Monday, March 3, 2008

எங்கும் தமிழ்மணம், எதிலும் தமிழ்மணம்

சன் டிவி டாப் 10:

இது சென்ற வாரம் தமிழ்மணத்தில் பரபரப்பாக பேசப்பட்ட கெட்ட வார்த்தைகளைப் பற்றிய நிகழ்ச்சி. முதலில் புது வரவு. இந்த வாரம் புதிதாக பேசப்பட்ட கெட்ட வார்த்தைகள். #$@, ##@# மற்றும் #@@@.

ராசிபலன்:

தமிழ்மணம் படிக்கும் அன்பர்களே, இன்று வார இறுதியாகையால், தமிழ்மணத்தில் வீக் எண்ட் ஜொள்ளு, வீக் எண்ட் லொள்ளு ஆகிய பதிவுகளை எதிர்ப்பார்க்கலாம். மேற்கு திசைகளிலிருந்து அசிங்கமான பதிவுகளை எதிர்ப்பார்க்கலாம். இன்று உங்களுக்கு ராசியான நிறம் கருப்பு.

அலுவலகம்:

எல்லோரும் ஒழுங்கா வேலையை பாருங்க... இல்லேன்னா... தமிழ்மணம் பாக்க முடியாத கிளைக்கு மாத்திடுவேன்.


விடுப்பு கடிதம்:

மூன்று நாட்களாய் தமிழ்மணம் படிக்காததால், தயவு செய்து இரண்டு நாட்கள் விடுப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்று தமிழ்மணம் படிப்பதற்கும், நாளை தமிழ்மணம் படித்த அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கும் தேவைப்படுகிறது.

மணமகன் தேவை:

நன்றாக படித்தவராகவும், தினமும் தமிழ்மணம் படிப்பவராகவும் இருக்கவேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும், அதைப்பற்றி ஒரு பதிவு போடும் திறமை உள்ளவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம், சண்டையை/குழப்பத்தை உண்டாக்கும்படியான பின்னூட்டங்களைப் போடுபவராக இருந்தால் நலம்.

நீதிபதி:

இ.பி.கோ செக்ஷன் 'ங்' படி - கொலை செய்த இவருக்கு சாகும் வரை தமிழ்மணம் பார்க்குமாறு தண்டனை விதிக்கிறேன்.

குற்றவாளி: ஐயா, ஐயா, தயவு செய்து இந்த மாதிரி கொடுமையான தண்டனை தர வேண்டாம். அதற்கு பதிலாக, என்னை தூக்கில் போட்டுவிடுங்கள்.. ஐயா ஐயா...


வானிலை அறிக்கை:

இன்று தமிழ்மணம் மேகமூட்டமாக இருக்கும். மாதம் முழுக்க இருந்த இடியை விட, இன்று அதிக இடி இடிக்கும் வாய்ப்பு உள்ளது. பலத்த மழை பெய்யக்கூடும். நாளை காலைவரை பதிவர்கள் பதிவுக்கு செல்லாமலிருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

10 comments:

Anonymous,  March 3, 2008 at 2:19 PM  

இது நல்லா இருக்கே. தூள்மா
அன்புடன் மகி

சின்னப் பையன் March 3, 2008 at 3:41 PM  

வருகைக்கும், ரசித்ததற்கும் நன்றி மகி மற்றும் இளா.....:-)

மோகன் கந்தசாமி March 3, 2008 at 4:23 PM  

ட்டமாசூ....ட்டமாசு...

Unknown March 3, 2008 at 5:01 PM  

ஹஹஹா.... அருமை :)

சேதுக்கரசி March 3, 2008 at 6:08 PM  

//நாளை தமிழ்மணம் படித்த அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கும் தேவைப்படுகிறது//

:-)))

சின்னப் பையன் March 3, 2008 at 7:54 PM  

mohan kandasamy, தஞ்சாவூரான் மற்றும் சேதுக்கரசி.... நன்றி... மீண்டும் வருக...:-)

மணியன் March 4, 2008 at 2:44 AM  

பொதிகை டிவி:
தடங்கலுக்கு வருந்துகிறோம்..தமிழ்மணம் வழங்கி டௌன்...

cheena (சீனா) March 14, 2008 at 8:16 PM  

விமர்சனம்னா இது தான் விமர்சனம்

மங்களூர் சிவா March 15, 2008 at 4:13 PM  

கலக்கலா இருக்கு

:)))))))))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP