லது அடித்துக் கொள்ளவும்..
முட்டை வீச்சு நடந்தவுடனேயே அதனைப் புகைப்படம் எடுத்து, வீடியோ எடுத்துப் பதிவிடவும்.
பதவி இறங்கும் / விலகும் சார்ஸ் புஸ்க்கு அழைப்பு அனுப்பினால் அவரும் வருவார்.
சும்மாதான இருக்கார் என்ன வேலையா செய்யிரார்?
//வட அமெரிக்கப் பதிவர்கள் சார்பில் ஒரு மாபெரும் தேசிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.//
அது என்ன தேசிய மாநாடு,
தேசியம் பேச போறிங்களா?
//மாநாடு நடைபெறும் நாள்: நவம்பர் 29, 2008 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு//
இது இந்திய நேரமா?
லண்டன் நேரமா?
அமெரிக்க நேரமா?
//மாநாட்டுத் திடல் இருக்கும் இடம் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது//
பத்திரமா ஃபிரிஜ்க்குள்ள வச்சுகோங்க
வாழ்த்துக்கள்
போண்டா கண்டிப்பாக இடம் பெற வேண்டும் மாநாட்டில்
அடிதடி இல்லாமல் நல்ல முறையில நடக்க வாழ்த்துக்கள்
வாங்க உண்மைத் தமிழன் -> எப்படியும் முட்டை வீச்சு நடக்கும்போது போலீஸ்காரங்க அதை தடுக்காமே சும்மா பாத்துக்கிட்டுதான் இருப்பாங்க. அதை வீடியோ எடுத்து போட்டுடறேங்க... ஓகேயா???? :-))
வாங்க பீம்பாய் -> அவ்வ்வ்.. ஈரோட்லே இருந்துகிட்டு எப்படி இதெல்லாம் கரெக்டா சொல்றீங்க? உங்க பேரை சொன்னா வந்திடுவாரா?????? :-))
வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ் பிரியன், விஜய் ஆனந்த்... :-))
வாங்க வால் -> ஏங்க நாங்க தேசீயம், இறையாண்மை, நாட்டுடமை, நாட்டுகோழிமுட்டை இதெல்லாம் பத்தி பேசக்கூடாதா????
வாங்க சின்ன அம்மிணி -> அடிதடி இல்லாமே அப்படின்னு சொல்லும்போதே, ஏதோ நடக்கணும்னு நினைக்கறா மாதிரி இருக்குதே???????? அவ்வ்வ்..... :-))
பீம்பாய் அண்ணா,
ஜார்ஜ் பிஷ்ச கூப்பீட்ட அவர் சாவோச கூப்பிட்டிங்களான்னு கேப்பாரே!
தேசியபதிவர் மாடுங்கறதால வரமுடியல்ல. தலமை, புலமை, லொட்டு லொசுக்குமை பேர பாக்கறப்பவே தாங்க முடியல்ல. தமிழ்மாநாடு நடத்தராப்ப சொல்லி அனுப்புங்க. குப்பாஞ்சேரில இருந்தாச்சும் பிளைட் பிடிச்சு வந்துடரோம்
நல்லபடியா நடத்துங்க
வாழ்த்துக்கள்.
அனானி அண்ணே -> வணக்கம்ணே... நல்லதுண்ணே.. நாளைக்கே சென்னையிலே ஒரு சந்திப்பு நடக்குதுண்ணே.. உடனே குப்பாஞ்சேரியிலேந்து ஃப்ளைட் பிடிங்கண்ணே... நன்றிண்ணே...
வாங்க கார்த்திக் -> நன்றி...
//தலைமை வகிப்பவர்: திரு. பாஸ்டன் பாலா
முன்னிலை: திரு. இலவசக்கொத்தனார்//
அப்போ பின்னிலை யாருங்கண்ணே?
பின்-நவீனத்துவம் பேசப் போற மாநாட்டுல பின்னிலை இல்லீயா? OMG! :)
//வரவேற்புரை: திரு. கே.ஆர்.எஸ்//
அடக் கடவுளே!
இது மாநாடா? கதாகாலட்சேபமா?
கன்னா பின்னா-ன்னு இதைக் கண்டிக்கிறேன்! :)
//மக்கள் தொடர்பு: திரு. இளா//
இதுல ஏதோ உரு உ.கு இருக்கு! ஆனா என்னான்னு தான் தெரீலை! :)
நுஜெர்சிலயா? அம்புட்டுத்தூரமா? நன்றிகூறும் வார விடுமுறைலயா? முடிஞ்சா வரப் பாக்கறேங்க. நன்னி.
