கேப்டன் மென்பொருள் நிபுணரானால்!!!
கேப்டன் மேனேஜரா இருந்து செய்த ஒரு மென்பொருள்லே ஒரு பெரிய பிரச்சினை. போட்டுத் தாக்கறதுக்கு கம்பெனி முதலாளி கூப்பிட்டனுப்புகிறார்.
இனி கேப்டன் - முதலாளி பேச்சு.
ஏன் இந்த மென்பொருள்லே இவ்ளோ தவறுகள் வந்துச்சு?
செய்தவனை (developer)ஐ கேளுங்க.
இவ்ளோ தவறுகள் வரும்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?
தெரியும்.
ஏன் அப்பவே எங்களுக்கு சொல்லலே?
முதல்லே எனக்கு பதவி உயர்வு கொடுங்க. அப்போதான் சொல்வேன்.
இப்பவே சொன்னா, அதை என்னோட மேனேஜர் தன்னோட ஐடியான்னு
சொல்லிடுவாரு.
ஆனாலும், சில அருமையான தவறுகளை கண்டுபிடிச்சிருக்கீங்க. எப்படி?
testerஐ கேளுங்க.
க்ளையண்ட் சொல்றதெல்லாம் உங்களுக்கு புரியுதா இல்லையா?
requirement வாங்குனவன கேளுங்க.
எதைக் கேட்டாலும் வேறே யாரையோ கேளுன்றீங்களே, உங்க டீம்லே இப்போ எவ்ளோ பேரு இருக்காங்க. அவங்க யார்யாரு?
இப்போதைக்கு என் டீம்லே ரெண்டு பேர்தான். அவங்க என் மனைவி, மச்சான் தான். எல்லாத்தையும் அவங்கதான் பாத்துக்கறாங்க.
எல்லாத்தையும் அவங்கதான் பாத்துக்கறாங்கன்னா, உங்களுக்கு இந்த மென்பொருளைப் பத்தி என்னதான் தெரியும்?
முன்னாடியே சொன்னா மாதிரி எனக்கு பதவி கொடுங்க. அதுக்கப்புறம்தான் நான் எதுவும் வெளிப்படையா சொல்வேன்.
பதவி உயர்வு, பதவி உயர்வுன்றீங்களே, அப்படி பதவி உயர்வு கொடுத்தா வேறே என்னதான் செய்வீங்க?
இந்த ப்ராஜெக்ட்லேந்து வரக்கூடிய ரிப்போர்ட்ஸ், மெயில்ஸ் எல்லாத்தையும் உங்க வீட்டுக்கே வந்து கொடுப்பேன். நீங்க அலுவலகத்துக்கே
வரவேண்டாம்.
சுத்தம். அப்பகூட மென்பொருள் தவறுகளை குறைப்பேன்னு சொல்ல மாட்டீங்க. இனிமே உங்க கிட்டே பேசி பிரயோஜமில்லை. நீங்க பேசாமெ
ராஜீனாமா செய்துட்டு போயிடுங்க.
தமிழ்லே எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை - ராஜீனாமா.
பேசாதீங்க. ராஜீனாமான்றது தமிழ் வார்த்தையா இல்லையான்னே உங்களுக்கு தெரியல. இந்தாங்க கடிதம். உங்களை வேலையை விட்டு தூக்கிட்டோம். போயிட்டு வாங்க. அக்குங்....( நாக்கை மடக்கி கண்ணடிக்கிறார்)... ச்சீ.. உங்ககூட சேந்து எனக்கும் இந்த பழக்கம் வந்துடுச்சு...
7 comments:
ஆங்
ஏங்க...ஏங்க இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க?
'கேப்டன் அமெரிக்க ஜனாதிபதி ஆனால்'னு பெருசா யோசிக்க வேணாமா? :))))))))
இந்த போஸ்டை மட்டும் நம்ம கேப்டன் படிச்சருன்னா அவர் சி.எம். ஆனதும் நீங்கதான் சிவில் சப்ளை மினிஸ்டர். வீடு வீடா ரேஷன் குடுக்க போறீங்க பாருங்க
வாங்க முரளிகண்ணன் -> :-)))
வாங்க மகேஷ் -> இதே மாதிரி இன்னொரு 'சீரீஸ்' ஆரம்பிச்சிற வேண்டியதுதான்!!!!...:-)
வாங்க தாரணி பிரியா -> ஓ. சூப்பர். நன்றிங்க... முந்திரி பருப்பு, பிஸ்கட், சாக்லேட் - இதெல்லாம் சப்ளை பண்ண கொடுத்தாங்கன்னா நல்லாயிருக்கும்.... :-)))
hahahahhahahaha... shabaaa.........
:))
:)-
Post a Comment