"துப்பறியும் நிபுணர்" கவுண்டமணி - போர்டு பளபளப்பாக மின்னுகிறது. வேகமாக உள்ளே நுழைகிறார் செந்தில்.
அண்ணே... அண்ணே...
என்னடா, தேங்கா மண்டையா, என்ன இப்படி ஓடிவர்றே... டாக்டர் விஜய் கட்சி கிட்சி தொடங்கிட்டாரா?
அட.. அவரு தொடங்கத்தான் போறாரு. ஆனா விஷயம் அதில்லேண்ணே..
பின்னே, தசாவதாரத்திலே இன்னும் ரெண்டு வேஷத்தை அதிகரிச்சிட்டாங்களா?
அதுவுமில்லேண்ணே... நான் சொல்ல வந்தது என்னன்னா...
சீக்கிரமா சொல்லுடா மண்வெட்டி மண்டையா... என் டயத்தை வேஸ்ட் பண்ணாமே வந்த விஷயத்தை உடனே சொல்லு.
இத கேளுங்கண்ணே. பெரிய தெருவில் ஒரு புத்தம் புதிய கார் வந்து நிக்குது. அடேய், பெரிய தெருவுன்னா, ஒரு கார், ஒரு லாரி இதெல்லாம் வந்து நிக்கும்தாண்டா. அதையெல்லாம் சொல்லி இந்த டிடெக்டிவ் நேரத்தை வீணாக்காதே.. ஓடிப்போயிடு...முழுசா கேளுங்கண்ணே.. அந்த கார் கதவு முழுசா ஏற்றப்பட்டிருக்கு... பத்து நிமிஷமா கார் நல்லா குலுங்கிக்கிட்டிருக்கு. போற வர்ற மக்களெல்லாம் அந்த காரை ஒரு மாதிரி பாத்துட்டுப் போறாங்க.டேய், தர்பூஸ் மண்டையா, 20-20 மேட்ச் முடிஞ்ச பிறகு, மக்கள் பொழுதுபோக்கறதுக்கு ஒண்ணுமே இல்லாமே ரொம்ப கஷ்டப்படுறாங்க. இத மாதிரி ஏதாவது மாட்டிச்சுன்னா, நின்னு வேடிக்கை பாக்கத்தான் செய்வாங்க.. இதிலே நாம என்ன செய்யணும்னு சொல்றே.என்னண்ணே ஒண்ணுமே புரியாம பேசறீங்க, காருக்குள்ளே ஏதாவது கசமுசா நடக்குதான்னு நீங்க கண்டுபிடிச்சி, அவங்களை போலீஸ்கிட்டே ஒப்படைச்சீங்கன்னா, நம்மளுக்கும் ஏதாவது பரிசு கிரிசு கிடைக்கும்ணே...டேய்..டேய்.. நிறுத்து... இங்கே நாந்தான் டிடெக்டிவ். நீ என்னுடைய அசிஸ்டென்ட்தான். ஓகே. இந்த கேஸை நான் எடுக்கறதா முடிவு பண்ணிட்டேன். ஃபாலோ மீ.பெரிய தெருவுக்குப் போகிறார்கள். அங்கே அந்த கார் நின்றுகொண்டிருக்கிறது. புத்தம் புதிய சிகப்பு நிற கார். குளிர் கண்ணாடி ஏற்றப்பட்டிருக்கிறது. ஒரு பக்கமாக குலுங்கிக் கொண்டிருக்கிறது.பக்கத்தில் போய் காரைத் தட்டுகிறார்.டேய்..டேய்... மக்களா.. ஏன் இப்படி அராஜகம் பண்ணுறீங்க... இதை கேட்க யாருமேயில்லையா... அதுக்குக்கூட நாந்தான் வரணுமா....
(காரிலிருந்து சத்தமே இல்லை)
காருக்குள்ளே யாரிருந்தாலும் மரியாதையா வெளியே வந்துடுங்க... இந்த டிடெக்டிவ்க்கு கோபம் வந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.
(மறுபடியும் அமைதி)
ஓகே. சிங்கத்தோட மோதணும்னு வந்துட்டீங்க. வேறே வழியே இல்லை. கொஞ்ச நாளாய் பயன்படாமலிருந்த என் துப்பாக்கிக்கு வேலை வந்துடுச்சு... டேய்.. இப்போ நான் 1,2,3ன்னு பத்து வரைக்கும் எண்ணுவேன். அதுக்குள்ளே மரியாதையா வெளியே வந்துடுங்க. இல்லேன்னா சுட்டுடுவேன்.
(அமைதி தொடர்கிறது. கவுண்டமணி 1,2,3 என்று எண்ண ஆரம்பிக்கிறார்).
ஆறு எண்ணும்போது கார் கதவு திறக்கிறது. ஒருவர் வேர்க்க விறுவிறுக்க காரிலிருந்து இறங்குகிறார்.
ஐயா, சுட்டுடாதீங்க. நான் வந்துட்டேன்.
ம். அப்படி வா வழிக்கு. என்னடா நடக்குது இங்கே?. காருக்குள்ளே யாரெல்லாம் இருக்கீங்க. எல்லாரையும் வெளியே வரச்சொல்லு.. பேரிக்கா மண்டையா, இன்னிக்கு இந்த டிடெக்டிவுக்கு அவார்ட் கன்பர்ம்ண்ட்தாண்டா.
ஐயா.. ஐயா.. என்னை மன்னிச்சிடுங்க. நீங்க நினைக்கிற மாதிரி எந்த தப்புத்தண்டாவும் நடக்கலே. காருக்குள்ளே நான் மட்டும்தான் இருந்தேன். இது புது கார். இன்னிக்குத்தான் வாங்கினேன். அதனாலே பாருங்க, உள்ளேயிருந்து கதவைத் திறக்கவே முடியல. நானும் ரொம்ப நேரமா எல்லா கதவையும், கண்ணாடியையும் திறக்க முயற்சி பண்றேன். ஆனா, திறக்கவே முடியல.
இப்போத்தான் ஒரு வழியா திறக்க முடிஞ்சுது. எங்கே நீங்க சுட்டுடப்போறீங்களோன்னு பயந்துண்டே முட்டி மோதி வேகமா திறந்தேன். டக்குன்னு கதவு திறந்துடுச்சு. உங்களுக்கு ரொம்ப நன்றிங்க. நீங்க இப்படி அதிரடியா பயம் காட்டலேன்னா, நான் இன்னிக்கு பூராவும் இப்படியே முயற்சி பண்ணிண்டிருந்திருப்பேன். நான் வரேன்.
ம்ம்ம்ம்...
கவுண்டமணி கோபமாய் திரும்பி செந்திலைப் பார்க்க, செந்தில் தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்.
Read more...