அப்றம் எல்லாத்துக்கும் அஜெண்டாவை அம்ப்சுட்டு எனக்கு மட்டும் மாநாட்டோட ஹிட்டன் அஜெண்டாவை அனுப்பிருங்க. ஒரு வேளை வர முடிஞ்சா தயாரா வருவேன்ல? ;-)
நாமாடு..சே... மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!
//தலைமை வகிப்பவர்: திரு. பாஸ்டன் பாலா
முன்னிலை: திரு. இலவசக்கொத்தனார்
வரவேற்புரை: திரு. கே.ஆர்.எஸ்
மக்கள் தொடர்பு: திரு. இளா//
”இதெல்லாம்” என்ன? முட்டைக்கு டார்கெட்டா? “எங்க சிங்கம் மேல நீ கை வச்சுருவியா?”ன்னு வடிவேலுவைக் காட்டிச் சொல்ற மாரில்ல இருக்கு! :-))
Please let me know the location, I will try my level best to attend, I also live in NJ
வாங்க கேஆர்எஸ்:
இலவசம் முன்னிலை, நான் நடு நிலை - மத்த எல்லாரும் பின்னிலைதாங்க... :-))
வாங்க சுந்தர்ஜி:
ஜி, நீங்க வந்தா நல்லா இருக்கும். முயற்சி பண்ணுங்க.... 'எல்லாத்துக்கும்' தயாராவே வாங்க... :-))
வாங்க இனியா:
இன்னும் ரெண்டு/மூணு போஸ்ட் வருங்க இந்த மாநாட்டைப் பத்தி. அதிலே இடம் சொல்லிடுவோம். கண்டிப்பா வாங்க... நன்றி.
Sorry for the Delay Chinna Paiyan..
//இன்னும் ரெண்டு/மூணு போஸ்ட் வருங்க இந்த மாநாட்டைப் பத்தி.//
மாநாட்டுக்குள்ள வந்துரும்ல? :-) யப்பாடி என்னா ரகசியம்யா? தோரா போரா மலைக்குகை மாதிரி எதாவது ஒரு இடத்தைச் சொல்லுங்கப்பா.
பேசாம எங்க வீட்டுக்கு வந்துருங்க! ஆஷ்லாண்ட் கோவில்லருந்து 10 நிமிஷ தூரத்துலதான் இருக்கேன். வீட்டு முன்னாடி பாலம்கட்டி டோல்கேட்லாம் போட்டு வச்சுருக்கோம்! நாட்டுல பொருளாதாரம் சரியில்ல பாருங்க! :))
வாங்க இளா -> மக்கள் தொடர்புலே நீங்க பிஸியா இருக்கீங்க.. அதனால்தானே லேட்?... விடுங்க பரவாயில்லை.... :-))
சுந்தர்ஜி -> அவ்வ்வ். விடுங்க அடுத்த குளிர்கால கூட்டத்தொடரை உங்க வீட்லே வச்சிடுவோம்.... இப்போ இங்கே வந்துடுங்க... :-)))
நல்லபடியா மாநாடு நடக்க வாழ்த்துக்கள்
மொத்தமா வர்ற அத்தனை பேரையும் உக்கார வெக்க புதரகத்துல இடமில்லைன்னு சொல்லிட்டாங்க. அதான் பிரச்சினையே. இதுக்காக தார்மீக பொறுப்பேத்துகிட்டு புஷ் சனவரி மாசம் ராஜினாமா செய்ற அளவுக்கு போயிருச்சுன்னா பார்த்துக்குங்க. இடம் ஒரு கன்னட இடம்தான். நாளையே பிரும்மாண்ட அறிவிப்பு வரும்.
அட என்னங்க இது,
வாழ்த்து சொல்லலாம்னு பதிவை படிச்சிட்டு வந்தா,
பின்னூட்டங்களை படிச்ச பிறகு... 'சத்தியமூர்த்தி பவன் மீட்டிங்ல என்ன நடக்குமோ' - அப்படிங்கற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்குதே!!!
என்ன இருந்தாலும்
என்னுடைய வாழ்த்துக்களும்... :)
வாழ்த்துக்கள்...
என்னாச்சி ச்சின்னப்பையன், நீங்களும் இந்த ரெண்டு, மூணு வாரமா ஒண்ணுமே எழுதல???
Post a Comment