Tuesday, March 11, 2008

அரைபக்க கதை - "ஆபாசம். நிறுவனர்: சுரேஷ்"

"தனியொரு பதிவருக்கு பின்னூட்டம் இல்லையென்பதால், ஆபாசத்தை துவக்கினோம்" - சுவற்றில் இருந்த வாசகத்தை பார்த்து ஒரு முறை சிரித்துக்கொண்டான் சுரேஷ். 50 பதிவுகளை இட்ட பதிவரான சுரேஷ் - தன் கடைசி 5 பதிவுகளின் தலைப்புகளை ஒரு முறை நினைவு படுத்திக்கொண்டான்.

46. 60 ஆண்டு கால திமுக மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி - ஒரு ஒப்பீடு
47. சென்னை நகரின் போக்குவரத்து பிரச்சினையைப் போக்க 10 எளிய வழிகள்
48. 'லகான்' இந்தி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட குறள்களின் எண்ணிக்கை
49. அப்துல்கலாம் மற்றும் அவரின் 2020 கனவு
50. சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி சித்தர்களின் பார்வை


இவ்வளவு 'ஹெவி'யான பதிவுகளை இட்ட சுரேஷ், அவற்றிக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கையை எண்ணினான். அவை முறையே 6,2,3,9,1.

பின்னூட்டங்கள் அதிகரிக்க என்ன வழி என்று நண்பர்கள் 5 பேரை அழைத்து பேசினான். அந்த கூட்டத்தில் அவர்கள் செய்த முடிவுகள் பின்வருமாறு:


1. ஆபாசத்தை துவக்குவது - (ஆண்கள் பாதுகாப்பு சங்கம்).
2. இதுவரை வலைப்பூ இல்லாத அந்த 5 நண்பர்களும் உடனே வலைப்பூ துவக்குவது.
3. மேற்கண்ட பதிவுகளைப் போலல்லாது, மிகவும் 'லைட்'டான தலைப்புகளை (படிக்க: மொக்கை) எடுத்துக்கொண்டு, எல்லோரும் அதில் பின்னூட்டங்களால் தாக்குவது.
4. 1000, 2000, ... மாமா பிஸ்கோத்து... என்பது போல் இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் 100,200 பின்னூட்டங்கள் வருமாறு பார்த்துக்கொள்வது.
5. எல்லோரும் அவரவர் பதிவுகளில், மேற்கண்ட கூட்டத்தையே 'வலைப்பதிவர் சந்திப்பு' என்று ஒரு பதிவு போடுவது.


அப்பாடா, பின்னூட்டப் பிரச்சினை முடிந்தது என்ற நிம்மதியில் சுரேஷ் தூங்கப்போனான்.


டிஸ்கி: சங்கத்தின் பெயருக்கு நன்றி - எஸ்.வி.சேகர்.

14 comments:

அரை பிளேடு March 11, 2008 at 6:11 PM  

ஆபாச பதிவுகளை வரவேற்கிறேன்.

அட. "ஆண்கள் பாதுகாப்பு சங்க" பதிவுகளை சொன்னேனுங்க. :)

TBCD March 11, 2008 at 6:48 PM  

வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

//
அரை பிளேடு said...

ஆபாச பதிவுகளை வரவேற்கிறேன்.

அட. "ஆண்கள் பாதுகாப்பு சங்க" பதிவுகளை சொன்னேனுங்க. :)
//

தஞ்சாவூரான் March 11, 2008 at 7:45 PM  

ஹ்ம்ம்...வேற வழியில்ல. 'ஆபாசத்த' நானும் வரவேற்கிறேன் :)

ச்சின்னப் பையன் March 11, 2008 at 8:16 PM  

இளா -> வருகைக்கு நன்றி.

அரை பிளேடு, tbcd, தஞ்சாவூரான்:
வருகைக்கு நன்றி.
இது வெறும் கதைதாங்க... நான் ஆபாச பதிவுகளை போடமாட்டேங்கோவ்....:-)

துளசி கோபால் March 11, 2008 at 8:56 PM  

என்ன இங்கே ஒரே ஆ பா ச மா இருக்கு? :-))))

மகளிர் வரக்கூடாதுன்னா?

பினாத்தல் சுரேஷ் March 11, 2008 at 10:46 PM  

என் பெயரை வச்சு ஆபாசக்கதையா ன்னு பயந்துகிட்டே வந்தேன். இந்த ஆபாசத்துக்கு நிறுவனரா இருக்கறதிலே எந்த ஆட்சேபணையும் இல்லை :)

குசும்பன் March 12, 2008 at 5:44 AM  

இந்த பதிவுக்கும் பினாத்தல் சுரேஸ்க்கும் ஏதும் கனெக்ஸன் இருக்கா?

ஏன் அவரை தாக்கி இருக்கீங்க?:)))

(நாராயண நாராயண வந்த வேலை இனிதே முடிந்தது:))))

குசும்பன் March 12, 2008 at 5:44 AM  

இந்த பதிவுக்கும் பினாத்தல் சுரேஸ்க்கும் ஏதும் கனெக்ஸன் இருக்கா?

ஏன் அவரை தாக்கி இருக்கீங்க?:)))

(நாராயண நாராயண வந்த வேலை இனிதே முடிந்தது:))))

ச்சின்னப் பையன் March 12, 2008 at 8:55 AM  

வாங்க துளசி மேடம்: பரவாயில்லை... வந்துட்டீங்க... பாதுகாப்பு எல்லாம் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க...:-)

பினாத்தல் சுரேஷ்: அதில்லைங்க. என்னோட ஆயிரக்கணக்கான (எழுதப்போற?!?!) கதைகள்ல எல்லா நாயகர்கள் பேரும் சுரேஷ்தான்... இது எப்படி இருக்கு...:-)

குசும்பன்: வாங்க... நல்லாயிருங்க... அப்பாடா.. அவரே ஒண்ணும் ஆட்சேபணை இல்லேன்னுட்டார்...:-)

இலவசக்கொத்தனார் March 13, 2008 at 5:16 PM  

பெனாத்தல் வேற பேரில் இல்ல இதை ஆரம்பிச்சாரு>? :))))

cheena (சீனா) March 14, 2008 at 8:24 PM  

ஆ பா ச வுக்கு நான் ஆயுள் உறுப்பினனாகிறேன்.

மங்களூர் சிவா March 15, 2008 at 4:01 PM  

ஹ்ம்ம்...வேற வழியில்ல. 'ஆபாசத்த' நானும் வரவேற்கிறேன் :)

ச்சின்னப் பையன் March 15, 2008 at 5:48 PM  

இலவசக்கொத்தனார், cheena (சீனா) மற்றும் மங்களூர் சிவா -> நன்றி. மீண்டும் வருக.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP