ஏ ஃபார் ஏப்பிள்!!!
சங்கிலித்தொடரில் பதிவு போட அழைத்த தலைவி ராப்க்கு நன்றி..
ஏதோ நான் பாக்கற சிலபல (பலானன்னு படிச்சிடாதீங்க!!!) இணையதளங்களைப் பற்றி சொல்லலாம்னு..... நீங்களே படிச்சிப் பாருங்க..
b-bawarchi.com - திடீர்னு தங்கமணி சமைக்கக் கிளம்பிட்டா, அவங்க இந்த தளத்தைப் பாத்துதான் ஏதாவது ஸ்பெஷலா செய்வாங்க (அவ்வ்வ்வ்...). இப்போ இது food/sify.com ஆ மாறிடுச்சு...
C- craigslist.org; விளம்பரங்களே இல்லாத ஒரு வரி விளம்பரத் தளம். நான் மற்றும் என் நண்பர்களெல்லாம் கார் வாங்குவதற்கு உதவிய தளத்தில் இப்போது சென்னைப் பக்கங்களும் இருக்கிறது.
d- dinamalar.com : டீக்கடை பெஞ்சுக்காகவும், டவுட் தனபாலுக்காகவும் தினமும் பார்க்கும் தளம். நமக்கு புது பதிவுகள் போட நிறைய ஐடியாக்களை தினமும் தருபவர் - எல்லா அரசியல்வாதிகளையும் கலாய்க்கும் டவுட் தனபாலு.F-fandango.com : இது வாரயிறுதியிலே பக்கத்து கொட்டாய்லே ஏதாவது பாக்கற மாதிரி படம் இருக்குதான்னு பாக்கற தளம்.
I-Idlyvadai.com
பல மக்களைப் போல காலையில் எழுந்ததும், எனக்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லிவிட்டு - பார்க்கும் முதல் தளம் இட்லிவடை.
ஒரு நாள் காலையில் எழுந்து என் பதிவுக்கு வந்தவர்கள் எவ்வளவு பேர் என்று பார்த்தால் பயங்கர அதிர்ச்சி - 500 பேருக்கும் மேல். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை, என்று சிறிது நேரம் கழித்து இட்லிவடை பார்த்தபோதுதான் தெரிந்தது, அங்கே என் பதிவை குறிப்பிட்டிருந்தனர்.
அந்த ஒரு சிறு அறிமுகத்தால், அடுத்த 3 நாட்களுக்கு எனக்கு ஒரு 2000 ஹிட்ஸ் கிடைத்தது....
J-jeyamohan.in : புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. 'குமரி'ப் பக்கத்து பேச்சுவழக்கில் எழுதப்பட்ட தமிழுக்காக விரும்பிப் படிக்கும் தளம்.
K-kumudam.com: புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.
L-linkedin.com : சொல்லாமல் எஸ்கேப் ஆன பல பழைய ' நண்பர்கள்' இங்கேதான் எனக்கு திரும்ப கிடைத்தார்கள். என் 'சங்கிலியில்' இருப்பவர்கள் வேலை மாறினால், எனக்கு உடனுக்குடனே மெயில் அனுப்பி தெரிவித்துவிடும்.
M-Musicindiaonline.com : பலப்பல அருமையான பாடல்களின் தொகுப்பு அடங்கிய தளம். என்ன ஒண்ணு, எதையும் தரவிறக்கம் செய்ய முடியாது. அதனால், எனக்குப் பிடிச்ச பாட்டுக்களை ஒரு 'ஆல்பத்திலே' போட்டு, அதை ஓடவிட்டுடுவேன். அப்புறம் என்ன, அன்னிக்கு முழுவதும் மனம் மிகவும் அமைதியாக, சந்தோஷமாக இருக்கும்.
r-raaga.com - புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.
S-Scribd.com - பல நல்ல புத்தகங்கள், அகராதிகள் எல்லாம் கிடைக்குமிடம். நம்ம சுஜாதா, ரமணி சந்திரன் நாவல்கள் எல்லாம் இங்கேயிருந்துதான் இறக்கிப் படித்தேன்.
w-WebSudoku.com : 'சுடோகு' ஞாபகம் வந்தால், விளையாடப்போகும் தளம். பல்வேறு 'லெவல்'களில் விளையாடலாம். 'அலைபாயும்' மனதை ஒருமுகப்படுத்துவதற்கு நான் போகும் தளம்.
y-youtube - இங்கே போகாமல் யாராவது இருக்கமுடியுமா? 2.5 ஆண்டுகளாக தமிழ் சினிமா நகைச்சுவைக் காட்சிகளை இங்கேதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மற்றும் அடிக்கடி 'funny videos', 'bloopers' - இப்படி தேடித்தேடிப் பார்த்து சிரித்துக்கொண்டே இருப்போம்.
அடுத்து நான் பதிவு போட அழைக்கும் மூவர்:
1. சின்ன பிகேபி என்றழைக்கப்படும் - நமக்கு தினம்தினம் புதுப்புது தொழில் நுட்பப் பதிவுகளை அள்ளி வழங்கும் நண்பர் பிரேம்ஜி
2. தினமும் நல்லா மழித்துவிட்டு, எனக்கு மீசையே முளைக்கவில்லை என்று வருத்தப்படும் நண்பர் விக்னேஸ்வரன்
3. நானே மறந்துவிட்டாலும், நாந்தான் மன்றத்தின் துணைத்தலைவர் என்று வாயார கூப்பிடும் நண்பர் அப்துல்லா.
Read more...